உங்கள் உதடுகளை அழகுப்படுத்த சில குறிப்புகள்.; உதடுகளை கவர்ச்சியாக அழகுபடுத்த வி…

உங்கள் உதடுகளை அழகுப்படுத்த சில குறிப்புகள்.;

உதடுகளை கவர்ச்சியாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகுச்சாதனப் பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியும் அழகுப் பெற செய்யலாம்.

💋 ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து அடிக்கடி உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுகள் அழகு பெறும்.

💋 தினமும் ஆலிவ் ஆயிலுடன் இலவங்க பட்டை பவுடர், சிறிதளவு உப்பு ஆகியவற்றைக் கலந்து உதட்டில் பூசி, சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால் உதடுகள் பொலிவு பெறும்.

💋 ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை அடிக்கடி பயன்படுத்தலாம். தேனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும், பளபளப்புடனும் இருக்கும்.

💋 ஏனெனில் தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

💋 உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவும் உதவுகிறது. புதினாவை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து தினமும் உதட்டில் பூசி வர வேண்டும். அவை உலர்ந்தவுடன் கழுவினால் உதடுகள் அழகு பெறும்.

💋 குங்குமப்பூ உதட்டில் உள்ள கருமை நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

💋 இஞ்சியும் உதடுக்கு பொலிவு தரும். தேங்காய் எண்ணெய், சர்க்கரை, இஞ்சி தூள், ஜாதிக்காய் பொடி, இலவங்க பட்டைத்தூள் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் போல் குழப்பி உதடுகளில் பூசி வரலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் மிருதுவாக காட்சியளிக்கும்.

💋 அடிக்கடி கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.

💋 பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிக எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு அடிக்கடி தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

💋 வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.