*பெரியவா திருவடியே* *சரணம்.* *சென்னையிலிருந்து ஒரு முக்யஸ்தர் அன்ற…

*பெரியவா திருவடியே*
*சரணம்.*

*சென்னையிலிருந்து ஒரு முக்யஸ்தர் அன்றைக்கு ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார்.* *பெரியவாளின் திருச்சந்நிதிக்கு* *சமர்பிக்க வேண்டும் என்பதற்காகத்*
*தன் தோட்டத்தில்* *விளைந்த இரண்டு தார்*
*வாழைப்பழ்ங்களைத் தன்னுடன் கொண்டு வந்திருந்தார்.*

*பெரியவாளுக்கு* *வாழைத்தார்களை*
*சமர்ப்பித்து* *விட்டு,அவருக்கு* *நமஸ்காரம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.*

*மடத்திலேயே* *கைங்கர்யம் செய்யும்*
*கிருஷ்ணமூர்த்தியை அழைத்து 'இந்த* *ஒவ்வொரு தார்லயும் எத்தனை பழம்* *இருக்குன்னு எண்ணிச்*
*சொல்லு' என்றார் மகா* *பெரியவா.*

*கைகளை உதறிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி எழுந்தார்.* *பெரியவாளிடம், "எண்ணிட்டேன்* *பெரியவா ஒரு தார்ல 275 பழம்,இன்னொரு* *தார்ல 375 பழம்*
*இருக்கு" என்றார்.*

*"சபாஷ்..சரி.." என்று இழுத்த பெரியவா,"ஒரு தார்ல 1008 பழம்* *இருக்கிறதை நீ இதுவரைக்கும்*
*பார்த்திருக்கியோ..* *"என்று கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக் கேட்டார்.*

*ஒரு சில விநாடிகள் கழித்து கிருஷ்ணமூர்த்தி.* *"இல்லே பெரியவா…*

*இதுவரை நான் கேள்விப்*
*பட்டதில்லே..பெரியவா உத்தரவு கொடுத்தா அப்படி ஒரு தார் எங்கிருந்தாலும் பிடிச்சுண்டு வந்துடறேன்" என்றார்.*

*"ஓ…இந்தக் கேள்விக்கெல்லாம் நானே பதில் சொல்லுவேன்னு ரொம்ப ஆவலா எம் மூஞ்சியை பாத்துண்டிருக்கியா?"* *என்று புன்னகையுடன் கேட்ட பெரியவா, "இதுக்கு நா பதில் சொல்ல வேணாம்.*

*இளையாத்தங்குடில மாரியம்மன் கோயில் இருக்கு. அங்கே போ.* *அந்த அம்மனை தரிசனம் பண்ணு.*
*உனக்கு எல்லா விவரமும் தானா கிடைக்கும்" என்று பொசுக்கென்று முடித்தார் மகா பெரியவா.*

*'1008 பழங்கள் அடங்கிய வாழைத்தாரைப் பார்ப்பதற்கு இளையாற்றங்குடிக்குப் போ'*
*என்று பெரியவா கட்டளை இட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.*

*மகா பெரியவா* *சொன்னபடி அடுத்த நாளே தன் குடும்பத்தோடு*
*இளையாற்றங்குடி புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி.*

*பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார்.*
*அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர் வாழைத்தார்களைப் பற்றி திடீரென பேசிக் கொண்டிருந்தனர்.*

*சட்டென்று இவர்கள் பேச்சு காதுகளில் விழ..ஆச்சர்யப்பட்டு* *சம்பாஷணை நிகழ்ந்த திசை நோக்கித் திரும்பினார்.*

*அவர்களிடம், "ஐயா..1008 வாழைப்பழம் இருக்கிற மாதிரி நல்ல வாழைத்தார் வேணும்.* *இந்த ஊரில் எங்கே கிடைக்கும்?" என்று கேட்டார்.*

*ஏற இறங்கப் பார்த்த ஒரு ஆசாமி தன் வலக்கையை, நீட்டி,* *"தோ…தெக்கால போங்க. ஒரு பெரிய கிணத்தைத்*
*தாண்டியதும் நிறைய வாழைமரம் இருக்கிற தோட்டம் ஒண்ணு வரும்.*

*அங்கே இருக்கிறவர்கிட்ட கேட்டுப் பாருங்க" என்று சொன்னார்.*

*தலையில் முண்டாசு* *கட்டிய ஒருவர் இவரை எதிர்கொண்டு விசாரிக்க 1008 வாழைப்பழங்கள்* *அடங்கிய தார் ஒன்று*
*வேண்டும் என்று சொன்னார்.*

*சற்று முன் வாழைமரத்தில்*
*இருந்து அறுத்துத் தரையில் இறக்கி* *வைக்கப்பட்டிருந்த தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க* *முடியாமல் சுமந்து*
*வந்தார்.*

*அவர். "இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு.." என்று இவர் முன்பாக வைத்தார்.*

*உடலெங்கும் புல்லரிப்பு. மஹா பெரியவாளின் தீர்க்க தரிசனத்தை நினைத்துப் பரவசப்பட்டார்.*

*தோட்டத்துக்காரன் சொன்ன விலையான ரூபாய் முப்பதைக்* *கொடுத்து விட்டு,ஒரு ஆசாமியை கூலிக்கு அமர்த்தி*
*பெரியவா திருச்சந்நிதியின் முன்னால் அந்த வாழைத்தாரைக் கொண்டு போய் வைத்தார்.*

*அதைப் பார்த்து பெரியவா புன்னகைத்தார். "1008 பழம் இருக்கிற தாரைப் புடிச்சுண்டு வந்துட்டே*
*போலிருக்கு?" என்று பெரியவா இடி இடியெனச் சிரித்தார்.*

*"நேத்து ஊர்ல பாக்கறதுக்குக் காயா இருந்தது. பெரியவா சந்நிதிக்கு வந்தவுடனே மஞ்ச மசேல்னு பழுக்க* *ஆரம்பிச்சுடுத்து" என்றார் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.*

*"விஷு (மலையாள புத்தாண்டு) வரப்* *போகிறது. இந்த தாரை ரொம்ப கவனமா* *குருவாயூருக்கு அனுப்பிவிடு" என்றார்*
*பெரியவா தடாலென்று.*

*அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள் "விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே..*

*அதுக்குள்ள இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே" என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.*

*அப்போது கிருஷ்ணமூர்த்தி சொன்னார்;*
*"இது குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு போட்டிட்டாருன்னா, அது பதினாலு நாள் இல்லே… பதினாலு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது.*
*அன்னிக்கிப் பழுத்த பழம் போல பொலிவோட பிரகாசமா இருக்கும்.*

*பெரியவா வாக்கு என்னிக்குமே தப்பாது"*
*என்று சொல்லி தாரைப் பத்திரப்படுத்துமாறு ஒரு சிஷ்யரிடம் சொன்னார்.*

*குருவாயூரில் சமர்ப்பிக்கப்படும் வரை அந்த 1008 பழத்தில் ஒரு பழம்கூட தாரில் இருந்து கீழே விழவில்லை.*

*முனையில் கருக்கவில்லை. கொஞ்சமும் வீணாகாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது அதிசயம்தான்!.*

*"ஜெயஜெய சங்கர ஹர ஹர சங்கர".*

Tamil Full Movies | Azhagiya Laila | Chitra’s Tamil Romantic Movie [HD]Azhagiya Laila Full Length Tamil Movie ..
Starring : Karthik , Rambha , Manivannan …
Coming Soon……….New Malayalam Full Movie 2014 | Thomson Villa 2014,New Malayalam Full Movie 2014 | Nattarangu 2014,New Malayalam Full Movie 2014 | On The Way 2014
This Malayalam You Tube Movie Channel (Movie World Entertainments)contains copyright/Classic/Ever­gr­een/Exclusive/­­Official/malayalam full movies
Subscribe To Our YouTube Channel
http://www.youtube.com/subscription_center?add_user=movieworldmalayalam1
Like Us on Facebook:
Join⇨http://www.facebook.com/movieworldmalayalam
Follow us on Twitter
www.twitter.com/MOVIEWORLDINDIA

27.குரு பூர்ணிமா ஸ்பெஷல் ! #குரு_என்றால்_யார்? #குரு என்பவர் குணங்களையும், ரூ…

27.குரு பூர்ணிமா ஸ்பெஷல் !

#குரு_என்றால்_யார்?

#குரு என்பவர் குணங்களையும், ரூபத்தையும் கடந்த பரப்பிரம்மம் ஆவார்.

#கு_ரு என்ற சொல்லில்,

#கு என்ற எழுத்து அறியாமையையும்,

#ரு என்பது அழித்தலையும் குறிக்கும்.

மேலும்,

#கு என்பது சத்துவ, ராஜச, தாமச குணங்களைக் கடந்த குணாதீத நிலைமையையும்,

#ரு என்பது ரூபாதீதம் எனும் உருவைக் கடந்த நிலையினையும் குறிக்கும்.

ஆக, குரு என்பவர் அறியாமையை அழித்து மெய்யுணர்வு புகட்டுபவர் ஆவார்.

குருவின் செய்கைகள் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ மிக சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. இதில் சம்பந்தப்படாதவர்களுக்கு குருவின் செய்கைகள் பைத்தியத்தை போல தெரியலாம் !

கண் திறந்து கொண்டு இருட்டில் இருப்பவனுக்கே, ஒளியை கையில் வைத்திருப்பவரின் செயல் அர்த்தமுள்ளதாக இருக்கும். இருட்டில் கண்மூடி தூங்குபவனுக்கு ஒளியை ஏந்தி இருப்பவர் பைத்தியம் தானே ?

நாம் குருவின் அருகில் இருந்தால் சடங்குகளோ, ஆன்மீக பயிற்சிகளோ தேவையில்லை. குருவின் இருப்பே அனைத்தையும் செய்யும். குரு அனைவருக்கும் ஒன்றே உபதேசிக்கிறார். அவருக்கு உயர்வு தாழ்வு இல்லை. ஆனால் நம் அகங்காரம் உயர்வு தாழ்வுடன் இருப்பதால் குருவின் உபதேசத்தை தவறாக உணர்ந்து கொண்டு ஆன்மீக பாதையில் தவறிவிடுகிறோம் !

குருவின் உபதேசத்தை சுயநலமும் அகங்காரமும் இல்லாமல் கண்டால் இறையருளை எளிமையாக அடையலாம். பல ஜென்மங்களை காட்டுகிறேன் என கூறுபவரை விட, உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வை கொடுப்பவரே குருவாக இருக்க முடியும் !

ஆன்மாவை நேரடியாக தொடர்பு கொள்ள உங்கள் ஆணவத்துடன் போர் புரிபவரே உங்கள் குருவாக இருக்க முடியும். அவரை நீங்கள் சந்தித்ததும் உங்களிடம் இருந்து எதையோ முக்கியமானதை இழக்கப் போகிறேன் என்ற ஆழ்ந்த துக்கம் ஏற்படும். உங்கள் ஆணவம் தன்னை இழக்க தயாராகாமல் அவருடன் போராடி தோற்கும்.

எளிமையாக சொல்லுவதென்றால், உங்கள் உள் கட்டமைப்புகளை தகர்த்து யார் அதில் புதிய ஒளியை ஏற்றுகிறாரோ அவரே குருவாக இருக்க முடியும். உங்களை தூங்க செய்பவர் குரு அல்ல, விழிக்கச் செய்பவரே குரு. இருளை நீக்கும் குருவை வணங்கி உள்ஒளி பெறுவோம் !

குருவை விட குருவின் நாமம் எப்பொழுதும் நினைந்து உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எத்தீங்கும் ஏற்படாது. குருவின் நாமமே அகப்புறம் கவசமாயிருந்து நல்வழி நடத்தும் என்பது திண்ணம் !

தெய்வீக குருவிடம் சரணாகதியடைந்து, குருவின் மேல் முழு நம்பிக்கை வைத்து, குருவின் நாமம் மனமகிழ நாளும் சொல்வோம். அவரின் கருணை பெறுவோம் !

குருவே சரணம் ! குருவருளின்றி திருவருளில்லை !

ஸ்ரீ குருப்யோ நமஹ !
குருவடி திருவடி சரணம் !

Trip to Kondaveedu Fort | Andhra Pradesh | Travel Vlog |

[ad_1]

ஆந்திரா – கொண்ட வீடு கோட்டை பயண அனுபவம்:
தமிழர்களுக்கும் கொண்டவீடு கோட்டைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.அந்த கோட்டையை முதன்முதலில் ராணுவத்திற்காக பயன்படுத்தியதே தமிழர்கள்தான். தெலுங்கு சோழர்கள் யார்? தெலுங்கு சோழர்கள் தமிழ் சோழர்களின் வம்சாவளியா? இந்த கோட்டை ஏன்…

[ad_2]

மேலும் படிக்க