இன்று என் சமையல் அறையில் இருந்து லட்டு… 1 1/2கப் சர்க்கரை 1கப் கடலை மாவு 3ஏ…

இன்று என் சமையல் அறையில் இருந்து லட்டு…

1 1/2கப் சர்க்கரை
1கப் கடலை மாவு
3ஏலக்காய்
1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
தேவையான அளவு புட் கலர்
எண்ணெய் பொரித்தெடுக்க..

முதலில் மாவில் பேக்கிங் சோடா சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி லேசாக தட்டினால் கீழே பூந்தி அழகாக விழும்

அதை அதிக நேரம் வேக விடக்கூடாது… முக்கால் பாகம் வெந்ததும் எடுக்கவும்…

அதிக நேரம் வெந்தால் காராபூந்தி மாதிரி இருக்கும்

பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வந்ததும் பூந்தியில் ஊற்றவும்

சூடு குறைந்ததும் அதில் இருந்து சிறிது எடுத்து மிக்ஸியில் அரைத்து பூந்தியில் கலந்து கொள்ளவும்… இது எதற்காக என்றால் அப்போது தான் லட்டு பிடிப்பதற்கு சுலபமாக வரும்…

இப்போது சுவையான லட்டு தயார்…

Laddu from my kitchen today…

1 1/2 cup sugar
1 cup of peanut flour
3 cardamom
1/2 spoon baking soda
Enough food color
To fry oil..

First add baking soda to the flour and mix it with water for the dosa flour and flour

When oil is dried in the pan, pour dough in a spoon and tap it lightly, it will bloom down and fall beautifully.

Don't boil it too long… Take the mughal part once…

If you spend too much time, it will be like a carapoondi

Add sugar and cardamom to the vessel and pour enough water and pour it in the flower after a wire is arrived.

When the heat is low, take some from it and mix it in the mixture and mix it in poondi… This is because only then it will be easy to catch laddu…

Yummy laddu is ready now…

2 thoughts on “இன்று என் சமையல் அறையில் இருந்து லட்டு… 1 1/2கப் சர்க்கரை 1கப் கடலை மாவு 3ஏ…”

Comments are closed.