விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு *#டானிக்_சாப்பிடலாமா..* இதய ஆரோக்கியம…

💊💊💊விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு💊💊💊

*#டானிக்_சாப்பிடலாமா..*

இதய ஆரோக்கியம், மூளைத்திறன் மேம்பாடு, கிட்னி நலம், இரும்புச்சத்து… என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடைகளில் கிடைக்கிறது டானிக்!

இவற்றை வாங்கிச் சாப்பிட்டு உடல்நலத்தோடு வாழ விரும்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது.

இவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் `டானிக்’ வியாபாரம் சக்கைபோடுபோடுகிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி.

உடல்மீது லேசான அக்கறையும், உறுத்தலும், அதிகப் பயமும் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்தான் இந்த வியாபாரத்தின் இலக்கு. இப்போது பலரின் மாத மளிகைச் சாமான் பட்டியலில் உயிர்ச்சத்து மாத்திரைகளும், இரும்புச்சத்து டானிக்குகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.

*இப்படி டானிக்காகச் சாப்பிடாமல், பயறுகள், காய்கறி, பழ வகைகளில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். சரி… எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்? பார்க்கலாமா?*

எல்லோருக்கும் எல்லாவற்றிலும் அவசரம்… இப்படிப்பட்ட ஒரு சூழலில் பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளையோ சத்து தரும் டானிக்குகளையோ வாங்கிச் சாப்பிடுவது தவறில்லை என்றுகூடத் தோன்றலாம். அவசியம் இல்லாமல் எடுத்துக்கொள்ளும் இந்த மருந்துகள் ஆபத்தைத்தான் விளைவிக்கும். எனவே, இயற்கையாகக் கிடைக்கும் சத்துகளை உடலுக்குக் கொடுப்பதுதான் சிறந்தது.

*#இரும்புச்சத்து*

பலராலும் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தப்படுவது இரும்புச்சத்து டானிக்தான். ரத்தசோகையைப் போக்க உதவும் அவசியமான இந்த டானிக், தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது, இரைப்பைக் குடலில் புண்களையும், மலச்சிக்கலையும், சில நேரங்களில் ஈரலில் பாதிப்பையும்கூட ஏற்படுத்திவிடும். `குழந்தைகளுக்கு அவசியமின்றி இரும்புச்சத்து *டானிக் கொடுப்பது அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்’ என எச்சரிக்கிறது நவீன மருத்துவம்.*

நம் அன்றாட உணவில் ஏற்கெனவே இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. இந்தச் சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் சி சத்து தேவை. பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் இரும்புச்சத்து கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஆனால், கம்பு அரிசியில் இது அதிகமாக இருக்கிறது. குதிரைவாலி அரிசி, வரகு, சாமை ஆகியவற்றிலும் இது அதிகம். இந்தச் சிறுதானியங்களில் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி சேர்த்து இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதற்குச் சமமானது.

முருங்கைக்கீரை சூப் அல்லது ரசம், நாட்டுக்கோழியின் ஈரல், நிலக்கடலை மிட்டாய், நெல்லிக்கனிச் சாறு, உலர்ந்த திராட்சை இவை அனைத்திலும் இரும்புச்சத்து உண்டு. இவற்றையெல்லாம் சாப்பிடுகிறவர்கள் இரும்புச்சத்துக்கு என தனியாக டானிக்கோ, மருந்தோ வாங்கிச் சாப்பிடத் தேவையில்லை.

*#துத்தநாகச்சத்து (Zinc)*

குழந்தைகளுக்கான சத்து டானிக்குகளில் வெகு பிரபலமானது நாகச்சத்து. இது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்; புற்றுநோயைத் தடுக்கும்; ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த நாகச்சத்து நம் ஊர் நிலக்கடலை, சோயா, பீன்ஸ், மாதுளம்பழம், கோழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதை ஆகியவற்றில் ஏராளமாக உள்ளது.

பூசணி, தர்பூசணியைச் சாப்பிடும்போது அல்லது சமைக்கும்போது அவற்றின் விதைகளைத் தூர எறிந்துவிடக் கூடாது. அவற்றை எடுத்து, உலர்த்தி வைத்து அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், நாகச்சத்து தாராளமாகக் கிடைக்கும். `இப்படி இயற்கையாகக் கிடைக்கும் உணவில் சாப்பிடாமல், டானிக்காக வாங்கி அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மற்ற வைட்டமின்கள் உட்கிரகிக்கப்படுவதைக் குறைத்து, குழந்தைகளுக்கு சளிப்பிடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும்’ என எச்சரிக்கிறது உலகின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக்.

*#வைட்டமின்_ஆபத்து!*

வைட்டமின்கள், மிக அவசியமான உணவுக் கூறுகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், சோர்வு நீங்க வேண்டும், தோல் மினுங்க வேண்டும், மூளைத்திறன் மேம்பட வேண்டும் என்பதற்காக மூன்று வேளையும் இஷ்டத்துக்கு *வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுவது உயிர்ச் சத்தாகாமல், உயிருக்கு உலைவைக்கும் ஒன்றாகிவிடும்.* அளவுக்கு அதிகமான `ஃபோலிக் அமிலம்’ எனும் வைட்டமின் பி9, மலக்குடல் புற்றுநோயை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி சத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், சிறுநீர்ப்பை புற்று வரவும் வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த இரு வைட்டமின்களையும் இயற்கையாக அளவோடு சாப்பிட்டால், புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுடன் செயல்படும்.

புரதச்சத்துமிக்க பானமோ, மூளைக்கு பலம் தரும் டானிக்கோ சத்துக்களை மருந்தாகச் சாப்பிட வேண்டாம். எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு அவற்றைச் சாப்பிடுவோம். உடல்நலத்தை என்றென்றும் நம் வசப்படுத்துவோம்.

*நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

காற்கறி, பழங்களில் இருக்கும் பூச்சிக்கொல்லி இரசாயங்களை முற்றிலும் நீக்கு இதோ சூப…

காற்கறி, பழங்களில் இருக்கும் பூச்சிக்கொல்லி இரசாயங்களை முற்றிலும் நீக்கு இதோ சூப்பரான வழி…

நாம் உண்ணும் காய்கறிகள், பழங்களில் என அனைத்திலும் பூச்சிக் கொல்லிகள் நிறைந்துள்ளன. என்னதான் அந்த பூச்சிக் கொல்லிகள் செடிகளில் பூச்சிகள் வராமல் இருக்கவும், செடிகள் நன்கு செழித்து வளரவும் அடிக்கப்பட்டாலும், அந்த இரசாயன பூச்சிக் கொல்லிகள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படும்.

அதிலும் இப்படி பூச்சிக்கொல்லிகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நீண்ட நாட்கள் உட்கொண்டு வந்தால் புற்றுநோய், நரம்பு மண்டல சிதைவு, இனப்பெருக்க மண்டல பாதிப்பு, பிறப்பு குறைபாடுகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலமே பாதிக்கப்படும்.

என்னதான் அவற்றை நீரில் நன்கு கழுவி பயன்படுத்தினாலும், அவற்றில் உள்ள இரசாயனங்கள் போகாது.

ஆனால், பழங்கள், காய்கறிகளில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளை நீக்க அவற்றை முறையாக கழுவி பயன்படுத்த வேண்டும். அதற்கு வினிகர் நீர், உப்பு நீர் அல்லது புளி நீர் தான் சிறந்தவை.

** வினிகர் நீர் தயாரிக்கும் முறை..

ஒரு லிட்டர் நீரில், 20 மி.லி. வினிகரைக் கலந்தால், வினிகர் நீர் தயார்.

** புளி நீர் தயாரிக்கும் முறை

30 கிராம் புளியை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற வைத்து, பின் அதனை கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

** உப்பு நீர் தயாரிக்கும் முறை

1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் கல் உப்பை சேர்த்து கலந்தால், உப்பு நீர் தயார்.

சரி எந்த காய்கறியை எப்படி கழுவினால், அவற்றில் உள்ள பூச்சிக்கொல்லி இரசாயங்கள் முற்றிலும் நீங்கும் என்று பார்க்கலாமா?

** கறிவேப்பிலை, புதினா, கீரைகள் கீரை வகைகள், புதினா, கறிவேப்பிலையை சமைக்க பயன்படுத்தும் முன், அவற்றை வினிகர் நீரில் நன்கு அலசி, பின் பயன்படுத்த வேண்டும். இதனால் கீரைகள், கறிவேப்பிலை, புதினா போன்றவற்றில் உள்ள இரசாயன பூச்சிக் கொல்லிகள் முற்றிலும் அகலும்.

** புடலங்காய், கோவைக்காய் மற்றும் நெல்லிக்காய் மேற்கூறிய காய்கறிகளை வினிகர் நீர் அல்லது புளி நீரில், 10 நிமிடம் ஊற வைத்து, சுத்தமான துணியால் துடைத்து, பின் சமைக்கப் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள இரசாயனங்கள் முற்றிலும் நீங்கும்.

** கொத்தமல்லி கொத்தமல்லியின் வேரை முற்றிலும் நீக்கி, பின் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க வேண்டும். பின் சமைக்க பயன்படுத்தும் முன், அவற்றை வினிகர் நீரிலோ அல்லது உப்பு நீரிலோ அலசி, பின் சுத்தமான நீரில் 2-3 முறை நன்கு அலசிப் பயன்படுத்த வேண்டும்.

** முட்டைக்கோஸ் முட்டைக்கோஸின் மேல் பகுதியில் இருக்கும் இதழ்களில் 3-4 இதழ்களை நீக்கிவிட்டு, பின் உப்பு நீரில் கழுவிவிட்டு, அடுத்து சுத்தமான நீரில் பலமுறை கழுவி, துணியால் துடைத்து பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் அவற்றில் உள்ள இரசாயனங்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

** கத்திரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய், சுரைக்காய் மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சமைக்கும் முன், பிரஷ் கொண்டு மேல் பகுதியை நன்கு தேய்த்து, நீரில் கழுவி, பின் புளி அல்லது வினிகர் நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, அடுத்து சுத்தமான நீரில் மீண்டும் கழுவி, நல்ல சுத்தமான துணியால் துடைத்து பின் பயன்படுத்த வேண்டும்.

** தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரைக்காய் மேற்கூறிய காய்கறிகளை வாங்கியவுடன் வினிகர், உப்பு அல்லது புளி நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் பலமுறை கழுவி, இரவில் அப்படியே வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சுத்தமான துணியால் துடைத்து பின் பயன்படுத்துங்கள். இதனால் அவற்றில் உள்ள இரசாயனங்கள் நீங்கும்.

** காலிஃப்ளவர் பலருக்கும் காலிஃப்ளவரை சுத்தம் செய்ய பயமாக இருக்கும். ஏனெனில் அவற்றில் புழுக்கள் இருக்கும் என்பது தான். இருப்பினும் இதனை ஆரோக்கியமானதாக மாற்றி சாப்பிட, முதலில் அதன் பூக்களை ஒவ்வொன்றாக வெட்டி, உப்பு அல்லது வினிகர் நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் பலமுறை சுத்தமான நீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.

** கேரட், பீட்ரூட் இந்த காய்கறிகளை முதலில் சுத்தமான நீரில் பலமுறை கழுவி, பின் துணியால் துடைத்து, காட்டன் துணியால் சுற்றில் ஃப்ரிட்ஜில் வைத்து, சமைக்கும் முன், அவற்றின் மேல் தோலை சீவி எடுத்துவிட்டு, பின் மீண்டும் நீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.

** பூண்டு, இஞ்சி, வெங்காயம் மேற்கூறியவைகளின் மேல் தோலை நீக்கிவிட்டு, சுத்தமான நீரில் கழுவி பின் பயன்படுத்த வேண்டும்.

Tamil New Full Movie – Love – New Tamil Romantic Movies [HD]Love is A Tamil New Movies directed by S A Jain, Starring: Ravi, Mindu, Vijay, Ram Mohan, Helen, Julie, K Manohar, Ani.
Watch Tamil Full Movie Love – Tamil Full Movie 2014 [HD]
For More Movies Watch Our Channel Subscribe Now
http://www.youtube.com/subscription_center?add_user=TamilMasalaMovie
This Tamil YouTube movie channel Movie World Tamil contains copyright/Classic/Evergreen/Exclusive/Of­­­ficial/Tamil new movies contents from Tamil movies

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள் ஏராளமானோர் இருமல், சளியால் பாத…

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்

ஏராளமானோர் இருமல், சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழே பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.
இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.

அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்

*பெரியவா திருவடியே* *சரணம்.* *ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அ…

*பெரியவா திருவடியே*
*சரணம்.*

*ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்…." பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".*

*பெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் " சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா…….என்ன வேணா செய்வியா?"*

*"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"*

*"அதில்லே………..நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?"……….*

*"மாட்டேன்……என்ன சொன்னாலும் செய்யறேன்"*

*"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. ……. கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்"*

*பக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது! அந்த அம்மாவுக்கோ……தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.*

*சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!" என்று பேரனை அதட்டினார்! ஆம். பேச்சும் வந்துவிட்டது!*

*இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"*

*எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்*

செரிமானம் ஆகாமல் அவதிப்படுகிறீர்களா? இந்த பானத்தை குடித்து பாருங்கள்! நல்ல ரிசல்…

செரிமானம் ஆகாமல் அவதிப்படுகிறீர்களா? இந்த பானத்தை குடித்து பாருங்கள்! நல்ல ரிசல்ட் கிடைக்கும்…

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பானம் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

பூண்டு பால் தயாரிக்கத் தேவையானப் பொருட்கள்:

பால் – 1 கப்

பூண்டு – 3 பற்கள்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 2 சிட்டிகை

பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்

பூண்டு பால் செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும்.

பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும்.

பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் ரெடி.

இந்த பூண்டு பாலை குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

நன்மைகள்:

** சளி மற்றும் காய்ச்சல் உங்களுக்கு திடீரென்று தீவிரமான சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.

** முகப்பரு நீங்கள் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுபவராயின், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.

** தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

** நுரையீரல் அழற்சி பூண்டு பால் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணி. மேலும் இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

** நல்ல செரிமானம் செரிமானம் சீராக நடைபெற வேண்டுமானால் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.

** வயிற்றுப் புழுக்கள் பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

** இடுப்பு மற்றும் பின்புற கால் வலி பூண்டு பாலில் உள்ள வலி நிவாரணி தன்மை, இடுப்பு மற்றும் பின்புற கால் வலியினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு நல்லது. எனவே உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் பூண்டு பாலை குடித்து நன்மைப் பெறுங்கள்.

#நாளைக்கு_பிரதோஷம் #நமச்சிவாய_திருப்பதிகம் || காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க…

#நாளைக்கு_பிரதோஷம்

#நமச்சிவாய_திருப்பதிகம் ||

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி || பிரதோஷ வழிபாடு சிறப்பு பதிவு ||

"மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் ஓத வேண்டிய திருப்பதிகம்."

திருநல்லூர்பெருமணத்தில் இறைவன் சந்நிதியில் சம்பந்தரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில் இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம் #நமச்சிவாயத்_திருப்பதிகம்
என போற்றப்படுகிறது.

🌺#காதலாகிக்_கசிந்து

கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. …..(01)

🌺#நம்புவார்_அவர்

நாவின் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொன்னார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே. …..(02)

🌺#நெக்குள்_ஆர்வம்

மிகப்பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே. …..(03)

🌺#இயமன்_தூதரும்

அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே. …..(04)

🌺#கொல்வாரேனும்_குணம்

பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே. …..(05)

🌺#மந்தரம்_அன

பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே. …..(06)

🌺#நரகம்_ஏழ்புக

நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. …..(07)

🌺#இலங்கை_மன்னன்

எடுத்த அடுக்கல் மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. …..(08)

🌺#போதன்_போதன

கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. …..(09)

🌺#கஞ்சி_மண்டையர்

கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுது செய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. …..(10)

🌺#நந்தி_நாமம்

நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே. …..(11)

#பதிகப்_பலன்

நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச்செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர்.

[fb_vid id=”photo_id”:”2650350735286482″”][fb_vid id=”2650350735286482″]

" நம்மை நாமே காப்போம்" வாரீர் வருகின்…

" நம்மை நாமே காப்போம்"
வாரீர்

வருகின்ற *27.06.2020 * அன்றைய சனிக்கிழமை
92 வது வாரமாகும். நாம் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலயம் சென்று *கால பைரவருக்கு* விளக்கேற்றி, வணங்கி, அவருடைய பெரும் கருணையால் நாம் அனைவரும்
நமது ஒற்றுமையை நிலைநாட்டி வருகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் ஆலயம் சென்று விளக்குகள் ஏற்றி, வணங்க முடியாத காரணத்தால், வீட்டிலேயே,
*கால பைரவரை* நினைத்து, வேண்டி, விளக்கேற்றி வணங்கி மகிழ, சித்தர் பெருமான் அருளியுள்ளார்கள்

ஆகவே, இந்த சூழ்நிலைகள் மாறும் வரை, வீட்டிலேயே விளக்கேற்றி வணங்கி, வேண்டும் படி கேட்டு கொள்கிறோம்.

கால பைரவரின் பெரும் கருணையால், நாம் அனைவரும் வியக்கும் வண்ணம், பிரிந்து கிடந்த இந்து சொந்தங்கள் அனைவரும், ஜாதிகள், மொழிகள், கட்சிகள், பணக்காரன், ஏழை என்ற அனைத்து பேதங்களையும் மறந்து தமிழகத்தில், ஒவ்வொரு கிராமங்கள் தோறும், பல்வேறு சூழலில் இன்று ஒன்றிணைய தொடங்கி விட்டோம்.

இன்று இந்து உணர்வாளரகள் ஒன்றுகூடி,
ஆலய சொத்துக்களை பாதுகாக்கவும், ஏற்கனவே இழந்த சொத்துக்களை மீட்க சட்டரீதியாக போராட ஒரு குழு.

ஆலயங்களையும், நாம் வணங்கும் தெய்வங்களையும், தவறாக அவதூறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்க சட்டரீதியாக போராட ஒரு அணி.

குக்கிராமங்களில் சென்று, மதமாற்றங்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குழு.

இப்படி பல்வேறான அமைப்புகள் காலபைரவரின் அருளால் செயல்பட தொடங்கி விட்டது.

யுகங்கள் தோறும் அதர்மங்கள் தலை தூக்கி, தர்மங்கள் நசுக்கப் படும்போது, நான், அக்காலத்தில் தர்மத்தை நிலைநாட்ட, மானுடனாக அவதார பிறப்பெடுத்து வருவேன், என்று பகவத்கீதையில் அர்ஜுனனிடம் * கிருஷ்ண பகவான் * கூறுகிறார்.

அவ்வாறே இக்கால சூழலில், மனுதர்மத்தை மீட்டு எடுக்க, *சூரிய பகவானால்,*
^ஆன்ம ஒளி பொருந்திய^, °புது சக்தியுடன் கூடிய,° *ஒரு ஒப்பற்ற தலைவன்* உருவெடுத்து, நம்மை எல்லாம் வழிநடத்தி செல்வான் என்று நம்புவோமாக.

.அதற்காகவே நமது ஒற்றுமை நிலைக்கவும், மேலும் வலிமை கூடவும், நமது கலாச்சாரங்களும், பண்பாடுகளும், வழிபாடுகளும், உலகம் முழுவதும் விரிந்து பரவவும், செழிந்தோங்கவும், சித்தர் பெருமான் ஞாயிற்றுக்கிழமை தோறும், காலையில் சூரியபகவான் வழிபாட்டினையும், சொல்லி அருளி இருக்கிறார்கள்.

அந்த பூஜையினை சித்திரை மாத முதல் ஞாயிறன்று 19.04.20 நாமனைவரும் மகிழ்ச்சிகரமாக தொடங்கி விட்டோம். வருகின்ற *28.06.20 * 11 வது வாரமாகும்.

பல்லாயிரக் கணக்கானோர் பூஜை செய்து அவர்களை வணங்குவதன் பலனாக, சூரியபகவானும், மேற்கூறிய செயல்களை வெற்றிகரமாக முடிக்க உதவுவார்.

நம் அனைவரும் எதிர்நோக்கும், நல்ல வாழ்வினை, வெகு விரைவில்
*கால பைரவரும் *, *சூரியபகவானும்* சேர்ந்து நமக்கு அருளுவார்கள்.

.இன்னும் * கால பைரவருக்கு * சனிக்கிழமை தோறும் விளக்கேற்றி வணங்குவதன் மூலமும் , *சூரியபகவானுக்கு* ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டில் பூஜைகள் செய்து வணங்குவதன் மூலமும், நாம் தெளிவான முன்னேற்றத்தை காணலாம் என்பதனை நாம் அனைவரும் கண்கூடாகவும், பரிபூரணமாகவும் உணராலாம். உணரும் காலத்தை வெகுவிரைவில் இயற்கையே நமக்கு அமைத்து கொடுக்கும்.

நமது இந்து சொந்தங்களே , வணக்கம்.

இனிமேலாவது, கொஞ்சம் சிந்தியுங்கள் சொந்தங்களே, இந்துக்களாகிய நாம் அனைவரும் 91 வாரங்களுக்கு முன்னால் எப்படி இருந்தோம், சித்தர் வாக்கின் படி,
91 வாரங்கள் தொடர்ந்து
*கால பைரவருக்கு* விளக்கேற்றி வணங்கிய பிறகு எப்படி இருக்கிறோம் ?

நாம் அனைவரும் என்ன எண்ணுகிறோம் என்பதனை, நாம் அனைவரும் அறிந்ததே.

நம்மிடம் கடுகளவும் ஒற்றுமை இல்லை.

நல்ல சிந்தனைகள் இல்லை,

எது சரி ? எது தவறு ? என்று புரிந்து கொள்ளும் ஆற்றல் துளியும் இல்லை.

எது சொன்னாலும் , அதன் உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, எள்ளளவும் இல்லவே இல்லை.

ஆகவே, நாம் அனைவரும் ஒன்று சேராமல் பிரிந்தே இருக்கிறோம்.
நம் அனைவரையும் இணைக்க இறைவனால் மட்டுமே முடியும் என நம்புவோம்.

நாமனைவரும் எளிமையானவர்கள்,

நமக்கு பக்க பலமாக நிற்க எந்த இயக்கமோ, உதவி செய்ய தலைவர்களோ, யாரும் இல்லை.

ஆனால், நம்மூலம் பலனடைந்து, அதிகாரம் செய்யும் பல தலைவர்களும், முகமூடி பெயர்களை வைத்துக் கொண்டு, நம்மவர்களை போலவே , நம்முள் தோன்றி, நம் வழிபாட்டையே கேலியும் கிண்டலும் பேசி, நம்முடைய வழிபாட்டு முறைகளையே சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏன் என்று ஒரு கேள்வி கூட , அவர்களை நோக்கி கேட்கும் ஆற்றல் நமக்கு யாருக்கும் இல்லை.

நீயே கதி பரந்தாமா !!!
என்று முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரன் அழைத்த போது ,
பரம் பொருளே, இறங்கி வந்து காப்பாற்றிய நிகழ்வையும் நாமறிவோம்.

இப்போது வலிமையற்ற நிலையில், ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் நாம், இதே போல் இறைவனை சரணடைந்து, காப்பாற்றும் படி வேண்டிக் கொள்வதை தவிர, வேறு வழியே இல்லை.

இதற்காக நாம் அனைவரும் செய்ய வேண்டியது,

முக்காலத்திற்கும், தலைவனாக விளங்கும் , காலச் சக்கரத்தின் அதிபதியான, "கால பைரவரை" சரணடைவதுதான்.

" ஆகவே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை இராகு கால நேரத்தில்
( காலை மணி 9—10.30 )
பஞ்ச பூதங்களை வேண்டி
5 ( ஐந்து ) நல்லெண்ணெய் (தீபம்) விளக்குகளை அவர் முன் ஏற்றி, பரிபூரணமாக உங்களை சரணடைகிறோம்.

எங்கள் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கவும், மற்ற சக்திகளால் எங்களுக்கு எந்த பிரச்சினைகளும் எழா வண்ணமும், நீரே உற்ற துணையாக இருந்து, எதிர்காலத்தில், வலிமையான, வளமையான, நம் வழிபாட்டு முறைகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற, அருள் புரியுங்கள் என்று, தூய மனதுடன் பிரார்த்தனை செய்து கொள்வது நலம்.

இதனால் காலத்தின் தலைவன், பஞ்சை நூலாக்கி , நூலை ஆடையாக்கி, தருவது போல, நம் மென்மையான இன மக்களை ஒன்று சேர்த்து, பஞ்ச பூதங்களான இயற்கையின் ஆற்றலால் வழிபாடுகள் தொடர்ந்து நடக்க ஆசிபுரிவார்.

இதை, மிகுந்த நம்பிக்கையோடு நமது இனத்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டுகிறோம்.

இதை நம்முடைய சந்ததிகளுக்கும் விளக்கமாக கூறி, அவர்களையும் விளக்கேற்றும் படி செய்யுங்கள். எதிர்கால மாற்றத்தை விரைந்து காணுங்கள்.

நீங்கள் இந்த நல்ல விஷயத்தை மூன்று பேருக்கு சொல்ல, அவர்கள் அடுத்த மூன்று பேருக்கு சொல்ல, இப்படி போனால் இந்த செய்தி கோடிக்கணக்கான நம்மினத்தவரிடம் போய் சேர்ந்து, நாம் அனைவரும் ஒன்றிணைய " கால பைரவர்" நமக்கு கண்டிப்பாக துணை நிற்பார்.
அந்த முதல் ஆளாக நீங்கள் இருக்க வேண்டாமா ? சிந்தியுங்கள்.

நாம் தொடங்கும் போது, கால பைரவரின் அருளால், உலகமே மாற்றத்தை உணரும்…..

மேலும் விவரங்களை அறிய….

ஆதிபராசக்தி, மந்திரபாவை மற்றும்
18 சித்தர்கள் ஆலயம்,
எண் 4, புகழேந்தி தெரு,
பள்ளிக்கரணை, சென்னை 600 100.

044 – 22460820 / 2246 2910 / 9962884902.

www.facebook. com /pallikaranaisakthi
youtube subscribe / pallikaranaisakthi
www.pallikaranaisakthi.org