# *சுந்தரகாண்டம்* *பெயர் காரணம்* வான்மீகி காலத்தில் நடந்ததாய் ஒரு நிகழ்வு…

# *சுந்தரகாண்டம்*
*பெயர் காரணம்*
🙏🙏🙏
வான்மீகி காலத்தில் நடந்ததாய் ஒரு நிகழ்வு சொல்லப்படுவதுண்டு. வான்மீகி, ராமாயணத்தை எழுதும் போது காண்டங்களுக்கு எல்லாம் பெயர் வைத்தாராம், அப்போது அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைக் குறிக்கும் பகுதி அயோத்தியா காண்டம், ஆரண்யத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைக் குறிக்கும் பகுதி ஆரண்யகாண்டம், கிஷ்கிந்தையில் நிகழ்ந்த நிகழ்வுகளைக் குறிக்கும் பகுதி கிஷ்கிந்தா காண்டம் என்றெல்லாம் பெயர் வைத்தவர் சுந்தரகாண்டம் எழுதும் போது என்ன பெயர் வைப்பது? என்று யோசித்தாராம்.

சுந்தர காண்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் இலங்கையில் நடக்கின்றன.
எனவே இலங்கா காண்டம் என்றுதான் பெயர் வைக்கவேண்டும். ஆனால் ராவணனின் நாட்டின் பெயரினை வைக்க விரும்பவில்லை வான்மீகி. எனவே சுந்தரகாண்டத்தின் நிகழ்வுகளை எல்லாம் புரிந்தவன் அனுமனே என்பதனால் அனுமன் காண்டம் என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தாராம்.
_பகிர்வு.சிஎஸ்வி_
எதற்கும் அனுமனிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என்று அழைத்துக் கேட்டாராம்.
அதனைக் கேட்ட அனுமன் இக்காப்பியம் என் தலைவனாகிய ராமபிரானின் பெருமையைச் சொல்வது. அதில் அவரின் பெருமைதான் இருக்க வேண்டுமே தவிர அவரின் தொண்டனாகிய என்னுடைய பெயர் ஒரு காண்டத்தின் பெயராக இடம் பெறக் கூடாது என்று மறுத்து விட்டாராம்.

வான்மீகி எவ்வளவோ வேண்டியும் அனுமன் இசையவில்லையாம். மேலும் இந்தக் காண்டத்திற்கு வேறு பெயர் வைத்தால்தான் இவ்விடத்தில் இருந்து செல்வேன் என்று அங்கேயே அமர்ந்து விட்டாராம். வான்மீகியும் வேறு வழியின்றி ’சுந்தரகாண்டம்’ எனப் பெயர் வைத்தபின்தான் எழுந்து சென்றாராம்.

நல்லவேளை நம்முடைய பெயரை வான்மீகி வைக்கவில்லை என்னும் மகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சென்றாராம் அனுமார்!

வீட்டிற்குள் அவர் நுழைந்தபோது அனுமனின் தாயாகிய அஞ்சனை வா! சுந்தரா! என்று அழைத்தாளாம். அனுமன் ஒன்றும்புரியாது தாயிடம் என்னை ஏன் சுந்தரா என அழைத்தீர்கள்? என்று கேட்ட பொழுது சுந்தரன் என்பதுதான் உன்னுடைய பெயர். நீ சிறுவயதில் சூரியனை பழம் என்று நினைத்துப் பறிக்கச் சென்ற போது இந்திரன் வஜ்ராயுதத்தினால் தாக்க உன்னுடைய கன்னம் சிதைந்து விட்டது. அதனால் நீ அனுமன் என்று அழைக்கப்பட்டாய்! அனுமன் என்பது காரணப் பெயரே தவிர இயற்பெயர் அன்று. சுந்தரன் என்பதுதான் உன் இயற்பெயர் என்று உணர்த்தினாளாம்!?

இதன் மூலம் வான்மீகி அவர் கருத்தில் வென்றுவிட்டார் என்று அனுமன் நினைத்தாராம்!

இந்தச் செய்தி பிறிதோர் உண்மையை நமக்குக் கற்றுத் தருகிறது…

இறைவன் முன்னர் யார் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அவர்கள் இறைவனால் தானாகவே உயர்த்தப்படுவார்கள் என்பதுதான் அது!

இத்தகைய அரிய செய்தியை நாம் உணரக் காரணமாய் இருந்ததும் அனுமனின் செயலே என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.🙏🌹

29 thoughts on “# *சுந்தரகாண்டம்* *பெயர் காரணம்* வான்மீகி காலத்தில் நடந்ததாய் ஒரு நிகழ்வு…”

  1. ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்
    ஸ்ரீ ராம ஜெய ராம
    ஜெய ஜெய ராம

  2. சிறு சந்தேகம். ராமாயணத்தை வடமொழியில் எழுதியது. வான்மீகியா அல்லது வால்மீகியா

Comments are closed.