" நம்மை நாமே காப்போம்" வாரீர் வருகின்…

" நம்மை நாமே காப்போம்"
வாரீர்

வருகின்ற *27.06.2020 * அன்றைய சனிக்கிழமை
92 வது வாரமாகும். நாம் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலயம் சென்று *கால பைரவருக்கு* விளக்கேற்றி, வணங்கி, அவருடைய பெரும் கருணையால் நாம் அனைவரும்
நமது ஒற்றுமையை நிலைநாட்டி வருகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் ஆலயம் சென்று விளக்குகள் ஏற்றி, வணங்க முடியாத காரணத்தால், வீட்டிலேயே,
*கால பைரவரை* நினைத்து, வேண்டி, விளக்கேற்றி வணங்கி மகிழ, சித்தர் பெருமான் அருளியுள்ளார்கள்

ஆகவே, இந்த சூழ்நிலைகள் மாறும் வரை, வீட்டிலேயே விளக்கேற்றி வணங்கி, வேண்டும் படி கேட்டு கொள்கிறோம்.

கால பைரவரின் பெரும் கருணையால், நாம் அனைவரும் வியக்கும் வண்ணம், பிரிந்து கிடந்த இந்து சொந்தங்கள் அனைவரும், ஜாதிகள், மொழிகள், கட்சிகள், பணக்காரன், ஏழை என்ற அனைத்து பேதங்களையும் மறந்து தமிழகத்தில், ஒவ்வொரு கிராமங்கள் தோறும், பல்வேறு சூழலில் இன்று ஒன்றிணைய தொடங்கி விட்டோம்.

இன்று இந்து உணர்வாளரகள் ஒன்றுகூடி,
ஆலய சொத்துக்களை பாதுகாக்கவும், ஏற்கனவே இழந்த சொத்துக்களை மீட்க சட்டரீதியாக போராட ஒரு குழு.

ஆலயங்களையும், நாம் வணங்கும் தெய்வங்களையும், தவறாக அவதூறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்க சட்டரீதியாக போராட ஒரு அணி.

குக்கிராமங்களில் சென்று, மதமாற்றங்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குழு.

இப்படி பல்வேறான அமைப்புகள் காலபைரவரின் அருளால் செயல்பட தொடங்கி விட்டது.

யுகங்கள் தோறும் அதர்மங்கள் தலை தூக்கி, தர்மங்கள் நசுக்கப் படும்போது, நான், அக்காலத்தில் தர்மத்தை நிலைநாட்ட, மானுடனாக அவதார பிறப்பெடுத்து வருவேன், என்று பகவத்கீதையில் அர்ஜுனனிடம் * கிருஷ்ண பகவான் * கூறுகிறார்.

அவ்வாறே இக்கால சூழலில், மனுதர்மத்தை மீட்டு எடுக்க, *சூரிய பகவானால்,*
^ஆன்ம ஒளி பொருந்திய^, °புது சக்தியுடன் கூடிய,° *ஒரு ஒப்பற்ற தலைவன்* உருவெடுத்து, நம்மை எல்லாம் வழிநடத்தி செல்வான் என்று நம்புவோமாக.

.அதற்காகவே நமது ஒற்றுமை நிலைக்கவும், மேலும் வலிமை கூடவும், நமது கலாச்சாரங்களும், பண்பாடுகளும், வழிபாடுகளும், உலகம் முழுவதும் விரிந்து பரவவும், செழிந்தோங்கவும், சித்தர் பெருமான் ஞாயிற்றுக்கிழமை தோறும், காலையில் சூரியபகவான் வழிபாட்டினையும், சொல்லி அருளி இருக்கிறார்கள்.

அந்த பூஜையினை சித்திரை மாத முதல் ஞாயிறன்று 19.04.20 நாமனைவரும் மகிழ்ச்சிகரமாக தொடங்கி விட்டோம். வருகின்ற *28.06.20 * 11 வது வாரமாகும்.

பல்லாயிரக் கணக்கானோர் பூஜை செய்து அவர்களை வணங்குவதன் பலனாக, சூரியபகவானும், மேற்கூறிய செயல்களை வெற்றிகரமாக முடிக்க உதவுவார்.

நம் அனைவரும் எதிர்நோக்கும், நல்ல வாழ்வினை, வெகு விரைவில்
*கால பைரவரும் *, *சூரியபகவானும்* சேர்ந்து நமக்கு அருளுவார்கள்.

.இன்னும் * கால பைரவருக்கு * சனிக்கிழமை தோறும் விளக்கேற்றி வணங்குவதன் மூலமும் , *சூரியபகவானுக்கு* ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டில் பூஜைகள் செய்து வணங்குவதன் மூலமும், நாம் தெளிவான முன்னேற்றத்தை காணலாம் என்பதனை நாம் அனைவரும் கண்கூடாகவும், பரிபூரணமாகவும் உணராலாம். உணரும் காலத்தை வெகுவிரைவில் இயற்கையே நமக்கு அமைத்து கொடுக்கும்.

நமது இந்து சொந்தங்களே , வணக்கம்.

இனிமேலாவது, கொஞ்சம் சிந்தியுங்கள் சொந்தங்களே, இந்துக்களாகிய நாம் அனைவரும் 91 வாரங்களுக்கு முன்னால் எப்படி இருந்தோம், சித்தர் வாக்கின் படி,
91 வாரங்கள் தொடர்ந்து
*கால பைரவருக்கு* விளக்கேற்றி வணங்கிய பிறகு எப்படி இருக்கிறோம் ?

நாம் அனைவரும் என்ன எண்ணுகிறோம் என்பதனை, நாம் அனைவரும் அறிந்ததே.

நம்மிடம் கடுகளவும் ஒற்றுமை இல்லை.

நல்ல சிந்தனைகள் இல்லை,

எது சரி ? எது தவறு ? என்று புரிந்து கொள்ளும் ஆற்றல் துளியும் இல்லை.

எது சொன்னாலும் , அதன் உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, எள்ளளவும் இல்லவே இல்லை.

ஆகவே, நாம் அனைவரும் ஒன்று சேராமல் பிரிந்தே இருக்கிறோம்.
நம் அனைவரையும் இணைக்க இறைவனால் மட்டுமே முடியும் என நம்புவோம்.

நாமனைவரும் எளிமையானவர்கள்,

நமக்கு பக்க பலமாக நிற்க எந்த இயக்கமோ, உதவி செய்ய தலைவர்களோ, யாரும் இல்லை.

ஆனால், நம்மூலம் பலனடைந்து, அதிகாரம் செய்யும் பல தலைவர்களும், முகமூடி பெயர்களை வைத்துக் கொண்டு, நம்மவர்களை போலவே , நம்முள் தோன்றி, நம் வழிபாட்டையே கேலியும் கிண்டலும் பேசி, நம்முடைய வழிபாட்டு முறைகளையே சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏன் என்று ஒரு கேள்வி கூட , அவர்களை நோக்கி கேட்கும் ஆற்றல் நமக்கு யாருக்கும் இல்லை.

நீயே கதி பரந்தாமா !!!
என்று முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரன் அழைத்த போது ,
பரம் பொருளே, இறங்கி வந்து காப்பாற்றிய நிகழ்வையும் நாமறிவோம்.

இப்போது வலிமையற்ற நிலையில், ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் நாம், இதே போல் இறைவனை சரணடைந்து, காப்பாற்றும் படி வேண்டிக் கொள்வதை தவிர, வேறு வழியே இல்லை.

இதற்காக நாம் அனைவரும் செய்ய வேண்டியது,

முக்காலத்திற்கும், தலைவனாக விளங்கும் , காலச் சக்கரத்தின் அதிபதியான, "கால பைரவரை" சரணடைவதுதான்.

" ஆகவே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை இராகு கால நேரத்தில்
( காலை மணி 9—10.30 )
பஞ்ச பூதங்களை வேண்டி
5 ( ஐந்து ) நல்லெண்ணெய் (தீபம்) விளக்குகளை அவர் முன் ஏற்றி, பரிபூரணமாக உங்களை சரணடைகிறோம்.

எங்கள் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கவும், மற்ற சக்திகளால் எங்களுக்கு எந்த பிரச்சினைகளும் எழா வண்ணமும், நீரே உற்ற துணையாக இருந்து, எதிர்காலத்தில், வலிமையான, வளமையான, நம் வழிபாட்டு முறைகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற, அருள் புரியுங்கள் என்று, தூய மனதுடன் பிரார்த்தனை செய்து கொள்வது நலம்.

இதனால் காலத்தின் தலைவன், பஞ்சை நூலாக்கி , நூலை ஆடையாக்கி, தருவது போல, நம் மென்மையான இன மக்களை ஒன்று சேர்த்து, பஞ்ச பூதங்களான இயற்கையின் ஆற்றலால் வழிபாடுகள் தொடர்ந்து நடக்க ஆசிபுரிவார்.

இதை, மிகுந்த நம்பிக்கையோடு நமது இனத்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டுகிறோம்.

இதை நம்முடைய சந்ததிகளுக்கும் விளக்கமாக கூறி, அவர்களையும் விளக்கேற்றும் படி செய்யுங்கள். எதிர்கால மாற்றத்தை விரைந்து காணுங்கள்.

நீங்கள் இந்த நல்ல விஷயத்தை மூன்று பேருக்கு சொல்ல, அவர்கள் அடுத்த மூன்று பேருக்கு சொல்ல, இப்படி போனால் இந்த செய்தி கோடிக்கணக்கான நம்மினத்தவரிடம் போய் சேர்ந்து, நாம் அனைவரும் ஒன்றிணைய " கால பைரவர்" நமக்கு கண்டிப்பாக துணை நிற்பார்.
அந்த முதல் ஆளாக நீங்கள் இருக்க வேண்டாமா ? சிந்தியுங்கள்.

நாம் தொடங்கும் போது, கால பைரவரின் அருளால், உலகமே மாற்றத்தை உணரும்…..

மேலும் விவரங்களை அறிய….

ஆதிபராசக்தி, மந்திரபாவை மற்றும்
18 சித்தர்கள் ஆலயம்,
எண் 4, புகழேந்தி தெரு,
பள்ளிக்கரணை, சென்னை 600 100.

044 – 22460820 / 2246 2910 / 9962884902.

www.facebook. com /pallikaranaisakthi
youtube subscribe / pallikaranaisakthi
www.pallikaranaisakthi.org

One thought on “" நம்மை நாமே காப்போம்" வாரீர் வருகின்…”

Comments are closed.