*உடல் நலம்….* *உடலுக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்* உடலை வலுவாக்கும் உணவுகளில…

*💗உடல் நலம்….*

*உடலுக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்*

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பயிறு வகைகளில் புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், இது அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.

*பச்சைப் பயறு

எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது, பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.

இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

*கொண்டைக்கடலை

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (மிஸீtமீstவீஸீணீறீ நீணீஸீநீமீக்ஷீ) போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.

வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

*மொச்சைப் பயறு

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.

*காராமணி (தட்டைப்பயறு):*

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது.

புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.முளைக்கட்டியப் பயறை வெந்நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

*சளி, இருமலைப் போக்கும உணவுகள்!*

எல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது.

எப்போதாவது வரும் சளி இருமல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே அதைக் கவனித்துக்கொள்ளும். ஆனால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, காலை எழுந்ததும் அடுக்குத் தும்மல், நெஞ்சில் சளி, அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.

* உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், தடியங்காய் (வெள்ளைப் பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்களுக்குத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக இவற்றைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால், மிளகுத்தூள் தூவிச் சாப்பிடலாம். இதன் மூலமாக சளி, இருமல் தவிர்க்கலாம்.

* பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் கபத்தை (சளி) சேர்க்கக்கூடியவை. இவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்க்ரீம் வேண்டவே வேண்டாம். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை தவிர மற்றவற்றைச் சாப்பிடலாம்.

* மிளகு ஓர் அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். மிளகின் Immuno Modulating Effect காரணமாக, தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinusitis), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும் நாட்பட்ட பலனையும் அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.

* குழந்தைக்கு இரவில் மட்டும் இருமல் ஏற்படுகிறதா? நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி, இதமான தூக்கம் கிடைக்கும். குழந்தை, வெண்பொங்கலில் இருக்கும் மிளகை பொறுக்கி எடுத்துப் போட்டால் செல்லமாக மிரட்டி சாப்பிட வைக்கலாம்.

* பாசிப் பயறு கொஞ்சம் குளிர்ச்சியானது. குளிர்காலத்தில் இரவில் தவிர்க்கவும். ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள், இரவில் வெண்பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்தால், சளி, இருமல் தவிர்க்கலாம்.

* மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மதியம் சாப்பிடும்போது, மணத்தக்காளி வற்றலை வறுத்துப்போட்டு, முதல் கவளத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு குழம்பு, காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* மோர் சளி தராது. எனவே, அதை தாராளமாகச் சாப்பிடலாம். தயிர்தான் நல்லதல்ல. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்ப்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர், பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.

* திப்பிலியை இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும்.

* காலை காபிக்கு பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளைக் கஷாயமாக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகிவந்தால், காலை வேளையில் ஏற்படும் இளைப்பு உடனடியாகக் குறையும்.

* பிரைமரி காம்ப்ளெக்ஸ் நுரையீரல் காசநோய் (Primary Complex – Pulmonary Tuberculosis) இருக்கும் குழந்தைகளுக்கு சத்துமாவு மிக அவசியம். புழுங்கல் அரிசி, பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காயவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றை வறுத்து, மாவாகத் திரித்து சத்துமாவைச் செய்துகொள்ளலாம். கஞ்சி காய்ச்சிய பின் இனிப்புக்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு, சிறிது சுக்குத்தூள் சேர்த்து சூடாக அருந்தக் கொடுக்கவும். அசைவப் பிரியம் உள்ள குழந்தைக்கு, பால் நண்டு சமைத்துக் கொடுக்கலாம்.

உணவு, மருந்துக்கு மாற்றல்ல. மருந்தை விரைவாகப் பணிபுரிய வைக்கவும், நோய் அணுகாமல் தடுத்து வைக்கவும், வந்த நோயை விரைவாக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும். இதை மனதில்கொள்வது நல்லது.

பிராமணர்கள்,சிவாச்சார்யார் வேதனையல்லாம் திக காரனுக்கும்,திமுககாரனுக்கும் சொன்னால…

பிராமணர்கள்,சிவாச்சார்யார் வேதனையல்லாம் திக காரனுக்கும்,திமுககாரனுக்கும் சொன்னால் புரியாது நீங்கள் இவ்வளவு பேசரிங்களே ஒரு நாள் எங்களுடன் கோவிலில் இருந்து பாருங்கள் எங்கள் கஷ்டம் புரியும் . கோவில் வேலைனா மணி அடிக்கரதும் தட்டு புடிக்கரதும் மட்டும் கிடையாது நண்பர்களே ..
நான் திருச்செந்தூர் கோவில் பூஜை திருச்செந்தூர் சொன்னோன உனக்கேன்னபா பெரிய கோவில் சொல்லுவாங்க அவங்களுக்கும் சேர்த்துதான் இந்த பதிவு .
திருச்செந்தூர் கோவிலில் மொத்தம் 12 குடும்பம் ஒருவருக்கு 2 அரை நாள் முறை
ஒரு குடும்பத்தில் 5 குடும்பம் இருக்கு எல்லாரும் சேர்ந்துதான் 2 அறை நாள் பாக்கனும் பெரிய கோவில்களில் சம்பளம் கிடையாது பரம்பரை ஸ்தானிகம் தட்டு வருமானம் தான் அந்த 2 அரை நாள் வருமானத்த வச்சுதான் மாதம் முழுவதும் கழிக்க வேண்டும் .5 குடும்பமும்….
காலை 5 மணிக்கு நடைதிறப்பிற்கு முன்னாடியே சுத்து கோவில் அபிஷேகம் பண்ணி,விளக்கு போட்டு 5 மணிக்கு விஸ்வரூபத்திற்கு செல்ல வேண்டும் 2 நபர் வேண்டும் பூஜை முறை ,தட்டு ஏற்றும் முறை.
6:30 க்கு அபிஷேகம்
8 மணிக்கு உதயமார்தாண்ட பூஜை ,சுத்து கோவில் பூஜை.
3 காலசந்தி தீபாராதனை .முடிந்தவுடன் ஷண்முக அர்ச்சனை ஒரு நாளைக்கு குறைந்தது 3 அர்ச்சனை இருக்கும் இதற்கு 6 நபர் இருக்க வேண்டும்.
10:30 உச்சிகால அபிஷேகம்
12 மணிக்கு உச்சிகால பூஜை
2005 வருஷம் வரைக்கும் நடை அடைக்கபட்டு இருந்தது .இப்பொழுது மக்கள் கூட்டத்திற்காக நடை அடைக்கபடுவது இல்லை (பெரிய கோவில் மட்டும்.)
சாயங்காலம் 4 மணிக்கு சன்னதி மற்றும் சுத்து கோவில் விளக்கு போட வேண்டும் .
5 மணிக்கு சாயரட்சை .,ஷண்முகார்சனை.
ஜெயந்திநாதர் தேர் சாற்றுதல் ,தேர் சுற்றி வருதல் .
இரவு 7 மணிக்கு அபிஷேகம் .
8 மணிக்கு ராக்காலம்
8:30க்கு ஏகாந்தம்
9 மணிக்கு ரஹஸ்யம்
9:30 பள்ளியரை
இது சாதாரன நாள் பூஜைகள் விஷேச காலங்கள் .திருவிழா காலங்கள் எல்லாம்
சிறப்பு பூஜைகள் நடை பெரும்.
5 குடும்பமும் ,சொந்தமும் ,நட்பும் சேர்ந்து இருந்தாதான் ஒரு நாள் சாத்தியம்….
இப்பவாது காலம்தள்ள உள்ள வருமானம் கிடைக்கிறது .
எங்கள் தாத்தா காலத்தில் முறைக்கு வரும்போது காசு கொண்டுவந்துதான் முறையே கழித்து இருக்கிறார்கள் இது திருச்செந்தூர் கோவில் மட்டும்தான் .இன்னும் மதுரை போல் சிவாலயங்களில் வேலை இன்னும் அதிகம்…
நான் வேதனைனு சொன்னது நாங்கள் சுவாமிக்கு கைங்கர்யம் பண்றதயும் கேவலமாக பேசுவதுதான் வேதனை.
தட்டு பிடிப்பதுமட்டும் வேலை இல்லை அதை புரிந்து கொண்டு பதிவிடுங்கள்…
நன்றி.🙏
வீரபாகு பட்டர்.
திருச்செந்தூர் பூஜை ஸ்தானிகம்.🙏

#நல்லெண்ணெய் #குளியல்_எடுப்பதால் #கிடைக்கும்_நன்மைகள் * அடர்த்தியான முடி வளரு…

#நல்லெண்ணெய்
#குளியல்_எடுப்பதால் #கிடைக்கும்_நன்மைகள்

* அடர்த்தியான முடி வளரும்உடல் சூட்டை தணிக்கும்உடல் ரிலாக்ஸ்பொலிவான சருமம்பொடுகுநிம்மதியான தூக்கம்கண்களுக்கு நல்லதுமுடி உதிர்தல்

* பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை. அதிலும் நல்லெண்ணெய் பயன்படுத்தி தான் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டுமென்ற ஐதீகம் உள்ளது. அதில் குறிப்பாக பெண்கள் வெள்ளிக்கிழமையிலும்ஆண்கள் சனிக்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.

* மேலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அந்த…

★நல்லெண்ணெயில்
பூண்டு,
மிளகு,
சீரகம்
சுக்கு

ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து குளிப்போம். இந்த முறையெல்லாம் அக்காலத்தில் நம் முன்னோர்கள், பெற்றோர்கள் எல்லாம் தவறாமல் பின்பற்றி வந்திருந்தார்கள். ஆனால் இப்போது அந்த பழக்கமெல்லாம் மறைந்துவிட்டது.

* இதனால் தான் என்னவோ இன்றைய சந்ததியினருக்கு நோய்கள் அதிகம் வருகிறது. எனவே நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். இப்படி எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

#அடர்த்தியான__முடி #வளரும்

நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

#உடல்_சூட்டை_தணிக்கும்

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.

#உடல்_ரிலாக்ஸ்

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்து வந்தால், உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

#பொலிவான_சருமம்

எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது, தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

#பொடுகு

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

#நிம்மதியான_தூக்கம்

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

#கண்களுக்கு_நல்லது

கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் பாழாகும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

#முடி_உதிர்தல்

முடி உதிர்தல் அதிகம் இருந்தால், நல்லெண்ணெய் குளியலை வாரம் ஒருமுறை மேற்கொண்டு வாருங்கள். இதனால் முடி நன்கு ஊட்டம் பெற்று வலிமை பெறும்.

இடுப்பு,வயிறு அழகாக இருக்க அழகான ‘சிக்’ இடுப்புக்கும், ஆலிலை போன்ற வழு, வழு வ…

இடுப்பு,வயிறு அழகாக இருக்க

அழகான ‘சிக்’ இடுப்புக்கும், ஆலிலை போன்ற வழு, வழு வயிற்றுக்கும் ஆசைப்படாத பெண்களே கிடையாது! ஆசைப்பட்டா போதுமா… நடக்கணுமேங்கிறீங்களா? அப்போ, இதப் படிங்க

முதல்ல… இடுப்பு அழகாக கல்யாணத்துக்கு முன்னாடி என் இடுப்பு சிம்ரன் மாதிரி அழகாக இருந்தது. இரண்டு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் இடுப்பைச் சுற்றி சதை தொங்குதுங்க’ என்று வருத்தப்படுகிறவரா நீங்கள்…? உங்க பிரச்னைக்கு ஒரே தீர்வு யோகாதான்! நாம் சாப்பிடும் உணவிலுள்ள அதிகபட்சமான கொலஸ்ட்ரால்தான் இடுப்பில் மடிப்பு விழ காரணம். இதற்கு கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்தாலே போதும். வாரம் ஒரு நாளோ, அல்லது இரண்டு நாளோ வாழைத்தண்டை ஜூஸாகவோ, கூட்டாகவோ சாப்பிட்டு வந்தால் இடுப்பிலுள்ள வேண்டாத சதை, இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வயிறு அழகாக வயிற்றில் அழுக்கு சேராமலும், கேஸ்ட்ரிக் ட்ரபிள் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டாலே வயிற்றுக்கு 50% அழகு கிடைத்து விடும். இதற்கு சீரகத் தண்ணீர்தான் சிறந்த ட்ரீட்மெண்ட்!

ப்யூட்டி ரெசிபிகள்

1.சீரகத் தண்ணீர் தேவையான பொருட்கள் :
சீரகம் -4 டீஸ்பூன்,
தண்ணீர் – 3 லிட்டர்
செய்முறை :
சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும். இதை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இந்தத் தண்ணீரை ஆற வைத்து குடித்து வாருங்கள். அஜீரணம் வராது. ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். மலச் சிக்கலும் ஏற்படாது. அப்புறமென்ன… கை மேல், ஸாரி… வயிறு மேல் பலன் (அழகு) தான் போங்க..

வெங்காய பச்சடி
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம்-2
தயிர் – 100 மி.கி.
உப்பு – சிறிதளவு
செய்முறை :
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டு, அதில் தயிரையும், உப்பையும் கலந்து சாப்பிட்டு வாருங்கள். (காய்கறி சாலட்) வயிற்றில் சுருக்கமா… மூச்… வரவே வராதுங்க! பாவாடையை இறுகக் கட்டி கட்டி இடுப்பைச் சுற்றி கறுத்துப் போய் விட்டதா?கடுகு எண்ணெயை லேசாக சூடு செய்து, அதை இடுப்பைச் சுற்றி ஒரு மணி நேரம் ஊற விட்டு கடலை மாவால் தொடர்ந்து தேய்த்துக் கழுவி வாருங்கள். அழகான, கருப்பில்லாத ஆலிலை போன்ற வயிறு உங்களுக்கே உங்களுக்குதான்! டெலிவரிக்குப் பிறகு வரும் வயிறு சுருக்கத்துக்கு கடுகு எண்ணெயுடன் கோதுமை தவிடை கலந்து வயிற்றில் பூசி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர, வயிறு சுருக்கம் வரவே வராது!

மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.

#முகங்கள்_52 சில நேரங்களில் நாம் ஒன்றை நினைத்து ஓரிடம் செல்வோம்..அங்கே வேறொன்று…

#முகங்கள்_52

சில நேரங்களில் நாம் ஒன்றை நினைத்து ஓரிடம் செல்வோம்..அங்கே வேறொன்று நடக்கும். அப்படித்தான் இந்த படம் எனக்கு கிடைத்தது.. சென்னையை பறவையின் பார்வையில் எடுக்கலாம் என்று திட்டமிட்டு ஓர் நாள் மாலை நானும் என் நண்பர் Seralathan Manickam இருவரும் பரங்கிமலையில் உள்ள செயிண்ட்.தாமஸ் ஆலயத்தின் பின்புறம் சென்றோம்..ஆனால் அன்றைய தினம் நாங்கள் சென்ற போது ஒளியமைப்பு எனக்கு திருப்தியாக இல்லாததால் பெயருக்கு ஒரு இரண்டு மூன்று படங்கள் எடுத்து விட்டு மலை மீது வீசிய காற்றை அனுபவித்தபடி பேசிக் கொண்டிருந்த போது சட்டென்று #வல்லூறின் குரல் முக அருகில் கேட்டது..உடனே நான் சொன்னேன் இங்கே எங்கேயோ அருகில் வல்லூறு அமர்ந்திருக்கிறது வா தேடிப் பார்க்கலாம் என்று தேடியபோது தேவாலயத்தின் பின்புறம் உள்ள மரத்தின் அடிக்கிளையிலிருந்து இவர் கம்பீரமாக பார்த்துக் கொண்டிருந்தார். அத்தனை அருகில் அவரை நாங்கள் பார்த்தும் சற்றும் சலனமடையாமல் அங்கேயே இவர் அமர்ந்திருக்கவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..விடுவேனா படபடவென சில படங்களை எடுத்துக் கொண்டேன். பின்னர் சட்டென்று பறந்து உயரத்தில் உள்ள கிளைகளின் இடுக்கில் சென்று தன்னை மறைத்துக் கொண்டார்.. அது ஓர் அற்புத தருணம். இதைத்தான் சொன்னேன்..நாமொன்று நினைக்க வேறொன்று நடக்கும் என்று.

இப்போது #Shikara வல்லூறு என அழைக்கப்படும் இவரைப்பற்றி சற்றே பார்ப்போம்.. வல்லூறு என்று அழைக்கப்படும் இவை வேட்டையாடிகள் வகையைச் சேர்ந்த சிறிய அளவிலான பறவை.. இவை காடுகளில் மட்டுமல்லாது மனிதர்கள் வாழும் பகுதிகளில் உள்ள தோப்புகள் போன்றவற்றில் வாழும்.

இவை பல்லிகள், ஓணான்கள், அணில்கள், பாம்புகள், சிறுபறவைகள், கோழி போன்றவற்றை வேட்டையாடி உண்ணும்.

இந்தியாவில் இவைகளின் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் ஜூன் வரையாகும். காகங்களைப் போலவே மரக்கிளையில் ஆண் பெண் இரண்டும் சேர்ந்து வட்டவடிவமான கூடுகளை குச்சிகளைக் கொண்டு கட்டி அதன் மேல் இலைகள் மெல்லிய சிறகுகளை போட்டு அதில் மூன்றிலிருந்து நான்கு முட்டைகள் வரை இட்டு அடைக்காக்கும். முட்டைகள் வெளிர் நீல நிறத்தில் கோடுகள் போட்டது போல் அமைந்திருக்கும்..18 நாட்களிலிருந்து 21 நாட்களில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவரும். இதன் வேகமாக பறந்து வேட்டையாடும் திறனை சிறப்பிக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் ஒரு ஹெலிகாப்டர் தளத்திற்கு 2009ம் வருடம் வல்லூறு தளம் (INS SHIKARA) என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பெருமை கொண்ட இவரின் முகமும் எனக்கு பிடித்த முகங்களில் ஒன்று.

அவசர சமையல் ஐந்து அம்மா சமையல் 𝕄𝕒𝕘𝕒𝕝𝕚𝕣 𝕌𝕝𝕒𝕘𝕒𝕞 𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚 அவ…

💢அவசர சமையல் ஐந்து💢

🥗அம்மா சமையல் 🥗
𝕄𝕒𝕘𝕒𝕝𝕚𝕣 𝕌𝕝𝕒𝕘𝕒𝕞

𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚

🥘அவசர ரசம்

ரசப்பொடி
மிளகு சீரகம் தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். 100 கிராம் காய்ந்த மிளகாய், 100 கிராம் க.பருப்பு 5 கிராம் கட்டிப் பெருங்காயம், ஒரு கைப்பிடி கறிவேப்பில்லை எடுத்துக் கொண்டு அனைத்தையும் டிரையாக வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இப்பொடியை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

🍱தேவையான பொருட்கள்

ரசப்பொடி – ஒரு ஸ்பூன்
புளிபேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
தக்காளி பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் கடுகு – தாளிக்க
ம தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை தேவையான அளவு.

🍴செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரில் ரசப்பொடி, புலி பேஸ்ட், தக்காளி பேஸ்ட் கரைத்து கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் மல்லி கறிவேப்பிலை தூவி இறக்கி, கடுகு தாளித்துக் கொட்டவும். வேண்டுமானா கொதிக்கும் போது 2 பூண்டுப் பல் தட்டிப் போடவும்.

🥘அவசர சாம்பார்

சாம்பார்பொடி
ஒரு ஆழாக்கு து.பருப்பு, 2 கைப்பிடி காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, 5 கிராம் கட்டிப் பெருங்காயம், 2 டீஸ்பூன் தனியா இவைகளை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால் சாம்பார் பொடிதயார் . ஒரு மாதம் வரை தாங்கும்

🍱தேவையான பொருட்கள்

தேவையான காய் – 100 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன். ம. தூள் – 1/4டீஸ்பூன். புலி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன் , உப்பு கறிவேப்பிலை தேவையான அளவு, கடுகு, எண்ணெய் – தாளிக்க.

🍴செய்முறை

தேவையான காயை முதல்நாளே சுத்தம் செய்து கட் செய்து பிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காயை ப்ரசர் குக்கரில் வேக வைத்து விட்டு வாணலியில் கடுகு தாளித்து ஒரு டம்ளர் தண்ணீர் விடவும் அதில் புளிபேஸ்ட் சாம்பார்பொடி, ம.தூள், உப்பு போட்டு ஓரூ கொதி வந்தவுடன் வேகவைத்த காய், கொத்துமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும் காய் வேண்டாம் என்றால் தக்காளி மட்டுமே சேர்த்தும் செய்யலாம்.

🥘அவசர குருமா

குருமா பொடி :
ஒரு கைப்பிடி மிளகு, 2 கைப்பிடி தனியா, தலா 5 கிராம் பட்டை லவங்கம் ம.தூள் சேரத்து வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும் .

🍱தேவையான பொருட்கள்

குருமா மசாலா போடி – ஒரு டீஸ்பூன், பனீர் – 50 கிராம், ஸ்டார் செய்த தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், போட்டுக் கடலை – ஒரு டீஸ்பூன், தக்காளி பேஸ்ட் – 2 டம்ளர் , உப்பு, எண்ணெய் – தேவையான அளவு .

🍴செய்முறை

வாணலியில் எண்ணெய்விட்டு , பனீர் துண்டுகளைப் பொரிக்கவு பின் தண்ணீர் விட்டு தக்காளி பேஸ்ட், குருமா பொடியைப் போடவும். தேங்காய் துருவல், போட்டுக் கடலை இரண்டையும் மிக்சியில் அரைத்து அத்துடன் கலந்து உப்புப்போட்டு கிரேவி திக்கானதும் இறக்கவும்.

🥘அவசர வெஜிடேபிள் ரைஸ்

பிரியாணி பொடி
மிளகாய் வற்றல் 2 கைப்பிடி, தனியா ஒரு கைப்பிடி, ம.தூள் 5 கிராம், இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இதனை இரண்டு வாரம் வரை பயன்படுத்தலாம்.

🍱தேவையான பொருட்கள்

ரைசுக்கு தேவையான காய்கறிகள் – 150 கிராம், அரிசி – ஒரு டம்ளர், கரம் மசாலா – ஒரு டீஸ்பூன் , சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன் , இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன் , எண்ணெய் கடுகு , கறிவேப்பிலை – தாளிக்க, பிரியாணிப் பொடி – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

🍴செய்முறை

காய்கறிகளை முதல்நாளே கட்செய்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் அடுப்பில் காய்கறிகளை வேகவைக்கவும் மறு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும் அதற்குள் காய்கறி அரை வேக்காடு வெந்திருக்கும் அந்தக் காயை எடுத்து இத்துடன் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் அரிசியையும் கொட்டி வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கரம் மசாலா, பிரியாணிப் போடி, சாம்பார் போடி, உப்பு போட்டு பிரஷர் குக் செய்யவும் 5 நிமிடத்தில் விசில் வரும் இறக்கி லெமன் ஜூஸ் விட்டுக் கிளறி பரிமாறவும்.

🥘அவசர பனீர் ரைஸ்

கரம் மசாலா
தலா 50 கிராம் பட்டை, லவங்கம் அன்னாசிப் பூ, 3 பிரியாணி இலை, தலா 10 சோம்பு சீரகம் இவைகளை டிரையாக வறுத்து ப பொடித்துக் கொண்டால் கரம்மசால ரெடி. ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.

🍱தேவையான பொருட்கள்

சாதம் ஒரு கப், பனீர் – அரை கப் , கரம் மசாலா – ஒரு டீஸ்பூன் , உப்பு, எண்ணெய் , லைம் ஜூஸ் – தேவையான அளவு.

🍴செய்முறை

சாதத்தை முதல் நாளே எடுத்து பிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் வாணலியில் எண்ணெய்விட்டு பனீரை வதக்கவும். இத்துடன் சாதத்தை கொட்டி கரம் மசாலா, உப்பு போட்டுக் கிளறவும். பின்னர் இறக்கி லைம் ஜூஸ் 5 சொட்டுக்கள் விட்டுக் கிளறி பரிமாறவும்.

🥗அம்மா சமையல் 🥗
𝕄𝕒𝕘𝕒𝕝𝕚𝕣 𝕌𝕝𝕒𝕘𝕒𝕞

𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚

#மூலிகை_மகத்துவம்16 கோரைக்கிழங்கு(मुस्ता) Nut grass #உயிரியல்_வகைப்பாடு திணை…

#மூலிகை_மகத்துவம்16🌿👩🏻‍⚕️

கோரைக்கிழங்கு(मुस्ता)
Nut grass🌾

#உயிரியல்_வகைப்பாடு🧬
திணை: தாவரம்
வரிசை: Poales
குடும்பம்: Cyperaceae
பேரினம்:bCyperus
இனம்: C. rotundus
இருசொற் பெயரீடு: Cyperus rotundus L

#பஞ்சகுணங்கள்🧪
ரசம்: கடு,திக்த,கசாயம்
குணம்: லகு,ருக்சம்
வீரியம்: சீதம்
விபாகம்: கடு
தோசகர்ம: கபபித்தசாமகம்

#உபயோகப்பகுதி கிழங்கு

#வேதியியல்_கூறுகள்🔬
Volatile oil.

கோரைக்கிழங்கு நீர்பாங்கான இடங்களில் எளிதாக கிடைக்கும் மூலிகையாகும். இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கிழங்கிலுள்ள சைபரோன் என்ற மருந்துப்பொருள் இதனுடைய மருத்துவக் குணத்திற்கு காரணமாகும்.
கோரைக்கிழங்கை இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள ஏராளமான மூலிகை சார்ந்த மருந்து கம்பெனிகள் கொள்முதல் செய்கின்றன மேலும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் கொள்முதல் செய்கின்றன.

#வளரியல்பு🌱🍃
கோரைக்கிழங்கானது ஈரம் மிகுந்த மற்றும் வறட்சியான தரிசு நிலங்களிலும் ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும் இதற்கான அறுவடைக் காலம் நவம்பர் முதல் ஜனவரி ஆகும். 140செ.மீ (55 அங்குலம்) வளரும் இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது. கிழங்குகள் தோண்டப்பட்டு, கழுவி சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வாரம் வரை காய வைத்தல் அவசியம் ஆகும், அதன் பின்பு கிழங்கினை ஒட்டியுள்ள முடி போன்ற நீட்சிகள் நெருப்பினில் பொசுக்கி நீக்க வேண்டும்.

#மருத்துவ_குணங்கள்💊
*பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, முறை சுரமான மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது. மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது.

*செரிமான பிரச்சினைகளை சீர் செய்கிறது, உடல் வலிமையாக்கும் தாதுபுஷ்டி.

*மாதவிலக்கு பிரச்சினை சரி செய்ய கூடியது; இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது. பூஞ்சை மற்றும் நுண்கிருமிகளை போக்குகிறது.

*வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.

*சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றை சரிசெய்து, சிறுநீர் கடுப்பு, ரத்தம் கலந்து சிறுநீர் வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்னைக்கு மருந்தாகிறது மற்றும் சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது.

*தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது,
முகத்தில் சுருக்கத்தை போக்கி மென்மை பொலிவு அளிக்கிறது, மருக்களை நீக்கும், முகப்பரு வராமல் தடுக்கும் சரும பாதுகாப்புக்கு ஏற்றது.

*ரத்தவட்ட அணுக்களை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. உடல் வலியை போக்கும், இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

இவண்✍️
Jovani Veronica Apj

https://m.facebook.com/story.php?story_fbid=556818041886311&id=100026743593824 (சீந்தில்)

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் #திருவாதவூர் திருமறைநாதர் கோவில…

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் #திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

சனி பகவானின் வாத நோய் தீர்த்த புண்ணியஸ்தலம்

கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், திருமறைநாதர் ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள். இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை வழிபடுபவர்களும் உண்டு. வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் தலங்களில் ஒன்றுதான் திருவாதவூர் திருத்தலம். ‘எங்கோ கேள்விபட்ட பெயராக இருக்கிறதே!’ என்று யோசிக்கிறீர்களா? ஆம்! திருவாதவூரர் என்னும் பெயர் பெற்ற மாணிக்கவாசகர் அவதரித்த தலம்தான் இது. வாதவூர் என்றதும் வாத நோய் உள்ளவர்கள் உள்ள ஊர் என்பது பொருள் அல்ல.

வேதங்களின் பொருளை வாதம் செய்து (Debate), மெய்ப் பொருளை அறிந்த ஊர் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தல இறைவன் ‘வேதநாதர்’ என்றும், ‘திருமறை நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார் சனி பகவான். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக் கிறார். சனி பகவானுக்கு வாதநோய் தீர்த்த வாதவூர் பெருமான், தன்னுடைய பக்தர்களை மட்டும் காப்பாற்றாமல் விட்டு விடுவாரா என்ன?.

கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக கூறப்படுகிறது. சித்தா, ஆயுர் வேத மருத்துவத்திலும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது ஒரு வைத்திய முறையாகும். வாதநோய் குணமான பிறகு, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், அரிமர்த்தனப் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர். அவர் சிவன் மீதுள்ள பக்தியின் காரணமாக மன்னன் கொடுத்த பொற்காசுகளைக் கொண்டு ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் கோவில் அமைக்கும் பணிக்காக செலவிட்டார். அத்தகைய சிறப்புமிக்க அன்பரான மாணிக்கவாசகருக்கு, திருவாதவூரில் தனிக்கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவரைத் தரிசித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால், ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம்தான் திருமறைநாதர் வீற்றிருக்கும் கோவிலாகும். இதன் முன்பாக தீர்த்தக்குளம் ஒன்றும் இருக்கிறது. திருமாலுக்கு ‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார். எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர் ஆகிய தேவர்கள் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர்.

ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில் தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது. தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. பழமையான கோவில் என்றாலும் இத்தலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய பதிகங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

இந்த ஆலயத்தில் தான் மாணிக்கவாசகருக்கு, இறைவன் சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார். இந்த தகவலை, ‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. திருமண வரம், குழந்தைப் பேறு, தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கும், இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். பொதுவாக சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்திலும் நடைபெறுகின்றன. என்றாலும் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் திருத்தலம் அமைந்துள்ளது. மேலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் சென்று, அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் சென்றால் திருவாதவூர் ஆலயத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய