#கானக்குழலோசை…. பல்ல…

#கானக்குழலோசை….

பல்லவி

கானக் குழலோசை …..வேணு
கானக்குழலோசை கேசவனே நான்கேட்டு
வேய்ங்குழலில் நீ ஊதும் …. வேணு
கானக் குழலோசை கேசவனே நான்கேட்டு
காதினிக்க மனம் குளிர மெய்சிலிர்த்தேன் எனைமறந்தேன்

அனுபல்லவி

மோனத்தவமியற்றும் முனிவர்களும் ஞானியரும்
நாணம்தனை மறந்த கோபியரும் மற்றும்
ஆவினமும் பறவைகளும் அனைத்துலக வாசிகளும்
வாய் பிளந்து கேட்கும் …….வேணு

சரணம்

தேனைக் குழைத்து கனிவகைகள் சேர்த்து
தானே வாயிலிடும் மான்விழியாள் தனை மறந்தேன்
உன்னை மறந்தேன் உயிரையும் மறந்தேன்
உன்னைக் கூடும் பேரின்ப நிலையடைந்தேன்
இராகம் : காப்பி
தாளம் : ஆதி
***********************
“கண்ணனின் குழலோசை”

அதோ பாருங்கள். அந்த சோலையில், மந்தமாருதம் வீசுகிறது. மலர்கள் வித வித வர்ணங்களில் மணத்தோடு மலர் மழை பொழிகிறது. அந்த மரத்தடியில் தான் வீற்றிருக்கிறான் கிருஷ்ணன். அவனது கரத்தில் மலர்போன்ற விரல்கள் புல்லாங்குழலில் விளையாடுகிறது. அற்புத நாதம் எழுப்புகிறது. பிரபஞ்சமே மயக்கத்தில் தள்ளாடுகிறது. இன்ப மயக்கம். சகல ஜீவன்களும் ஆனந்தமயமான காணப்படுகின்றன. எங்கும் அமைதி. அவனது குழலோசை ஒன்றே எங்கும் பரவி இருக்கிறது. அமைதி என்றால் யாருமில்லாத என்று அர்த்தமில்லை . நிறையவே கோபிகள் சூழ்ந்திருந்தனர். ஆனால் சிலையாக அவன் இசையில் மயங்கி நின்றனர். கண்ணன் குழல் மனதை தடவி வசீகரிக்கும் இசை ராகங்களை பொழிந்தது. பிரணவத்தின் அடிநாதத்தை தொட்டு நின்றது. செவி படைத்த அனைத்து ஜீவன்களுக்கும் விருந்து சமர்த்தியாக அங்கே நடந்து கொண்டிருந்தது. தேவலோக அரம்பையர் பூமாரி பொழிவது போல் புஷ்பங்கள் மரங்களிலிருந்து புஷ்பார்ச்சனை புரிந்தன. .கோபியர்கள் நெரிசல். பலருக்கு புடவை முடிச்சு அவிழ்ந்து தொங்குவது கூட தெரியாமல் சரியும் புடவைகளை கைகளில் ஏந்தி நின்றனர். தேவாதி தேவன் பரமமூர்த்தி அல்லவோ அங்கே கானமிசைக்கிறான். அவன் சாதுர்யமிக்கவன். நாம் ஒன்றுமே பண்ணவேண்டாம். பேசாமல் அந்த நீல மணி வண்ணனைப் பார்த்துக்கொண்டே இருந்தால் போதும். நம்மையே மறந்துவிடுவோம். அவன் கடை விழிப் பார்வையை சந்தித்தால் நமது பல ஜென்ம பாபங்கள் மடியுமே. மனதை சுண்டி இழுக்கும் பார்வை தேன் தோய்ந்தது. மஹாலக்ஷ்மி தேவியே மயங்கும் பார்வை அது. அவனா இப்படி சாதாரண பிருந்தாவன கோபியர், சிறுவர்களுடன் யமுனை நதியில் குதித்து ஆடுகிறான். கரையில் அழகிய பசுக்கள் கன்றுகளோடு ஓடி ஆடுகிறான். எல்லோர் இதயத்திலும் முழுமையாக வீற்றிருப்பவன் .

கண்ணா உன்னில் கரைந்தேன் நான்.🌷🌹🌷🙏🙏🙏

Tamil Full Length Movies ( WATCH FREE!!!…:)Watch Ivargal Indiyargal (1987) Full Tamil Movie Starring – Ramarajan, Madhuri & others Director – Manojan Music composed by – Manoj Gyan.r
r
Ivargal Varungala Thoongal is a 1987 Tamil Indian feature film directed by Venkat. It stars Prabhu and Ambika in the lead roles மேலும் தமிழ் .r
r
Ivargal Varungala Thoongal is a 1987 Tamil Indian feature film directed by Venkat. It stars Prabhu and Ambika in the lead roles. tamil movies, tamil songs, tamil .r
r
Ivargal Indiyargal old tamil full movie.

#கீரைகள்… அன்று நூறு வயதை தாண்டியும் ஊள்றுகோல், கண் கண்ணாடி, காது கருவி, தலைக…

#கீரைகள்

அன்று நூறு வயதை தாண்டியும் ஊள்றுகோல், கண் கண்ணாடி, காது கருவி, தலைக்கு கருப்புசாயம், தேடாத முன்னோர்கள் பலர். இன்றைய சர்க்கரை, பல் சொத்தை, ஆண்மை குறைவில்லாத நிலை, மூட்டுவலி இன்னும் விதவிதமான வியாதிகள் இல்லாமல் உடலை வளர்த்தார்களே அவர்கள் எப்படி???

காரணம், நம்மை சுற்றியே அன்றும் இன்றும் என்றும் ஆரோக்கியம் தந்த அற்புதமாக தானாக வளரும் கீரைகளே. நாம் தான் அதை இன்று உள்ள சோம்பேறித்தனத்தால் தேடுவதில்லை.
பொதுவாக கீரைகள் என்று தனியாக பூமியில் முளைப்பதில்லை. நம்மைச்சுற்றியுள்ள தமிழ் நிலத்திலுள்ள மூலிகைகள் பலவற்றையும் கீரைகளாக காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள். நஞ்சுத்தன்மை இல்லாத சுவைதரக்கூடிய அனைத்துமே கீரைகள்தான். மேலும் அவற்றில் சுவை, மணம் சேர்ப்பதும், பருவநிலைக்கு தகுந்தாற்போல அவற்றை உபயோகிப்பதும் நமது திறமையே.
கீரைகளில் சில…..

1. பொன்னாங்கண்ணி கீரை
2. ஆரைக் கீரை
3. குறிஞ்சாக் கீரை
4. தாளி கீரை என்ற நறுந்தாளி கீரை
5. முசுட்டை கீரை
6. குமுட்டி கீரை
7. மின்னக்கீரை என்ற முன்னை கீரை
8. முருங்கை கீரை
9. புண்ணாக்கு கீரை என்ற புண்ணாத்தி கீரை

10. மூக்கிரட்டை கீரை
11. குப்பை கீரை
12. கோவ கீரை என்ற கொவ்வை கீரை
13.பருப்பு கீரை
13.மணலி கீரை
14.பொடுதலை கீரை
15. அப்பக்கோவை கீரை
16. வல்லாரை கீரை
17. தண்டு கீரை சிறுபருவத்தில் முளைக்கீரை
18. கரிசலாங்கண்ணி கீரை
19. லஜ்ஜைகெட்ட கீரை என்ற சண்டி கீரை

20. மகிலி கீரை
21. தொய்யக்கீரை என்ற துயிலி கீரை
22. பசலைக்கீரை
23. தூதுளம்கீரை
24. துத்திக்கீரை
25. நாயுருவிக்கீரை
26. முடக்கத்தான் கீரை
27. பிரண்டை கீரை
28. கானாவாழை கீரை
29. அகத்தி கீரை

30. அம்மான்பச்சரிசி கீரை
31. கிணற்றுபச்சை கீரை
32. காட்டுக்கடுகு கீரை
33. புளிச்சக்கீரை
34. காசினி கீரை
35. தவசிமுருங்கை கீரை
36. வெந்தயக்கீரை
37. சாணக்கீரை
38. சூரி கீரை என்ற நத்தைசூரி கீரை
39. வேளைக்கீரை என்ற நல்லவேளை கீரை

40. முள்முருங்கை கீரை
41. சக்ரவர்த்தி கீரை
42. பரட்டை கீரை
43. பொடுதலை கீரை
44. மணித்தக்காளி கீரை
45. பால்பெருக்கி கீரை
46. வேலிப்பருத்தி கீரை
47. கொத்துமல்லி கீரை
48. கருவேப்பிலை கீரை
49. புளியங்கீரை
50. காட்டுத்தக்காளிகீரை

இவற்றில் கிடைக்கும் கீரைகளை அனைத்தையும் கலந்து போட்டு சமையல் செய்தால் அது கலவைக்கீரை. இன்னும் எத்தனையோ…. இவையெல்லாம் தானாக வேலி, வயல், காடு, மரம் போன்ற இடங்களில் வளர்ந்து வீனாகப்போகிறது. இந்த கீரைகளை யாரும் ரசாயன உரம் போட்டு வளர்பதில்லை, மண்ணில் உள்ள இயற்கை சத்துக்களின் மூலம் தானாகவே வளர்கிறது இக்கீரைகளை கூட்டு, பொரியல், துவட்டல், கடைசல், துவையல், சட்னி ரசம், சூப் ,சாம்பார்,குருமா, என ஒவ்வோறு கீரையையும் அதன் குணத்தை பொருத்து சமைத்து சாப்பிட நல்ல சுவையாகவும், உடலுக்கு உரம் ஏற்றும் உணவாகவும் இருக்கும்

நண்பர்களே…எல்லா இடத்திலும் வளரக்கூடிய நம் நாட்டில் வாழும் நம் உணவுகளே, இதையே நம் முன்னோர்கள் தினம் ஒரு கீரையாக சாப்பிட்டு நோய்கள் இன்றி வாழ்ந்தார்கள், நாமும் பார்த்த இடத்தில் பறித்து சமைத்து சாப்பிடலாமே நண்பர்களே…

நன்றிகளும்
பிரியங்களும்.

55-மங்கையர்க்கரசியார்

[ad_1]

mangayirkarasi55.jpg
மங்கையர்க்குத் தனியரசி வளவர்குலக் கொழுந்து
    மன்னவர்சூழ் தென்னவர்க்கு மாதேவி யார்மண்
சங்கைகெட வமண்சமயஞ் சாட வல்ல
    சைவசிகா மணிஞானத் தமிழிற் கோத்த
பொங்குதிரு வருளுடைய போத வல்லி
    பொருவினெடு மாறனார் புயமேல் வாழுஞ்
செங்கலச முலையாட னருளா லின்பஞ்
    சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன்...

[ad_2]

மேலும் படிக்க

*ஏகாதசி விரதம்* *நாளை தேவசயன ஏகாதசி* தேவசயன ஏகாதசி ஆனி மாதத்தில் வ…

*ஏகாதசி விரதம்* 🙏🌹🌈

*நாளை தேவசயன ஏகாதசி*

தேவசயன ஏகாதசி ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும்.
தேவர்களுடன் சயனத்திற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த ஏகாதசி வரும் நேரம் இருப்பதால் இந்த ஏகாதசிக்கு தேவசயன ஏகாதசி எனப் பெயர் வந்தது. தேவர்கள் சயனத்திற்கு செல்லும் நேரமாக இருப்பதால் இந்த ஏகாதசி விரதத்திற்கு பிறகு வைதீக காரியங்கள் சிறிது நாட்களுக்கு நடப்பதில்லை.இது அவர்கள் உறங்கும் வேளை. அதனால் தேவர்கள் ஹோமத்தில் அளிக்கும் அன்னத்தை உண்ண வர மாட்டார்கள்.

தேவசயன ஏகாதசிக்கு பத்ம ஏகாதசி என்றும் ஆஷாட ஏகாதசி என்றும் பெயர் உண்டு. மகாராஷ்டிர மாநிலத்தில் இதனை ஆஷாட ஏகாதசி என அழைத்து இந்த நாளில் பண்டரிபுரம் சென்று விட்டலனை வழிபடுகிறார்கள். மற்ற வட இந்திய மாநிலங்களில் அன்றைய தினம் கோதாவரி நதியில் நீராடி காலா ராமர் கோவில் சென்று வழிபடுகிறார்கள்

🌻 ஆஷாட ஏகாதாசி 🌻

ஆஷாட ஏகாதசி மராட்டியர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.மராட்டிய பக்தர்களும் சாதுக்களும் ஆன ஞானேஷ்வரர் ,துக்காராம் ஆகியோர் தங்கள் கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக 15 நாட்கள் நடந்து ஆஷாட ஏகாதசி அன்று பண்டரி புரம் சென்று விட்டலனை வணங்கினர். இதனை கொண்டாடும் விதமாக பக்தர்கள் இந்த சாதுக்களின் உருவ சிலைகளை பல்லக்கில் தூக்கிக் கொண்டு பாத யாத்திரை மேற்கொண்டு ஆஷாட ஏகாதசி அன்று பண்டரிபுரம் அடைந்து விட்டலனை வழிபடுவது வழக்கம்

🍀 சயன ஏகாதசி புராணம் 🍀

சயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.

பிரம்மா சொன்ன கதையாவது

முன்னொரு காலத்தில் மந்தாதர் என்னும் அரசர் செம்மையாக இராஜிய பரிபாலனம் செய்து வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் குறையில்லா வாழ்வு வாழ்ந்தார்கள். அரசரும் முறை தவறாத ஆட்சி மேற்கொண்டார். ஒரு தடவை வறட்சியும் பஞ்சமும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து இருந்து குடிமக்களை வாட்டி வதைத்தன. மக்கள் வழி தெரியாது மன்னனிடம் முறையிட்டனர்.

மன்னனும் காரணம் அறியாது கலங்கினார். அவருக்கு தெரிந்த வரை அவர் ஒரு தவறும் இழைக்கவில்லை. தனது சேனைகளையும், பரிவாரங்களையும் கூட்டிக் கொண்டு காடு காடாக சென்று சாதுக்களை தரிசித்தார். எங்காவது ஒரு வழி கிடைக்குமா எனத் தேடினார்.

இவ்வாறு பிரயாணம் செய்த நேரத்தில் ஆங்கிர முனிவரை மன்னன் தரிசித்தார். அவரிடம் தனது கஷ்டத்தை அவர் எடுத்து கூறிய போது, முனிவர் தனது தவ வலிமையால் கண்டறிந்து மன்னனின் ராஜ்யத்தில் பிராமணன் இல்லாத ஒருவன் வேள்வி யாகங்களில் ஈடுபட்டதன் பலனே இது என உரைத்தார். அவனை கொன்றுவிடும்படி மன்னனிடம் கூறினார்.

கொல்லும் அளவுக்கு இது பெரிய குற்றமில்லை என்பதால் மன்னன் அதனை மறுத்து வேறு உபாயம் கேட்டார். முனிவரும் சயன ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னார். பிரச்னை தீரும் என்றார். நாடு திரும்பிய மன்னன் தன் பிரஜைகளையும் தேவ சயன ஏகாதசி விரதம் இருக்க சொன்னான். விளைவாக நாட்டில் வரட்சியும், பஞ்சமும் நீங்கியது. சுபீக்ஷம் ஏற்பட்டது.

🌺சயன ஏகாதசி விரத பலன்கள் 🌺

தேவ சயன ஏகாதசி விரதமிருந்தால் எந்தொரு பாபமாக இருந்தாலும் தொலையும்.ஆன்மீக சக்தி அதிகரிக்கும். அதில் ஒரு முழுமை கிடைக்கும். நடுவில் இருக்கும் தடை கற்கள் நீங்கும்.பாபத்தினால் விளையும் தீமைகள் மறையும். வாழ்வு வளம் பெரும்.இப்படியாக கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு தேவ சயன ஏகாதசியை பற்றி எடுத்தியம்பியதாக பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.🙏🌹🌈

பல் வலியை போக்கி பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சூப்பரான டிப்ஸ் இதோ……

பல் வலியை போக்கி பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சூப்பரான டிப்ஸ் இதோ…

பல் வலி ஏற்படாமல் இருக்க பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவு துகள்கள் பற்களின் இடுக்குகளில் சிக்கி கொள்வதை சுத்தம் செய்யாமல் விட்டால் அது கிருமிகள் அதிகரிக்க செய்து, பல் வலி உண்டாக காரணியாக அமையும். எனவே, பற்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பல்லுக்கு அடியில் வெங்காயம்!

உங்களுக்கு பல் வலி ஆரம்பத்தில் தான் இருக்கிறது என்றால், பல்வலியை போக்க வெங்காயத்தை மென்று வந்தால் போதுமானது.

வெங்காயத்தை ஸ்லைசாக அறுத்து, அதை பற்களுக்கு அடியில் ஒருசில நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தின் ஜூஸ் மெல்லே, மெல்ல இறங்கி, பல் வலியில் இருந்து குணமடைய செய்யும்.

தாங்காத பல் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போது உங்களுக்கு இது சிறந்த தீர்வளிக்கும். ஒரு வெங்காயத்தை ஸ்லைசாக அறுத்து, அதை பற்களுக்கு கீழே வைத்தால் பல் வலி குறையும்.

கிராம்பு எண்ணெய்!

இந்த வெங்காய சிகிச்சைக்கு அடுத்து, கிராம்பு எண்ணெய்யை கூட பல்வலி போக்க பயன்படுத்தலாம்.பஞ்சை 2-3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலை இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால் போதும். நல்ல நிவாரணம் பெறலாம்.

வெள்ளரிக்காய்!

வெங்காயத்தை போலவே, வெள்ளரிக்காய் ஸ்லைஸ் அறுத்து அதை பற்களுக்கு அடியில் வைத்தாலும் பல் வலி குறையும்.

இஞ்சி!

பல் வலி மிகுதியாக இருந்தால் இஞ்சியை சிறு துண்டாக அறுத்து, அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வந்தால் வலி குறைய உதவும்.

டீ பேக்!

சூடான டீ பேக்கை பல் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து ஒத்தடம் போல கொடுத்தால் பல் வீக்கத்தை குறைக்கும்.

ஆண்மை குறைவு இன்றைய காலத்தில் இளம் வயது மற்றும் நடுத்தர வயதை நெருங்கும் ஆண்கள் …

ஆண்மை குறைவு

இன்றைய காலத்தில் இளம் வயது மற்றும் நடுத்தர வயதை நெருங்கும் ஆண்கள் பலருக்கு ஆண்மை குறைவு மற்றும் இதர பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை போன்ற அத்தனை பிரச்சனைகளும் தீருகின்றன.

எலும்புகள்

முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் உறுதியடைவதோடு எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

சுவாச பிரச்சனைகள்

ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக்காயை பக்குவம் செய்து தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது. நுரையீரலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு

நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் ஒரு நோயாக இருக்கிறது. முருங்கைக்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் இந்த வகையான நீரிழிவு நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் ஒரு இயற்கை உணவாக முருங்கைக்காய் இருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது. ரத்த சுத்தி முருங்கைக்காயில் நமது ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை அழிக்கும் வேதி பொருட்கள் அதிகம் உள்ளது. தினமும் அல்லது வாரம் மூன்று அல்லது நான்கு முறை முருங்கைக்காயை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்க பெற்று ரத்தம் சுத்தமாகி, உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.

#healthpluz #healthyvegetables #benifits #drumstick

கிருஷ்ண பக்தி கதைகள் வல்லவனுக்கு வல்லவன்!!! சத்யலோகம்…. தன் எதிரே அமர்ந்திரு…

💠🌄கிருஷ்ண பக்தி கதைகள்🌄💠

🌄🏞️வல்லவனுக்கு வல்லவன்!!!🏞️🌄

💠சத்யலோகம்…. தன் எதிரே அமர்ந்திருந்த நாரதரிடம், “நாரதா! இன்று உன்னிடம் ஒருவரும் சிக்கவில்லையா?” என்று கேட்டார் பிரம்மன்.

💠சட்டென எழுந்து கொண்ட நாரதர், “சரி, நான் கிளம்புகிறேன் ..நாராயண..நாராயண என்றபடி சென்றார். அது துவாரகை.

💠 கிருஷ்ணரின் அரண்மனைக்குள் நுழைய அங்கே கிருஷ்ணரும், கருடனும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.

💠 அவர்கள் கண்களில் படாமல் என்ன பேசுகிறார்கள் என கேட்டார். “கிருஷ்ணா….என்னை தாங்கள் மனதினுள் நினைக்கக் காரணம் யாதோ?”
என்றார் கருடன்.

💠கிருஷ்ணனுக்கு எங்காவது அவசரமாகக் கிளம்ப வேண்டுமென்றால், தன்னை விட்டால் ஆளில்லை என்ற தலைக்கனமும் அப்போது கருடனுக்கு ஏற்பட்டது.

💠அவரது கர்வம் புரிந்து போயிற்று கிருஷ்ணருக்கு…அவர் கருடனிடம், “உன்னால் ஒரு காரியம் ஆகவேண்டும். செய்வாயா?”என்றார்.“கிருஷ்ணா..என்ன இப்படிக் சொல்கிறீர்கள்? கட்டளை இடுங்கள்.

💠செய்து முடிக்கிறேன்.இந்த கருடனால் செய்ய முடியாதது எதுவுமில்லை..என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் செய்ய முடியும்?” என்று மமதையுடன் சொன்னார்.

மனதிற்குள் சிரித்த கிருஷ்ணர், “கருடா…கொஞ்ச நாளாய் எனக்கு ஒருவரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

💠அவரை இங்கு அழைத்து வருவாயா?”“ப்பூ..இவ்வளவுதானா? யார் என சொல்லுங்கள்..

💠அவர் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் துக்கி வருகிறேன்.என்னால் முடியாதா என்ன?” என்று இறக்கைகளை விரித்துக் கொண்டு தயாரானார்.“உனக்கு அனுமனைத் தெரியுமல்லவா? அவரைக் காணத்தான் ஆசைப்படுகிறேன்..

💠இவ்வளவுதானா? ஒரு வானரத்தை அழைத்து வர இந்த கருடன் தேவையா என்ன?”“கருடா..அனுமனை அவ்வளவு எளிதாய் எடை போடாதே..அவர் மிகுந்த பலசாலி.. பராக்ரமசாலி..ஸ்ரீராம பக்தர்.

💠 அவர் இப்போது கந்தமாதன மலையில் யோக நிலையில் உள்ளார். நீ சென்று அவரிடம் நான் அவரைக் காண விரும்புவதாகச் சொல். அவரும் சம்மதிப்பார்.

💠அனுமனை உன் முதுகில் சுமந்து இங்கு அழைத்து வா,” என்றார். ‘ம்…போயும் போயும் ஒரு குரங்கை அழைத்து வர என்னை அனுப்புகிறாரே கிருஷ்ணர்’ என்று மனதில் நினைத்தபடி,

💠 ‘கண்ணனின் ஆணையாயிற்றே! மறுக்க முடியுமா?’என்று பறந்தார் கருடன்.

💠ஸ்ரீகிருஷ்ணருக்கும், கருடனுக்கும் இடையே நடந்த உரையாடலை ஒளிந்திருந்து கேட்ட நாரதர், ‘அப்பாடா..

💠 கலகம் மூட்ட கிடைத்தது ஓர் விஷயம்’ என நினைத்து அடுத்த நொடி அனுமனின் முன் போய் நின்றார்.

💠அனுமனிடம் கருடனைப் பற்றியும், கருடன் தங்களின் தந்தை வாயுவை விடவும் மின்னல்,

💠ஒலி இவற்றைக்காட்டிலும் வேகமானவன் என்றும், கிருஷ்ணருக்கு நெருக்கமானவன் என்றும் மமதை கொண்டுள்ளது பற்றியும் கூறி,

💠 கருடனுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று சொல்லி மறைந்தார். மலையில் கண்கள் மூடி யோக நிலையில் அமர்ந்திருந்தார் அனுமன்.

💠மனம் ராம்..ராம் என்றபடியே இருந்தது. எதிரில் போய் நின்ற கருடன் மெல்ல கனைத்தார்.கண்களைத் திறந்த அனுமன் எதிரில் கருடன் நிற்பது அவரை வரவேற்றார்.

💠“வாருங்கள்…தாங்கள் யார் எனத் தெரிந்து கொள்ளலாமா?” என வினவினார். “அட..இதென்ன இப்படிக் கேட்கிறீர்? நான் யாரென்று உமக்குத் தெரியாதா? என்னைத் தெரியாதவர் யார்? நான் திருமாலுக்கு மிகவும் நெருக்கமானவன்.

💠என் பெயர் கருடன். கண்ணன் தங்களை அழைத்து வரும்படி என்னைப் பணித்துள்ளார். உடனே கிளம்புங்கள்,”

💠 என்றார் கர்வத்துடன். “அடேய்..நீ யாராய் இருந்தால் எனக்குஎன்ன?என் ராமனைத் தவிர வேறு யாரையும் காண நான் வர முடியாது.”

💠“என்ன..கண்ணனின் கட்டளையை அவமதிக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்,” என்றபடி அனுமன் மேல் பாய்ந்தார் கருடன். இருவருக்கும் கடும் யுத்தம் நடந்தது.

💠தோற்றுப் போனார் கருடன். முகம் தொங்கிப் போக கிருஷ்ணர் எதிரில் வந்து நின்றார் சிரித்தார் கண்ணன். என்ன நடந்திருக்குமென அவருக்குத் தெரியாதா என்ன?“கருடா என்னாயிற்று? அனுமன் எங்கே?” என அப்பாவி போல் கேட்டார்.“

💠பகவானே! அந்த வானரம் திமிர் பிடித்தது. ராமனைத் தவிர வேறு யாரையும் பார்க்காதாம்.என்னை அடித்து உதைத்து அனுப்பி விட்டது.

💠மிகவும் பலசாலியாக இருக்கிறது,” என்றார் கருடன். “ஓ அப்படியா..அனுமன் ராம பக்தரல்லவா? அப்படித்தான் இருப்பார்.

💠மீண்டும் நீ அனுமனிடம் சென்று, துவாரகைக்கு ஸ்ரீராமன் வந்துள்ளார் என்று கூறி அவரை இங்கு அழைத்து வா..,” என்றார்.

💠 அரை மனதுடன் கிளம்பினார் கருடன். கட்டளையிடுவது கண்ணனாயிற்றே! மறுக்க முடியுமா?“துவாரகைக்கு ராமன் எழுந்தருளியிருக்கிறார்.

💠தங்களைக் காண வேண்டுமாம் வாருங்கள்,” என்றழைத்தார் அனுமனை கருடன். “அப்படியா?தாய் சீதா தேவி வந்திருக்கிறாரா?” “இல்லை.. ஸ்ரீ ராமன் மட்டும்தான் வந்துள்ளார்” “அப்படியானால் நான் வரவில்லை.

💠நான் ஸ்ரீ ராமனை சீதாராமனாகத்தான் காண விரும்புகிறேன். நீங்கள் போகலாம்,” என்றார் அனுமன்.

💠அனுமன் மீது கோபமாய் வந்தது கருடனுக்கு. வானரத்துக்கு எவ்வளவு திமிர் என்று நினைத்தபடி சென்று, கண்ணனிடம் அனுமனின் பதிலைத் தெரிவித்தார் கருடன்.

💠“ஓ.. அப்படியா சொன்னார் அனுமன். சரி… சீதாதேவியும் வந்திருப்பதாகச் சொல்..புறப்படு,” என்றார். மிகக் கோபமாக வந்தது கருடனுக்கு.

💠நான் யார்? ஸ்ரீமன் நாராயணின் வாகனம். எப்பேர்ப்பட்டவன்?. நான் போய் ஒரு குரங்கை எத்தனை முறை அழைப்பது?” என்று கோபம் முட்டியது.

💠 வேறு வழியின்றி மீண்டும் சென்று அனுமனை அழைக்க, பரவசமானார் அனுமன். “ஆஹா..ஆஹா..என் தாய் சீதையைக் காணப்போகிறேன்..

💠என் சீதாராமனைக் காணப்போகிறேன்,” என்று கைகூப்பி வணங்கி, ‘ராமா… ராமா… சீதா ராமா’ என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். “ம்..என் முதுகில் ஏறி அமருங்கள்…”

💠என்ற கருடனிடம், வேண்டாம்…. நானே வருகிறேன்..,”என்றார் அனுமன்.. “ஹே…நீங்களாய் வருவதா? நீங்கள் அங்கு என்றைக்கு வந்து சேர்வது?நான் வாயுவைவிட வேகமாகப் பறக்கக் கூடியவன்.

💠என்னைக்காட்டிலும் வேகமாகப் பறக்கக் கூடியவர் ஈரேழு உலகிலும் இல்லை. பேசாமல் என் மீது ஏறிக்கொள்ளுங்கள்,” என்றார் கருடன் கர்வத்தோடு. மறுத்து விட்டார் அனுமன்.

💠 “சரி…எப்படியோ வந்து சேருங்கள்,” என்று அலட்சியமாய் கண்ணன் இருக்குமிடம் வந்து சேர்ந்தார் கருடன்.

💠கிருஷ்ண பிரபோ..பலமுறை எடுத்துச் சொல்லியும் என் மீது அமர்ந்து வர மறுத்துவிட்டார் அனுமன்.

💠அவர் தனியாகத்தான் வருவாராம். எப்போது இங்கு வருவாரோ? எத்தனைக் காலம் ஆகுமோ?” என்றார் கருடன் அனுமனின் வேகம் பற்றி தெரியாமல்…!

💠கடகடவவென சிரித்தார் கிருஷ்ணர். அவரைப் புரியாமல் பார்த்தார் கருடன்.“கருடா..

💠அனுமன் இங்கு வந்து ராமனையும் சீதாதேவியையும் தரிசித்துவிட்டு மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் கந்தமாதன மலைக்குத் திரும்பிச் சென்று வெகு நேரமாயிற்று..

💠நீதான் மிகக் காலதாமதமாய் வந்திருக்கிறாய்,” என்றார்.“என்ன என்ன..அனுமன் வந்து சென்று விட்டாரா..? ஆஹா..

💠இது எப்படி சாத்தியமாயிற்று? என்னைவிட அதி வேகத்துடன் பறக்கக் கூடியவரும் உண்டா என்ன உலகில்? அப்படியிருக்க அனுமனால் எப்படி முடிந்தது?”

💠“கருடா..நீ அனுமனைக் குறைவாய் மதிப்பிடாதே. நீ வாயுவை விட வேகமாகப் பறக்கலாம். ஆனால் அவர் வாயுவுக்கே புத்திரர்.

💠 அதனால் உன்னைக் காட்டிலும் வேகமாய் செல்லக்கூடியவரும் உலகில் உண்டு என்பதை உனக்கு உணர்த்தவேஇந்த நாடகத்தை நடத்தினேன்.

💠வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. இனி கர்வம் நீங்கி வாழ்வாயாக..அனுமனை ஏளனமாய்ப் பேசாமல் அவரோடு நட்பு கொள்,” என அறிவுரை கூறினார் கிருஷ்ணர். கர்வம் நீங்கிய கருடன்,

💠 கிருஷ்ணனை வணங்கினார்.“ கண்ணா ஒரு சந்தேகம்…”“கேள் கருடா..”

💠“ஸ்ரீ ராமனும் சீதாதேவியும் வந்தார்களா? அவர்களைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லையே? சிரித்தார் கிருஷ்ணன்.

💠 கருடா..ஸ்ரீராமனாய் நானும், சீதாதேவியாய் சத்யபாமாவும் மாறி அனுமனுக்குக் காட்சி அளித்தோம். உனக்கும் தக்க சமயத்தில் அந்த பாக்கியம் கிட்டும்,” என ஆசிர்வதித்தார் கிருஷ்ணர்.

🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏