வாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…!! செரிமானத்த…

வாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…!!

செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக

உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும்.

வாயு தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளி பழத்தை ஒரு துண்டை எடுத்து சாப்பிடுங்கள். இது வாயு தொல்லை சரிசெய்துவிடும். ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தொல்லையும் குணமாகிவிடும்.

புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

மிளகு சூரணம் : மிளகை பொடி செய்து 5 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.

இந்த வாயு தொல்லை நீங்க சீரகம், ஏலக்காய், சோம்பு மூன்றும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

சீமை சாமந்தி தேநீர் தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்.

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் சிவலிங்கமே மலையாக அமைந்திருக்கும் திருவண்ணாமலையின…

🚩திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

சிவலிங்கமே மலையாக அமைந்திருக்கும் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் அமைந்திருக்கின்றன. இந்திர லிங்கத்தில் தொடங்கி அக்னி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம், எம லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் இங்கு உள்ளன. இந்த எட்டு லிங்கங்களுமே 12 ராசிகளோடு நெருங்கிய தொடர்புடையவையாகவும் உள்ளன. இந்த அஷ்ட லிங்கங்களும் மனித வாழ்வின் எட்டு கட்டங்களை பிரதிபலிப்பதாக உள்ளன என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். எட்டு லிங்கங்களையும் வேண்டிக்கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அஷ்ட லிங்கங்கள் இங்கு இருப்பதால் எப்பொழுதும் ஆன்மீக விஷயங்களை எதிரொலித்துக்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே அதிக அளவில் சித்தர்களையும், யோகிகளையும் மகான்களையும், மலை தன்பக்கம் இழுத்து வருகின்றது என்று சொல்லலாம். பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேண்டுதலோடு இந்த அஷ்டலிங்கங்களையும் வேண்டிக்கொண்டு கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகிறார்கள்.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். இங்கு நாள்தோறும் திருவிழாக்களும், விஷேசங்கள் நடைபெறும். அதோடு நேரம் காலம் பார்க்காமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் 24 மணி நேரமும் கிரிவலமும் வருவதுண்டு. கிரிவலம் வரும் பாதையில் அஷ்ட லிங்கங்கள் எனப்படும் எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்கங்களும், மலையைச் சுற்றிலும் 14 கி.மீ சுற்றளவில், மலை அடிவாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திர லிங்கம்

கிரிவலம் வரும் பாதையில் முதலில் உள்ளது இந்திர லிங்கமாகும். அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்திற்கு வெகு அருகில், கிழக்கு திசையில் அமைந்துள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரனே நேரடியாக இங்கு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டு செல்வதாக ஐதீகம். நவக்கிரகங்களின் நாயகனான சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சி பெற்ற இந்த லிங்கத்தை வணங்கினால் நீண்ட ஆயுளும், பெருத்த செல்வமும், அரச போக வாழ்வும் கிடைக்கும். ரிஷபம் மற்றம் துலாம் ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய லிங்கமாகும்.

அக்னி லிங்கம்

கிரிவலப்பாதையில் தென் கிழக்கு திசையில் அக்னி லிங்கம் அமைந்துள்ளது. சந்திரனுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்த லிங்கமே, குளிர்ந்து அக்னி லிங்கமாக காட்சியளிக்கிறது. சேஷாத்திரி சுவாமிகளின் ஆசிரமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த லிங்கத்தை வழிபட்டு கிரிவலம் வந்தால், சஞ்சலங்கள் நீங்க மனம் தெளிவு பிறக்கும் என்பது ஐதீகம். சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கமாகும்.

எம லிங்கம்

கிரிவலப்பாதையில் தென் திசையில் மூன்றாவதாக அமைந்துள்ளது எமலிங்கம். தென் திசையின் அதிபதியான எமனுக்கு சிவபெருமான் தாமரை மலரில் லிங்க வடிவில் தோன்றினார். எம லிங்கத்தை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும். தேவையற்ற வீண் செலவுகள் குறைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. விருச்சிக ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய லிங்கம்.

நிருதி லிங்கம்

கிரிவலம் வரும் பாதையில் அடுத்ததாக அமைந்துள்ளது நிருதி லிங்கம். இது தென் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி பகவானுக்கு ஈசன் நிருதீஸ்வரராக தோன்றி காட்சி கொடுத்த இடமாகும். சனி தீர்த்தம் என்ற குளம் இதன் அருகில் அமைந்துள்ளது. இவரை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும். அதோடு மன நிம்மதியும் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய தலமாகும்.

வருண லிங்கம்

கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். வருண பகவானுக்கு ஈசன் நீர் வடிவில் லிங்கமாக தரிசனம் தந்தருளிய தலமாகும். இந்த லிங்கத்தை வணங்கினால் மேற்கு திசைக்கு அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம். தீராத வினைகளையு தீர்த்து வைக்கும் தலமாகும். மேலும், இங்கு வருண தீர்த்தம் என்ற குளம் உள்ளது. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய லிங்கமாகும்.

வாயு லிங்கம்

கிரிவலப் பாதையில் அடுத்ததாக வரும் லிங்கம் வாயு லிங்கமாகும். இது வடமேற்கு திசையில் அமைந்துள்ளதாகும். வாயு பகவானால் உருவாக்கப்பட்டது. பஞ்ச கிருதிக்கா என்ற தேவலோக மலரின் வாசமாகத் தோன்றிய ஈசன் வாயு பகவானை இங்கு தான் ஆட்கொண்டார். கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய லிங்கமாகும். இந்த லிங்கத்தை வணங்கி கிரிவலம் வருவோர்க்கு, வடமேற்கு திசையின் அதிபதியான கேது பகவானின் பரிபூரண ஆசியும் சகல யோகங்களும் கிட்டும்.

குபேர லிங்கம்

கிரிவலப் பாதையில் ஏழாவதாக அமைந்துள்ள லிங்கம் குபேர லிங்கமாகும். வட திசையின் அதிபதியான குபேரன், இந்த இடத்தில் இருந்து அண்ணாமலையாரை தரிசித்து வணங்கிய பிறகு, தான் இழந்த அனைத்து செல்வங்களையும் திரும்பவும் பெற்றார். பக்தர்கள் செல்வச் செழிப்புடன் வாழ குபேர லிங்கத்தை வழிபடவேண்டியது அவசியமாகும். இது குருபகவானின் ஆட்சி செய்யும் லிங்கமாகும். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கமாகும்.

ஈசான்ய லிங்கம்

சுமார் 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப் பாதையில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள லிங்கமாகும். நந்தீஸ்வரர் வணங்கிய லிங்கமாகும். எம்பெருமான் ஈசனைத் தவிர அனைத்துமே நிலையற்றது என்பதை உணர்த்தும் ஞான சன்னிதி இதுவாகும். புதன் கிரகம் ஈசான்ய லிங்கத்தை ஆட்சி செய்வதால், அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கலாம். மிதுனம் மற்றும் கன்னி ராசிக் காரர்கள் வழிபடவேண்டிய லிங்கமாகும்.

ஓம் சிவாய நம 🙏
சர்வம் சிவமயம்
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும்
ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே காலை வணக்கங்கள் 🙏

Maanga Tamil Full Movie | Premgi Amaren | Advaitha | Super Hit Tamil Movies | AP InternationalMaanga Tamil Full Movie ft. Premgi Amaren and Advaitha on AP International. Directed by R S Raja, produced by P C K Sakthivel, music by Premgi Amaren. For more Tamil hit movies, subscribe to AP International: https://bit.ly/2qzquvX.

Maanga Tamil movie also features Leema Babu, Ilavarasu, Manobala, T P Gajendran, Srinivasan among others.

Star Cast: Premgi Amaren, Advaitha, Leema Babu, Ilavarasu, Manobala, T P Gajendran, Srinivasan
Directed by: R S Raja
Produced by: P C K Sakthivel
Music by: Premgi Amaren
Cinematography: R S Selva
Edited by: Suresh Urs
Release Date: 11 September 2015

Click here to watch:

Thunai Mudhalvar Tamil Full Movie: http://bit.ly/2RTuFP1

Sri Ramakrishna Darshanam Tamil Full Movie: http://bit.ly/2DiVV5q

Sethupathi Tamil Full Movie: https://youtu.be/hX7nbD4qMvY

Mudhal Kadhal Mazhai Full Movie: https://bit.ly/2PjfMZu

Om Shanthi Om Full Movie: https://bit.ly/2Ow0Rpj

Stay connected with us for more Latest Tamil movies!
Subscribe to API – https://bit.ly/2qzquvX
Follow us on:http://goo.gl/jaomQY
Website:http://www.apinternationalfilms.com
Like us on Facebook:https://goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:http://goo.gl/6HCbOu
Blog – http://apinternationalfilms.blogspot.com/
http://www.apinternationalfilms.in/
Online Purchase -http://www.apinternationalfilms.com

உலகின் முதல்வனே கருணைக் கடலே உன்ஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம். …

உலகின் முதல்வனே கருணைக் கடலே உன்ஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறலாம்.

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் ‌ எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🙏.

பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்

ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது..அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல..

ஆசிர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும்..நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விசயம் இருக்கிறது

108 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்.. தீர்க்காயுசா இருப்பா என்றார் எவ்வளவு நாளா ஐயா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி கொடுக்குறீங்க என்றேன்..

அது ஒரு 60 வருசமா அப்படித்தான் ஆசி கொடுக்கிறேன் என்றார்..அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்…

சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்..அய்யோ என் கால்ல விழுந்துட்டு என பதறுவர்.

இதெல்லாம் தவறு.நம்மை விட வயதானவர் என்றாலும் *ஆசி கொடுக்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.*

*புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும், தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்…*

வயதானவர்கள் சகல தோசங்களும் இன்றோடு நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன் ,நல்ல தொழில் வளத்துடன்,நீண்ட ஆயுளுடன் வாழுங்க வாழ்க வளமுடன் என்று ஆசிர்வாதிக்கலாம் …

*தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள் அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும் அவை கிடைக்கும்….*

*வாழ்க வளமுடன் என வாழ்த்துவதால் பிரபஞ்ச சக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை.*

மந்திரம்,உச்சாடனம்,அபிசேகம்,ஆராதனை எல்லாமே கடவுளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான் என இந்துமதம் மறை பொருளாக உணர்த்தி வருகிறது..

நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின் படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.

ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.

காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது. கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு.

நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை.

சக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்

சொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது..மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது…

பல பாவங்களையும்,தோசங்களையும் போக்குகிறது பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்..

ஜோதிடம், ராசிபலன், சாஸ்திரம்,மத நம்பிக்கைகள் இவற்றை கடைபிடிப்போர் கூட பலர் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதில் தயக்கம் காட்டுவர்.

பெரியோர், மகான்கள், சதனை புரிந்தோர், மகான்களை சந்தித்தோர், நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் ஆசி பெறுவதால் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும்…
.

வாட்ஸ் அப் பகிர்வு
ஆலவாயர் அருட் பணி மன்ற தந்தையே நமஸ்காரம்

இனிய ஈசன் அருளுடன் இனிய சிவ வணக்கங்கள்.

தலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு! இதை வேரோடுப் பறித்து வந்த…

தலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு!

இதை வேரோடுப் பறித்து வந்து, சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் காயவைத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். பொடியில் குடிநீர் தயாரித்து உண்டு வந்தால், நாள்பட்ட ஆஸ்துமா நோய் குணமாகும்

கத்திரியில் நிறைய வகைகள் இருந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே, குப்பக்குறிச்சி என்ற சிற்றூர் உண்டு. அந்த ஊரின் பெயரில் ‘குப்பக்குறிச்சிக் கத்திரிக்காய்’ என்ற ஒருவகை கத்திரி திருநெல்வேலி சந்தைக்கு வரும். சுத்தமான வெள்ளை நிறத்தில், பார்ப்பதற்கு முட்டையைப் போலவே காட்சி தரும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட இந்த இனம், இன்று காணாமல் போய்விட்டது. இதுபோல நிறைய உள்ளூர் வகை காய்கறிகள் காணாமல் போய்விட்டன.

கத்திரியின் வேர், ஆஸ்துமா முதலான கப நோய்களுக்கான குடிநீர், சூரணம் மற்றும் லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. கத்திரிப்பழத்தில் ஊசியினால் பல இடங்களில் குத்தி, நல்லெண்ணெயில் வறுத்து உண்டு வந்தால் பல்வலி தீரும். கத்திரிப்பிஞ்சு, எள், வெல்லம் ஆகியவற்றைச் சம எடையளவு எடுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். அதை 3 நாள்களுக்கு உப்பில்லாப்பத்தியம் மேற்கொண்டு, எலுமிச்சம்பழம் அளவு காலை, மாலை என உண்டு வந்தால், வெறி நாய்க்கடி தீரும் என்கிறது கண்ணுசாமிப் பிள்ளை எழுதிய பதார்த்த குணசிந்தாமணி.

முள்ளுக்கத்திரி… எல்லா இடங்களிலும் குறிப்பாகக் குப்பைமேட்டில் அதிகமாகக் காணப்படும் ஒரு தாவர இனம் இது. செடி, இலை, பூ, காய் அனைத்தும் கத்திரிக்காய் போலவே இருக்கும். ஆனால், இலைகளில் அதிகமாக முட்கள் காணப்படும். வேர்களுக்காக இவை சேகரிக்கப்படுகின்றன. இது ‘பப்ர முள்ளி’, ‘பாப்பார முள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது. சமையலுக்கு ஆகாது. இதைச் சிலர் கண்டங்கத்திரி என்று தவறுதலாகச் சொல்கிறார்கள்.

இதை வேரோடுப் பறித்து வந்து, சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் காயவைத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். பொடியில் குடிநீர் தயாரித்து உண்டு வந்தால், நாள்பட்ட ஆஸ்துமா நோய் குணமாகும். பொடியாக எடுத்துக்கொண்டால் 2 முதல் 3 கிராம் அளவும், குடிநீர் என்றால் 50 கிராம் பொடியுடன் 600 மில்லி தண்ணீர் சேர்த்து 150 மில்லியாக வற்றவைத்துப் பயன்படுத்தவும். இதன் விதைகளை காய்ந்த இலைக்குள் போட்டு பீடிபோல் செய்து புகைபிடிக்க, பற்களுக்கிடையே உள்ள புழுக்கள் வெளிப்பட்டுப் பல்வலி நீங்கும்.

கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர தலைவலி, மூட்டுவலி, அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும். இந்த இலைச்சாற்றுடன் ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி வெடிப்புகளில் பூசி வந்தால் வெடிப்பு மறையும். சித்த மருந்துகளில் கிடைக்கும் கண்டங்கத்திரி ரசாயனம் அல்லது கண்டங்கத்திரி லேகியத்தைச் சிறுகுழந்தைகளுக்குக் கொடுத்துவர அனைத்துவிதமான சளி, இருமல், மிகக்கொடிய கக்குவான் இருமல்கூட (Whooping Cough) குணமாகும் என்று கண்ணுசாமிப் பிள்ளை, தமது ‘பதார்த்த குணவிளக்கம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஆண்மை விரைப்புதன்மைக்கு மருந்து : நீர்முள்ளி : மணலை கயிறாக திரிப்பேன் என்று சி…

ஆண்மை விரைப்புதன்மைக்கு மருந்து :
நீர்முள்ளி :

மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம் . ஆனால் அது பொய்யல்ல.இந்த நீர்முள்ளி உதவியுடன் மணலை கயிறாக திரிக்க முடியும்.அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை,உஸ்ணத்தை குறைத்து விந்துவை கெட்டிப்படுத்தும்

தேவையானவை:

கசகசா,பால்,நீர்முள்ளி,பாதாம்பருப்பு.

செய்முறை :

நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
………………………………………………………………….

நீர்முள்ளி வித்து ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்தில் சேர்க்கப் படுகிறது..

இந்த மருந்து அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர் (விரைப்புதன்மைக்கு)
ஓரிதல்தாமரை " (ஆண்மை அதிகரிக்க)
பூனைகாலி " (விந்து ,உயிர்அணுக்கல் அதிகரிக்கும்)
ஜாதிக்காய் " (ஆண்குறி பருக்க,விரைக்க)
நீர்முள்ளி விதை " (விந்து கெட்டிபடும்)
தண்ணீர்விட்டான் கிழங்கு " (ஆண்மை பெருகும்)

மேலே உள்ள பவுடர் அனைத்தையும் தேனில் கலந்து (கட்டி பதம் வரும்வரை)தினமும் காலை மாலை கோலிகுண்டு அளவு சாப்பிடவும்

மருந்தை சாப்பிட்ட உடனே பயன் தெரியும்…

ஸ்ரீமகாலட்சுமி திருவடி போற்றி போற்றிநாளை வரலக்ஷ்மி விரதம் கலசத்தில் காசுகள்… …

ஸ்ரீமகாலட்சுமி திருவடி போற்றி போற்றி🌹நாளை வரலக்ஷ்மி விரதம் கலசத்தில் காசுகள்… செல்வ கடாக்ஷம் பெருகும்.
வரலக்ஷ்மி பூஜையில், கலசத்துக்குள் வைக்கப்படும் நாணயங்களும் அதைக் கொண்டு செய்யப்படும் பூஜைகளும் சக்தி வாய்ந்தவை. கடனில் மூழ்கி தத்தளிக்கும் குடும்பங்களைக் கரை சேர்த்து அருளுவாள் மகாலக்ஷ்மி.
உலகம் முழுதுமாக சக்தி வியாபித்திருக்கும் மாதம் ஆடி மாதம். சக்தி என்று போற்றப்படுகிற பராசக்தி உள்ளிட்ட பெண் தெய்வங்களைக் கொண்டாடுவதற்கான, வணங்குவதற்கான, அற்புதமான மாதம்.
ஆடிப்பூரம், ஆடித் தபசு முதலான விழாக்களும் ஆடி மாதத்தின் முக்கிய பண்டிகைகள். ஆடிப்பெருக்கு எனும் வைபவமும் நீர் நிலை வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதேபோல், உலகமெங்கும் வியாபித்துப் பரவியிருக்கும் மகாசக்தியின் சக்தியை, அம்பிகையின் சக்தியை, மகாலக்ஷ்மியின் சக்தியை, நம் வீட்டுக்கே வரவழைக்கும் மிக எளிமையான வழிபாடுதான் வரலட்சுமி பூஜை.
வருகிற 31.7.2020 வரலட்சுமி பூஜை. வெள்ளிக்கிழமை நாளில், வரலக்ஷ்மி பூஜையை மிக ஆத்மார்த்தமாகச் செய்யவேண்டும். எளிமையாகச் செய்யக் கூடிய பூஜைதான் இது.
பூஜையில், கலசம் வைக்கவேண்டும். கலசத்தில், மங்கலப் பொருட்களை வைப்பார்கள். முக்கியமாக, நாணயங்களை வைப்பார்கள். மகாலக்ஷ்மி எலுமிச்சையில் வாசம் செய்கிறாள் என்று ஐதீகம். எனவே, ஒரு எலுமிச்சையை கலசத்துக்குள் இடலாம். வீட்டில் தங்கக்காசு இருந்தால் போடலாம். ‘அதுக்கெல்லாம் எங்கே வசதி இருக்கு’ என்று கலங்குபவர்கள், சாதாரணக் காசுகளையே கூட போடலாம். ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ… எதுவேண்டுமானாலும் போடலாம். ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று, பதினாறு, இருபத்தியொன்று என ஒற்றைப் படையில் நாணயங்களை கலசத்துக்குள் வைக்கவேண்டும்.
முன்னதாக, கலசத்துக்குள்தான் மகாலக்ஷ்மியை ஆவாஹனம் செய்வோம். அந்தக் கலசத்துக்குள் நாணயங்களை வைப்பதால், நாணயங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்யத் தொடங்கிவிடுகிறாள். அந்த நாணயங்களை, பூஜைக்குப் பின்னர், வீட்டில் உள்ள பீரோவுக்குள் வைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தூபதீப ஆராதனை காட்டி பூஜித்து வந்தால், செல்வ கடாக்ஷம் தங்கும். பணமோ நகையோ எதுவாக இருந்தாலும் அவை நம் வீட்டில் மும்மடங்காகும் என்பது ஐதீகம்.
மேலும் ஏலக்காய், கிராம்பு முதலான வாசனை தரும் பொருட்களை கலசத்துக்குள் இடலாம். முக்கியமாக, ஒரு கைப்பிடி பச்சரியை கலசத்துக்குள் இட வேண்டும். கலசத்துக்குள் நாம் என்னென்ன பொருட்களை இடுகிறோமோ, அவையெல்லாம் நம் வீட்டில் எப்போதும் குறைவின்றி இருந்துகொண்டே இருக்கும். தடையின்றி பொருட்களை வாங்குவதற்கு, பணம் நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்.
வரலக்ஷ்மி பூஜையன்று, நாணயங்கள், வாசனைப் பொருட்கள், தானியங்கள் முதலானவற்றை கலசத்தில் இட்டு பூஜை செய்யுங்கள். அன்னலட்சுமியாக, தன லட்சுமியாக, சந்தான லட்சுமியாக… என அஷ்ட லக்ஷ்மிகளுமாகவும் இருந்து அருளை வழங்குவாள் மகாலக்ஷ்மி.
தாயார் திருவடிகளே சரணம்🌹
பெருமாள் அடியவன்