#உறவுமுறைகளைப்_பற்றி_தம்பதிகள் #கட்டாயம்_அறிந்திருக்க_வேண்டிய #முக்கியமான_விஷயங…

#உறவுமுறைகளைப்_பற்றி_தம்பதிகள் #கட்டாயம்_அறிந்திருக்க_வேண்டிய #முக்கியமான_விஷயங்கள்

ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சி காண வேண்டுமெனில், உறவுமுறைகளைப் பற்றிய பல விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக அனுபவத்தின் மூலமே இது தொடர்பான பக்குவமும், லாகவமும் கைவரப்பெறும் என்றாலும்,
இதனைப்பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ள முற்படுவதில் தவறொன்றுமில்லை.

👉 இங்கு உறவுமுறைகளைப் பற்றிய முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை மனதில் கொண்டு தம்பதிகள் வாழ்ந்து வந்தால், உறவுமுறையானது நீண்ட நாட்கள் சந்தோஷமாக நிலைத்திருக்கும்.

தூய்மையான அன்பு அற்புதங்களை நிகழ்த்தவல்லது இன்றைய அவசர யுகத்தில், அன்பின் ஆற்றலை அறிந்திருப்போரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அனைவரும் அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் நாம் அன்பாக நடந்து கொள்ள மறந்து விடுகிறோம். அன்பாக நடந்து கொள்வதற்கு அருமுயற்சி ஒன்றும் தேவையில்லை, அவ்வாறு நடந்து கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள், அவ்வளவு தான்.

நீங்கள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட பின், அன்பாக இருத்தல் எத்துணை ஆற்றல் வாய்ந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அன்பாக இருத்தல், உங்கள்
உறவுமுறைகளை ஆரோக்கியமானதாகவும், வலிமையானதாகவும் ஆக்கி, சிறப்பான பல நற்பயன்களை உங்களுக்கு அள்ளிக்கொடுக்கும்.

துன்பமான நாட்கள் என்பது அனைவரின் வாழ்விலும் வந்து போகக்கூடியதே உங்கள் அன்புக்குரியவரின் எரிச்சல் உங்கள் மீது தான் என்று எதிர்மறையாக நினைக்க வேண்டியது அவசியமில்லை.

அனைவரின் வாழ்க்கையிலும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய சில தினங்கள் இருக்கக்கூடும். அத்தினங்களில் அவர்கள் கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கக்கூடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளில் உங்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் துணைவரின் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வாய்ப்பு இல்லை;

பல சமயங்களில் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை உங்களால் யூகிக்கக்கூட முடியாது. உங்கள் துணைவர் எத்தகைய கஷ்டங்களுடன் போராடுகிறார் என்பதை உணர்ந்து, அவற்றிலிருந்து மீள்வதற்கு அவருக்கு அவகாசம் கொடுங்கள். அந்தரங்கமாக அவற்றை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

பொது இடங்களில் சண்டையிடாதீர்கள் வலிமையான மற்றும் நீடித்திருக்கக்கூடிய உறவுமுறைக்குள் ஒரு சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பது உண்மையே.

அனைத்து வகை உறவுமுறையிலும் இது இன்றியமையாத ஒரு விஷயம் என்பதை ஏராளமான தம்பதிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்காக உங்கள் கருத்து வேறுபாடுகளை பொது இடங்களில் வைத்து களைய வேண்டும் என்று அர்த்தமில்லை.

தேவைப்பட்டால் உங்கள் உரிமைகளை நிலைநாட்ட சண்டையிடலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவ்வாறு பொது இடங்களில் நடப்பது உங்களை மிகையுணர்ச்சிக் கோளாறு உடையவராகவோ அல்லது எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவோ காட்டி, அடுத்தவர் முன்னிலையில் உங்களின் கௌரவத்தை குலைக்கும்.

உங்கள் அழுக்குத் துணிகளை பொது இடத்தில் வைத்து துவைக்காதீர்கள். உங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

மன்னிப்பு தான் எந்த உறவுக்கும் அடிப்படை பரஸ்பரம் மன்னித்துக் கொள்ளும் தம்பதிகள் மட்டும் தான் நீண்டகால உறவுமுறைகளுடன் வாழ்ந்திருப்பர். யாருமே குறைபாடற்று இருக்க முடியாது.

நீங்கள் இருவருமே தவறு செய்யக்கூடியவர்கள் தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். கடந்து போனவை கடந்து போனவைகளாகவே இருக்கட்டும். இறந்த காலத்தை முன்னிறுத்தி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்வீர்களானால், அப்போது உங்களிடையே இருக்கக்கூடிய நேசம் மரித்துப் போய்விடும்.

உங்கள் நேசத்தையும், வாழ்க்கையையும் முடிந்த வரையில் நன்கு அனுபவியுங்கள். உங்களில் யார் தவறு செய்தாலும் மன்னிக்கப் பழகுங்கள்.

சேர்ந்து சிரித்து மகிழ வேண்டியது மிகவும் முக்கியம் நல்ல உணர்வுகள், முக்கியமாக மனமார்ந்த சிரிப்பு, மனக்கிலேசங்களை
இலகுவாக்கி, மனங்களை ஒன்றிணைக்கக்கூடியதாகும்.

உள்ளூர இருக்கக்கூடிய தடுப்புகள், பதற்றம் முதலானவற்றை உடைத்தெறியக்கூடிய சக்தி சிரிப்புக்கு உண்டு. இவ்வளவு ஏன், மன அழுத்தத்துக்கு எதிராக போராடும் சக்தியும் கூட சிரிப்புக்கு உண்டு.

வாய் விட்டு சிரிப்போரின் ஆயுட்காலம் நீடிக்கும் என்பதோடு வயது முதிர்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியையும் இது வெகுவாக கட்டுப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், எப்போதும் நல்ல சிந்தனைகளுடனும், உற்சாகத்துடனும் இருப்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயமாகும்.

தெளிவான முறையில் உரையாடுங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை திறம்பட படிப்பது என்பது எல்லோராலும் இயலாத ஒரு காரியமாகும். ஒருவர் மனதில் என்ன உள்ளது என்பதை மற்றொருவர் அறிந்து கொள்ள இயலாத காரணத்தினாலேயே பல தம்பதிகள் மனமுடைந்து போகிறார்கள்.

மனதில் என்ன இருக்கிறது என்பதை மிகவும் முயன்று படிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறதுதெளிவான முறையில் மனதில் உள்ளவற்றை மற்றவர் அறிய பேசிக் கொள்வது,

👉அதை விட எளிதான ஒன்றல்லவா

இதன் மூலம் உங்கள் நேரம் விரயமாவதை தவிர்ப்பதோடு, தவறான புரிதலால் வரக்கூடிய பல்வேறு பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். உரையாடலின் போது உங்களுக்கு என்ன தேவை என்பதை, புரியும் விதத்தில் எளிமையாக சொன்னாலே போதும்.அதை விடுத்து புதிராக பேசுவது தேவையற்றது.

பொறுப்புணர்ச்சி பொறுப்பாக நடந்து கொள்வது உங்கள் அன்பை நிரூபிப்பதோடு, உங்களின் அன்புக்குரியவர்க்கு நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்துவதற்கும் உதவும்.

இதன் மூலம் உங்களவர்க்கு நுட்பமான உங்களின் உள் மன உணர்வுகளை எளிதாக புரிய வைத்து, அவருக்காக நீங்கள் எதையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையை விதைக்க முடியும். பொறுப்பாக நடந்து கொள்வதன் மூலம் உங்கள் அன்புக்குரியவரின் நன்னம்பிக்கையை நீங்கள் கட்டாயம் பெறலாம்.

எந்த உறவுமுறையை எடுத்துக் கொண்டாலும், அதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வதே மிகவும் முக்கியமானதாகும். வெறும் வாய்ச்சொல்லோடு நின்று விடாமல், அதனை செயல்படுத்திக் காட்டுவதில் தான் உங்கள் திறமை உள்ளது

உறவுமுறை நெடுங்காலம் நிலைபெற்றிருக்க… நீண்ட காலத்திற்கு உறவுமுறையை சந்தோஷமாக தக்க வைத்துக் கொள்வதற்கென ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன.

ஆரோக்கியமான உறவுமுறையை
தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் இந்த விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். வெவ்வேறு விதமான வாழ்வியல் சூழ்நிலைகளில் நியாயமாகவும், விவேகமாகவும் நடந்து கொள்வது மிக்க அவசியம்.

#உறவுமுறைகளைப்_பற்றி_தம்பதிகள் #கட்டாயம்_அறிந்திருக்க_வேண்டிய #முக்கியமான_விஷயங்கள்

If every couple wants to be happy together for the rest of their life, they need to know many things about relationships.

Generally through experience, the maturity and attainment related to this will be gained,
There is nothing wrong in trying to understand some truths about this.

👉 Here are the important things about relationships listed as follows. If couples live with them in mind, the relationship will last long.

Pure love can perform miracles in today's emergency, the number of people who know the power of love is very small. We forget to be kind in various situations of today's life where everyone is running in an emergency. To be kind doesn't need any effort, just make it a habit to behave, that's all.

Once you decide to be kind, you will realize how powerful being loved is. Being kind, is your
Make relationships healthier and stronger and gives you many great benefits.

Sad days can come in everyone's life. It is not necessary to think negatively that the irritation of your loved one is on you.

There may be some days that can cause misery in everyone's life. It is important to realize that they may be facing difficult situations in those days. You may have stressed on different layers of life. You don't have the chance to know everything happening in your spouse's life;

Many times you can't even guess what could have happened. Realize the difficulties your spouse is struggling and give him time to recover from them. Don't take them publicly.

Don't fight in public. It's true that sometimes differences may come within a strong and lasting relationship.

A lot of couples understand that this is a vital thing in all types of relationships. But that doesn't mean you have to put your differences in public places.

Not to deny that you can fight to establish your rights if necessary. But what happens in public will make you overseas or easily sensitive, ruin your honor in the presence of others.

Don't wash your dirty clothes in public. Even if you have differences, try to solve them at home.

Forgiveness is the basic of any relationship. Only couples who forgive each other will live with long term relationships. No one can be flawless.

Have the attitude to admit the fact that both of you are wrong. Let the past be the past. If you blame each other for the past, the love between you will die.

Enjoy your love and life as much as possible. Whoever of you makes a mistake, learn to forgive.

It's so important to laugh together good feelings, especially hearty laughs, heartbreaks
Lightening and uniting minds.

Laughter has the power to break down local preventions, tension, etc. Why so much, even laughter has the power to fight against stress.

Experts say it can last a lifetime of laughs and it can also be more controlled by aging hormones production. And it's a wonderful thing to always be with good thoughts and enthusiasm.

Speak in a clear manner. Reading effectively what is in your mind is an impossible thing for everyone. Many couples are broken because they don't know what is in one's mind.

What is the need to try and read what is in the mind to speak clearly what is in the mind to know others,

👉 Nothing easier than that 👉

This will help you avoid wasting your time and avoid various problems that may come from misunderstanding. It is enough to say in a simple way to understand what you need during a conversation. Instead of that, it is unnecessary to speak mystery.

Being responsible will prove your love and help you realize how important you are to your loved one.

This makes you understand your inner feelings that are subtle to you and sow the hope that you would do anything for them. By being responsible you can gain the optimism of your loved one.

Whatever relationship you take, it's important to be responsible. Your talent is in implementing it, not just a word

For long lasting relationship… There are many rules and practices to keep the relationship happy for long term.

Healthy relationship
It is very important that you follow these rules to retain. It is very important to behave fair and wisely in different types of lifestyle situations.