அன்பு குழந்தையே…. பய பக்தியோடும், உண்மையோடும், ஆன்ம உணர்வோடும், கண்ணீரோடும், …

அன்பு குழந்தையே….

பய பக்தியோடும், உண்மையோடும், ஆன்ம உணர்வோடும், கண்ணீரோடும், நீ என்னிடம் செய்கின்ற பிராத்தனைகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

நான் அளிக்கும் பதில்களை உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதால், உன் மனம் போன போக்கில் சுதந்திரமாக நடந்து, அவற்றை தட்டிக்கழித்து விடுகிறாய்.

பலனை நீ அடைய முடிவதில்லை. உன் விருப் பப்படி செய்யவும், நடக்கவும், வாழவும் நான் உனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்.

அதனால்தான் என் செய்கைகளை புரிந்து கொள்ளாமலும், உனது சுயமான போக்கின் படி உன்னால் நடக்க முடிகிறது. இந்த சுதந்திர உணர்வுதான் உன்னை இந்தளவுக்கு கீழே இறக்கி வைத்து விட்டது.

கீழே இறங்கிவிட்டோமே என்று நீ வருத்தப் படுகிறாய். கீழே வந்து விட்ட போதும் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

உனது இரக்கமுள்ள குணம், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற உன்னத மனோபாவம்,
இந்த நிலையிலும் பிறர் கஷ்டப்படுத்த காண சகியாத மனம்,

இருக்கும் இடத்திற்கு விசுவாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, அதன் படி நடந்துவந்ததால் தான் கீழ் நிலைக்கு இறங்க நேர்ந்தது என்று நினைக்கிறாய்.

கெட்டவர்களும், கெடு மதி உள்ளவர்களும் நன்றாக இருக்கும் போது நல்லவர்களான நாங்கள் மட்டும் ஏன் கஷ்டபடவேண்டும்?

கஷ்டத்தை மட்டும் ஏன் கடவுள் எங்களுக்கு பரிசாக தரவேண்டும்? என்று நினைக்கிறாய்.
உன்னைப் போல நல்லவர்களும் இப்படி தான் புலம்புகிறார்கள்.

இது இன்றோ நேற்றோ தொடங்கி நடந்து வருகிற விஷயமல்ல. கால காலமாய் நல்லவர்கள் புலம்புவது தொடர்கதைதான்.

நான் உன்னிடம் பிரத்தியட்சமாக விளங்க வேண்டும் என்றால் நீ கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஏனெனில் நான் நல்லவர்கள் மனதில் மட்டுமே வாழமுடியும்.

கெட்டவர்கள் மனதில் எனக்கு இடமேது? இப்படி உன்னை கஷ்டப்படித்தி வாழ்வதால் என்ன பலன் என்று நீ நினைக்கலாம்…

நான் உன்னை பக்குவப்படுத்தி, பெருமைப் படுத்துவதற்கு இதை உனக்கு வரப் பிரசாதமா க் கொடுத்திருக்கிறேன்.

உன்னுடைய தகுதிக்கும் தாங்கும் சக்திக்கும் ஏற்பத்தான் கஷ்டத்தைத் தருகிறேன். இதை உன்னால் சமாளிக்க முடியும் என்று தெரிந்த பிறகே கஷ்டம் வரத் தயாராக இருக்கிறது.

இந்த நேரத்தில் நீ வேகமாக செயல்பட வேண்டும் நிறைய சிந்தனை செய்ய வேண்டும்.

இதன் மூலம் இப்போதுள்ள நிலையை விட பல மடங்கு உயர்வடைய வேண்டும் என்பதற் காகவே இதை உனக்குக் கொடுத்தேன்.

இருள் நீங்கி பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகி விட்டது. அப்படியே உனது கஷ்டங்களும், பிரச்சினைகளும் முடிந்து போகும்.

எல்லாதுன்பங்களும் விலகி புத்துணர்வோடு நீ இருக்கப் போகிறாய். சோர்ந்து போகாதே, தைரியமாக இரு. இதோ நான் உன்னோடு கூடவே இருக்கிறேன்.

ஓம் ஸ்ரீ சாய் ராம்…
27.11.2020…நேசமுடன் விஜயராகவன்…