ஹரி ஓம் நம சிவாய *கோயில்களுக்குச் செல்ல குழந்தைகளை பழக்குங்கள்* கோயில்களுக்…

🤘🐚ஹரி ஓம் நம சிவாய🔱🤘
*கோயில்களுக்குச் செல்ல குழந்தைகளை பழக்குங்கள்*
கோயில்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன .
அதற்கான அறிவியல் காரணங்களை பார்க்கலாம் .
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும் .
2. கோயில்களில் நேர்மறை ஆற்றல்… More

🤘🐚 Hari Om Namah Shivaya 🔱🤘
* Practice children to go to temples *
Taking children to temples has many benefits.
Let’s see the scientific reasons for that.
1. Temples will be in the places where the magnetic waves of the earth are thrown.
As there is a lot of positive energy in 2. temples, there will be good morals and thinking from childhood.
3. The magnetic waves and positive energy are found around the Thirumeni, which is known as pregnancy or moolasthanam.
The copper plates below the 4. source of Thirumeni will multiply the positive energy below.
. 5. The power in the corner is available to the devotees who come out through the door and worship the Lord from the left and right of the door.
That’s why there’s no windows in the corner.
6. This is the reason for the light of the temple from left to right. This is the orbit of the universal power.
According to that, the power comes to the body when it is rotating the source.
7. This energy is available to the body, mind and brain.
8. The solution given by adding flowers, gambling, basil, saffron, cloves can cause immune system.
9. This solution cleanses mouth odor, tooth cleanses and blood.
So, no disease will be affected from childhood to adult.
This is the main reason for some temples not to wear shirt over 10. temples.
It is worldly life that the energy that enters through the chest nest and reaches your body.
11. Though travelled from several miles away, it is remarkable that when you get the darshan of the Lord, a soft thrill and a kind of relief in the body is the reason for the source of the temple and the power in it.
12. The riots in the temple tower are the best electrical smuggling to avoid the risk of thunder attack in the temple.
13. Going to the temple will not only clean the body, but also the mind and brain.
The power of unwanted thoughts to get away and make the mind a face from childhood.
That’s why we visit temples with family.
Let us make children also go to temple.
🤘🐚 Hari Om Namah Shivaya 🔱🤘

Translated from Tamil

Image may contain: one or more people and people standing

#ஆலயதரிசனம்…. அருள்மிகு #பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்… மூலவர் : பிராணநாதேச…

#ஆலயதரிசனம்….

அருள்மிகு #பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்…

மூலவர் : பிராணநாதேசுவரர்,
பிராணவரதேஸ்வரர்
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
தல விருட்சம் : கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)
தீர்த்தம் : மங்களதீர்த்தம் (காவிரி)
புராண பெயர் : திருமங்கலக்குடி
ஊர் : திருமங்கலக்குடி
மாவட்டம் : தஞ்சாவூர்…

திருவிழா…

பங்குனி உத்திரம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம் – 2 ம் நாள் திருக்கல்யாணம் விசேசம் – இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா இதுவே ஆகும். இது தவிர சங்கட சதுர்த்தி, கிருத்திகை ஆகிய நாட்களும் இத்தலத்தில் சிறப்பு மிகுந்த நாட்கள் என்பதாகும். அஷ்டமி தேய்பிறை அன்று பைரவர்க்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தலசிறப்பு…

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது. இரவில் திருக்கல்யாணம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால், இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும்

பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு, சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் வைபவமும், ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி, அம்பிகை திருக்கல்யாணமும், அதன்பின் திருமண விருந்தும் நடக்கும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 38 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொதுதகவல்…

சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.

பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.

பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்.

இதுதவிர, சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 11 ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டுள்ள தலம். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மேற்பார்வையில் நடந்து வரும் கோயில் இது.

பிரார்த்தனை…

நவகிரக தலங்களில் சூரிய தலமான சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இத்தலத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமாதலால் நவகிரக தோஷமுள்ள பக்தர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்கின்றனர். தீர்க்க சுமங்கலி பாக்கியம் : திருமணம் ஆன பெண்கள் அம்பாள் கையிலிருந்தே திருமாங்கல்ய கயிறு வாங்கி அணிந்து கொள்வது இத்தலத்தில் மிகவும் விசேசம்.

தவிர நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம்(எதிரிகள் பயம்) நீக்கம்பெறல், திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்…

தொடர்ந்து பதினொன்று ஞாயிற்றுக் கிழமைகள் மதியம் 12 மணிக்கும் 12.30 க்கும் இடையில் வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து அங்கு கோயில் பிரகாரத்தில் நடைபெறும் வழிபாடுகளிலும் பங்கு பெற வேண்டும். இப்படி செய்தால் நவகிரக தோஷம்,எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களாம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் ராகு, கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். அம்மனுக்கு திருமாங்கல்யம், புடவை சாத்தி சுவாமிக்கு வஸ்திரம் படைத்து அபிசேகம் செய்து வழிபாடு செய்து 5 சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி மஞ்சள் குங்குமம் , பூ வெற்றிலை, பாக்கு, சீப்பு , கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குதை நேர்த்திகடனாக பக்தர்கள் செய்கிறார்கள். சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன்,பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம் விபூதி ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.கலசாபிசேகம் செய்யலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தலபெருமை…

பஞ்ச மங்கள ஷேத்திரம் இத்தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி,
2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை,
3. இக்கோயில் விமானம் மங்கள
விமானம்
4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர்
மங்கள தீர்த்தம்,
5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

கிரகங்கள் வழிபட்ட சிவன் ஒருசமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால், அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே, அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி, தவமிருந்து சாபவிமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக, இத்தலத்தில் சிவன் அருளுகிறார்.

நின்ற லிங்கம்…

பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருப்பதாக சொல்கிறார்கள். குள்ள முனிவரான அகத்தியர், சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்திதான் மலர் வைத்து பூஜித்தாராம்.

முதல்கோயில்..

கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில், நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில், நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயிலே (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரே கோயிலே, இவ்வாறு இரட்டைக்கோயிலாக தனித்தனியே, அமைந்திருக்கிறது.இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் முதலில் பிராணநாதரை வழிபட்டு, அதன்பின்பே சூரியனார் கோயிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

எருக்கு இலையில் தயிர் சாத பிரசாதம்: நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது, உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.
பித்ரு தோஷம் (முன்னோர்களுக்கு முறையான தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்யாதவர்கள்) உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

மரகதலிங்கம்….

நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று இருக்கிறது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு நைவேத்யம் படைத்து, வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

தாலி தரும் தாய்…

அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோயிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சந்தன அலங்காரம்….

நவராத்திரியின்போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.

தலவரலாறு…

பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார். கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது.

ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார்.அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது.அதுபடி மந்திரி உயிர் திரும்பபெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்)என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள்.

இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்…

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது சிறப்பு. இத்தலத்தில் உள்ள புருஷமிருகம் என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தில்.மனிதன், விலங்கு, பறவை என்ற மூன்று முகங்கள் உள்ளது…

Yellow Garland butcher Not only for turmeric jaundice, anemia iron nutrient def…

Yellow Garland butcher
Not only for turmeric jaundice, anemia iron nutrient deficiency, this butcher also solves the unwanted infertility problems caused by turmeric jaundice.
Due to liver function deficiency
Yellow Garland caused by hepatitis
Yellow garland caused by gallstones
Yellow garland caused by gallstones blockage
Yellow Garland caused by the habit of drinking alcohol
Yellow garland caused by overdose drugs
Yellow Garland caused by side effects of medicines eaten for other diseases
This is the medicine that cures all types of jaundice
This medicine is a solution to the problems related to liver chirosis and anemia problems caused by liver diseases.
Liver function deficiency causes problems like appetite infinity digestion body fatigue eyes nails legs turn yellow
Medicine
Goat garden sooranam………………. two grams
Flag Sooranam in Cheese………………. Two grams
Kaduka Rohini Sooranam………………. Two grams
Nilavembu powder………………. two grams
Neem leaf powder……… two grams
Tripala Suranam………………. Two grams
And the six things like this
Put four hundred ml of water
Well dried in a little fire
Shrink into a hundred ml of butchers
Drop and filter
Maybe as a medicine
Drink on empty stomach or thirty minutes before food
Every day, morning and night, we have to eat two times continuously for hundred days.
Use this as a medicine to live well without diseases

இன்று என் சமையல் அறையில் இருந்து லட்டு… 1 1/2கப் சர்க்கரை 1கப் கடலை மாவு 3ஏ…

இன்று என் சமையல் அறையில் இருந்து லட்டு…

1 1/2கப் சர்க்கரை
1கப் கடலை மாவு
3ஏலக்காய்
1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
தேவையான அளவு புட் கலர்
எண்ணெய் பொரித்தெடுக்க..

முதலில் மாவில் பேக்கிங் சோடா சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி லேசாக தட்டினால் கீழே பூந்தி அழகாக விழும்

அதை அதிக நேரம் வேக விடக்கூடாது… முக்கால் பாகம் வெந்ததும் எடுக்கவும்…

அதிக நேரம் வெந்தால் காராபூந்தி மாதிரி இருக்கும்

பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வந்ததும் பூந்தியில் ஊற்றவும்

சூடு குறைந்ததும் அதில் இருந்து சிறிது எடுத்து மிக்ஸியில் அரைத்து பூந்தியில் கலந்து கொள்ளவும்… இது எதற்காக என்றால் அப்போது தான் லட்டு பிடிப்பதற்கு சுலபமாக வரும்…

இப்போது சுவையான லட்டு தயார்…

Laddu from my kitchen today…

1 1/2 cup sugar
1 cup of peanut flour
3 cardamom
1/2 spoon baking soda
Enough food color
To fry oil..

First add baking soda to the flour and mix it with water for the dosa flour and flour

When oil is dried in the pan, pour dough in a spoon and tap it lightly, it will bloom down and fall beautifully.

Don't boil it too long… Take the mughal part once…

If you spend too much time, it will be like a carapoondi

Add sugar and cardamom to the vessel and pour enough water and pour it in the flower after a wire is arrived.

When the heat is low, take some from it and mix it in the mixture and mix it in poondi… This is because only then it will be easy to catch laddu…

Yummy laddu is ready now…

Tamil Movies 2015 Full Movie New Releases # Ilami Kadhal # Tamil New Movies 2015 Full MovieTamil Movie | Ilamai Kadhal | Bold Romantic | Super Hit Movie
Cast | Sivanaak, Senthil, Pandu
Direction | S S Kumar
Tamil Movies 2015 Full Movie New Release

Subscribe Now For Latest Updates : http://goo.gl/8z7KBS

Channel Intro
________________________________________­___________

This Malayalam You Tube Movie Channel (Movie World Entertainments)contains copyright/Classic/Evergreen/Exclusive/­­­Official/tamil movies

மகாதேவ மாலை – வள்ளலார் தொடர்ச்சி… ஓம் திருச்சிற்றம்பலம் 11. வாயாகி வாயிறந்த …

மகாதேவ மாலை – வள்ளலார்

தொடர்ச்சி… ஓம் திருச்சிற்றம்பலம்

11. வாயாகி வாயிறந்த மவுன மாகி
மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
தானாகி நானாகிச் சகல மாகி
ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.

12. அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
அளவாகி அளவாத அதீத மாகிப்
பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.

13. பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
புறமாகி அகமாகிப் புனித மாகி
மன்னாகி மலையாகிக் கடலு மாகி
மதியாகி ரவியாகி மற்று மாகி
முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.

14. அரிதாகி அரியதினும் அரிய தாகி
அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.

15. உருவாகி உருவினில்உள் உருவ மாகி
உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
அருவாகி அருவினில்உள் அருவ மாகி
அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
மருவாகி மலராகி வல்லி யாகி
மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.

16. சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
அவையனைத்தும் அணுகாத அசல மாகி
இகலுறாத் துணையாகித் தனிய தாகி
எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.

17. வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.

18. சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்
சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி
வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
இகமாகிப் பதமாகிச் சமய கோடி
எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்
பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே.

19. விதியாகி அரியாகிக் கிரீச னாகி
விளங்குமகேச் சுரனாகி விமல மான
நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி
நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்
கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே.

20. மானாகி மோகினியாய் விந்து மாகி
மற்றவையால் காணாத வான மாகி
நானாகி நானல்ல னாகி நானே
நானாகும் பதமாகி நான்றான் கண்ட
தானாகித் தானல்ல னாகித் தானே
தானாகும் பதமாகிச் சகச ஞான
வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற
மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே!

ஹரி ஓம் நம சிவாய *ஆன்மிக தகவல்கள்* *நவ பிரம்மாக்கள் என்பவர்கள் யார் ?* படைக…

🤘🐚ஹரி ஓம் நம சிவாய🔱🤘
*ஆன்மிக தகவல்கள்*
*நவ பிரம்மாக்கள் என்பவர்கள் யார் ?*

படைக்கும் கடவுளாம் பிரம்ம தேவர் , படைக்கும் தொழில் மட்டுமல்லாமல் , பற்பல வடிவம் கொண்டு விளங்குவதாகவும் கூறப்படுகிறது .
அதில் சிறப்பு பெற்று விளங்குவது நவ பிரம்மாக்கள் .
இந்த நவ பிரம்மர்களின் வடிவங்கள் முறையே , 1. குமார பிரம்மன் ,
2. அர்க்க பிரம்மன் ,
3. வீர பிரம்மன் ,
4. பால பிரம்மன் ,
5. சுவர்க்க பிரம்மன் ,
6. கருட பிரம்மன் ,
7.விஸ்வ பிரம்மன் ,
8. பத்ம பிரம்மன் ,
9. தாரக பிரம்மன் என்பனவாகும் .

*நவ பிரம்மாக்கள்*
குமார பிரம்மன் திருமாலுக்கு மகனாகப் பிறந்து படைப்புத் தொழிலை நன்கு ஆற்ற தவம்புரியும் நிலையைக் குறிக்கிறது .
அர்க்க பிரம்மன் சூரிய மண்டலத்தில் விளங்கும் பிரம்மன் .
சிவாசனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் சூரிய மண்டலத்தில் இந்த அர்க்கப் பிரம்மன் சிறப்புடன் பூஜிக்கப்படுகிறார் . வீர பிரம்மன் அறியாமை மிகுந்த அரக்கர்களோடு
போரிட்ட கோலத்தைக் குறிப்பது இது .
பால பிரம்மன் அத்ரி – அனுசுயா தம்பதியரிடம் குழந்தையாக தவழ்ந்த நிலையில் உள்ளவர் .
சுவர்க்க பிரம்மன் யாகாதிகளால் மேன்மை பெற்றவர்கள் வசிக்கும் சுவர்க்கத்தைக் காப்பவராகத் திகழ்கிறார் .
கருட பிரம்மன் ஒரு முறை , பறவை வடிவில் இருந்த முனிவர்களுக்குப் பருந்து வடிவம் கொண்டு பிரம்மன் உபதேசித்தான் .
அதனால் கருட பிரம்மன் எனப்பட்டார் .
விஸவ பிரமமன உலகினைப் படைக்கும்போது விஸ்வ பிரம்மன் என்று பெயர் பெறுகிறார் .
பத்ம பிரம்மன் திருமாலின் நாபியிலிருந்து தோன்றி தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருப்பதால் இந்தப் பெயர் .
தாரகப் பிரம்மன் தாரக மந்திரத்திற்குத் தலைவனாக இருப்பதால் இந்தப் பெயர் .

*நவ பிரம்மாக்களின்*
கோயில் நவ பிரம்மாக்களுக்கும் தனித்தனியே கோயில்களில் உண்டு . ஆந்திரப் பிரதேசம் , மெகபூப் நகர் மாவட்டம் , அலம்பூர் என்ற ஊரில் உள்ளது .
இக் கோயில்கள் மத்திய அரசு தொல்லியியல் துறையினரால் பராமரிக்கப்படுகின்றன .
🤘🐚ஹரி ஓம் நம சிவாய🔱🤘

🤘🐚 Hari Om Namah Shivaya 🔱🤘
* Spiritual information *
* Who are Nava Brahma's?*

It is said that the Creator God is Brahma Devar, not only the creation business, but also with many forms.
Nava Brahma's are the speciality in that.
This November Brahma's formations are in the same way, 1. Kumara Brahma,
2. Arkka Brahma,
3. Brave Brahma,
4. Bala Brahma,
5. Paradise Brahma,
6. Karuda Brahma,
7. Vishwa Brahma,
8. Padma Brahma,
9. Taraka Brahma is the name.

* new grands *
Kumara Brahma is born as a son to Thirumal and it indicates that he can understand the penance to do the creative business well.
Arkha Brahma is the Brahma in the solar system.
This Arkap Brahma is worshipped with speciality in the solar system which is part of Sivasanam. Brave Brahma with ignorant monsters
This is about the war goal.
Bala Brahma Athri – Anusuya is a child crawling with the couple.
Paradise Brahma is the protector of the heaven where the people who are exalted by the Yakadis live.
Karuda Brahma once taught Brahma to the sages who were in the form of a bird with a hawk form.
That is why he was called Karuda Brahma.
When Visava Brahma created the world, he is named as Vishwa Brahma.
This name is because Padma Brahma appeared from Thirumal's Nabi and sits in Padmasanam in Lotus.
This name is because Tharagap Brahma is the head of Tharagam Mantra.

* New Brahma's *
Even the new Brahma's of the temple are there in temples alone. Andhra Pradesh is located in a town of Alambur, Megboob Nagar District.
These temples are maintained by the Central Government Archaeological Department.
🤘🐚 Hari Om Namah Shivaya 🔱🤘

#துத்தி_இலை_மருத்துவ_தகவல்கள் ~“~“~“ “~“~“~ துத்தி பொதுவாக இனிப்புச் ச…

#துத்தி_இலை_மருத்துவ_தகவல்கள்
~“~“~“ 🌷🧩🌷 “~“~“~
துத்தி பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும். ❀ஷ•ரு❀

துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும்; காமம் பெருக்கும்; இருமலைக்குறைக்கும்; ஆண்மையைப் பெருக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும். துத்தி விதை இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது.

துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு.

மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலைகளுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வீட்டு வைத்திய முறையாகும்.

துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும்.

https://www.facebook.com/groups/1084958198353088/?ref=share

துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.

வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்தக் காலத்தில், புளி, காரம், மாமிசம் நீக்கிய உணவைச் சாப்பிட வேண்டும், புகைப்பிடித்தல் கூடாது.

20 மி.லி. பூச்சாற்றுடன், சிறிதளவு கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இரத்த வாந்தி கட்டுப்படும்.
துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும்.

துத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும்.

துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.🌷

மகிழ்வித்து மகிழுங்கள் மிக்க மகிழ்ச்சி🍁🍃