"#திருநீலகண்ட #பதிகம்" — "பிரதோஷ சிறப்பு பதிவு" — "#க…

🌺"#திருநீலகண்ட #பதிகம்" — "பிரதோஷ சிறப்பு பதிவு"🌺

🌺"#காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா #திருநீலகண்டம்."🌺
——(#திருஞானசம்பந்தர் #தேவாரம் : 01.116.02)

#பொருளுரை : நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு "கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே" என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

திரு மயிலை சற்குருநாத ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/6emPNB_V9Fk

திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/7GaQk7_hyf4

திரு சம்பந்தம் குருக்கள் குரலிசையில்
https://youtu.be/fXkfosJFGf4

திரு மகேஸ்வர ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/x2h1QbY5Xgw

கொடிமாடச் செங்குன்றூரில் திருஞானசம்பந்தர், அடியார்களுடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்பொழுது பனிக்காலம் வந்தது. பல அடியார்களை நளிர் சுரம் பீடித்தது. அதனால் அடியார்கள் வருந்தினர். சம்பந்தரிடம் விண்ணப்பித்தனர். இது கேட்ட சம்பந்தர், "இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பே என்றாலும், அடியார்களை இந்த நோய் எய்தக்கூடாது. "நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர் தீர்க்கும் அரிய துணை" என்று எண்ணி "அவ்வினைக்கு இவ்வினை" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் "வினை தீண்டா! திருநீலகண்டம்!" என்று ஆணையிட்டு அருளினார். உடனே அடியார்களுக்குச் சுரம் தீர்ந்தது மட்டுமல்லாமல் அந்நாட்டிலேயே அந்தச் சுரநோய் தொலைந்தது.

#குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

நலம் தரும் பதிகங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைய…👇👇
https://chat.whatsapp.com/L1XiFVcWHVs6QbX7xAVOUV

TelegramGroup : https://t.me/DeivaThamizh

நால்வர் பெருமக்கள் அருளிய நற்றமிழ் தேவார பதிகங்களின் பாடல் வரிகளை, பொருளுரை மற்றும் ஓலி இசையோடு(🎶🎵🎼) கேட்டு மகிழ கீழே 👇👇 கொடுக்கப்பட்டுள்ள YouTube Channel ஐ Subscriber செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/channel/UCEwdHs8LcSM1MToqMdxzEig

🌺"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌺