விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் ! நமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள …

விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் !

நமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள உதரவிதானம் என்ற தசைப்பகுதி தான் நாம் சுவாசிக்க உதவி செய்கிறது.

மூச்சை உள்ளிழுக்கும்போது, இந்த உதரவிதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை நிரப்பவும், மூச்சை வெளிவிடும்பொழுது மேலேறி நுரையீரலை அழுத்தி காற்று வெளியேறவும் உதவி செய்கின்றது.

விக்கல் இங்கிருந்துதான் துவங்குகின்றது. சில சமயங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ஹிக் ஹிக் என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல்.

ஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் போது விக்கல் நிற்பது ஏன்?

பயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன. இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.

விக்கல் வருவதற்கான காரணங்கள் :

உணவை வேகமாகச் சாப்பிடுதல்.

அளவுக்கு மீறிய உணவை உண்ணுதல்.

வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்துதல்.

அளவிற்கதிகமாக மது அருந்துதல்.

வயிற்றில் திடீரென ஏற்படும் வெப்பமாற்றம்.

தீர்வுகள் :

விக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10 – 20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம்.

ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

நன்றிகளும்
பிரியங்களும்.

சந்தனத்தின் 14 இயற்கை நன்மைகள் 1. படர்தாமரை சந்தனக் கட்டையை எலுமிச்சை பழச்சாறில…

சந்தனத்தின் 14 இயற்கை நன்மைகள்

1. படர்தாமரை சந்தனக் கட்டையை எலுமிச்சை பழச்சாறில் ஊறவைத்து தடவ முகப்பரு, படர்தாமரை நீங்கும்.

2. முகத்தில் வரும் சிறு கட்டிகள் சந்தனத்தை அடிக்கடி முகத்தில் பூசி காயவிட்டு முகம் கழுவி வர சூட்டினால் முகத்தில் வரும் சிறுகட்டிகள் வராது.

3. பொலிவற்ற முகம் சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து முகத்தில் பூசி வர வசீகரம் உண்டாகும்.

4. முகப்பரு அள்ளி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பரு ஒழியும்.

5. இருதய வலி அதிக மார்புத் துடிப்பு சந்தனத்தூள் கஷாயம் செய்து குடித்து வர மார்புத் துடிப்பு,இருதய வலி குணமாகும்.

6. அலர்ஜி குறைய அலர்ஜி குறைய சந்தனத்தை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து கூழ் போல செய்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மீது தடவி வந்தால் அலர்ஜி குறையும்.

7. முகம் வசீகரம் பெற சந்தன கட்டையை எலுமிச்சை சாற்றில் உரைத்து முகத்தில் பூசி வர முகம் வசீகரம் பெறும்.

8. வியர்க்குரு குறைய வியர்க்குரு குறைய சந்தனத்தை பன்னீருடன் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி வர வியர்க்குரு குறையும்.

9. முகப்பரு,படர்தாமரை சரியாக சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் உரைத்து முகத்திற்கு பூசி வர முகப்பரு,படர்தாமரை சரியாகும்.

10. மார்பு வலி குறைய மார்பு வலி குறைய சந்தனத் தூளை எடுத்து தண்ணீரில் காய்ச்சி வடிக்கட்டி குடித்து வந்தால் மார்பு வலி குறையும்.

11. உடல் உஷ்ணம் குறைய தாமரை இலைகளை எடுத்து நன்கு அரைத்து,இதோடு சந்தனதைக் குழைத்து உடலில் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.

12. நீர்க்கடுப்பு குறைய சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து அரைக்கால்படி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

13. தலைவலி குறைய தலைவலி குறைய எட்டிமர விதையை சந்தனக் கட்டையில் உரசி நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

14. வெண்குஷ்டம் தீர வெண்குஷ்டம் தீர சந்தனத்தை எலுமிச்சை சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.

உங்கள் உதடுகளை அழகுப்படுத்த சில குறிப்புகள்.; உதடுகளை கவர்ச்சியாக அழகுபடுத்த வி…

உங்கள் உதடுகளை அழகுப்படுத்த சில குறிப்புகள்.;

உதடுகளை கவர்ச்சியாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகுச்சாதனப் பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியும் அழகுப் பெற செய்யலாம்.

💋 ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து அடிக்கடி உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுகள் அழகு பெறும்.

💋 தினமும் ஆலிவ் ஆயிலுடன் இலவங்க பட்டை பவுடர், சிறிதளவு உப்பு ஆகியவற்றைக் கலந்து உதட்டில் பூசி, சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால் உதடுகள் பொலிவு பெறும்.

💋 ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை அடிக்கடி பயன்படுத்தலாம். தேனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும், பளபளப்புடனும் இருக்கும்.

💋 ஏனெனில் தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

💋 உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவும் உதவுகிறது. புதினாவை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து தினமும் உதட்டில் பூசி வர வேண்டும். அவை உலர்ந்தவுடன் கழுவினால் உதடுகள் அழகு பெறும்.

💋 குங்குமப்பூ உதட்டில் உள்ள கருமை நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

💋 இஞ்சியும் உதடுக்கு பொலிவு தரும். தேங்காய் எண்ணெய், சர்க்கரை, இஞ்சி தூள், ஜாதிக்காய் பொடி, இலவங்க பட்டைத்தூள் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் போல் குழப்பி உதடுகளில் பூசி வரலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் மிருதுவாக காட்சியளிக்கும்.

💋 அடிக்கடி கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.

💋 பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிக எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு அடிக்கடி தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

💋 வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா…

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?

பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் – டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார்க் முத்திரை எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில் ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்தது. இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். தனது கடையை நம்பி வந்தவர்களின் நாவுக்கு ருசியான காபியைத் தருவதில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தவர் கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர்.

இதனால் அக்கம் பக்கத்து மிராசுகள் எல்லாம் வண்டி கட்டி வந்து கிளப் டிகிரி காபிக்காகத் தவம் கிடந்தார்கள். பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் அப்போதே காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் நம்பர் ஒன் தரத்தை எடுத்து அதில் ஒரே ஒரு முறை மட்டுமே டிகாஷன் எடுத்து மணக்க மணக்க ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார் பஞ்சாமி ஐயர். இதற்காகத் தனது ‘கிளப்’பின் பின்புறம் பிரத்யேக மாட்டுப் பண்ணையே வைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே அதில் இருபதுக்கும் குறையாத பசு மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன என்றால் பஞ்சாமி ஐயரின் பொருளாதாரப் பலத்தை ஊகித்துக் கொள்ளுங்கள்.

கும்பகோணம் மற்றும் அதன் அக்கம் பக்கத்தில் மட்டுமே தெரிந்திருந்த பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். இதனால் போகுமிடமெல்லாம் ‘குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்’ என்று பேச ஆரம்பித்தார்கள். இதுவே பேச்சு வழக்கில் கும்பகோணம் டிகிரி காபியாகிப் போனது.

கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கும்பகோணம் டிகிரி காபியும் பிரபலமானது. பஞ்சாமி ஐயரைத் தொடர்ந்து இன்னும் பலர் கும்பகோணம் பகுதியில் டிகிரி காபி கடைகளைத் திறந்தார்கள். என்றாலும் 1960 தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்.

இப்போதும் கும்பகோணத்தில் டிகிரி காபி கடைகள் பல இருக்கின்றன. ஆனால், அவர்கள் யாரும் ‘கும்பகோணம் டிகிரி காபி கடை’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. இது குறித்து நம்மிடம் பேசினார் கும்பகோணத்தில் டிகிரி காபி கடை வைத்திருக்கும் ‘முரளீஸ் கபே’ உரிமையாளர் முரளி

“பித்தளையில் டம்ளர் – டவரா ‘செட்’டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார். மத்தவங்க ஒரு தடவ காபித் தூள் போட்டா அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க. ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவதான் டிகாஷன் எடுப்பாரு. இப்படியெல்லாம் செஞ்சுதான் தன்னோட காபிக்கு ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைச்சிருந்தாரு.

அதுபோல, டிகிரி காபிக்கும் பித்தளை ‘டம்ளர் – டவரா செட்’ட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளர் – டவரா ‘செட்’ல டிகிரி காபியைக் கொடுத்தாங்க. அப்ப எவர்சில்வரும் அவ்வளவா புழக்கத்தில் இல்லை. அதுவுமில்லாம மத்த பாத்திரங்களைவிடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும். கும்பகோணம் டிகிரி காபியைப் பித்தளை பாத்திரங்கள்ல குடுத்ததுக்கு இதுதான் காரணம்” என்று கும்பகோணம் டிகிரி காபி ரகசியத்தைச் சொல்லி முடித்தார் முரளி தி ஹிந்துவில்.

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள் திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவ…

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்
திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.

பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்கும். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறது. சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.

சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவைகளை குறைக்கிறது.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.

பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.

பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.

காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..

பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.

இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு அகலும்..

மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.

கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.

Sri Shiragiri Velavan, profile picture

ஓட்ஸ் இட்லி.: தேவையான பொருட்கள்.: ஓட்ஸ் -1 கப் ரவை- 1 கப் கேரட்- 2 எண்ணெய்-…

ஓட்ஸ் இட்லி.:

தேவையான பொருட்கள்.:
ஓட்ஸ் -1 கப்
ரவை- 1 கப்
கேரட்- 2
எண்ணெய்-2 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை -10
கொத்தமல்லி இலைகள் ஒரு கையளவு
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு 10
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் 3
தயிர் 1/4 கப்
உப்பு தேவையான அளவு
பேக்கிங் சோடா 1/4 தேக்கரண்டி.

செய்முறை:
இரண்டு கேரட்களையும் தோல் சீவி துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் ஓட்ஸை சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சேர்க்கவும். பின்னர் கடலைப்பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். துருவிய கேரட் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ரவா சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இப்பொழுது அரைத்து வைத்த ஓட்ஸை சேர்க்கவும். மிதமான சூட்டில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸ் ரவா கலவையை சேர்த்து அதனுடன் தாளித்த கலவையை சேர்க்கவும். மேலும் பேக்கிங் சோடா தயிர் மற்றும் உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு தேவையான தண்ணீரையும் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

பின்னர் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி 8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். சுவை மிகுந்த ஈட்ஸ் இட்லி தயார். இவை சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா? *சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*… நாம்…

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*…

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்…

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,

சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது*…

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது…

*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது*.

*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.

*மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை
மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு
ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக

அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்…

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்…

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்…

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்
சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்…

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்…

*சாப்பிடும் முறை*…!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்…

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது…

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்…

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்…

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…

12. சாப்பிட வேண்டிய நேரம்…காலை – 7 to 9 மணிக்குள் மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்…

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு (விவசாயிக்கு)நன்றி சொல்ல மறக்காதீர்கள்…

*அமருங்கள் சம்மணமிட்டு*.

படித்ததில் பிடித்தது.. நன்றி தோழி கலாவதி❤️

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்! ஆண்களுக்கு ஏற…

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்!

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:

தர்பூசணி

தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – 1 எலுமிச்சை – 3

தயாரிக்கும் முறை

தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.

பின் அதை நன்கு அரைத்து 1 லிற்றர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை

சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.

குறிப்பு

இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.

பக்கவிளைவுகள்

இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம் இது.

Sri Shiragiri Velavan, profile picture

இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!! வீட்டில் இருக்கும் அனை…

இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம். இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது. இத சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.

தேவையான பொருட்கள்:

சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா – சிறிதளவு
கிராம்பு – 7
தண்ணீர் – 750 ml
உப்பு – தேவையான அளவு

சூப் செய்முறை : ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.

10 நிமிடங்கள் : ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)

சூப் ரெடி : பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.

இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்:
மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்
மொத்த கொழுப்பு: 0.5 கிராம்
சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்
சோடியம்: 603 mg
மொத்த கார்போ ஹைடிரேட்: 3%

சளித் தொல்லை : இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்

Sri Shiragiri Velavan, profile picture

#வெண்பொங்கல்_புராணம் படித்து ரசித்த பதிவு ஸ்லீப்பிங் டோஸ்.. சாப்பிட்டாலே மந்த…

#வெண்பொங்கல்_புராணம்

படித்து ரசித்த பதிவு

ஸ்லீப்பிங் டோஸ்.. சாப்பிட்டாலே மந்தமா இருக்கும்.. என்றெல்லாம் கிண்டலடிக்கப்படும் வெண்பொங்கல் உண்மையில் ஒரு சமச்சீரான சத்துகள் நிறைந்த உணவாகும்.. வெண் பொங்கலுக்கான லட்சணம் என்னவென்றால் அரிசி எப்போதும் விறைப்பாக ஹெச்.ராஜா போல இல்லாமலும் புன்னகையை வழிய வழிய பூக்கும் எடப்பாடி சிரிப்பு போல மிகக் குழைவாக இல்லாமலும் வெந்திருக்க வேண்டும்.!

அதாவது ஐஸ்க்ரீமை ஸ்கூப்பில் வழித்து உருண்டையாக கிண்ணத்தில் கவிழ்ப்பார்களே.. அந்த உருண்டை போல கரண்டியில் இருந்து தட்டில் உருண்டையாக பொங்கல் விழ வேண்டும் அதுவே நல்ல வெண்பொங்கலுக்கான பதம்.. வெண்பொங்கலுக்கான சரியான இணை இன்றுவரை சாம்பார் மட்டுமே.. இரண்டாமிடம் தேங்காய் சட்னிக்கு.. செட்டிநாட்டு சமையலில் குட்டிக் குட்டி சதுரமாய் கத்திரிக்காய் வெட்டி தண்ணீர் போன்ற கொத்சு சாம்பார் இதற்கு அதகளமாய் இருக்கும்.!

சாம்பாரிலும் சின்னவெங்காயம் போட்டு அரைத்து விட்ட சாம்பார் என்றால் ஆஹா.. இரண்டு கரண்டி பொங்கல் எக்ஸ்டிராவாக நாக்கு கேட்கும்.. வெண்பொங்கலுக்கு சூடான மொறு மொறுப்பான மெதுவடை எம்.ஜி.ஆர் சரோஜா தேவி ஜோடி போல என்றாலும் ஆகச்சிறந்த சைடிஷ்.. சிவாஜி பத்மினி ஜோடி போல சாம்பார் வடை தான்.! இதிலும் சாம்பார் வடையின் லட்சணம் இருக்கிறது.. குலாப் ஜாமூன் போல மெத்தென்று ஊறி வெறும் ஸ்பூனிலேயே கத்தி போல அறுபடும் பதத்தில் நல்ல சூடான சாம்பாரில் மூழ்கியிருக்கவேண்டும்!

கமல் சார் ட்வீட் போல ஊறியும் ஊறாமலும் கணிக்க முடியாத பதத்தில் இருக்கும் சாம்பார்வடை பந்திக்கும் தொந்திக்கும் ஆகாது. பொங்கலை கொதிக்க கொதிக்க சாப்பிடக் கூடாது.. அதன் குழைவுத் தன்மையால் விரல்நுனிகளில் ஒட்டிக் கொள்ளும்.. சூடு தாங்காது விரல்களும் பிறகு நாக்கும் பாதிக்கப்படும்.. பொங்கலை அளவான சூட்டில் சாப்பிடுவது நல்லது! பொங்கலை நடுவில் குழைத்து சாம்பாரை..

இரண்டு கரண்டி ஊற்றி ஒரு அணை போல தேக்கி வைத்துக் கொண்டு சாப்பிடவேண்டும்.. பொங்கலை சாம்பாரில் கொஞ்சம் குழைத்து பிறகு சட்னியில் தோய்த்து ஒரு சிறு விள்ளல் சாம்பார் வடையுடன் சாப்பிடுவது சாலச் சிறந்தது.. பொங்கலை அள்ளிச் சாப்பிடும் ஒவ்வொரு முறையும் மிளகும் முந்திரியும் இருக்கும்படி இருந்தால் திவ்யம்.. முந்திரியை தனியே வறுத்து பொங்கலில் சேர்ப்பதே சரி!

குதிரைகளில் அரபு ஜாதிக் குதிரை என்னும் ஒரு உயர் இனக் குதிரை உள்ளது போல பொங்கலில் சவுராஷ்டிரா சமூகத்து பொங்கல் ஒரு தனி அடையாளம்.. அவர்கள் செய்யும் குழைவில்லாத பொங்கலுக்கு மட்டும் இறைவன் ஒரு சிறப்பு வரம் அளித்துள்ளான்.. அதிலும் பொங்கலுக்கு அவர்கள் வைக்கும் புளி மிளகாய் இஞ்சி சட்னி கைவிரல் ரேகை பாஸ்வேர்ட் போல! அவர்கள் செய்யும் பொங்கலுக்கு மட்டுமே அது அபார இணையாக இருக்கும்!

மதுரையில் முன்பு மேலமாசி வீதி ஆரியபவன் பை-நைட்டில் கிடைக்கும் பால் பொங்கல் மதுரையில் செம ஃபேமஸ்.! 1996லேயே ஒரு பொங்கல் விலை ₹17/- அதற்கு அற்புதமான சாம்பார் வடையும் அதன் விலை ₹10/- தண்ணீருக்கு பதில் அரிசியை பசும்பால் கலந்த நீரில் வேக வைத்து முழு முந்திரிப்பருப்பும் கமகமக்கும் நெய் வாசனையுடன் ஒரு டென்னிஸ் பந்தின் அளவு தான் ஒரு பொங்கல்.!

மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அலை மோதுவார்கள்.. 20 பொங்கல் 15 பொங்கல் என பார்சல்கள் பறக்கும்.. மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த பொங்கல் உற்சவம் இரவு 11 மணிவரை சிறப்பாக நடக்கும்.. இன்று கால மாற்றத்தில் பாஸ்தா பொங்கல், மேகி பொங்கல், வெஜிடபிள் பொங்கல், என பொங்கல் பல அவதாரங்கள் எடுத்து இருந்தாலும் எப்போதும் மகாராஜா வெண்பொங்கல் தான்.!

இறுதியாக ஒன்று பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வரலாம்.. நிச்சயம் துக்கம் வராது.. தமிழக கோவில்களில் அதிகம் தரப்படும் சூப்பர் ஸ்டார் பிரசாதம் வெண் பொங்கல் தான்.! சில கோவில்களில் தரும் வெண்பொங்கல் பிரசாதங்கள் நாள் முழுவதையும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.. இது பொய்யில்லை நான் உ(க)ண்ட உண்மை.!
ஏவ்வ்வ்வ்..
திருப்புகழை பாடபாட வாய் மணக்கும் என்பார்கள். படித்த பின் மனம் தேடுகிறது/ பறக்கிறது எங்கே மதுரை பால் பொங்கல் என்று?

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த உணவு பொங்கல்

— with Kannan Thodur Madapusi.