ஹரி ஓம் நம சிவாய *ஆன்மிக தகவல்கள்* *நவ பிரம்மாக்கள் என்பவர்கள் யார் ?* படைக…

🤘🐚ஹரி ஓம் நம சிவாய🔱🤘
*ஆன்மிக தகவல்கள்*
*நவ பிரம்மாக்கள் என்பவர்கள் யார் ?*

படைக்கும் கடவுளாம் பிரம்ம தேவர் , படைக்கும் தொழில் மட்டுமல்லாமல் , பற்பல வடிவம் கொண்டு விளங்குவதாகவும் கூறப்படுகிறது .
அதில் சிறப்பு பெற்று விளங்குவது நவ பிரம்மாக்கள் .
இந்த நவ பிரம்மர்களின் வடிவங்கள் முறையே , 1. குமார பிரம்மன் ,
2. அர்க்க பிரம்மன் ,
3. வீர பிரம்மன் ,
4. பால பிரம்மன் ,
5. சுவர்க்க பிரம்மன் ,
6. கருட பிரம்மன் ,
7.விஸ்வ பிரம்மன் ,
8. பத்ம பிரம்மன் ,
9. தாரக பிரம்மன் என்பனவாகும் .

*நவ பிரம்மாக்கள்*
குமார பிரம்மன் திருமாலுக்கு மகனாகப் பிறந்து படைப்புத் தொழிலை நன்கு ஆற்ற தவம்புரியும் நிலையைக் குறிக்கிறது .
அர்க்க பிரம்மன் சூரிய மண்டலத்தில் விளங்கும் பிரம்மன் .
சிவாசனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் சூரிய மண்டலத்தில் இந்த அர்க்கப் பிரம்மன் சிறப்புடன் பூஜிக்கப்படுகிறார் . வீர பிரம்மன் அறியாமை மிகுந்த அரக்கர்களோடு
போரிட்ட கோலத்தைக் குறிப்பது இது .
பால பிரம்மன் அத்ரி – அனுசுயா தம்பதியரிடம் குழந்தையாக தவழ்ந்த நிலையில் உள்ளவர் .
சுவர்க்க பிரம்மன் யாகாதிகளால் மேன்மை பெற்றவர்கள் வசிக்கும் சுவர்க்கத்தைக் காப்பவராகத் திகழ்கிறார் .
கருட பிரம்மன் ஒரு முறை , பறவை வடிவில் இருந்த முனிவர்களுக்குப் பருந்து வடிவம் கொண்டு பிரம்மன் உபதேசித்தான் .
அதனால் கருட பிரம்மன் எனப்பட்டார் .
விஸவ பிரமமன உலகினைப் படைக்கும்போது விஸ்வ பிரம்மன் என்று பெயர் பெறுகிறார் .
பத்ம பிரம்மன் திருமாலின் நாபியிலிருந்து தோன்றி தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருப்பதால் இந்தப் பெயர் .
தாரகப் பிரம்மன் தாரக மந்திரத்திற்குத் தலைவனாக இருப்பதால் இந்தப் பெயர் .

*நவ பிரம்மாக்களின்*
கோயில் நவ பிரம்மாக்களுக்கும் தனித்தனியே கோயில்களில் உண்டு . ஆந்திரப் பிரதேசம் , மெகபூப் நகர் மாவட்டம் , அலம்பூர் என்ற ஊரில் உள்ளது .
இக் கோயில்கள் மத்திய அரசு தொல்லியியல் துறையினரால் பராமரிக்கப்படுகின்றன .
🤘🐚ஹரி ஓம் நம சிவாய🔱🤘

🤘🐚 Hari Om Namah Shivaya 🔱🤘
* Spiritual information *
* Who are Nava Brahma's?*

It is said that the Creator God is Brahma Devar, not only the creation business, but also with many forms.
Nava Brahma's are the speciality in that.
This November Brahma's formations are in the same way, 1. Kumara Brahma,
2. Arkka Brahma,
3. Brave Brahma,
4. Bala Brahma,
5. Paradise Brahma,
6. Karuda Brahma,
7. Vishwa Brahma,
8. Padma Brahma,
9. Taraka Brahma is the name.

* new grands *
Kumara Brahma is born as a son to Thirumal and it indicates that he can understand the penance to do the creative business well.
Arkha Brahma is the Brahma in the solar system.
This Arkap Brahma is worshipped with speciality in the solar system which is part of Sivasanam. Brave Brahma with ignorant monsters
This is about the war goal.
Bala Brahma Athri – Anusuya is a child crawling with the couple.
Paradise Brahma is the protector of the heaven where the people who are exalted by the Yakadis live.
Karuda Brahma once taught Brahma to the sages who were in the form of a bird with a hawk form.
That is why he was called Karuda Brahma.
When Visava Brahma created the world, he is named as Vishwa Brahma.
This name is because Padma Brahma appeared from Thirumal's Nabi and sits in Padmasanam in Lotus.
This name is because Tharagap Brahma is the head of Tharagam Mantra.

* New Brahma's *
Even the new Brahma's of the temple are there in temples alone. Andhra Pradesh is located in a town of Alambur, Megboob Nagar District.
These temples are maintained by the Central Government Archaeological Department.
🤘🐚 Hari Om Namah Shivaya 🔱🤘