#வியர்க்குருவை விரட்ட பாட்டி வழிதான் சிறந்தது… கோடைக்காலத்தில் எவ்வித பேதமின்…

#வியர்க்குருவை விரட்ட பாட்டி வழிதான் சிறந்தது…

கோடைக்காலத்தில் எவ்வித பேதமின்றி தாக்கும் ஆரோக்ய பாதிப்பில் முதன்மையானது வியர்க்குரு பிரச்னை. வெயிலில் நேரடியாக சென்றால் தான் வியர்க்குரு பிரச்னை வரும் என்பதில்லை. உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை உடலில் அணியும் ஆடைகள் உறிஞ்சாமல் இருந்தாலும் வரும். அதனால் தான் வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகள் அணிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக நம் நாடு வெப்பம் மிகுந்த நாடு என்பதால் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் உணவு பழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் வரையறுக்கப்பட்டிருந்தது.

கொளுத்தும் வெயிலின் தாக்கம் கடந்த 10 வருடங்களாக அதிகரித்து வருகிறது. பணிக்கு செல்வோர்கள், வெளியில் பணியை கொண்டிருப்பவர்கள் அதிக வியர்வையால் பாதிக்கப்படுவது போலவே வீட்டில் இருக்கும் பிறந்த குழந்தைகள் முதல் வயதான முதியோர்கள் வரை வியர்க்குரு பிரச்னையால் பாதிக்கப்படுவது சகஜமாகிவிட்டது.

வியர்வை சுரப்பிகளிலிருந்து சருமத்தின் வெளிப்புறம் வியர்வை வெளியேற வர உதவும் துவாரங்களில் அடைப்பு இருந்தால் வியர்வை உண்டாகும். எல்லா காலங்களிலும் இத்தகைய பிரச்னைகள் வந்தாலும் கோடைக்காலங்களில் அதிகமாக வியர்வை சுரக்கப்படும் போது வெளிவர முடியாமலேயே சிவந்த கொப்புளங்கள் சிறிய அளவில் உண்டாகின்றன. ஒருபுறம் சருமத்தில் காற்று செல்லாமை, மசாலாக்கள் நிறைந்த உணவு, ஜங்க்ஃபுட் உணவுகள், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் கூட வியர்க்குருவை அதிகப்படுத்திவிடுகிறது.

ஆரம்பத்தில் வியர்க்குரு வரும்போதே அதைத்தவிர்த்துவிட்டால் வியர்க்குருக்கள் உடலில் பரவாது. சில நேரங்களில் வியர்க்குருக்களை கவனிக்காமல் விட்டால் வேனிற்கட்டிகளை உண்டாக்கிவிடும். சருமத்தை சிவந்த நிறமாக்கிவிடும். வியர்க்குரு மூடும் வகையில் ஆடைகள் அணியும் போது அரிப்பும், தடிப்பும், எரிச்சலையும் அதிகமாக்கும். சில நேரங்களில் வீக்கத்தையும் ஏற்படுத்தி விடும். வியர்க்குரு, வேனிற்கட்டி, சரும எரிச்சல், தடிப்பு அனைத்தையும் ஓட ஓட விரட்டிய பாட்டி வைத்தியம் கைகொடுக்கும்.

* வேப்பிலையுடன் கிழங்கு மஞ்சளை நசுக்கி வியர்க்குரு இருக்கும் இடங்களில் பற்றுபோட்டு அரைமணி நேரம் கழித்து குளித்து வரலாம். வியர்க்குரு பரவாது. அரிப்பு, நமைச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்தும் விரைவில் நிவாரணம் அடைய லாம்.

* பச்சிளம் குழந்தைகளுக்கு மிருதுவான சருமம் என்பதால் வியர்க்குருவால் அவதிப்படும்போது இளங்குறுத்து வேப்பிலையை எடுத்து வியர்க்குரு மேல் இதமாக தடவி விடலாம்.

* சந்தனக்கட்டையின் மீது பன்னீர் தெளித்து உரைத்து சந்தனத்தை வியர்க் குருவின் மீது பூசி வந்தால் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். சந்தனம் காய காய உரைத்து போட்டுக்கொண்டே இருந்தால் அதிக பாதிப்பின்றி தப்பிக்கலாம்.

* நுங்கு நீரை சருமத்தின் மீது பூசி வருவதன் மூலம் சருமப் பாதிப்பு எதுவாக இருந்தாலும் முற்றிலும் நீங்கி விடும். கற்றாழை ஜெல்லையும் வியர்க்குருவின் மீது தடவினால் குளிர்ச்சியாக இருக்கும்.

* கோடைக்காலங்களிலாவது சோப்பு கட்டிகளை உபயோகிக்காமல் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு கலந்த மாவை பயன்படுத்தி தேய்த்து குளிப்பது நல்லது.

* குளித்து முடித்தவுடன் ஈர சருமத்துடன் பவுடரை போடாமல் சருமத்தை நன்றாக உலரவிட்டு பவுடர் போடவேண்டும். இயன்றவரை அதிக மேக்கப் போடுவதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காட்டன் ஆடைகளை அணிவதே நல்லது.

*மே தினம் ஸ்பெஷல் !* *கூலியாளாகவும்_வந்த_சிவபெருமான்* பாண்டிய நாட்டின்…

*மே தினம் ஸ்பெஷல் !*

*கூலியாளாகவும்_வந்த_சிவபெருமான்*

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் கனமழை பெய்து, வைகையாறு பெருக்கெடுத்தோடியது. எனவே ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒருவராவது வந்து வைகையின் கரையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார்! மன்னன் வரகுண பாண்டியன். (இவரிடமே முன்பு மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தார்.) அனைவரும் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.
ஆனால் வந்தி என்ற பிட்டு விற்கும் ஒரு மூதாட்டியால் மண்ணைச் சுமக்கவும் முடியவில்லை! அவரளுக்காகப் பணிசெய்ய வேறு யாரும் அவளுக்கு உறவுமில்லை. எனவே கடவுளிடம் தன் நிலை குறித்து முறையிட்டாள் வந்தி. வந்தியின் நிலையை கண்ட சிவனார் ஒரு கூலியாளின் வடிவில் அங்கே வந்து, தாயே நான் இந்த மண்ணை சுமக்கிறேன்! அதற்கு பதிலாக நீ வேக வைக்கும் பிட்டில் உதிர்ந்து போவதையெல்லாம் எனக்குக் கொடு! என்றார்.
சிவனார் வேண்டுதலுக்கு மூதாட்டியும் சம்மதித்தாள். ஆனால் சிவபெருமானின் திருவிளையாடலால் அன்று அவள் வேகவைத்த பிட்டெல்லாம் உதிர்ந்துப் போனது. எனவே அதையனைத்தையும் கூலியாளுக்குக் கொடுக்க, அதை வாங்கி உண்ட சிவபெருமானோ, மண்ணைச் சுமக்காமல், ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார்.
அப்பொழுது அங்கே மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் ஒரு வேலையாள் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு கோபமாகிப் பிரம்பால் அவரை பிரம்பால் அடிக்க, அந்த அடியானது அனைவரின் முதுகிலும் விழுந்தது. சிவபெருமானும் ஒரு கூடை மண்ணை எடுத்து வைகையின் கரையில் கொட்டிவிட்டு மாயமானார். மறுகணமே வைகையின் உடைப்பும் சரியானது. பின்னரே அங்கிருந்த அனைவரும், கூலியாளாக வந்தது சொக்கநாதரே! என்றுணர்ந்தனர்.
இந்த திருவிளையாடல் அரங்கேறியது ஆவணி மாத ஆரம்பத்தில். தன்னை தஞ்சம் என்றடைந்தவருக்கு உதவவும், இவ்வுலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம்! என்பதையும் விளக்கவுமே சிவபெருமானால்இத்திருவிளையாடல்,
மதுரையில் நடத்தப்பட்டது.
மாணிக்கவாசகரைத் தொல்லைப்படுத்திய மன்னனின் ஆணவத்தை அடக்கவும் எண்ளணியே திருவிளையாடலை நிகழ்த்தினார்! சிவனார். மாணிக்கவாசகருக்காக, நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை அடுத்தே வைகையை உடைப்பெடுக்க வைத்து, பின்னர் காத்தருளிய திருவிளையாடலும் சிவபெருமானால் நிகழ்த்தப்பட்டது.
என் விருப்பமல்லாமல் இவ்வுலகில் எதுவும் நடைபெறாது! நாடாளும் மன்னனாலும் நீயும் ஒரு சிறு துரும்பே! என மன்னனுக்கு உணர்த்தவுமே சிவபெருமான். இத்திருவிளையாடல்களை மீனாட்சியம்மை அரசாண்ட மதுரை மண்ணில் நிகழ்த்திக் காட்டினார்.
இத்திருவிளையாடலை விளக்கவே மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு சிவனார் மண் சுமந்த விழா கொண்டாடப்படுகிறது. மதுரையில் அன்றைய தினம் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து சுந்தரேசர் கோயிலுக்கு எழுந்தருளுவர்.
வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சிவபெருமான் மண் கொட்டிய இடம் வைகையின் கரையில் இன்றும் உள்ளது.
எளியோனுக்கு எளியோனாக, கூலியாளாகவும் வந்து, ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய சிவபெருமானின் கருணையுள்ளத்தை நாம், இந்த உழைப்பாளர் தினத்தில் போற்றி வணங்கி, சிவனருளைப் பெறுவோம்.

🙏 *ஓம் நம சிவாய* 🙏

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் அஞ்சனை_மைந்தனான அனுமனுக்கு ராமர் என்றால் தன் உய…

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்

அஞ்சனை_மைந்தனான அனுமனுக்கு

ராமர் என்றால் தன் உயிருக்கும் மேலான உயிர்…
அப்படி ஒரு பக்தி.

தன் உள்ளத்தில் கோயில் கட்டி குடி வைத்துள்ள கோதண்டராமரை, யுகம் யுகமாகத் தனது நெஞ்சில் சுமக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மீண்டும் ஒருமுறை மண் மீது தரிசிக்கும் ஆசையில் அனுமன் தற்போது ஆந்திராவில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில் ஒரு கருங்காலி மரத்தின் அடியில் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த அந்த தவத்தை அன்று நிறைவு செய்ய முடிவு செய்தது பரம்பொருள். அது மட்டுமா ?.

தன் அன்புக்குரிய அடியவனாம் அனுமனுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கவும் சித்தம் கொண்டது. சூரிய கோடிப் பிரகாசத்துடன் வாயு மைந்தனின் முன் திருக்காட்சி தந்தது.

ஆவலுடன் கண்விழித்தார் ஆஞ்சநேயர். மறு கணம் அவர் புருவங்கள் உயர்ந்தன. தேவர்களும் ரிஷிகளும் தவமாய் தவம் கிடந்தும் கிடைக்காத பகவானின் தரிசனத்தால் மகிழ்வதற்குப் பதிலாகக் குழப்பத்தில் ஆழ்ந்தார் வாயுவின் மகன் ஆஞ்சநேயர்.

இருக்காதா பின்னே ! ஸ்ரீ ராமனைத் தரிசிக்கும் ஆவலுடன் கண் திறந்தால்… மிரட்டும் விழிகளும் கோரைப் பற்களும் சிங்க முகமுமாக ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அல்லவா காட்சி தருகிறார் ?!.

ஸ்ரீ ராமனைக் காணாத ஏமாற்றத்தால் அனுமனின் முகம் வாடிப் போனது. என் ராமன் எங்கே ? என்பது போல் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் திருமுகத்தை நோக்கினார் ஆஞ்சநேயர்.

இறை மலர்ந்தது.
நானும் ராமனும் ஒருவர்தானே என்று அனுமனிடம் சொல்வது போல் தலையசைத்துப் புன்னகைத்தார்.

அந்த இறைமொழி புரிந்தது என்றாலும், அஞ்சனை மைந்தனுக்கு மனம் ஒப்பவே இல்லை. அழகின் உறைவிடமான என் ராமன் எங்கே?.கோரைப் பற்களும் கோர முகமும் கொண்ட இவர் எங்கே ! கருணை பொழியும் ஸ்ரீ ராமனின் திருமுகம் பகைவரையும் ஈர்க்குமே ! அவரும் இவரும் ஒருவரே என்பதை எப்படி ஏற்க முடியும் ? – அனுமனின் மனக் குழப்பம் தீரவில்லை.

அசுரர்களையே குலை நடுங்கச் செய்த தலம் இது. அரக்கர் தலைவன் ஹிரண்யகசியுவின் கதை முடித்த தலம். இங்கு, உக்கிரமான இந்தக் கோலத்தில் அருள்வதே சிறப்பு என்ற பரம்பொருளின் எண்ணம். ராம பக்தியால் அனுமனுக்குப் புரியவில்லையோ !. ஸ்ரீராமன் எனும் வடிவில் பரம்பொருளை ஆராதித்துப் பழக்கப்பட்ட அவர் மனம், இவரும் அவரும் ஒன்றே என்று ஏற்க மறுத்தது !

விண்ணும், மண்ணும், இந்தப் பால் வெளியும், பஞ்ச பூதங்களும், சர்வ மார்க்கங்களும், சகல தேவர்களும் எனது அம்சமே !.
அணு முதல் அண்டபகிரண்டம் அனைத்தும் எனது சாந்நித்தியமே !.
இது வேறு, அது வேறு என்ற பாகுபாடு இங்கில்லை என்பதை அனுமனுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் உணர்த்த எண்ணிய இறை, ஒரு காரியம் செய்து. திருக்கரத்தில் வில்லேந்தி காட்சி தந்தது. நன்றாக என்னை உற்றுப் பார் என்று ஆணை இட்டது.

அனுமனும் உற்று நோக்கினார்!. ஸ்ரீநரசிம்மரும், ஸ்ரீராமனும் நாராயணரின் அவதாரம்தான் என்பதை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விளக்கும் விதமாக, சிரத்துக்கு மேல் ஆதிசேஷன் படம் விரித்துக் குடைபிடிக்க… வலக் கரத்தில் சக்கரமும், இடக் கரத்தில் கோதண்டமும் திகழ அற்புதமாய் அருட்காட்சி தந்தார் ஸ்ரீநரசிம்மர்.

அனுமனுக்கு உண்மை புரிந்தது.
தான் போற்றும் பரம்பொருளே இவர்தான் என்று உணர்ந்தார். கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்.

அனுமனுக்கு அன்று காட்சி கொடுத்த ஸ்ரீநரசிம்மரை வில்லேந்திய அதே திருக்கோலத்தில், இன்றைக்கும் நாம் அகோபிலத்தில் தரிசிக்கலாம். கருங்காலி மரத்தடியில் அனுமனுக்குக் காட்சி தந்தால், இந்த நரசிம்மருக்கு ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்றே திருநாமம். கரஞ்சை என்றால் கருங்காலி என்று பொருளாம்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !

Tamil Full Movies 2013 – Ennulle – New Tamil Movies [HD]Ennulle is a 2013 Tamil coming-of-age film directed by vijairoshan Staring:Naveen,sobaraj,arthi puri,Music:s.p.venkidesh,Lyrics:muthu
Subscribe To Our YouTube Channel
http://www.youtube.com/subscription_center?add_user=movieworldmalayalam1
Like Us on Facebook:
Join⇨http://www.facebook.com/movieworldmalayalam
Follow us on Twitter
www.twitter.com/MOVIEWORLDINDIA

இதோ! கிருமிநாசினியான மாவிலையின் மருத்துவ குணங்கள்… மாமரத்தின் பூர்வீகம் இந்தியா…

இதோ! கிருமிநாசினியான மாவிலையின் மருத்துவ குணங்கள்…

மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

கிருமிநாசினியான மாவிலை :

கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாம்பூவும், பட்டையும் :

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

பித்த வெடிப்பு குணமாகும் :

பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மாங்காய் :

மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும் :

மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம். கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

உதிரப்போக்கு கட்டுப்படுத்தும் :

மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

வயிற்றுப்புண் ஆற்றும் :

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

பாபா நீ என்னுடனே இருக்க வேண்டும். உன் அருளை என்றென்றும் பெறவேண்டும் நான் என்…

பாபா நீ என்னுடனே இருக்க வேண்டும்.
உன் அருளை என்றென்றும் பெறவேண்டும்

நான் என்ற அகந்தையை நீ அழிக்கவேண்டும்.
அதனிடத்தில் நீ வந்து அமர வேண்டும்.

இன்பத்தின் எல்லையையும் அடைய வேண்டும்.
துன்பம் என்னை நெருங்காமல் இருக்க வேண்டும்.

அன்பு என்ற சொல் எங்கும் பரவ வேண்டும்.
பாசத்தோடு அதையும் உணர வேண்டும்.

எல்லோருக்கும் எப்பொழுதும் உதவ வேண்டும்.
இயன்றவரை நல்லதையே செய்யவேண்டும்

அனைவருக்கும் உன் புகழை சொல்லவேண்டும்.
அந்த ஆற்றலையும் நீ எனக்கு தரவேண்டும்.

என் உள் மனதும் உன் நாமம் சொல்லவேண்டும்.
அந்த ஆனந்தத்தில் என்னையே மறக்க வேண்டும்.

நீ அமர்ந்திருக்கும் புனித மண்ணை வணங்க வேண்டும்.
அங்கு உன் முக தரிசனமும் காண வேண்டும்.

உன் பொன்மொழிகள் யாவையும் படிக்க வேண்டும்.
அதற்கேற்ப நல்வழியில் செல்ல வேண்டும்.

உன் கருணைப் பார்வை என் மீது படவேண்டும்.
தூய எண்ணம் என்னுள்ளே வளர வேண்டும்.

உன் இருப்பை அனுதினமும் உணரவேண்டும்.
என் பிறப்பின் பலனையும் அடைய வேண்டும்.

என் எழுத்தில் உன்னை நான் பாட வேண்டும்.
அதை படிக்கும் யாவரும் உள்ளம் மகிழ வேண்டும்.

ஷீரடி வாசன் என்று உன்னை அழைக்க வேண்டும்.
சாயி பாபாவே நீ எம்மை காக்க வேண்டும்.

உன்னை தான் தேடி உன் வீட்டிற்கே வந்து உள்ளேன்
உன்தன் உன்னத அன்பு என்னை வரசெய்து உள்ளது

என் அன்பு_குழந்தையே…என்னை முழுவதுமாக உணர்வாய். உன் மனத்தை் துன்பம் என்ற திரையை வைத்து போத்தி உள்ளாய் அல்லவா. அதை தூக்கி வீசி எறி.

அப்போது உன் மனதில் ஓரு மிக பெரிய ஓளி சுடர் தெரியும். அதில் ஆனநதத்தின் அருவியாய் பொழிந்து என்னை பார்ப்பாய்.

உன் நிம்மதியை உணர்ந்து அமிர்தத்ததில் மிதப்பது போன்று உணர்வாய்.

மே தினம் ஸ்பெஷல் ! #கூலியாளாகவும்_வந்த_சிவபெருமான் பாண்டிய நாட்டின் …

மே தினம் ஸ்பெஷல் !

#கூலியாளாகவும்_வந்த_சிவபெருமான்

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் கனமழை பெய்து, வைகையாறு பெருக்கெடுத்தோடியது. எனவே ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒருவராவது வந்து வைகையின் கரையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார்! மன்னன் வரகுண பாண்டியன். (இவரிடமே முன்பு மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தார்.) அனைவரும் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.
ஆனால் வந்தி என்ற பிட்டு விற்கும் ஒரு மூதாட்டியால் மண்ணைச் சுமக்கவும் முடியவில்லை! அவரளுக்காகப் பணிசெய்ய வேறு யாரும் அவளுக்கு உறவுமில்லை. எனவே கடவுளிடம் தன் நிலை குறித்து முறையிட்டாள் வந்தி. வந்தியின் நிலையை கண்ட சிவனார் ஒரு கூலியாளின் வடிவில் அங்கே வந்து, தாயே நான் இந்த மண்ணை சுமக்கிறேன்! அதற்கு பதிலாக நீ வேக வைக்கும் பிட்டில் உதிர்ந்து போவதையெல்லாம் எனக்குக் கொடு! என்றார்.
சிவனார் வேண்டுதலுக்கு மூதாட்டியும் சம்மதித்தாள். ஆனால் சிவபெருமானின் திருவிளையாடலால் அன்று அவள் வேகவைத்த பிட்டெல்லாம் உதிர்ந்துப் போனது. எனவே அதையனைத்தையும் கூலியாளுக்குக் கொடுக்க, அதை வாங்கி உண்ட சிவபெருமானோ, மண்ணைச் சுமக்காமல், ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார்.
அப்பொழுது அங்கே மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் ஒரு வேலையாள் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு கோபமாகிப் பிரம்பால் அவரை பிரம்பால் அடிக்க, அந்த அடியானது அனைவரின் முதுகிலும் விழுந்தது. சிவபெருமானும் ஒரு கூடை மண்ணை எடுத்து வைகையின் கரையில் கொட்டிவிட்டு மாயமானார். மறுகணமே வைகையின் உடைப்பும் சரியானது. பின்னரே அங்கிருந்த அனைவரும், கூலியாளாக வந்தது சொக்கநாதரே! என்றுணர்ந்தனர்.
இந்த திருவிளையாடல் அரங்கேறியது ஆவணி மாத ஆரம்பத்தில். தன்னை தஞ்சம் என்றடைந்தவருக்கு உதவவும், இவ்வுலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம்! என்பதையும் விளக்கவுமே சிவபெருமானால்இத்திருவிளையாடல்,
மதுரையில் நடத்தப்பட்டது.
மாணிக்கவாசகரைத் தொல்லைப்படுத்திய மன்னனின் ஆணவத்தை அடக்கவும் எண்ளணியே திருவிளையாடலை நிகழ்த்தினார்! சிவனார். மாணிக்கவாசகருக்காக, நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை அடுத்தே வைகையை உடைப்பெடுக்க வைத்து, பின்னர் காத்தருளிய திருவிளையாடலும் சிவபெருமானால் நிகழ்த்தப்பட்டது.
என் விருப்பமல்லாமல் இவ்வுலகில் எதுவும் நடைபெறாது! நாடாளும் மன்னனாலும் நீயும் ஒரு சிறு துரும்பே! என மன்னனுக்கு உணர்த்தவுமே சிவபெருமான். இத்திருவிளையாடல்களை மீனாட்சியம்மை அரசாண்ட மதுரை மண்ணில் நிகழ்த்திக் காட்டினார்.
இத்திருவிளையாடலை விளக்கவே மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு சிவனார் மண் சுமந்த விழா கொண்டாடப்படுகிறது. மதுரையில் அன்றைய தினம் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து சுந்தரேசர் கோயிலுக்கு எழுந்தருளுவர்.
வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சிவபெருமான் மண் கொட்டிய இடம் வைகையின் கரையில் இன்றும் உள்ளது.
எளியோனுக்கு எளியோனாக, கூலியாளாகவும் வந்து, ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய சிவபெருமானின் கருணையுள்ளத்தை நாம், இந்த உழைப்பாளர் தினத்தில் போற்றி வணங்கி, சிவனருளைப் பெறுவோம்.

🙏 ஓம் நம சிவாய 🙏