உளுந்தம் பருப்பை ஊறவைத்து நைஸாக அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பை அரைத்து எடுக்…

👉 உளுந்தம் பருப்பை ஊறவைத்து நைஸாக அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பை அரைத்து எடுக்கும் சமயத்தில் அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வடை செய்தால் வடை நன்றாக இருக்கும்.

👉 முள்ளங்கியை வேக வைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்து வேக வைத்தால் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும்.

👉 தோசை மாவு, வெண்பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.

👉 சாம்பார் இறக்கும் தருவாயில் வெந்தயமும், பெருங்காயமும் வறுத்து பொடி செய்து போட்டு அத்துடன் சிறிது கசகசாவையும் சேர்த்து பொடி செய்து போட்டால் சாம்பார் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

👉 அரிசி, பருப்பு வகைகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் போது காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைத்தால் புழு பு+ச்சிகள் வராது.

👉 நன்றாக முற்றிய தேங்காயை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு துருவினால், மிகவும் எளிதாக துருவலாம்.

👉 அடி பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய அப்பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி வெங்காயத்தை போட்டு கொதிக்க விட்டால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

👉 பொங்கல் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் கெட்டியாகி விடும். சுவையாகயும் இருக்கும்.

👉 புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும்.

👉 பிளாஸ்டிக்கில் சூடான திரவத்தை ஊற்றும் போது பிளாஸ்டிக்கை சாய்வாக வைத்து ஊற்ற வேண்டும். அப்பொழுது தான் பிளாஸ்கை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும்

Tamil Full Movie | Aaravali | Eshwar,Varalakshmi Tamil MoviesAaravali is a 1957 Indian Tamil film, directed by S. V. Krishna Rao, starring S. G. Eshwar, G. Varalakshmi, Mynavathi and V. Gopalakrishnan. The film, produced by Modern Theatres, had musical score by G. Ramanathan.

Like ✔ Comment✔ Tag ✔ Share ✔
▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•
Subscribe Now●–~√V”^—●▐ ►.::http://goo.gl/qZJBRb
Coming Soon 2015 Movies
Tamil New Movies 2015 Full Movie – Kaya Pazhama
▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬•
For More Movies Watch Our Channel Subscribe Now
http://www.youtube.com/subscription_center?add_user=TamilMasalaMovie
This Tamil YouTube movie channel Movie World Tamil contains copyright/Classic/Evergreen/Exclusive/Of­­­ficial/Tamil new movies contents from Tamil movies

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் ம…

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்
கண்ணாபட்டி விஸ்வநாதர் திருக்கோயில், திண்டுக்கல்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்

மூலவர் : விஸ்வநாதர்
அம்மன் : விசாலாட்சி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : உத்தரவாகினி
ஆகமம்/பூஜை : காரணாகமம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : குன்றுஅரண்கோட்டை
ஊர் : கண்ணாபட்டி
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ நாட்கள், கார்த்திகை சோமவாரம்.

தல சிறப்பு:

கோயில் எதிரே வைகை நதி ஓடுகிறது. இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும் தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. இதை "உத்தரவாகினி' என்பர். காசியில் கங்கை நதியும் இவ்வாறே பாய்வதால், இத்தலத்தை காசிக்கு நிகரானதாகச் சொல்கிறார்கள்.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், கண்ணாபட்டி (குன்னுவாரன்கோட்டை) – 624 220. திண்டுக்கல் மாவட்டம்.

போன்:

+91 4543 227 572, 97865 61935

பொது தகவல்:

சிருங்கேரி மடத்தின் 25வது பீடாதிபதி சச்சிதானந்த பாரதி மகாசுவாமிகளின் அவதார தலம் இது. 1623 – 1663 வரையில் சிருங்கேரி மடத்தை நிர்வகித்தவர் இவர். இவரே சிருங்கேரி மடத்தின் முந்தைய 24 பீடாதிபதிகளின் வரலாற்றைத் தொகுத்தவர். மதுரை மீனாட்சியம்மனைப் போற்றியும் இவர் பாடல்கள் இயற்றியுள்ளார். இவருக்கு இக்கோயில் அருகில் மண்டபம் உள்ளது. ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று இவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும். அப்போது, இக்கோயிலில் ஏகாதச ருத்ரஜெப யாகத்துடன், சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும்.சமஸ்கிருத மொழிக்கு முதன்முதலாக தமிழில் அகராதி வெளியிட்ட அரங்க கிருஷ்ண சாஸ்திரிகளும் இவ்வூரில் பிறந்தவரே ஆவார்.

பிரார்த்தனை

மரண பயம் நீங்க, பாவம் நீங்கி, முக்தி கிடைக்க இங்குள்ள வைகை நதியில் நீராடுகின்றனர். நோயால் அவதிப்படுவோர் குணமாகவும், ஜாதக தோஷம் அல்லது நாக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள விசாலாட்சி அம்மனை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுவோர் குணமாகவும் இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றியும், விசாலாட்சிக்கு இனிப்பு பாயசம், சர்க்கரைப்பொங்கல் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர்.

தலபெருமை:

திருமண வழிபாடு: விசாலாட்சி அம்பாள் பிரசித்தி பெற்றதால், இப்பகுதியில் விசாலாட்சி கோயில் என்றால்தான் தெரியும். பிரதான வாசலும் இவளது சன்னதி எதிரே அமைந்துள்ளது. ஜாதக தோஷம் அல்லது நாக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், இவளுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். அப்போது, அம்பாளுக்கு பூஜித்த மாலையை பிரசாதமாகத் தருவர். அதை எடுத்துச் சென்று, வீட்டில் வைத்து வழிபட்டு வர விரைவில் தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. வில்வ மரத்தடியில் அஷ்ட நாகர்களுடன் உள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றியும் வணங்குகின்றனர். ராகு கேது தோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் வணங்குவதுண்டு.

ஆற்றில் கிடைத்த நந்தி: ஒருசமயம் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்றில் அடித்து வரப்பட்ட நந்தியும், வலம்புரி சங்கும் கரையில் ஒதுங்கியது. இந்த நந்தியை சுவாமி சன்னதி முன், பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதோஷ நாட்கள், கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி ஆகிய விசேஷ காலங்களில் மட்டும், வலம்புரி சங்கில் தீர்த்தம் எடுத்து விஸ்வநாதருக்கு பூஜை செய்கின்றனர். வைகையில் கிடைத்த சங்கரலிங்கம் சன்னதி பிரகாரத்தில் உள்ளது.சந்திரன், விநாயகர், ஐயப்பன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நவக்கிரகம், காலபைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி தனிச்சன்னதி அமைப்பில் காட்சி தருகிறார்.

தல வரலாறு:

இப்பகுதியில் வசித்த சிவபக்தர் ஒருவர், தினமும் சிவனடியார் ஒருவருக்கு அன்னம் பரிமாறி, அதன்பின் தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் சிவனடியார் எவரும் அவர் கண்ணில் படவில்லை. தன் பணியாளரை ஊருக்குள் யாரேனும் சிவனடியார் இருந்தால் அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். வைகை நதியில் சிவனடியார் ஒருவர் நீராடிக் கொண்டிருந்ததைக் கண்ட பணியாளர், சிவபக்தரிடம் வந்து தகவல் சொன்னார். அவர் சென்று அழைத்தார். "நானும் சிவ தரிசனம் செய்தபின்தான் சாப்பிடுவது வழக்கம்!' என்றவர், தன்னை ஒரு சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லும்படி வேண்டினார். அப்போதுதான், "அங்கு சிவாலயம் எதுவுமில்லை' என்ற உண்மை சிவபக்தருக்கு உரைத்தது. இதைக்கேட்டு கோபம் கொண்ட அடியவர், சிவனுக்கு கோயில் இல்லா ஊரில் உபசரிப்பைக்கூட ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனச் சொல்லி சென்று விட்டார். இதனால், வருந்திய பக்தர் உடனே காசி சென்று ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். இவருக்கு "விஸ்வநாதர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் விசாலாட்சி அம்பிகைக்கும் சன்னதி கட்டப்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கோயில் எதிரே வைகை நதி ஓடுகிறது. இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும் தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. இதை "உத்தரவாகினி' என்பர். காசியில் கங்கை நதியும் இவ்வாறே பாய்வதால், இத்தலத்தை காசிக்கு நிகரானதாகச் சொல்கிறார்கள்.

மதுரையில் இருந்து (36 கி.மீ.,) உசிலம்பட்டி சென்று, அங்கிருந்து வத்தலக்குண்டு செல்லும் பஸ்களில் 18 கி.மீ., சென்றால் கண்ணாபட்டி தலத்தை அடையலாம். வத்தலக்குண்டில் இருந்து 8 கி.மீ. பஸ் ஸ்டாப்பில் இருந்து சிறிது தூரத்தில் இக்கோயில் உள்ளது.


மரு உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் போக இதை தடவினால் போதும் : நமது சருமத்தில் மரு…

மரு உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் போக இதை தடவினால் போதும் :

நமது சருமத்தில் மருக்கள் வந்தாலே பார்க்கவே அருவருப்பாக தோன்றும். இந்த மருக்கள் கழுத்து, மார்பு, முகம் போன்ற இடங்களில் அதிகமாக தோன்றும். இந்த மருக்கள் அழகை கெடுப்பது போல் இருக்கும். இவற்றை போக்க உதவும் சில இயற்கை வழிகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

வெங்காய சாறு

ஒரு துண்டு வெங்காயத்தை எடுத்து, அதில் சிறிதளவு உப்பு தேய்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் உப்பு தேய்த்த வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

பெருங்காயம்

கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அதை தினமும் மருவின் மேல் வைத்து கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்யும் பொழுது மரு மறையும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து மரு இருக்கும் இடத்தில் தடவி 20-25 நிமிடம் வரை ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் சீக்கிரம் போய்விடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு காட்டனில் எடுத்து மரு உள்ள இடத்தில் தேய்த்து வந்தாலும், மரு சீக்கிரம் உதிர்ந்து விடும். மேலும் இது அழகை பேணி பாதுகாக்க உதவியாகவும் இருக்கும்.

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, மரு இருக்கும் இடத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தேய்த்து வந்தால் மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

பூண்டு

பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியை கொண்டு கட்டி 25 நிமிடம் ஊற வைத்து, அதன் பின் கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

கற்பூர எண்ணெய்

கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும்.மேலும் மருக்கள் வளராமலும் தடுக்கலாம். கற்பூர எண்ணெய் இல்லாவிட்டால் கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்தும் பூசலாம்.

சுண்ணாம்பு

சுண்ணாம்பை நன்றாக குழைத்து, மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும். இந்த சுண்ணாம்பு வெற்றிலை பாக்கு போடுகிறவர்கள் வீட்டில் இருக்கும். அவர்களிடமும் வாங்கி பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடையிலும் வாங்க கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அந்த ஜெல்லை ஆறிலிருந்து ஏழு முறை வரை நன்றாக கழுவி, பின் அதனை மரு இருக்கும் இடத்தில் தினமும் தடவி வர மரு இருந்த இடம் தெரியாமல் போகும். சருமமும் பளபளப்பாகும்.

ஆளி விதை

ஆளி விதையை எடுத்து அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் உதிர்ந்து விடும். பேஸ்டை தடவி விட்டு அதன் மீது பேண்டேஜ் ஓட்டினாலும் மிகவும் நல்லது.
இதில் ஏதாவது ஒருமுறையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலே போதும் மருக்கள் உதிர்ந்து நல்ல பலன் கிடைக்கும்.