#நாளைக்கு_பிரதோஷம் #நமச்சிவாய_திருப்பதிகம் || காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க…

#நாளைக்கு_பிரதோஷம்

#நமச்சிவாய_திருப்பதிகம் ||

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி || பிரதோஷ வழிபாடு சிறப்பு பதிவு ||

"மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் ஓத வேண்டிய திருப்பதிகம்."

திருநல்லூர்பெருமணத்தில் இறைவன் சந்நிதியில் சம்பந்தரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில் இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம் #நமச்சிவாயத்_திருப்பதிகம்
என போற்றப்படுகிறது.

🌺#காதலாகிக்_கசிந்து

கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. …..(01)

🌺#நம்புவார்_அவர்

நாவின் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொன்னார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே. …..(02)

🌺#நெக்குள்_ஆர்வம்

மிகப்பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே. …..(03)

🌺#இயமன்_தூதரும்

அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே. …..(04)

🌺#கொல்வாரேனும்_குணம்

பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே. …..(05)

🌺#மந்தரம்_அன

பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே. …..(06)

🌺#நரகம்_ஏழ்புக

நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. …..(07)

🌺#இலங்கை_மன்னன்

எடுத்த அடுக்கல் மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. …..(08)

🌺#போதன்_போதன

கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. …..(09)

🌺#கஞ்சி_மண்டையர்

கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுது செய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. …..(10)

🌺#நந்தி_நாமம்

நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே. …..(11)

#பதிகப்_பலன்

நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச்செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர்.

[fb_vid id=”photo_id”:”2650350735286482″”][fb_vid id=”2650350735286482″]

2 thoughts on “#நாளைக்கு_பிரதோஷம் #நமச்சிவாய_திருப்பதிகம் || காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க…”

  1. அருமை அருமை. இவர்கள் எல்லோரும் இறவனுடன் ஜோதியில் கலந்த ஆச்சாள்புரம் என்னும் கோவிலை தரிசனம் செய்த பாக்கியம் இந்த அடியேனுக்கு கிடைத்தது சிவனின் அருளால். ஓம் நமசிவாய நமஹா

Comments are closed.