○ நாக தீவை நோக்கி விசித்திர பயணம்…. விக்ரமாதித்தன் கதை○ ஒரு நள்ளிரவில் காட்…

○ நாக தீவை நோக்கி விசித்திர பயணம்….
விக்ரமாதித்தன் கதை○

ஒரு நள்ளிரவில் காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதையை கூறியது.

ஒரு ஊரில் பத்மநாபன் என்றொரு நபரிருந்தார். அவர் தனது மகளை அந்த ஊரிலுள்ள ஆனந்தன் என்ற இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருந்தார். திடீரென்று ஒருநாள் அவரது மகள் பேசும் திறனை இழந்து விட்டாள். அவளை பரிசோதித்த வைத்தியர் அவளது பேச்சுத்திறனை மீண்டும் பெற வங்கக்கடலில் இருக்கும் நாகத்தீவில் காணப்படும் தசமூலம் என்ற மூலிகை மட்டுமே மருந்தாகும் என்றும், ஆனால் அதை கொண்டுவருவது சற்று கடினமான விடயம் எனக்கூறினார் அந்த வைத்தியர்.

அப்போது ஆனந்தன் தான்
எப்பாடு பட்டாவது அந்த மூலிகையை கொண்டுவருவதாக சூளுரைத்தான். அப்படி ஆனந்தன் சொன்ன போது தனது சீடன் சஞ்சயனையும் ஆனந்தனுக்கு பயணத்தில் துணையாக அனுப்பி வைத்தார் அந்த வைத்தியர். வழியில் ஆனந்தனைக் கண்ட, சாகசத்தில் விருப்பம் கொண்ட சிவநாதனும், கபாலியும் ஆனந்தனின் அந்த நாகதீவு பயணத்தில் இணைந்து கொண்டனர்.

நாகதீவிற்கு ஒரு படகில் அந்த நால்வரும் ஏறி பயணித்து கொண்டிருந்த போது ஒரு திமிங்கலம் அவர்களின் படகை தன் வாலால் அடித்து உடைத்தது. இதனால் அந்த நால்வரும் கடலில் வீசப்பட்டனர். அப்போது கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஆனந்தனுக்கு, உடைந்த படகின் துண்டை ஒன்று கொடுத்து அதில் அவன் மிதந்து கரைசேர உதவினான் சிவநாதன். ஆனால் ஒரு பெரிய அலை சிவநாதனை இழுத்துச் சென்றது. அவன் இறந்து விட்டான் என்று கருதிய மற்ற மூவரும் ஒரு தீவின் கரையில் ஒன்று சேர்ந்தனர்.

அப்போது அங்கே ஒரு பறக்கும் தட்டில் முதியவர் ஒருவர் பயணிப்பதை அம்மூவரும் கண்டனர். அவரிடம் பேசிய போது இது நாகதீவு என்பதை அறிந்தனர். மேலும் தாங்கள் இத்தீவிற்கு வந்த நோக்கத்தை அவரிடம் விவரமாக கூறினர்.

அப்போது அம்முதியவர் இம்மூவரும் தேடி வந்த தசமூலம் மூலிகை இத்தீவிலுள்ள மலையுச்சியிலிருக்கும் மாணிக்கபுரி நகரில் இருப்பதாகவும், அம்மலையுச்சிக்கு செல்லும் பாதையில்லாததால் இப்பறக்கும் தட்டின் மூலமாகவே செல்ல முடியும் என்றும், உங்கள் மூவரில் யார் தனது இளமையை எனக்கு தருகிறீர்களோ அவர்களுக்கு தனது பறக்கும் தட்டை அங்கே செல்வதற்கு தருவதாக கூறினார்.

அப்போது சஞ்சயன் தானாக முன்வந்து தனது இளமையை அந்த முதியவருக்கு தருவதாக கூறி சில மந்திரங்களை ஜெபிக்க சஞ்சயன் முதுமையடைந்தான். அந்த முதியவர் இளைஞனானார். இப்போது அந்த பறக்கும் தட்டில் பயணித்த கபாலியும், ஆனந்தனும் மாணிக்கபுரியில் இறங்கினர். அங்கே பெரும்பாலான மக்கள் மனித உடலும், மிருகத் தலையுடனும் இருப்பதைக் கண்டனர். அங்கிருந்த ஒரு சிலரிடம் இதைப்பற்றி கேட்டறிந்து தாங்கள் இங்கு வந்ததற்கான நோக்கத்தை பற்றியும் கூறினர்.

இந்த ஊரில் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும், இந்த நகரின் இளவரசியை அவன் மணக்க விரும்பிய போது அவள் அதற்கு மறுத்துவிட்ட ஆத்திரத்தில், தனது சக்தி வாய்ந்த மந்திரக்கோலின் மூலம் இவ்வூரின் பெரும்பாலான மக்களை இப்படி அவன் மாற்றிவிட்டதாக கூறினர் அவ்வூரில் சிலர்.

அப்போது அவ்வழியே அந்த மந்திரவாதி செல்வதைக் கண்ட கபாலி, அவன் மீது பாய்ந்து சண்டையிட்டு அவனை அவ்வூர் மக்கள் உதவியுடன் ஒரு மரத்தில் கட்டி, அவனிடமிருந்த மந்திரக்கோலை பறித்து சில மந்திரங்களை ஜெபித்து அம்மக்கள் அனைவரையும் மீண்டும் முழுமனிதர்கள் ஆக்கினான். அப்போது அங்கே வந்த இளவரசி மந்திரவாதியை சிறையில் அடைக்க உத்தரவிட்டாள். மேலும் ஆனந்தனும், கபாலியும் செய்த உதவிக்கு கைமாறாக அந்த தசமூலிகையை அவர்களுக்கு கொடுத்தனுப்பினாள். அதைப் பெற்றுக்கொண்டு பறக்கும் தட்டில் திரும்பிய கபாலியும், ஆனந்தனும் சிவநாதன் அங்கிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். மேலும் சஞ்சயன் மீண்டும் இளைஞனாகியிருந்தான். இப்போது அந்த நால்வரும் அந்த பறக்கும் தட்டில் தங்களது ஊருக்கு திரும்பினர்.

ஆனந்தன் அந்த தசமூலம் மூலிகையைக் கொண்டு அந்த பேசமுடியாத பெண்ணிற்கு சிகிச்சையளித்து அவளை குணப்படுத்தி, அவளை திருமணம் செய்து கொண்டான். அந்த தீவில் மந்திரவாதியிடம் பறித்த செங்கோலை தன்னோடு வைத்திருந்த கபாலி, அதன் மூலம் பொருளீட்ட நினைத்து அதை பயன்படுத்திய போது, அது வேலை செய்யவில்லை மேலும் அது அவனை அடிக்க ஆரம்பிக்க அவன் அந்த ஊரைவிட்டே ஓடினான்.

● விக்ரமாதித்தியா” கபாலி அந்த மந்திரக் கோலை பயன்படுத்த நினைத்த போது அது ஏன் வேலை செய்யவில்லை? மேலும் அது அவனை தாக்கவும் செய்தது ஏன்? எனக்கேட்டது வேதாளம்.

○ அதற்கு விக்ரமாதித்தியன்…..
மற்ற இருவரும் ஆனந்தனுக்கு உண்மையாகவே அவன் அந்த தசமூலம் மூலிகையை பெற உதவி செய்தனர். ஆனால் கபாலி அந்த மந்திரக்கோலை அந்த மந்திரவாதியிடம் பெற்றது முதலே அதை தனது சுயநலத்திற்கு பயன்படுத்த எண்ணினான். அதற்கான தண்டனையை அவன் அந்த மந்திரக்கோலின் மூலமாகவே பெற்றான்.” என்று பதிலளித்ததும் வேதாளம் தான் முன்பிருந்த முருங்கை மரத்தின் மீதே மீண்டும் ஏறிக்கொண்டது.

ஆலயங்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் கோவில் என்றாலே நம்முடைய நினைவுக்கு முதலில் …

🛕🥭ஆலயங்களில் வழங்கப்படும் பிரசாதங்கள்🥭🛕

🍀கோவில் என்றாலே நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது அந்த கோவிலின் அமைப்பு,அங்கு கொடுக்கப்படும் பிரசாதமும் தான்.
🍀கோவிலுக்குப் போனால் பிரசாதம் தானே நமக்கு ரொம்ப முக்கியம்!!
🍀சில கோவில்களில் திருநீறு,பூக்கள்,கொடுப்பார்கள்.
🍀#அம்மன் கோவிலாக இருந்தால் மஞ்சள்,குங்குமம் ஆகியவையும் கொடுப்பார்கள்.
🍀#பெருமாள் கோவிலில் துளசியை பிரசாதமாகக் கொடுப்பார்கள்.
🍀அதைத்தாண்டி, சாப்பிடுவதற்கான கொடுக்கப்படும் பிரசாதங்களும் உண்டு.அவை அவ்வப்போது மாறும்.அதாவது லட்டு,புளியோதரை,எலுமிச்சை சாதம்,பொங்கல்,பருப்பு கூழ்,சுண்டல் இப்படி என்னவெல்லாமோ கொடுப்பார்கள்.
🍀ஒவ்வொரு ஆலயங்களிலும் வழங்கப்படும் பிரசாதம் சிறப்பு வாய்ந்தவை.
🍀ஆலயங்களில் நிவேதிக்கப்படும் உணவு வகைகள் அந்தந்த ஆலயங்களுக்கு என்றே உரித்தான ஒழுங்கு முறைப்படி தயாரிக்கப்படுகின்றன.அந்த வகையில் எந்தெந்த ஆலயங்களில் என்னென்ன பிரசாதங்கள் என்று பார்ப்போம்.

🥥ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும்,துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி,வெண்ணெய்,கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.

🍏திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.

🍊திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

🍋காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு,கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லி தான் முதல் நைவேதியம்.

🍑திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர் சாதம் மட்டுமே.

🍒கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர்.உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

🍈முஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது.இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

🍓கேரளம், மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர்.இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.

🍇நவகிரக,சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.

💝💰தங்கக் காசுகள்💰💝
☀️என்னென்னவோ பிரசாதங்கள் வாங்கியிருப்போம்.ஆனால் எந்த கோவிலிலாவது தங்கக் காசுகளை பிரசாதமாகக் கொடுப்பதைப் பார்த்திருக்க மாட்டோம்.

☀️நாம் தான் நேர்த்திக் கடன் என்ற பெயரில் தங்கத்தை கடவுளுக்குப் படைப்போம்.
☀️ஆனால்,அப்படி ஒரு கோவிலும் நம்முடைய இந்தியாவில் தான் இருக்கிறது.
☀️இந்த அற்புதக் கோவிலானது,மத்திய பிரதேச மாநிலம் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.
☀️அதாவது ரத்லம் என்னும் ரத்னபுரி பகுதியில் தான் இக்கோவில் இருக்கிறது.
☀️இந்த ரத்னபுரி கோவிலுக்குள் உறைந்திருக்கும் கடவுள்,நமக்கு வளங்களை அள்ளித் தருகின்ற லட்சுமிதேவி தான் அது.
☀️இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள்,குறிப்பாக வசதி படைத்தவர்கள் தாங்கள் செலுத்துகின்ற காணிக்கையைப் பணமாகச் செலுத்துவதில்லை.காணிக்கை செலுத்த நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
☀️பொதுவாக நாம் கோவிலுக்கு செலுத்துகின்ற பணம்,தங்கம்,வெள்ளி ஆகிய அத்தனையும் கோவில் நிர்வாகத்துக்கும்,அரசுக்கும்,கோவில் திருப்பணிகளுக்கும் பயன் படுத்தப்படுவது தான் வழக்கம்.
☀️ஆனால்,இந்த கோவிலைப் பொறுத்தவரையில்,பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்ற அத்தனை தங்கமும் வெள்ளியும் பெரிய மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும்.இந்த மலை போல குவிக்கப்படும் பொருள்களை,வருடத்தின் முக்கியப் பண்டிகையாக இந்தியாவில் கொண்டாடப்படுகிற தீபாவளியன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அந்த தங்கம் மற்றும் வெள்ளி கொடுக்கப்படுகிறது.
☀️ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று மட்டும் தான் தங்கம் பிரசாதமாக வழங்கப்படும்.தினமும் வழங்கப்படும் வழக்கம் இங்கு கிடையாது.
☀️மேலும்,இங்கு பிரசாதமாக தங்கம் கிடைத்து விட்டால்,வாழ்க்கையில் பணக்கஷ்டம்,வறுமை என அத்தனையும் தீர்ந்து மகாலட்சுமியே தங்களுடைய வீடுகளுக்குள் நுழைவதாகவே பக்தர்கள் கருதுகிறார்கள்.
இந்த தங்கக் காசை இறைவனின் அருளாக பாவிப்பதால்,அதை யாரிடமும் கொடுப்பதோ விற்பதோ கிடையாது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

#EIA_என்றால்_என்ன #Environmental_impact_assessment… Environmental impact asses…

#EIA_என்றால்_என்ன
#Environmental_impact_assessment

Environmental impact assessment -2020 (#eia2020)வந்தா காடுகள் எதுவுமே இருக்காது. இயற்கையை அழித்து தொழிற்சாலை ஆரம்பிக்க போறான்.

மரம் இல்லையேல் மழை இல்லை மழை இல்லையேல் நீரில்லை நீர் இல்லையேல் எவ் உயிரினமும் இல்லை.

நீர் இல்லையேல் விவசாயம் இல்லை விவசாயம் இல்லைனா சோறு இல்லை.

தொழிற்சாலை மூலமாக சம்பளம் கிடைக்கும் ஆனால் அந்த காசை வைத்து அனைத்தும் வாங்க முடியுமா.

சில மேதாவிகள் உணவு பொருளை இறக்குமதி பண்ணலாம்னு சொல்வானுக.உணவு பொருளை இறக்குமதி பண்ற எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகாது வளர்ச்சியடையவும் செய்யாது.

குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் வேண்டுமானால் அது சாத்தியபடலாம்.

சென்னை போன்ற நகரங்களில் இன்றே நீருக்காக மாதம் 3000ருபாய் செலவு செய்ய வேண்டிய நிலை.

இன்று அரிசி குறைந்த விலை 40.கோடிக்கணக்கான விவசாயிகள் உற்பத்தி செய்தும் இந்த விலை.நாளை விவசாய நிலங்கள் தொழிற்சாலை ஆனால் உன் வருமானத்தில் 90% உணவு பொருள் வாங்கவே செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.

இயற்கை அழிக்கப்பட்டு தொழிற்சாலை அதிகமானால் காற்று மாசினால் மருத்துவமனை செலவு அதிகரிக்கும்.

காடுகளை அழித்தால் ஆக்ஸிஜன் இல்லை ஆக்ஸிஜன் இல்லைனா மூச்சு திணறி சாகனும்.கொரணா மூச்சு திணரல் ஏற்பட்ட வீடியோக்கள் இயற்கை நமக்கு தந்த எச்சரிக்கை.

Environmental impact assessment -2020 (eia2020)வந்தா காடுகள் எதுவுமே இருக்காது. ஆகஸ்ட் 11 மக்கள் கருத்து கணிப்பு கடைசி நாள்.

உங்களுக்காக வருங்கால சந்ததிக்காக ஒவ்வொருவரும், அதிலும் பிள்ளைகள் பெற்ற ஒவ்வொரு குடும்பஸ்தர்களும் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.

இல்லையேல் உங்க பிள்ளை நீருக்காக சோறுக்காக அவதிபடுவதை காணும் தலைமுறையாக இருப்பிர்கள்.


Tamil New Movies 2016 – Chuda Chuda – Tamil New Movie Scenes – Part 1 [HD]Chuda Chuda is a 2014 Tamil B Grade Movie Directed by Idhayan Cast: Idhayan,Durga,Shobina,Udhayana
Synopsis: A psychopathic killer chats up Tina, a school girl, on the Internet and invites her to his house with the intention of raping her and murdering her only to find the tables turned on him.
Click Here & Subscribe Now
http://www.youtube.com/subscription_center?add_user=TamilMoviesMW
Click Here Full Movies
https://www.youtube.com/playlist?list=PLRNGQPcJVJvoYd61r_fL5hmLCUgy7f2Yb

இயற்கைவைத்தியரின் மருத்துவ குறிப்பு.. இன்று வரை நாங்கள் அனைவரும் இதை குடிக்கிற…

இயற்கைவைத்தியரின்
மருத்துவ குறிப்பு..

இன்று வரை நாங்கள் அனைவரும் இதை குடிக்கிறோம் இதன் பயன் மிகவும் அருமை…!

நோய் தாக்கம் கிடையாது என் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்…!

கொஞ்சம் கருப்பு மிளகு தூள் எலுமிச்சை சாறு இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்…!

இதுபோல் ஒருநாளைக்கு 2 அல்லது 3 முறை குடித்து வந்தால் வைரஸ் பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது…!

இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு வேதியல் கலவை உருவாகும்…!

அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ் பேக்டீரியாவையும் கொன்று விடும்…!

தினம் தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் வைரஸ் எனும் இந்த மாயாவியை எவ்வாறு.?..!

அழிப்பது என மருத்துவ உலகம் விழி பிதுங்கி நிற்கிறது…!

அத்தகைய இந்த வைரஸ் மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் சரி…!

அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும் மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை..!

மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக சேர்த்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும்…!

இஞ்சி எலுமிச்சை கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மளிகை கடைகளில்
கூட கிடைக்கும்…!

மேலும் வைரஸ்களை விரட்ட சிறந்தது இந்த இஞ்சி எலுமிச்சை கருமிளகு குடிநீர்…!

உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள்…!

இஞ்சி மிளகு எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்…!

தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு மருத்துவமனைக்கு சமமானது ஆகும்…!

இந்த அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்தவர்…!

தமிழ் மக்களின் ஆதிமூல முதல் குரு சித்தர்களின் தலைவர்
அகத்திய மாமுனி ஆவார்…!

அப்படி அவர் தீர்மானித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும்…!

மேலும் எந்தெந்த பொருளை எதோடு சேர்த்து உண்டால் என்ன பலன்.?.! என்பது குறித்த கூட…!

இன்றைய தலைமுறையினர் பலருக்கு புரிதல் இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது…!

இஞ்சி மிளகு எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் தற்போது கூட கர்நாடகாவில் பெருமளவு வைரஸ் நோயை கட்டுப்படுத்தினார்கள்…!

இந்த பதிவை நீங்க பகிரலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம் என்ன வேணாலும் பண்ணலாம்…!

இந்த செய்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும் என்பதுதான் எனது ஆவல்…!

குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும்…!

காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது…!

அனைவரும் இதை பகிருங்கள் அனைவரும் தங்களது வீட்டிலயே தயாரித்து நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை அவசியம் குடித்து வாருங்கள்…!

கண்ணுக்கு தெரியாத நாளுக்கு நாள் புது உருவெடுக்கும் மாயாவி அரக்கனை…!

நம் முன்னோர்களின் கை வைத்தியத்தால் வேரோடு ஒழிப்போம் அனைவரும் நலமோடு வாழ்வோம்…!

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் ம…

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் ஆடி மூன்றாவது வாரம் அம்மன் தரிசனம்

#திருமுல்லைவாயில்_பச்சையம்மன்_கோயில்:

அன்னை பார்வதி, இமயமலையிலிருந்து மரகதவல்லியாக வந்து சென்னை திருமுல்லைவாயலில் குடிகொண்டதால் இங்கு அவளை பச்சைமலை அம்மன் என அழைத்து வழிபடுகிறார்கள்.

இந்தக் கோயிலில் மன்மதன் ரதி, பெருமாள், முடியால் அழகி பூங்குறத்தி, விநாயகர், பைரவர் ஆகியோருடன் திருமால் பெரிய மீசையுடன் வாழ்முனியாக அமர்ந்திருக்கிறார். எதிரில் சுகரிஷியும் கருடாழ்வாரும் துணை நிற்கின்றனர். செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி ஆகிய ஆறு முனிகளும் அமர்ந்து காவல் காக்கின்றனர். எதிரே அவர்களது குதிரை முதலிய வாகனங்கள் தயார் நிலையில் அணிவகுத்து நிற்கின்றன. எதிரில் கௌதம முனிவர் சிவலிங்க உருவோடு நின்ற கோலத்தில் அருள, அவருக்கு வலப்புறம் பச்சையம்மன் தவக்காலத்தில் வழிபட்ட மன்னாதீஸ்வரர், அகோர வீரபத்திரர் சன்னிதிகள் உள்ளன.

கலாச்சாரச் சிறப்பு நிறைந்த இந்தப் பச்சைமலை அம்மன் கோயில், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புடன் திகழ்ந்திருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள சுமார் 15 பச்சையம்மன் தலங்களுக்குள் பழமையும் தொன்மையும் வாய்ந்தது இது.

#இடப்பாகம்_வேண்டித்_தவம்

கயிலாயத்தில் இருந்து பார்வதி இங்கு வந்து குடிகொண்டது வரலாறு.

சிவனும் பார்வதியும் வீற்றிருக்க அங்கே வந்த பிருங்கி மாமுனிவர் சிவனை மட்டும் வலம்வந்து வழிபட்டுச் சென்றார். சிவசக்தியான பார்வதி தேவி, இருவரையும் வணங்காமல் சிவனை மட்டும் பிரித்து வணங்கிச் செல்வது நியாயமில்லை என வாதிட்டதோடு, இது போன்ற தவறு இனி ஏற்படாமல் இருக்கச் சிவனின் உடலில் சரிபாதி வேண்டும் என வேண்டினார். சிவன் மறுக்க, வைராக்கியத்தோடு சிவனைப் பிரிந்து தவம் செய்ய உரிய அனுமதியைப் பெற்றார்.

காவி உடை, ருத்திராட்சம், சடை தரித்துப் பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தைத் தேடினார். இமயம் தொடங்கி ராமேஸ்வரம், கன்னியாகுமரிவரை அனைத்துத் தலங்களிலும் நீராடி, சிவபிரான் குடிகொண்டுள்ள தலங்களில் சிவபூஜை செய்யக் கிளம்பினார். பார்வதியுடன் அவருடைய தோழிகளான 64 யோகினியர் துணையாக வந்தார்கள்.

#ஏழு_முனிவர்கள்

காசி முடித்து உஜ்ஜயினி வரும்போது அக்னி வீரன், ஆகாச வீரன் உட்பட மொத்தம் ஏழு சகோதரர்கள் பெண் பித்தர்களாகவும் அநீதர்களாகவும் கொடுமையானவர்களாகவும் ஆண்டுவந்தனர். அக்னி வீரன், அழகு மிகுந்த பெண்ணான உமாதேவியிடம் சென்று தான் அவரைக் கண்டு மோகிப்பதாகக் கூறினான். பார்வதி உடனே சிவனைத் துதிக்க, திருமால் பிரம்மா மற்றும் அஸ்வினி தேவர்கள் அவருக்குப் பக்கத் துணையாக வந்தனர்.

தன் சகோதரியிடம் தகாத வார்த்தை பேசிய அக்னி வீரனைக் கண்டு பெரிய அரக்க வடிவம் கொண்ட திருமால், வானளவு உயர்ந்து அவனைத் தன் காலடியில் அழுத்திச் செயலற்றவனாக்கினார். வானளவு உயர்ந்து நின்றதால் வான் முனி எனப்பட்டு வாழ்முனியாக மருவி அழைக்கப்பட்டார். உடன் வந்த ரிஷிகளும் திருமாலைப் போல் பேருரு கொண்டனர்.

சாகாவரம் பெற்றிருந்த சகோதரர்கள் ஆகாய வீரன், ஜல வீரன் சண்ட வீரன், ரண வீரன், கோட்டை வீரன், அந்தர வீரன் ஆகியோரைச் செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி ஆகியோர் அவர்களைச் செயல்படாதவாறு செய்தனர். அவர்களின் தலை மட்டும் தெரிய, முனிவர்கள் எழுவரும் பூமிக்குள் அழுத்திக்கொண்டு அமர்ந்தனர். அக்னி வீரனின் மகனான வீரமுத்து இதைக் கண்டு வெகுண்டெழுந்து போருக்கு வர, வாழ்முனியான திருமால் அவனது படைகளை அழித்தார். அவனை வதம் செய்யப் போகும்போது அவனுடைய மனைவி வீராட்சி விஷ்ணுவின் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்க, வாழ்முனி அவனை விடுவித்தார்.

#அரக்கனை_அழித்த_உமையம்மை:

தேவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்ப, பார்வதிக்குத் துணையாக மகாலட்சுமி (வேங்கடமலை நாச்சியார்), சரஸ்வதி (பூங்குறத்தி நாச்சியார்), இந்திராணி (ஆனைக் குறத்தி ரதி) ஆகியோர் இருப்பார்கள் எனக் கூறிச் சென்றார் திருமால்.

சிவன் கட்டளைப்படி அவர்களோடு உமையாள் காசிமா நகர் சென்று அன்னபூரணியாகி அறம் செய்து யோக பூமியான காசியை விட்டு ஒவ்வொரு சிவத்தலமாக பூஜை செய்து மோக பூமியான காஞ்சி செல்லத் தொடங்கினார். வழியில் தவம் செய்யத் தேர்ந்தெடுத்த திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் உமையம்மை சிவ கங்கை சூரிய புஷ்கரணி என்னும் சக்தி தீர்த்தத்தை உருவாக்கினார்.

அந்தத் திருக்குளத்தின் கரையில் மக்களுக்கும் தேவர்களுக்கும் அல்லல் கொடுத்துவந்த ஹதாசுரனையும் அவனது படைத்துணை மகாபூதத்தையும் அழித்தார். அங்குக் கோயிலை அமைத்து சிவபூஜை செய்தார்.

சென்னை அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் வலது புறத்தில் திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 100 அடி தொலைவில் உள்ளது அருள்மிகு பச்சைமலையம்மன் என்ற பச்சையம்மன் திருக்கோயில். இங்கே தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையும் சாதாரன நாட்களில் மக்கள் தரிசனம் செய்யலாம்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பெளர்ணமி ஆகியவை சிறப்பு தரிசனம் செய்ய சிறந்த நாட்களாகக் கொள்ளப்படுகின்றன. அம்மன் திருத்தலங்களில் நடைபெறும் ஆடி முதல் நவராத்திரி போன்ற அனைத்துத் திருநாட்களிலும் இங்கே சிறப்பாக பூஜை நடைபெறுகிறது.

அருகம்புல் ஜூஸ் பயன்கள் நச்சு நீக்கி நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் சுவாச…

அருகம்புல் ஜூஸ் பயன்கள்
நச்சு நீக்கி
நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று என அனைத்தும் இக்காலத்தில் நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. அருகம்புல் ஜூஸ் தினந்தோறும் காலை அருந்துபவர்களுக்கு உடலில் தங்கியிருக்கும் அதனை நச்சுக்களும் வியர்வை, சிறுநீர் மூலமாக வெளியேறும்.
நீரிழிவு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்
சிலருக்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சமச்சீரற்ற தன்மையால் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் அஜீரணம், வாயுத்தொந்தரவுகள் ஏற்படும். இக்குறைபாட்டை போக்க ஒரு நாளைக்கு ஒருமுறை அருகம்புல் ஜூஸ் அருந்த வேண்டும்.
ரத்த போக்கு
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகம் ரத்தபோக்கு ஏற்படும். அது போல சிலருக்கு என்ன காரணத்தினாலோ மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இப்படிப்பட்டவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் இக்குறைபாடுகள் நீங்கும்.
எலும்புகள்
நலம் அருகம் புல்லில் எலும்புகளின் உறுதிக்கு தேவையான மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்து இருக்கின்றன. அருகம் புல் ஜூஸ் தினந்தோறும் காலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்கும்.
சுவாச பிரச்சனைகள்
ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்றவை நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது துன்புறுவர். இவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தோல் வியாதிகள்
சுற்றுப்புறங்களில் இருக்கும் நுண்கிருமிகளால் சிலருக்கு தோலில் படை, புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகளை கொண்டவர்கள் தினமும் அருகம்புல் ஜூஸ் அருந்தினால் தோல் சம்பந்தமான வியாதிகள் விரைவில் நீங்கும்.
வாதம்
மூளையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சிலருக்கு முகவாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அருகம்புல் ஜூஸ் அருந்தி வருபவர்களுக்கு நரம்புகள் வலுப்பெற்று எப்படிப்பட்ட வாத நோய்களும் ஏற்படாமல் காக்கும்.
உடல் எடை
காலை உணவு உண்பதற்கு முன்பு அருகம்புல்ஜூஸ் அருந்தி வந்தால் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறையும்.
#healthpluz #benefits #arugampul #pattivaithiyam

Follow us on instagram
➡️ www.instagram.com/healthpluzindia
➡️ www.instagram.com/healthpluzindia
➡️ www.instagram.com/healthpluzindia
➡️ www.instagram.com/healthpluzindia

வருகின்ற 11_08_2020 அன்று #கோகுலாஷ்டமி அதை முன்னிட்டு #ஶ்ரீ_கிருஷ்ண_சரிதம் க…

வருகின்ற 11_08_2020
அன்று #கோகுலாஷ்டமி
அதை முன்னிட்டு
#ஶ்ரீ_கிருஷ்ண_சரிதம்
கதையை படிக்கலாம்…

#ஸ்ரீ_கிருஷ்ண_சரிதம் – 3

தேவகி வைத்த கண் வாங்காமல் திருமாலை ரசித்து… உஹும்… தரிசித்துக் கொண்டிருந்தாள். கடவுளை பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்த வேளையில், அண்ணன் கம்சன் அவளது நினைவில் ஊசலாடினான். அவள் அந்த தெய்வக் குழந்தையிடம், பரந்தாமா !

உலகம் உய்விக்க வந்த விளக்கே ! தாங்கள் உங்கள் சொந்தக் கோலத்தில் எங்களிடம் எப்படி வளர முடியும் ? என் அண்ணன் கம்சன் உங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறான்.

அத்துடன் எங்களையும் அவன் கொன்று விடுவான். என்னைத் திருமணம் செய்த பாவத்திற்காக, என் கணவர் உயிர்விடுவது எவ்வகையில் நியாயம் ? தாங்கள் தான் இதற்கொரு வழி சொல்ல வேண்டும், என பிரார்த்தித்தாள். அந்தக் கணமே குழந்தை பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார்.

என்னைப் பெற்ற புண்ணியவதிக்கும், என் தந்தை வசுதேவருக்கும் நமஸ்காரம். தாயே ! முன்னொரு பிறவியில் தந்தை வசுதேவர் சுதபா என்ற பெயரில் ஒரு நாட்டின் மன்னனாக இருந்தார். தாயான நீ பிருச்னி என்ற பெயருடன் அவரது மனைவியாய் இருந்தாய். அப்போது இந்தப் பூவுலகில் மக்கள் தொகை குறைந்தது.

இதனால் கலவரமடைந்த பிரம்மன், உன்னை அணுகி மக்கள்தொகையை அதிகரிக்க உதவ வேண்டும் என்றான். ஆனால், நீயும், சுதபாவும் ஐம்புலன்களையும் அடக்கி விரதம் ஒன்றை அனுஷ்டித்துக் கொண்டிருந்தீர்கள். இதனால் பிரம்மாவுக்கு நீங்கள் கட்டுப்படவில்லை. கோபமடைந்த பிரம்மன் புயலை உருவாக்கி தவத்தை கெடுக்க முயன்றான். ஆயினும், உங்களை இயற்கை கூட ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஏனெனில், உங்கள் இதயம் பரிசுத்தமாயிருந்தது. பரிசுத்தமான மனம் எங்கே உள்ளதோ, அங்கே இயற்கை பாதிப்பை ஏற்படுத்தாது.

இப்படி 12 ஆயிரம் தேவஆண்டுகள் விரதம் அனுஷ்டித்தீர்கள். உங்கள் மனம் முழுவதும் என்னைப் பற்றிய சிந்தனையே தவிர வேறில்லை. அப்போதும், நான் உங்களுக்கு காட்சி தந்து, என்ன வரம் வேண்டுமெனக் கேட்டேன். நீங்கள் வைகுண்டம் வர விரும்புவீர்கள் என எண்ணினேன்.

ஆனால், நீயோ, பரந்தாமா ! நீ என் வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்றாய். நானும் சம்மதித்தேன். அதன்பின் நீங்கள் தவ வாழ்க்கையை நிறுத்திவிட்டு இல்லறத்தில் புகுந்தீர்கள். நான் உங்கள் வயிற்றில் பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாய் பிறந்தேன். அடுத்த பிறவியில், நீங்கள்
காஷ்யபர் – அதிதி என்ற தம்பதியராய் பிறந்தீர்கள். அந்தப்பிறவியில் நான்
உபேந்திரன் என்ற பெயரில் உங்களுக்கு பிறந்தேன். இப்போது, கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்திருக்கிறேன்.

நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியது தான். பல பிறவிகளில் என்னை அன்புடன் மகனாய் வளர்த்த உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கம்சனிடமிருந்து உங்களைக் காப்பது என் கடமை. நீங்கள் உடனே என்னை கோகுலத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கே வசுதேவரின் நண்பர் நந்தகோபனுக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். என்னை நந்தகோபரின் மனைவி யசோதையிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு சாதாரண குழந்தையாக உருமாறி விட்டார்.

பின்னர், ஒரு குழந்தை பிறந்துள்ள நினைவும், தன்னை கோகுலத்துக்கு கொண்டு போகச் சொன்னதையும் தவிர மற்ற எல்லாவற்றையும், தன் தாய் தந்தைக்கு மறக்க செய்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கனவிலிருந்து விழித்தவர் போன்ற வசுதேவர், குழந்தையைப் எடுத்துப் போகும் ஏற்பாட்டைச் செய்தார். அவர் குழந்தையைத் தொட்டாரோ இல்லையோ, கையிலிருந்த விலங்குகள் கழன்றுவிட்டன. சிறைக்கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்களோ மயக்கம் வந்தது போன்ற தூக்கத்தில் கிடந்தனர்.

அங்கு கிடந்த ஒரு பழைய கூடையில் தன் அங்கவஸ்திரத்தை விரித்தார். குழந்தையை அதற்குள் வைத்தார். பெண் குழந்தை பெற்றிருந்த யசோதை, மயக்கத்தில் இருந்து எழவில்லை. அவளுக்கு தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற உணர்வு இருந்ததே தவிர, என்ன குழந்தை பிறந்தது என்று பார்ப்பதற்குள் மயக்கமாகி விட்டாள்.

சப்தமின்றி, வசுதேவர் கண்ணனை யசோதையின் அருகில் கிடத்தினார். பெண் குழந்தையை எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு சிறைக்கு வந்து சேர்ந்தார். சந்தேகமின்றி இருக்க விலங்குகளை பூட்டிக் கொண்டார். குழந்தை வீறிட்டு அழவே, காவலர்கள் விழித்தனர். தேவகிக்கு குழந்தை பிறந்து விட்டதென்ற செய்தி கம்சனுக்கு பறந்தது. மிகப்பெரிய வாளுடன் வசுதேவர் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் புகுந்தான் கம்சன்.

என் உயிரைக் குடிக்க வந்த அந்த எமன் எங்கே ? அவனுக்கு எமனாய் நான் வந்திருக்கிறேன், என்ற கம்சனின் பாதத்தில் விழுந்தாள் தேவகி. அண்ணா ! ஏதோ ஒரு அசரீரி சொன்னது என்பதற்காக, என் ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்றாய்.

இப்போது பிறந்திருப்பது பெண். அசரீரியின் வாக்கு உண்மையே என்றாலும் கூட, என் வயிற்றில் பிறக்கும் எட்டாவது ஆண்பிள்ளையால் தான் உனக்கு மரணமே தவிர, பெண்ணால் இல்லை. பார்த்தாயா,

இது பெண் குழந்தை, என குழந்தையை நீட்டினாள். கொடிய உள்ளம் கொண்ட கம்சன், அவள் சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை. குழந்தையின் கால்களைப் பிடித்தான். தலையை சுவரில் ஓங்கி அடித்தான். அவ்வளவு தான் ! மதுராபுரியே கிடுகிடுக்கும் வகையில், ஓங்கி ஒலித்த சிரிப்புடன் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது அந்தக் குழந்தை. அந்த நடுநிசியில் சூரியன் உதித்து விட்டது போல பிரகாசம். கையில் சங்கு, சக்கரம் மின்ன, திரிசூலம், வாள் பளபளக்க, மண்டை ஓடுகள் மாலையாய் கழுத்தை அலங்கரிக்க அந்தப் பெண் ஆங்காரமாய் சிரித்தாள்.

அவள் விஷ்ணுவின் சகோதரி என்பதாலும், உலகைக் காக்கப்போகும் ரட்சகி என்பதாலும் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல், வானத்து தேவர்களும், கந்தர்வர்களும், கிங்கரர்களும் அந்த தேவியைத் தரிசிக்க பரிசுப் பொருள்களுடன் வந்து அவளை பணிந்தார்கள். துர்க்கை கர்ஜித்தாள்.

கொடியவனே ! உன் தங்கைக்கு நீ இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா ! மனிதனாய் பிறந்தவன் அழிவது உறுதி என்று தெரிந்திருந்தும், இவ்வுலகம் உள்ளளவும் உயிர் வாழப்போவதாக எண்ணி, அப்பாவி குழந்தைகளைக் கொன்றாயே ! உன்னைக்கொல்லப் போகிறவன் பிறந்து விட்டானடா ! அவன் ஒளிந்து வளர்கிறான் உன் அழிவு நெருங்கிவிட்டது.

இவர்களை விடுதலை செய்து ஒரு புண்ணியத்தையாவது தேடிக்கொள், என்றாள். அத்துடன் அவள் மறைந்து விட்டாள். கம்சனின் மனம் அந்தக்கணமே மாறிவிட்டது.

அம்மா தேவகி ! என் அன்பு சகோதரியே ! உனக்கு எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்து விட்டேன். என் கொடுமைக்கு
பலனாக பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) என்னைப் பற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனவே என்னை இருவரும் மன்னிக்க வேண்டும் என்று கூறி வசுதேவரின் கால்களில் விழுந்து வணங்கினான். தன்னையுமறியாமல் அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது.
நாளை தொடரும்…

ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே !!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!