மஹா பெரியவா ஜெயந்தி ஸ்பெஷல் ! பெரியவா ஒரு உப்புக் கொறவன் கதை சொல்லி – அவன் கஷ்ட…

மஹா பெரியவா ஜெயந்தி ஸ்பெஷல் !

பெரியவா ஒரு உப்புக் கொறவன் கதை சொல்லி – அவன் கஷ்டமும் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சு போகும்னு என்று உணர்த்தின சம்பவம்

"பெரியவா நான் பண்ணாத தர்மம் இல்லை. செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை. அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்?" ஜமீன்தார்.

ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே சொல்லலாம். எத்தனையோ பாழடைஞ்ச கோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம் பண்ணினவர். எதிர்பாராத விதமாக ஒரு சோதனை வந்து பெரிய அளவுல நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார். தெய்வம் கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர் சுவாமியைக் கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார். அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துல முகாமிட்டிருந்தா. அவர் அங்கே வந்திருக்கிற தகவல் தெரிஞ்சதும் மஹா பெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக் கேட்டுடுவோம்னு உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார்.

வெறும் கையோட வந்திருந்ததுலயே விரக்தி பட்டவர்த்தனமா தெரிஞ்சுது. வழக்கம் போல் இல்லாம ஏனோதானோன்னு தான் நமஸ்காரம் செஞ்சார். ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி காட்டிக்காம ஏதோ கேட்கணும்னு வந்திருக்கறாப்புல தெரியறதே! என்ன கேட்கணும் ஒனக்கு? அப்படிங்கற மாதிரி அந்த ஜமீனதாரோட முகத்தைப் பார்த்தார். பெரியவா நான் பண்ணாத தர்மம் இல்லை. செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை. அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்? மேலும் சில வார்த்தைகளை நெருப்பு மாதிரி கக்கினார்.

அமைதியா கேட்டு கொண்ட மஹா பெரியவா நீ இப்ப ரொம்ப விரக்தில இருக்கே. உனக்கு அட்வைஸ் பண்ணினா எடுபடாது. அதனால ஒரு கதை சொல்றேன் அப்படின்னார். உப்பு விக்கறவனுக்கு உப்புக் கொறவன்னு பேர். அப்படி ஒரு உப்புக் கொறவன் இருந்தான். காமாட்சியோட பரம பக்தன் அவன். கார்த்தால கண்ணை விழிச்சு எழுந்திருக்கறச்சயே காமாக்ஷி தான் எழுந்திருப்பான். தூங்கப் போறச்சேயும்
அம்பாள் பேரைச் சொல்லிட்டு தான் படுத்துக்குவான். உப்பு மூட்டைகளை கழுதை மேல் ஏத்தி சந்தை நடக்கற எடத்துக்கு கொண்டு வருவான். பெரும்பாலும் இவன் கிட்டேயே எல்லாருமே வாங்குவதால் கொஞ்சம் நிறையவே பணம் சேரும் அந்தக் காலத்துல இப்போ இருக்கிற மாதிரி பாதை வசதி எல்லாம் கிடையாது. ஒத்தையடிப் பாதை தான். அதனால் திருடாளும் நிறைய இருந்தா. ஒரு நாள் சந்தை நேரம் ஆரம்பிச்சுது. சரியா அதே சமயத்துல திடீர்னு இருட்டிண்ட வானம் ஒரு க்ஷணம் கூட தாமதிக்காம ஜோன்னு வர்ஷிச்சுது. உப்புக் கொறவனும் பரபரப்பா உப்பு மூட்டைகளை எடுத்து நகர்த்திவைக்க நினைச்சான். ஆனா பிரயோஜனம் இல்லாதபடிக்கு மொத்த உப்பும் மழைத் தண்ணீர் பட்டு கரைஞ்சு ஓடித்து. அவ்வளவு தான் அப்படியே விக்கிச்சுப் போய் நின்னான் அவன் லாபம் இல்லா விட்டாலும் கூட முதலுக்கேன்னா மோசம் வந்துடுத்து. அவனோட விரக்தி அப்படியே கோபமா மாறித்து. அது அப்படியே காமாக்ஷி மேல திரும்பித்து. காமாக்ஷி காமாக்ஷின்னு ஒன்னைத்தானே கும்பிட்டேன். இப்படி மொத்தத்தையும் நஷ்டப்படுத்திட்டயே. பக்தன் காயப்போட்ட நெல் நனையக் கூடாது என்கிறதுக்காக வேலியெல்லாம் கட்டினார் பரமேஸ்வரன் என்று சொல்வாளே
அதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கும். ஏன்னா தாயாரான உனக்கே பக்தன் மேல் இரக்கம் இல்லாதப்போ உன்னோட ஆம்படையானுக்கு மட்டும் எப்படி இருக்கும்? அதனால இனிமே எந்த தெய்வத்தையும் நான் கும்பிடப்போறதில்லை!" அப்படின்னு வெறுப்பா கத்தினான். கழுதை மேல வெத்து சாக்கைப் போட்டு
வெறுங்கையோட பொறப்பட்டான். அப்படியே போயிண்டு இருந்தவன்… டேய் பிடிங்கடா அவனை…க்ஷஅவன் கையில் இருக்கிற பணத்தை பறிங்கடா..!" அப்படின்னு ஒரு பெருங்குரல் (திருடன்) கேட்டதும் அப்படியே நடுங்கி போய் நின்னான். அவா கையில் இருந்த அருவா அந்த இருட்டுலயும் மின்னித்து. நடுங்கின கொறவன் நம்ம உசுரு நம்மளோடது இல்லைன்னு தோணித்து அவனுக்கு.

"மரியாதையா பணத்தை எல்லாம் குடுடா"ன்னு கேட்டுண்டே அவன் மடியில, இடுப்புல, கழுதை மேலே இருந்த சாக்குன்னு ஒரு இடம் விடாம துழாவினான் ஒருத்தன். ஊஹும் எங்கேயும் ஒரு தம்பிடிகூட இல்லை. ஏய் எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே பணத்தை. பணமா? ஏது பணம்? அதான் கொண்டு போன உப்பு மூட்டை மொத்தமும் மழையில் கரைஞ்சு ஓடிடுத்தே… அப்புறம் ஏது வியாபாரம் ஏது காசு? படபடப்பா சொன்னான் உப்புக் கொறவன்.

"இன்னிக்கு நீ தப்பிக்கணும்னு சாமி நினைச்சுருக்கு. அதனால பிழைச்சே போ!" அப்படின்னு சொல்லிட்டு ஓடி மறைஞ்சா திருடர்கள். மழை விட்டு வானம் தெளியத் தெளிய கொறவனின் மனசுக்குள்ளேயும் தெளிவு வந்தது. இன்னிக்கு மட்டும் மழை பெய்யாம இருந்து உப்பு வித்த காசோட நாம வந்திருந்தா உசுரு தப்பியிருக்க முடியாமாங்கறது சந்தேகம்தான். நாம கும்பிடற காமாக்ஷி தான் நம்பளைக் காப்பாத்தி இருக்குன்னு புரிஞ்சுண்ட அவன். அப்படியே அம்பாள் கிட்டே தன்னை மன்னிச்சுக்கச் சொல்லி வேண்டிண்டான்.

மஹா பெரியவா கதையைச் சொல்லி முடிச்சதுமே ஜமீன்தாருக்கு தன்னோட தவறு என்னங்கறது புரிஞ்சுது. தனக்கு ஏதோ ஒரு காரணத்துனால தான் இப்படி கஷ்டம் வந்திருக்குன்னு புரிஞ்சு பெரியவாளை நமஸ்காரம் பண்ண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு புறப்பட்டார்.
கொஞ்சகாலம் கழிச்சு அந்த ஜமீன்தார் மறுபடியும் பெரியவாளை தரிசிக்க வந்தார். பெரியவா நமஸ்காரம் போன தரம் நான் வர்றச்சே என்னோட சொத்து மொத்தமும் பறிபோக போறது மாதிரியான சூழல் இருந்தது. ஆனா இன்னிக்கு அந்த சொத்தெல்லாம் எனக்குப் பாரம்பரியமா வந்ததுங்கறதுக்கான விவரங்கள் எல்லாம் என்னோட முன்னோர்கள் திருப்பணி பண்ணின ஒரு கோயில்ல இருந்த பிரமாணப் பத்திரங்கள் மூலமா தெரிய வந்துடுத்து.அதனால எல்லாமும் எனக்கே திரும்பக் கிடைச்சுடுத்து. விரக்தியில் பேசி விட்டேன். உங்களை சாட்சாத் பரமேஸ்வரனாவே நினைச்சுண்டு நமஸ்காரம் பண்ணறேன். என்னை மன்னிச்சுடுங்கோ"

உப்பு கரைஞ்சு போன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே உன்னோட கஷ்டமும் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சு போகும்னு உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.

ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர !

Tamil Movies || Michael Madhana Kama Rajan || Part-18 || Tamil Movies New ReleasesMichael Madhana Kama Rajan is a 1990 Tamil comedy film directed by Singeetam Srinivasa Rao and written by Kamal Haasan, with Crazy Mohan penning the dialogues.

The film also feature large ensemble cast alongside Kamal Haasan, Kushboo, Urvashi, Rupini played the female leads, while Manorama, Delhi Ganesh, Nassar, Venniradai Moorthy, SN Lakshmi, Jayabharathi, R. N. Jayagopal, Nagesh, Praveen Kumar and Santhana Bharathi playing other significant role. The film was a blockbuster and completed 175-day run at the box office.

The film tells a story of quadruplets, Michael, Madhanagopal, Kameshwaran, and Raju, all played by Kamal Haasan. Kamal had distinguished each of those characters with his body language and language lingo. Michael has a husky voice, Madan has an English accent, Kameshwaran speaks Palakkad Tamil and Raju speaks Madras Tamil in keeping with their diverse upbringing as per the plot. The film’s climax scene is said to be inspired from the Charlie Chaplin movie, The Gold Rush.
Directed by : Singeetam Srinivasa Rao
Produced by : Meena Panchu Arunachalam
Written by Crazy : Mohan (dialogues)
Screenplay by : Kamal Haasan
Story by : Kader Kashmiri
Starring : Kamal Haasan
Kushboo
Urvashi
Rupini
Nassar
Delhi Ganesh
Crazy Mohan
Manorama
Venniradai Moorthy
Santhana Bharathi
Nagesh
Music by : Ilaiyaraaja
……………………………………………………………………………………
For More Tamil Movies Click here and subscribe now
http://www.youtube.com/subscription_center?add_user=TamilMasalaMovie

#சமையல்_டிப்ஸ் #வீட்டு_குறிப்புக்கள் *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அ…

#சமையல்_டிப்ஸ்
#வீட்டு_குறிப்புக்கள்

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்

. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்

*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்

. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்…

இன்றைய கோபுர தரிசனம்… அருள்மிகு ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், பூவனூர், நீடாமங்க…

இன்றைய கோபுர தரிசனம்…

அருள்மிகு ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், பூவனூர், நீடாமங்கலம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,

*பூவனூர் ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில்*
மன்னார்குடியிலிருந்து எட்டு கி.மீ., நீடாமங்கலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் மன்னார்குடி கும்பகோணம் வழியில் இருக்கும் மிகவும் அமைதியான, அழகான தெய்வீகமான கிராமம் பூவனூர்.

இக்கிராமத்தில் தனித்தன்மை வாய்ந்த அருமையான கோவில் ஶ்ரீ ஆஞ்சநேயருக்காக உள்ளது. ஶ்ரீ ராமநாமத்தின் மகிமையை எல்லோரும் புரியும் வகையில் எடுத்துரைத்த ஶ்ரீ பகவன்நாமா போதேந்திரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயர் இவர்.

*ஜகத்குரு போதேந்திர சுவாமிகள்*
காஞ்சிபுரத்திலுள்ள மண்டல மிஷ்ரா அக்கிரஹாரத்தில், திரு கேசவ பாண்டுரங்கன் சுகுணா தம்பதியர்களுக்கு புதல்வராக அவதரித்தவர். ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ ஶ்ரீ விஸ்வதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள் [ஶ்ரீ ஆத்ம போதர்] அவர்களின் ஆசியால் இத்தம்பதிகளுக்கு இத்தவ புதல்வர் பிறந்தார். புருஷோத்தமன் என்று பெயரிட்டு உபநயனம் செய்வித்த பிறகு வேத சாஸ்த்திரம் படிக்க காஞ்சி மடத்திற்கு அனுப்பபட்டார். பதினெட்டு வயதில் படிப்பை முடித்துக்கொண்டவர் "ஆத்ம வித்யா உபாஸனை" உபதேசம் தன் ஆசாரியரிடமிருந்தே தெரிந்து தெளிவு பெற இச்சைக்கொண்டார். ஆசாரியாள் அப்பொழுது காசி யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஞான தாகம் கொண்ட புருஷோத்தமன் தனது ஆசாரியாரை காசிபுரியிலேயே சந்திக்க முடிவு செய்தார். இதன் பொருட்டு உடன் படித்த மாணவன் ஞானசேகரனுடன் காசிக்கு பயணமானார்.

அந்நாட்களில் காசி யாத்திரை என்பது மிகவும் கடினம், சென்று வருவதை புனர்ஜன்மமாகவே கருதினார்கள். நண்பர்கள் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டனர். வழியில் யாருக்காவது ஏதாவது நடந்து விட்டால், மற்றவர் அவருக்கு காரியம் செய்துவிட்டு தன்னை கங்கையில் சேர்பித்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. செல்லும் வழியில் ஞானசேகரன் இயற்கை எய்தினார். புருஷோத்தமன் அவருக்கான ஈம கார்யங்களை செய்து விட்டு காசிபுரிக்கு சென்றார்.

காசிபுரியை அடைந்து ஆசாரியரை சந்தித்து, நடந்தவை எல்லாவற்றையும் கூறினார். தனது உடலை கங்கையில் சமர்பிக்க உத்திரவு நாடி நின்றார். கடவுளின் சித்தம் அதுவன்று, சற்றே வித்யாசமானது. ஆசாரியார் அவர்கள் புருஷோத்தமனிடம் ’சந்யாசம்’ என்பது மறு பிறவி என்பதை எடுத்துரைத்தார். அதனால் அவர் சந்யாசம் எடுத்துக் கொள்வதின் மூலம் சமூகத்திற்கு சேவையும் செய்ய முடியும் தனது நண்பனுக்கு கொடுத்த வாக்கையும் காக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார். இப்படியே ஶ்ரீ ஆசார்யரிடமிருந்து ஞான உபதேசம் பெற்று "போதேந்திர ஸரஸ்வதி" என்ற திருநாமத்துடன் சந்யாச ஆஸ்ரமத்தை ஏற்றார் புருஷோத்தமன்.

*பகவன்நாமா ஶ்ரீ போதேந்திர சுவாமிகள்*
காஞ்சி மடத்திற்கு ஶ்ரீ போதேந்திரர், அவரது ஆசாரியர் ஶ்ரீவிஸ்வதிகேந்திர சரஸ்வதிக்கு பிறகு பொறுப்பேற்றார். ஶ்ரீ போதேந்திரர் மடத்திற்கு தலைமை பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் ராம நாமம் ஜபிப்பதின் மூலமாகவே ஒருவர் மோக்ஷம் அடைய முடியும் என்பதில் தீவீர நம்பிக்கைக் கொண்டிருந்தார். ராமநாம மகிமையை மக்களுக்கு எடுத்து சொல்ல நினைத்தவருக்கு மடத்தின் பொறுப்பு சுமையாக இருந்ததாக நினைத்தார். அதனால் மடத்தை தனது வாரிசாக தேர்ந்தெடுத்த ஶ்ரீ ஶ்ரீ அத்வைதாத்ம பிரகாச ஸரஸ்வதி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு முழு மூச்சாக பகவன்நாம பிரசாரத்தில் ஈடுப்பட்டார். ஶ்ரீ காஞ்சி மடத்தினை இதே பெயருடன் பல ஆசாரியர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் இவர் "பகவன்நாமா போதேந்திரர்" என்று அழைக்கப்பட்டார். 1692ஆம் ஆண்டு அவர் கோவிந்தபுரம் என்னும் க்ஷேத்திரத்தில் முக்தி அடைந்தார். கோவிந்தபுரம் திருவிடைமருதூருக்கும் கும்பகோணத்திற்கும் அருகில் உள்ள க்ஷேத்திரம். அமைதியான இரவு வேளையில் கோவிந்தபுரத்தில் உள்ள அவரது அதிஷ்டானத்தில், இன்றும் ராம நாமம் கேட்பது உண்மை.

*பூவனூர்*
பூவனூர், மன்னார்குடியிலிருந்து எட்டு கி.மீ., நீடாமங்கலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் மன்னார்குடி கும்பகோணம் வழியில் இருக்கிறது. பூத்து குலுங்கும் புன்னை வனமாக இவ்விடம் இருந்ததால் "புன்னை+பூ+வன+ஊர்" என்று பெயர் வந்தது. நாளடைவில் பூவனூர் என்றாயிற்று. காவிரி ஆற்றின் கிளையான வெண்ணி என்றழைக்கப்படும் வெண்ணாறு, அதன் கிளை ஆறு பாமினியாற்றங்கரையில் உள்ளது.

*பூவனூர் சிவாலயம்*
"பூவனூர் புகுவார் வினை போகுமே" என்று அப்பர் சுவாமிகளால் தேவார பாடல் பெற்ற தலம் இது. இந்த தலத்தின் இறைவனை திருஞானசம்பந்தர் அவர்களும் பாடியுள்ளார். ஶ்ரீ புஷ்பவனேஸ்வரர் என்றும் ஶ்ரீ சதுரங்க வல்லபர் என்பதும் தலத்தின் இறைவனின் பெயர். மற்ற தலங்களில் இல்லாத விசேடமாக இத்தலத்தில் இறைவி ஶ்ரீ கற்பகவல்லி அம்மனாகவும், ஶ்ரீ ராஜராஜேஸ்வரியாகவும் அருள்பாலிக்கிறார். கொடி மரத்திற்கு அருகாமையில் ஶ்ரீ சாமுண்டீஸ்வரிக்கு தனி சன்னிதி இருக்கிறது. விஷ கடியின் வீர்யம் இறங்க இத்தலத்தில் பிராத்தனை செய்வது விசேடமாக கருதப்படுகிறது.

*ஶ்ரீஜடாமுடீஸ்வரரும் எறும்பு புற்றும்*
புன்னை பூ வனமான இத்தலத்தில் அழகிய பெரிய குளம் ஒன்று உள்ளது. சிவப்பு தாமரை பூக்கள் நிறைந்து காணப்படும் இதனை ’செங்குளம்" என்று அழைப்பார்கள். இக்குளத்தின் மேற்கு கரையில் மிக பெரிய புற்று ஒன்று இருந்தது. புற்றின் அருகில் ஶ்ரீஜடாமுடீஸ்வரரும் அவரது சீடர்களுடன் இருந்தார்கள். கண்ணுக்கு புலப்படாத இவரின் இருப்பு புற்றின் அருகாமையில் சென்றால் உணரப்படும். அந்த எறும்பு புற்றின் அடியில் இருக்கும் சாலிகிராமத்தினாலான ஶ்ரீராம, சீதா, லக்ஷ்மண, ஆஞ்சநேய விக்கிரகங்களை ஶ்ரீஜடாமுடீஸ்வரர் காபந்து செய்து வருகிறார் என்பது அப்பொழுது யாருக்கும் விளங்காத உண்மை.

*ஜகத்குரு ஶ்ரீ போதேந்திர சுவாமிகள் பூவனூர் வருகை*
ஶ்ரீ போதேந்திர சுவாமிகளின் ராமநாம சித்தாந்தம் பிரபலம். ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஜகத்குரு ஶ்ரீ போதேந்திர சுவாமிகள் இருந்த சமயம் பூவனூர் அருகில் ஒரு கிராமத்தில் முகாமிட்டுருந்தார். அவருக்கு முகாமில் ஶ்ரீராமரின் தெய்விக கட்டளை ஒன்று கிடைத்தது. அவருக்காக தான் காத்திருப்பதாகவும் தனக்கு கோயில் கட்ட உத்திரவும், தான் இருக்கும் இடத்திற்கான அடையாளங்களையும் கூறினார்.

*ஶ்ரீஆசாரியாரின் பூவனூர் விஜயம்*
ஸ்ரீ ராமரின் தெய்வீக வழி நடத்தலின் படி ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளும் அவரது சீடர்களும் பூவனூருவுக்கு வந்தனர். ஶ்ரீ ஆசாரியார் அவர்கள் செங்குளத்தையும் அதன் மேற்கு கரையில் உள்ள எறும்பு புற்றையும் அதனை ஶ்ரீஜடாமுடீஸ்வர் காவல்காப்பதையும் கண்டார். ஆனால் ஶ்ரீராமரின் சாலிகிராம விக்ரகம் எங்குள்ளது என்பதை காணமுடியவில்லை. அவர் தனது முகாமிற்கே திரும்பி தியானத்தில் ஈடுபடளானார். அன்று இரவே ஶ்ரீஜடாமுடீஸ்வரர் நேரில் வந்து ஶ்ரீராமரின் கட்டளைக்கு இணங்க எறும்பு புற்றின் கீழ் தன்னால் பாதுகாக்கபடும் விக்ரகங்களை வெளி கொண்டு வந்து கொடுத்து ஶ்ரீராமருக்கு கோவில் கட்டும் படி கேட்டுக்கொண்டார்.

ஶ்ரீஜடாமுடீஸ்வரர் தனது குரு ஶ்ரீராமர் என்றும், ஶ்ரீராமருக்கு கட்டும் கோவிலின் வளாகத்திலேயெ தன்னையும் பிரதிஷ்டிக்க வேண்டும் என்றும், தனது குருவாகிய ஶ்ரீராமருக்கு பூஜைகள் முடிந்ததும், தன்னையும் ஆராதிக்க வேண்டும் என்றும் கூறி மறைந்தார்.

*ஶ்ரீ கோதண்டராமருக்கு திருக்கோவில்*
தெய்வ கட்டளையின் படி ஶ்ரீ ஆசாரியார் அவர்கள் பூவனூருக்கு மறுநாள் விஜயம் செய்தார். ஶ்ரீகோதண்டராமர், ஶ்ரீசீதா தேவி, ஶ்ரீலக்ஷ்மணர் ஆகியோருக்கு செங்குளத்தை நோக்கிய வண்ணம் தெற்கு நோக்கி திருக்கோவில் கட்டப்பட்டது. மற்றும் ஶ்ரீஜடாமுடீஸ்வரரையும் அதே வளாகத்தில் ஆவாஹனம் செய்தார். ஶ்ரீஜடாமுடீஸ்வரர் மிகப்பெரிய சித்தர், ஞானி என்பதால் அவருடைய சாந்தித்யம் இக்கோயில் வளாகத்தில் உணரப்படும்.

*ஆஞ்சநேயருக்கு திருக்கோயில்*
செங்குளக்கரையில் எந்த இடத்திலிருந்து சாலிகிராம விக்ரஹங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் ஶ்ரீஆஞ்சநேயரை ஆசார்யார் அவர்கள் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தின் புனித தன்மையை பாதுகாத்தார். பின்பு திருக்கோயில் கட்டப்பட்டது.

*ஶ்ரீ ஆஞ்சநேயர்*
இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயர் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் உள்ளார். லாகவமாக நின்ற நிலையில் நேற்நோக்கி ஆஞ்சநேயர் உள்ளார். இரு கால்களும் சுலபமாக பதிந்துள்ள நிலையில் சற்றே முன் நோக்கி வளைந்து நிற்கிறது இடது கால். இரு கமல பாதங்களிலும் தண்டை, நூபூரம் முதலிய அணிகலன்கள் உள்ளன. கூப்பிய இரு கரங்களும் தன் இதயத்திற்கு நேர் பிடித்து தனது ஆசானை வணங்குகிறார். வார்த்தையில் வர்ணிக்க முடியாத அவ்வழகை நேரில் காண வேண்டும். அவரின் இருப்பை நாம் அங்கு உணர முடியும்.

*இத்திருக்கோவிலின் மேன்மை*
இத்திருக்கோவில் பல விஷயங்களில் மேன்மையானது. முதலாவதாக பல ஆண்டுகள் ஶ்ரீராமருடன் தானும் தவமிருந்து வெளிவந்த இடத்திலேயே கோவில் கொண்டுள்ளது. இரண்டாவதாக ஶ்ரீராம நாம பெருமையை நமக்கு உணர்த்திய மகான் ஶ்ரீபோதேந்திரர் ஶ்ரீராம நாம பெருமையை எல்லோருக்கும் உணர்த்திய ஶ்ரீஆஞ்சநேயருக்காக கட்டிய கோயில். மூன்றாவதாக ஶ்ரீஆஞ்சநேயர் சாலிகிராமத்தில் வடிக்கப்பட்டவர். நான்காவதாக செந்தாமரை குளக்கரையில் அமைந்துள்ளது. ஐந்தாவதாக ஶ்ரீஆஞ்சநேயருக்கு என்று அமைக்கப்பட்ட மிக பழமையான தனிக்கோவில்

*அனுபவம்*
இத்திருதலத்திற்கு வாருங்கள், ஆஞ்சநேயரின் முன் அமர்ந்து தியானம் செய்யுங்கள். தங்களை அறியாமலேயே அவருடைய கமல திருப்பாதங்கள் தங்கள் கண் முன்பு தோன்றுவதையும், ஆஞ்சநேயர் உங்களை தொட்டு தீட்சை தருவதையும் உணர்வீர்கள். ஶ்ரீராமரின் பெயரில் இருந்த தங்கள் பக்தி மேம்படுவதை உணர்வீர்கள். தார்மீகமான கார்யங்களை செய்ய மேலும் உறுதி பூண்டு திரும்புவீர்கள். இந்த ஜென்மாவிலேயே மோக்ஷம் சித்திக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ ராமஜெயம்,
ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.

வாழும் கலை மகேஸ்வரி பெருமாள் :- வணக்கம் தமிழ் உறவுகளே: இன்று நாம் காணப்போவது த…

வாழும் கலை மகேஸ்வரி பெருமாள் :-

வணக்கம் தமிழ் உறவுகளே:

இன்று நாம் காணப்போவது தேங்காய் எண்ணையும் அதன் பயன்களும்:-

தேங்காய் எண்ணெய் பயன்கள்:-

இதயம்:-

ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.

சருமம்:-

சருமத்தின் நலனை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய் முன்னனி வகிக்கிறது. தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணையை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.

புண்கள், காயங்கள்:-

காயம் ஏற்பட்டு ஆறிக்கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு. அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.

தலைமுடி:-

தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்.

நோய் எதிர்ப்பு சக்தி:-

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் தான் எதிர்வரப்போகும் பல வகையான நோய்களில் இருந்து உடலை காக்க முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே பாதித்திருக்கும் நோய்களை உடனடியாக நீக்கும்.

ஜீரண உறுப்புக்கள்:-

நமது உடலில் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்யும் உறுப்புகளாக வயிறு குடல் போன்றவை இருக்கின்றன. வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.

வாய், பற்கள் மற்றும் ஈறுகள்:-

தினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணையை துப்பி விட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ஆயில் புல்லிங் என்று கூறுவார்கள். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்களில் சொத்தை ஏற்படுதல், ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.

சிறுநீரக கற்கள்:-

சிறுநீரகங்களில் கால்சியம் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. இதை தடுக்க அளவுக்கு மீறிய கால்சிய சத்துக்கள் நமது உடலில் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

டென்ஷன், மன அழுத்தம்:-

மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் இருக்கிறது. அடிக்கடி டென்ஷன், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து தலையில் தடவி, ஒரு 20 நிமிடங்கள் இரண்டு கைகளாலும் தலையின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அழுத்தி, மாலிஷ் செய்து வந்தால் எப்படி பட்ட மனம் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

உடல் குளிர்ச்சி:'

தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டதாகும். தேங்காய் எண்ணையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும். தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்.

நாம் கொரொனாவுடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் தினமும் சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தோசை சப்பாத்தி போன்ற பலகாரங்கள் , பொரியல் கூட்டு செய்து உண்டு வர நுரையீரல் அழற்சி நீங்கும்.

நன்றி வணக்கம் மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் சந்திப்போம்.

கிருஷ்ண பக்தி கதைகள் கலியுகம் பற்றி கிருஷ்ணபரமாத்மா சொன்னது ஒருமுறை பகவான் ஸ்…

🌳🏞️கிருஷ்ண பக்தி கதைகள்🏞️🌳

🌺கலியுகம் பற்றி கிருஷ்ணபரமாத்மா சொன்னது

🌺ஒருமுறை பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர், 'கலியுகம் எப்படி இருக்கும்' என்று தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.

🌺அதற்கு மாதவன் 'சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்று நேரிலேயே காண்பிக்கிறேன்' என்று கூறி,

🌺 நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு ஆணையிட்டார்.

🌺 கோவிந்தனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

🌺முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்.

🌺 அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.

🌺சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.

🌺ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது.

🌺இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடநதான்.

🌺அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான்.

🌺பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன் அங்கே ஒரு கோரமான காட்சியை கண்டான்.

🌺அங்கு அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது.

🌺மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ண குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

🌺சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான்.

🌺பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு வருவடுவதை நிறுத்தவே இல்லை.

🌺சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. 'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

🌺அடுத்து,
நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் தைத்து இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான்.

🌺மலைமேல் இருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி,

🌺வேகமாக உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.

🌺 ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்.

🌺இவ்வாறு பாண்டவர்களுள் நால்வர் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டனர்.

🌺ஸ்ரீகிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

🌺'அர்ஜூனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌺 இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள் – குயிலைப்போல!'

🌺'பீமா, கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள்.

🌺தம்மிடம் செல்வம் வழிந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்.

🌺ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள் – வற்றிய கிணற்றுக்கு அருகே உள்ள நிரம்பி வழியும் கிணறுகளைப் போல்'

🌺சகாதேவா, கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல்,

🌺பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள்.

🌺பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள் – பசுவைப் போல்'

🌺நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் பேணாமல்,

🌺நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்ள்.

🌺 இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும் – பாறையைத் தடுத்த சிறுசெடியைப் போல்!' என்று கூறி முடித்தார்.

🌺இக்காலத்தில் வாழும் நாம் கண்கூடாக கண்டு வரும் துன்பங்கள் ஏன்? எதற்கு? உண்மை என்னவென்று அறிந்திட

🌺போலி எது? சத்தியம் எது?
தெரிந்து கொள்ளுங்கள்.

🌺நீங்கள் நீங்களாக இருந்தால் துன்பங்கள் உங்களுக்குத் தெரியாது.

🌺நீங்கள் இன்னொன்றாக மாறிட முயற்சித்தீர்கள் எனில் உங்களுக்கு முடிவில்
மிஞ்சுவது துன்பங்கள் மட்டுமே.

🌺முழுநிலவைப் போன்ற நம்பிக்கையை எப்பொழுதும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
***

🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆண்மை விரைப்புதன்மைக்கு மருந்து : நீர்முள்ளி : மணலை கயிறாக திரிப்பேன் என்று சி…

ஆண்மை விரைப்புதன்மைக்கு மருந்து :
நீர்முள்ளி :

மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம் . ஆனால் அது பொய்யல்ல.இந்த நீர்முள்ளி உதவியுடன் மணலை கயிறாக திரிக்க முடியும்.அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை,உஸ்ணத்தை குறைத்து விந்துவை கெட்டிப்படுத்தும்

தேவையானவை:

கசகசா,பால்,நீர்முள்ளி,பாதாம்பருப்பு.

செய்முறை :

நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
………………………………………………………………….

நீர்முள்ளி வித்து ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்தில் சேர்க்கப் படுகிறது..

இந்த மருந்து அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர் (விரைப்புதன்மைக்கு)
ஓரிதல்தாமரை " (ஆண்மை அதிகரிக்க)
பூனைகாலி " (விந்து ,உயிர்அணுக்கல் அதிகரிக்கும்)
ஜாதிக்காய் " (ஆண்குறி பருக்க,விரைக்க)
நீர்முள்ளி விதை " (விந்து கெட்டிபடும்)
தண்ணீர்விட்டான் கிழங்கு " (ஆண்மை பெருகும்)

மேலே உள்ள பவுடர் அனைத்தையும் தேனில் கலந்து (கட்டி பதம் வரும்வரை)தினமும் காலை மாலை கோலிகுண்டு அளவு சாப்பிடவும்

மருந்தை சாப்பிட்ட உடனே பயன் தெரியும்…

Inspiring emperor….the Great Shivaji Maharaj…. கண்டிப்பாக படிக்க வேண்டிய பக…

Inspiring emperor….the Great Shivaji Maharaj….

கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதி: சுல்தானின் "மனைவியை" வீர சிவாஜி அந்தப்புறத்தில் செய்த லீலை :-

(ஒரு சுல்தானின் மனைவியை சிறைபிடித்த சிவாஜியின் வீரர்கள்!)

சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.

அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.

அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் ஒரு சுல்தானின் மனைவி பார் போற்றும் பேரழகி இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார் அந்த பெண்ணின் அழகு கண்டு வியக்கிறார். ஏற்கனவே அச்சத்தில் இருந்த அந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு பயத்துடன் சிவாஜியை பார்க்கிறாள்.

சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் பேரழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நான் இன்னும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை கையெடுத்து கும்பிடுகிறாள்.அப்போது அவள் கண்களுக்கு வீரசிவாஜி ஒரு கடவுளாகவே தென்படுகிறார்.

தனது தளபதியை கடுமையாக சினந்து கொண்ட சிவாஜி, “பெண்கள் நம் பாரத நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மண்ணாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.
மாமன்னர் சத்ரபதி சிவாஜி.

இந்த உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மூன்று வகைகளில் அடங்கிவிடுவர்.
1)நல்லவர்கள்
2) கெட்டவர்கள்
3) சந்தர்ப்பம் கிடைக்காமல் நல்லவர்கள் என்ற போர்வையில் வாழும் கெட்டவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது இந்த பாரதத்தின் பண்பட்ட கலாச்சாரம்.

இந்த கலாச்சாரத்தின் மேன்மையான குணங்களுடன் வாழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி அவரைப்பற்றிய சிறப்புகளை

நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

1. “காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது.

ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன. ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. அல்லாவே! எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய்.

இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு”

என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த “நமாஸ், பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கஸேப் படித்துள்ளார்.

2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்;

என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்” என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.

3. “என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?” என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் , பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.

4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “ உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.

5. சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல, அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம்” என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்.

6. “சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது” என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.

7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்” என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.

8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி;

இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்” என ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.

9. சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை “சூரியன்” என்றே போற்றியிருப்போம்” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.

10. சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் , கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது.

30000 உஸ்பெக் வீரர் படையை, 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது.

பட்டுமல்லாமல், எதிரிப் படையில் ஒரு வீரர் கூட திரும்பிப் போக விடாமல் அழித்தது. இது தான் உலக சாதனை.

11. சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார்.

பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.

12. சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான்.

இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.

13. ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி, இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார்.

ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார்.

(பிறந்தது: 19-2-1630; இறந்தது: 3-4-1680).

14. பாஸ்டன் பல்கலைக் கழகத்தில், “ மேலாண்மைக்கு குரு சிவாஜி” என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.

இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் அதிகம் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை.
மாறாக நாம் அடிமைப்பட்டது நம்மை அடிமைப்படுத்தி அவன் அவனுடைய பெருமைகள் மட்டுமே அதிகமாக வரலாற்று புத்தகத்தில் இருக்கும்.
அப்புறம் எப்படி தேசம், தியாகம், வீரம், விவேகம், புத்திசாலித்தனம், அஞ்சாநெஞ்சம் போன்றவை எதிர்கால சந்ததிகளுக்கு எவ்வாறு வரும்?

வாய் சவடால் அடித்துக் கொண்டு, அயோக்கிய அரசியல்வாதிகளுக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டு,
மதுவுக்கும் பிரியாணிக்கும் நாக்கை தொங்கபோட்டு
வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு இருக்கத்தான் நேரம் சரியாக இருக்கும்.

வெள்ளைக்காரன் மெக்காலே உருவாக்கிய பாடத்திட்டத்தை முற்றிலுமாக எடுத்துவிட்டு இந்த பாரத தேசத்திற்கான கல்வித்தரத்தை நமக்கு நாமே மாற்றியமைக்க வேண்டும்.

இங்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே குருகுலங்களில் கற்றுத் தரப்பட்ட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்கள் தான். இன்றுவரை நான் போற்றப்படும் சரித்திர நாயகர்கள் அந்த காலகட்டங்களில் உலகின் மற்ற பகுதிகளில் மக்கள் நாடோடியாக தான் இருந்தார்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள்

ராஜராஜசோழன், கரிகால சோழன் எந்தக் கல்லூரியில் கட்டிடக்கலை படித்தார்கள்.

கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், போன்ற பெரும்பான்மை குருமார்கள் எங்கே இலக்கியம் பயின்றார்கள்.

பதினெட்டு சித்தர்கள் சொல்லாத மருத்துவ குறிப்பு இந்த உலகத்திலேயே இல்லை அவர்கள் மருத்துவக் கல்வி எங்கே கற்றார்கள்.

இன்னும் பலவிதமான சாதனைகள் இருக்கின்றன அனைத்தையும் வரிசைப்படுத்த இங்கே இடம் போதாது.

அனைத்தும் நடந்தது பிரபஞ்ச இயக்கத்தை தங்களின் உடலோடு இணைத்து இந்த உலகமே ஒன்றுதான் என்று உணர்ந்ததனால்.

ஹர ஹர மஹாதேவ்!

முக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்! நடு நாட்டில் பெண்ணாகடம் என்…

முக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்!

நடு நாட்டில் பெண்ணாகடம் என்ற ஊர். அதில் ஏறக்குறைய எழுநூறு ஆண்டுளுக்கு முன்னால் அச்சுதக் களப்பாளர் என்ற வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் சைவசமயத்தைத் தழுவி வந்தவர். இறைவனிடம் மிகவும் பக்தி பூண்டவர். அவருக்கு நெடுநாட்களாக மக்கட் பேறு இல்லாததால் வருத்தமுற்று மிகவும் மனம் நொந்தார்.

பலர் சொன்ன யோசனைகளின்படி பலவகையான பரிகாரங்களைச் செய்ய நினைத்தார். ஆனால், அதற்குமுன் தம் குருவைச் சந்தித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர் ஆசியைப் பெற்று வேண்டுவன செய்ய எண்ணினார். அதன்படியே தம்முடைய குலகுருவாகிய சகலாகம பண்டிதரிடம் போய் தம் குறை நீங்க வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

அவர் உடனே தம்முடைய திருமுறைப் பாராயணத்தில் உள்ள தேவாரத்தை எடுத்து கயிறு சாத்திப் பார்த்தார். அந்தக் காலத்தில் நிலவி வந்த ஒரு ஜோதிட சாஸ்திர முறை இது. கிளி ஜோசியம்போல. ‘கயிறு சாத்திப் பார்த்தல்’ என்று சொல்வார்கள். அதாவது, தேவாரம் போன்ற நூலை எடுத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, ஒரு கயிறை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தில் செருக வேண்டும்.

கயிறு எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்தப் பக்கத்தைப் பிரித்துப் படித்தால் இறைவன் அருளால், அந்தப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் பாட்டின் மூலம் தீர்வு காணலாம். பொதுவாக இந்தவகை சாஸ்திரம் அனைவருக்குமே தெரியும் என்றாலும், இப்படி குரு ஸ்தானத்தில் உள்ளவர் மூலமாகத் தீர்வு காண்பது அப்போதைய வழக்கமாக இருந்தது. அவ்வாறு பார்த்ததில், ‘பேயடையா பிரிவெய்தும்’ என்ற தேவாரப் பாசுரம் கிடைத்தது.

அதில் ‘பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம் பெறுவர்’ என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அச்சுதக் களப்பாளருடைய குறையும் பிள்ளை இல்லை என்பதுதானே! அவர் குறைக்கு இறைவனே பரிகாரம் கொடுத்தது போல அந்தப் பாட்டு அமைந்திருந்தது. அதைக் கண்ட பண்டிதரும் இறைவன் திருவருளை நினைத்து அதிசயித்து, மகிழ்ந்து சொல்லொணாத ஆனந்தம் அடைந்தார்.

பின் திருவெண்காட்டுத் தலத்திற்குச் சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி, இறைவனை வழிபட்டுக் கொண்டு அங்கு சிலகாலம் தங்கும்படி களப்பாளரைப் பணித்தார். தன் குரு சொல்லியபடியே திருவெண்காடு சென்று யாவையும் செய்த களப்பாளர், தன் மனைவியுடன் ஊர் திரும்பினார்.

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு களப்பாளரின் மனைவி கருவுற்று, ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள். திருவெண்காட்டு மூர்த்தியை வழிபட்டதன் பயனாகப் பிறந்த குழந்தையாதலால் அதற்குச் ‘சுவேதனப் பெருமாள்’ என்று நாமம் சூட்டி பெற்றோர்கள் குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தையே பிற்காலத்தில் சிவஞானபோதம் என்னும் சைவ சாஸ்திர நூலை இயற்றி, சந்தானாசாரியர்களில் முதல்வராகத் திகழ்ந்த மெய்கண்டார் ஆவார்.

சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் யாவற்றிற்கும் மூலம், சிவஞானபோதம். அது பிறக்கக் காரணமூர்த்தியாக இருந்தவர் மெய்கண்டார். அவர் திருஅவதாரம் செய்ய உறுதுணையாக இருந்தது, ‘பேய் அடையா பிரிவு எய்தும்’ என்று தொடங்கும் ஒரு தேவாரப்பாடல். கண்ணாலே காட்சியைக் காண்பது மனித இயல்பு. அதைப் போன்றுதான் மற்ற புலன்களினூடே அந்தந்த நுகர்ச்சிகள் தெளிவுற அமைய வேண்டும் என்பது மனிதனின் ஆசை.

ஐம்பொறிகளின் நுகர்ச்சிகள் இறைவனோடு சார்ந்த எண்ணங்களையே எழுப்புவனவாக இருந்தால் அதைவிடப் பேரானந்தம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். அந்த இடம்தான் இறைவன் வீற்றிருக்கும் கோயில். திருக்கோயில்களில் கண்ணுக்கினிய சிற்பங்களையும், மலர் நிறைந்த வனங்களையும், விக்ரகங்களின் திருவுலாக் காட்சிகளையும், நாட்டியங்களையும் கண்டு களிக்கலாம்.

இனிய தெய்வீக இசைப்பாடல் களைக் கேட்கலாம். இறைவனுக்கு நிவேதனம் செய்த அறுசுவை உண்டிகளை வயிறார உண்டு ருசிக்கலாம். கோயில் குளங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடித் தண்ணிய தென்றலை அனுபவித்து இன்புறலாம். நறுமணம் மிக்க மலர்கள், தூபம் ஆகியவற்றின் மணத்தை ஆனந்தமாக நுகரலாம்.

இந்த ஆன்மிகச் சூழலால் தீய எண்ணங்களெல்லாம் நம்மைத் தீண்டாது ஒழிந்து, நாம் இறைவனைச் சார்ந்த எண்ணங்களிலேயே லயிக்கலாம். இத்தனைப் பயன்கள் கருதியே நம் நாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஆன்மிக வழிகாட்டல்கள் யாவும் அமைந்தன. ‘மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்கிறார் தாயுமானவர்.

சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து விளங்கும் திருவெண்காடு, பழமையான தலங்களில் ஒன்று. அங்கே சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் உள்ளன. அவற்றை முக்குளம் என்று சொல்வார்கள். புனிதமான அந்தத் தீர்த்தங்களில் மூழ்கி எழுந்தவர், தாம் நினைத்த பல பயன்களைப் பெறுவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை நிலவி வருகிறது.

திருவெண்காட்டிற்கு ஒருமுறை திருஞான சம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். அவரைப் பார்த்தவுடன் பல ஊர்களிலிருந்தும் வந்த பக்தர்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, தங்கள் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தனர். ஒரு பக்தர், ‘‘என்னுடைய மனைவியை நெடுநாட்களாகப் பேய் பிடித்திருக்கிறது.

ஒரு பெரியவர் வெண்காட்டு முக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடி சுவேதாரண்யேஸ்வரரையும், பிரும்மவித்தியா நாயகியையும் வழிபட்டால் சரியாகிவிடும் என்று சொன்னார். அவர் கூறியதை நம்பி இங்கே வந்து முக்குள நீரில் நீராடி இறைவனை வழிபட்டோம். பீடித்திருந்த பழைய தொல்லை நீங்கி இப்போது என் மனைவிக்கு யாதொரு குறையும் இன்றி, நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். எல்லாம் இந்த இறைவன் செயல்.

நாற்பத்தெட்டு நாட்கள் எங்கள் சங்கல்பத்தை முடித்துக்கொள்ள எண்ணி இங்கு இதுவரை தங்கியிருக்கிறோம். தங்களைத் தரிசிக்கும் பாக்கியமும் எங்களுக்குக் கிடைத்தது,’’ என்று கூறி அவரும் அவர் மனைவியும், சம்பந்தப் பெருமான் காலில் விழுந்து வணங்கினர். திருஞானசம்பந்தர் சுற்றுமுற்றும் பார்க்க, வேறு சில மகளிர் பேயாடுவதைக் கண்டு மனம் நொந்தார். மற்றோர் அன்பரைப் பார்த்து, ‘‘உங்கள் குறை என்ன? அது நிறைவேறிவிட்டதா? அல்லது நிறைவேறப் போகிறதா’’ என்று அன்புடன் கேட்டார் ஞானசம்பந்தர்.

அந்த அன்பர் ஒரு பெரும் பணக்காரர். பங்களா, நிலம் என்று ஏகப்பட்ட சொத்துக்கள். ஆனால், அதனால் பயன் என்ன? தனக்குப் பின் அதை அனுபவிப்பதற்குத் தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் அவரைத் தூங்கவிடாமல் செய்தது. தானங்கள் பல செய்தார். ஊர் ஊராகச் சென்று பல கோயில்களைத் தரிசித்துத் தவம் புரிந்தார்.

அவர் திருஞான சம்பந்தரைப் பார்த்து, ‘‘இங்கும் அங்கும் அலைந்து இறுதியில் திருவெண்காட்டுக்கு என் மனைவியுடன் வந்து முக்குள நீரில் மூழ்கி சிலகாலம் இருந்து இறைவன் இறைவியைத் தரிசித்துச் சென்றோம். நாங்கள் ஊர் சென்ற ஓராண்டிலேயே என் மனைவி கருவுற்று, எங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு ‘வெண்காடன்’ என்று பெயரிட்டோம். அந்தக் குழந்தைக்கு இப்போது ஓராண்டு நிரம்பிவிட்டது. அதனால் இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் அக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு இப்போது இறைவன் தரிசனத்துக்காக இங்கு வந்திருக்கிறோம். குழந்தை செய்த பாக்கியம், தங்களையும் வணங்குவதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது,” என்று மகிழ்ந்து சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்டு தம்பதிகளையும், குழந்தையையும் வாழ்த்தி ஆசி கூறினார் திருஞான சம்பந்தர். அடுத்து நிற்பவரின் குறை கேட்டார்.

“எனக்கு வெகு நாட்களாக, தீராத நோய் ஒன்று ஆட்டி வைத்தது. நம்பிக்கையுடன் நாமும் முக்குளம் சென்று நீராடி, இறைவனைத் தொழலாமே என்று எண்ணினேன். இங்கு வந்து சிலகாலம் தங்கி நீராடினேன். என்ன ஆச்சரியம்! எனக்கு இருந்த நோய் முற்றிலும் மறைந்துவிட்டது,’’ என்று வியப்பு மிக கூறினார். யாவற்றையும் கேட்டு அக மகிழ்ந்தார் ஞானி.

இவ்வாறே ஒருவர் தன் மகளுக்கு வெகுநாட்களாகத் தக்க வரன் தேடித் திண்டாடிக்கொண்டிருந்தார். முக்குளத்தில் நீராடியதின் பலன் சீக்கிரமே நல்ல மாப்பிள்ளை கிடைத்து நல்ல முறையில் திருமணம் நடந்தேறியது என்று அவரும், வறுமை நீங்கிச் செல்வம் பெற்றோம் என்று சிலரும், காணாமற்போன உறவினர் கிடைத்தார் என்று ஒருவரும், தாம் வேண்டிய கல்வித்துறையில் புலமை பெற்றோம் என்று சிலரும், மேன் மேலும் கல்வியில் வளம் பெற வேண்டும் என்று தொழுதாரும்…. என பலர் தங்கள் கதைகளை திருஞான சம்பந்தரிடம் தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றனர்.

அன்பர்களைச் சந்தித்து இவ்வளவு நேரம் அவர்களுடைய ஆனந்தமான அனுபவங்களைக் கேட்ட திருஞான சம்பந்தர் அவர்கள் பாவம் போக்கி நினைத்தவற்றையெல்லாம் அருளும் முக்குளத்தையும், திருவெண்காட்டு அப்பனையும் கண்டு உருகி நின்றார். தாம் கண்டவற்றையும், கேட்டவற்றையும் தாம் பாடிய பதிகங்களில் இணைத்து மகிழ்ச்சியுற விரும்பினார். வந்தது, ஒரு பாடல்:

பேயடையா பிரிவு எய்தும்
பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டாஒன்றும்
வேயனதோள் உமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார்அவர்தம்மைத்
தோயாவாம் தீவினையே
(இரண்டாம் திருமுறை, திருவெண்காடு, பாடல் -2)

பொருள்:- மூங்கிலைப்போல வழுவழுப்பும், பசுமை நிறமும் கொண்ட தோள்களைப் பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய திருத்தலமாகிய திருவெண்காட்டில் உள்ள முக்குள நீரில் தோய்ந்து ஆடும் செயலுடையாரைத் தீய செயல்கள் சாராது. அவர்களைப் பேய்கள் அண்டாது. முன்பே அடைந்திருந்தாலும், அவை பிரிந்து நீங்கி விடும். பிள்ளை வேண்டுமென்றால் அதனையும், அதனோடு மனத்தில் வேறு எவற்றை நினைத்தார்களோ அவற்றையும் பெறுவர். இவற்றை அடைவது பற்றி சிறிதும் ஐயுற வேண்டாம்.