அம்மை நோய் விரைவில் குணமாக / தடுக்க எளிய இயற்கை வைத்திய மருத்துவ குறிப்புகள்: ம…

அம்மை நோய் விரைவில் குணமாக / தடுக்க எளிய இயற்கை வைத்திய மருத்துவ குறிப்புகள்:

மருத்துவ குறிப்பு 1 :
அம்மை நோய் விரைவில் குணமாக வேப்பிலை படுக்கை என்பது அவசியமாகிறது. மெல்லிய ஆடையை உடுத்துக்கொண்டு தரையில் ஒரு துணி போட்டு அதன் மேல் வேப்பிலை போட்டு படுத்திருந்தால் இந்த நோயின் தாக்கம் குறையும்.

மருத்துவ குறிப்பு 2 :
அம்மை நோய் அதிக அளவில் பரவுவதற்கும், அந்த நோயால் ஏற்பட்ட குப்பளங்களின் தழும்புகள் எளிதில் மறையவும் வேப்பிலை உதவுகிறது. அம்மை நோய் உள்ள காலங்களில், உடல் முழுவதும் நிறைய அரிப்பு இருக்கும். அந்த சமயத்தில் விரல்களால் சொறியக்கூடாது. மாறாக வேப்பிள்ளையை எடுத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி விட வேண்டும். இதனால் அந்த கொப்பளத்தில் இருந்து வடியும் நீர் வேறெங்கும் பரவாமல் இருக்கும்.

மருத்துவ குறிப்பு 3 : மலை வாழைப்பழத்தை உண்பதற்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் அம்மையால் வயிற்றில் ஏற்பட்ட ரணங்கள் ஆறும். 20 வேப்பிலை இலைகளை எடுத்துக்கொண்டு அதோடு சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு சுண்டும் வரை காய்ச்சி அதை குடிக்க வேண்டும். இதன் மூலம் அம்மை விரைவில் குணமாகும்.

மருத்துவ குறிப்பு 4 :
அம்மை இறங்கும் சமயத்தில் குளிக்கும் போது வேப்பிலையையும் மஞ்சளையும் கலந்து நன்கு மைபோல் அரைத்துக் கொண்டு உடல்முழுக்கப் பூசிக்கொண்டு சிறிது நேரங்கழித்து மஞ்சள்தூள் கலந்த வேப்பிலையை ஊறவைத்த குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக்கொள்ள அம்மைநோய் முழுவதுமாக நீங்கும்.

மருத்துவ குறிப்பு 5 :
அம்மை நோய் பரவ முதல் காரணம் இந்நோயின் தொற்றும் தன்மை என்று ஏற்கனவேக் கண்டோம். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் சில நாட்களுக்கு உடல்ரீதியாக நெருங்காமல் இருப்பதால் இந்நோய்த் பரவலைத் தடுக்க முடியும். அதோடு அவர்கள் பயன்படுத்திய ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை நன்கு துவைக்காமல் பயன்படுத்த கூடாது.

: Fwd. மோர் குழம்பு எங்க பாட்டி, அம்மா, இப்போ எனது பெண்டாட்டி, ஆக அத்தனை ப…

: Fwd.

மோர் குழம்பு

எங்க பாட்டி, அம்மா, இப்போ எனது பெண்டாட்டி, ஆக அத்தனை பேறும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட்.

எல்லா குழம்பும் போரடிச்சி போயாச்சினா கைகுடுக்கும் கை இது. கல்யாணம், விசேஷம் எல்லாத்துலியும் மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி பாக்கரச்சேயே பளிச்சுனு வசீகரிக்கும். மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷலிடி இந்த குழம்புக்கு உண்டு. இவர் பிரதம மந்திரி மாதிரி, அகில பாரத சொத்து.

இல்லையா பின்ன. வடக்கே பஞ்சாப்ல மற்றும் மேற்க குஜராத்ல கடிங்கற பேர்ல, கிழக்க பீஹார்ல பாரி கடி, தெற்க புளிசேரி மோர்குழம்புனு பல பெயர வச்சிண்டு பெருமையா வலம் வரவன் ஆச்சே.

தமிழ்நாட்டுலியே, தஞ்சாவூர் மோர்குழம்பு, திருநெல்வேலி மோர்குழம்பு, உப்பு சாறு, மோர் சாத்துமதுனு பல வகைகள் இருக்கு. வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாதிரி, மோர் குழம்ப பொறுத்த வரைக்கும் தான் (காய்) பத்தி கவலையே படவேண்டாம். பச்சை காய்கறி, நீர் காய்கறி, கிழங்கு காய்கறி, வத்தல், எத போட்டாலும், கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சி போன மாமா மாதிரி எல்லாத்தையும் ஏத்துண்டு நல்ல ருசிய குடுக்கற மஹானுபாவன்.

ரொம்ப simple yet very tasty குழம்பு. ரொம்ப stain பண்ணிக்காம பட்டுனு 5 நிமிஷத்துல ட்ரெஸ் செலக்ட் பண்ணற ஆண்கள் மாதிரினு சொல்லலாம். அடுப்புல வச்சி கொதிக்க வெச்சும் பண்ணலாம், பச்சை மோர்குழம்பாவும் பண்ணலாம் (அரைச்சிகலக்கி).

எப்படி பட்ட காய்கறிகள வேணாலும் சேர்க்கலாம்னு சொன்னாலும், வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, இந்த ரெண்டும், எப்படி மகாவிஷ்ணுக்காகவே கோதை நாச்சியார் பிறவி எடுத்தாளோ, அந்த மாதிரி மோர்குழம்புக்குனே பிறவி எடுத்த கறிகாய்கள். ரெண்டும் குழம்புல போட்டா கொழகொழத்து பொயிடும்னு நெனைச்சா, அதுதான் இல்லை, அத சேக்கற விதமா சேத்தா, கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லைனு சொல்லறா மாதிரி, அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது, ஆனந்தமா அனுபவிக்கத்தான் முடியும். அதுவும் மண் சட்டில பண்ணற மோர்குழம்பு, ஆஹா, நம்ம மண்ணுக்கு ஒரு ருசி இருக்குனு ரசிக்க வெக்கும்.

நம்ப பருப்பு உருண்டை மோர் குழம்பு, நார்த் இண்டியன் கடிய நம்ம முன்னாடி மண்டி போட்டு பிச்சை எடுக்க வைக்கும். மஞ்சள் கலர்ல, தேங்காய் எண்ணெய், பளபளக்க, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாம் மிதக்கற மோர்குழம்புல, அங்கயும் இங்கயும், சின்ன சின்ன எலுமிச்சம் பழங்கள் மாதிரி துள்ளி குதிக்கற உருண்டைகள, சூடான சாதத்துல, தேங்காய் எண்ணெய விட்டு பெசஞ்சி, உருண்டைகள உதிர்த்து கலந்து, மோர் குழம்ப விட்டு கலந்து சாப்பிட்டா, வடமதுரைல வெண்ணையும் தயிரையும் அள்ளி அள்ளி சாப்பிட்ட குட்டி க்ருஷ்ணனே அத மறந்து போயிடுவார்னா, அதோட ருசி எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்கோ.

கடி, மலையாள மோர்குழம்பு, தஞ்சாவூர் மோர்குழம்பு, இதுல எல்லாம் வெறும் திக்கான மோர் சேர்த்து பண்ணுவா. ஆனா திருநெல்வேலி மோர்குழம்பு பாதி புளி ஐலம் பாதி மோர் விட்டு பண்ணற பழக்கம். மத்த மோர்குழம்புக்கு, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, ஜீரகம், இல்லைனா துவரம்பருப்பு, தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் அரைச்சு விடுவா.

திருநெல்வேலி மோர்குழம்புல தனியா, கடலை பருப்பு, வரமிளகாய், தேங்காய், கொஞ்சம் வெந்தியம், கொஞ்சம் உளுத்தம் பருப்பு வறுத்து அரைச்சு சேக்கணும் (தேங்காய் பச்சையா அரைக்கணும்). தான் (காய்), தேங்காய் எண்ணெல நன்னா வதக்கி, கொஞ்சம் நீர்க்க கரைச்ச புளி ஜலத்த விட்டு கொதிக்க விட்டு, அதுல அரைச்சு வெச்சத விட்டு கொதிக்க விடணும். தேங்காய், உளுத்தம் பருப்பு இருக்றதால உடனே கெட்டியாயிடும். கடைசியாக தயிர கெட்டி மோரா சிலுப்பி சேத்து, அடுப்ப சிம்ல வெச்சி நுரைச்சி வந்ததும் (கொதிக்க கூடாது) இறக்கிடணும்.

மோர்குழம்புக்கு தேங்காய் எண்ணெய் சரியான ஜோடி (வரதராஜ பெருமாளும், காஞ்சிபுரம் இட்லியும் மாதிரி). தேங்காய் எண்ணெய்ல கடுகு, கறிவேப்பிலை திருமாறினா மணக்க மணக்க திருநெல்வேலிலேந்தே மனுஷால வண்டி புடிச்சி வரவெச்சிடும். எங்க அம்மாக்கு கீழாநத்தம் ஆத்துல இருக்கற பீல் வந்துடும்.

மோர்குழம்ப பண்ணறது ஒரு கலைனா அத சாப்பிடறது அதவிட அழகான கலை. வாழையிலைல சூடா சாதத்த சாதிச்சிண்டு தேங்காய் எண்ணெய விட்டு மோர்குழம்ப விட்டுக்கணும். நன்னா கொழவா வெண்ணெய் மாதிரி பிசிஞ்ச குழம்பு சாதத்துக்கு, எப்படி மஹாலக்ஷ்மி தாயார், பூதேவி தாயார், நீளா தேவி தாயார்னு 3 பிராட்டிகளோட பெருமாள் ஸேவை ஸாதிக்கறாரோ அந்த மாதிரி, ஒரு பருப்பு உசிலி, ஒரு கார கரமது, ஒரு பருப்பு கூட்டு இருந்தா போறும், பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் பிறப்பெடுத்தாலும் சந்தோஷமா சாப்பிடலாம்.

சாதத்துக்கு மட்டும் இல்லை, ஸேவைக்கு திருநெல்வேலி மோர்குழம்பு ஒரு perfect combination. நான் முன்னாடி சொன்னா மாதிரி அரிசி உப்புமாவுக்கு இத தொட்டுண்டு சாப்பிட்டா, அடா அடா, தேவாம்ருதம். அதெல்லாம் ரசிச்சி சாப்பிடற மனுஷாளுக்கு மட்டும் தான் தெரியும்.

FWD.

I fully appreciate the presentation of Kilanatham Iyengar, one correction, in Tirunelveli More Kuzhambu is made with Ketti Thayir whereas it is made with diluted More in other areas particularly Trichy, Tanjore areas.

However as our friend said no Tamarind is added in More Kuzhambu in Tirunelveli Iyer houses. Perhaps In Iyengar houses it may be. However, the way of preparing with Tamarind, Red Chilly etc is called Eriulli kuzhambu.

In our district we have the side dish combination of Vazhakkai Curry. Katharikkai/ Mochai/ Kondakadalai Pitla then Eriseri, Sepan kizhangu or urrukai roast.

These side dishes will add pep Even poor eaters will eat Azhakku Arisi Sadham.

Ultimately ladies will have empty vessels.

Rama Dasar, profile picture

சதகுப்பை (பெண்களுக்கான ஒரு அருமருந்து) அற்புதமான மறுத்துவ பலன்கள்: 1.கருப்பை பல…

சதகுப்பை (பெண்களுக்கான ஒரு அருமருந்து) அற்புதமான மறுத்துவ பலன்கள்:

1.கருப்பை பலமடைய
சதகுப்பை,கருஞ்சீரகம்,மரமஞ்சள் இவற்றை சம அளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை,மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும்.

2.கர்ப்பப்பை கோளாறு குறைய
கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.

3.கர்ப்பப்பை கோளாறு குறைய
கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.

4.ஜீரன சக்தியை அதிகரிக்க
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஜீரன சக்தியை தூண்டும்.

5.தாய்ப்பால் சுரக்க
தாய்ப்பால் சுரக்க சதகுப்பை கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

6.வயிற்றுப் பொருமல் குறைய
வயிற்றுப் பொருமல் குறைய சதகுப்பைக் கீரையுடன் சோம்பை அரைத்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல் குறையும்.

7.இரத்த அழுத்த நோய் குறைய
இரத்த அழுத்த நோய் குறைய கருங்காலிப்பட்டை, சத குப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து சுண்டவைத்து சாப்பிட இரத்த அழுத்த நோய் குறையும்.

8.இரத்த சோகை குறைய
இரத்த சோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும்.

9.கபம் குறைய
சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும்.

10.பசி உண்டாக
மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி வடிகட்டிய தூளை தேன் சேர்த்து சாப்பிட்டால்முறையாக பசி ஏற்படும்.

11.வயிற்று வலி குறைய
ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி கொடுத்துவர வயிற்று வலி குறையும்.

12.வாதநோய் குறைய
சதகுப்பை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.

13.காய்ச்சல் குறைய
இஞ்சி மற்றும் புதினா கீரை சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்.

14.காய்ச்சல் குறைய
பற்பாடகம், நிலவேம்பு,சீரகம்,சுக்கு,அதிமதுரம் இவைகளை நைத்து சுண்டக்காய்ச்சி குடித்து வர காய்ச்சல் குறையும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… * வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தி…

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால்,முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும்,முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால்,கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

Sri Shiragiri Velavan, profile picture

அமெரிக்கா வரை செல்லும் ஆட்டையாம்பட்டி கைமுறுக்குகள்..! சேலம் மாவட்டம், அரியானூ…

அமெரிக்கா வரை செல்லும்
ஆட்டையாம்பட்டி கைமுறுக்குகள்..!

சேலம் மாவட்டம், அரியானூர் டூ திருச்செங்கோடு சாலையிலுள்ள ஆட்டையாம்பட்டி, மருளையம்பாளையம் இரண்டு ஊர்களும் ருசியான மொறு மொறு கைமுறுக்குக்கு பேர் பெற்ற ஊர்கள்.

இந்த இரண்டு ஊர்களிலும் பரம்பரை பரம்பரையாக பல குடும்பங்கள் பாரம்பரியம் மணக்கும் கைமுறுக்கு சுட்டு தினசரி விற்பனை செய்து வருகின்றன.

சுற்றுவட்டார மக்கள் மற்றும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் இங்கு தேடி வந்து சுடச்சுட கைமுறுக்கு வாங்கி செல்கின்றனர்.

கார்அரிசி மாவு கிரைண்டரில் ஆட்டப்பட்டு அதனுடன் பொட்டுக்கடலைமாவு,எள்ளு ,சீரகம் சேர்த்து முறுக்கு மாவு பிசையப்படுகிறது.

பின்பு பல அளவுகளில் முறுக்கு கையினால் பின்னப்படுகிறது…! இப்பபகுதி பெண்கள்,மாணவிகள் பகுதி நேரமாக முறுக்கு பின்னி பணம் சம்பாதிக்கின்றனர்.

ஒரு சாக்கு பரப்பளவு முறுக்கு பின்ன கூலி ரூ10, அதை எண்ணையில் போட்டு முறுக்கு சுட்டு எடுக்க கூலி ரூ5 தரப்படுகிறது.

விறகு அடுப்பில் முறுக்கு சுடப்படுவதால் அதற்கு தனிச்சுவை கிடைக்கிறது.

1ரூ,2ரூ,5ரூ,10ரூ விலைகளில் அதற்கேற்ற அளவுகளில் முறுக்குகள் சுடப்பட்டு உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகின்றன.

முறுக்கு மாவுடன் நிலக்கடலை சேர்த்து தட்டி, தட்டுவடையும் சுட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஆட்டையாம்பட்டி அடுத்து மருளையம்பாளையம் ஊர் ஆரம்பத்தில் முனியப்பன் கோவில் அருகிலுள்ள ராசமாணிக்கம் முறுக்கு கடை ( 90433 47913) வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை பெற்ற ஒரு முறுக்கு கடையாகும்.

இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் சூடான ஆட்டையாம்பட்டி முறுக்குகள் மொறு மொறுவென சூப்பர் ருசியாக இருக்கின்றன.

இங்கிருந்து ஆட்டையாம்பட்டி முறுக்குகளை, அமெரிக்காவிலுள்ள தங்கள் உறவினர்களுக்கு மக்கள் அனுப்பவதாக ராசமாணிக்கம் மிக பெருமையாக கூறினர்.

மேலும் காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேர் திருவிழா நேரத்தில் ஆட்டையாம்பட்டி முறுக்கு விற்பனை படுஜோராக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆட்டையாம்பட்டி முறுக்குகளை10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்…!
குழந்தைகளுக்கு கொடுக்க சுவையான நம்மூர் தின்பண்டம்
ஆட்டையாம்பட்டி முறுக்கு ஆகும்.

உடலுக்கு தீங்கில்லாத, எந்த இரசாயன கலப்பும் இல்லாத ஆட்டையாம்பட்டி கைமுறுக்குகளை ,கிராமிய பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் உள்ளூர் உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இனி அடிக்கடி நாமும் வாங்குவோம்.

உறவினர்கள் நண்பர்களுக்கும் வாங்கி தருவோம்…!

நன்றி…!
வாழ்க வளர்க ஆட்டையாம்பட்டி
கைமுறுக்குத் தொழில்…!

நன்றிகளும்
பிரியங்களும்.

முடி உதிர்வை உடனே தடுக்க வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தடவினாலே போதும்..! ம…

முடி உதிர்வை உடனே தடுக்க வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தடவினாலே போதும்..!

முடி உதிர்வு, அடர்த்தி குறைவு, வழுக்கை, நரை முடி, இப்படி முடியில் மட்டுமே எக்கசக்க பிரச்சினைகள் இருக்கிறது. முடியில் ஏற்பட கூடிய இந்த பிரச்சினைக்கு நாம் தான் முதல் காரணமாக உள்ளோம். முடியை சரியாக பராமரிக்காமல் இருத்தல், தேவையற்ற உணவுகளை சாப்பிடுதல், அளவுக்கு அதிகமான வேதி பொருட்களை முடியில் பயன்படுத்துதல் போன்றவை தான் முடியில் ஏற்பட கூடிய எல்லாவித பிரச்சினைகளுக்கும் காரணம்.

முடி உதிர்வை உடனே தடுக்க வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தடவினாலே போதும்..!
இதை சரி செய்ய ஏதேதோ வழிகளை தேடும் நாம் இயற்கையில் உள்ள வழிகளை மறந்து விடுகின்றோம். இயற்கை ரீதியாகவே முடியின் எல்லாவித பிரச்சினைகளுக்கும் தீர்வை வழி விடலாம். அதுவும் இந்த கருப்பு எண்ணெயை வைத்து முடியின் அனைத்து பிரச்சினைக்கு தீர்வை கண்டு விடலாம். இதை பற்றி இனி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

கருப்பு எண்ணெய்யா?
கருப்பு எண்ணெய்யா?
இது வரை பலரும் இந்த வகை கருப்பு எண்ணெயை கேள்வி பட்டிருக்க மாட்டீர்கள். இது வெறும் கருஞ்சீரகத்தில் இருந்து தயாரித்த எண்ணெய் தான். இதை வைத்து நம்மால் எல்லாவித முடி பிரச்சினைகள் மற்றும் முக பிரச்சனைகளை தீர்வுக்கு

கொண்டு வந்து விடலாம். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தான் இதன் மகிமைக்கு காரணம்.

வழுக்கைக்கு
வழுக்கைக்கு
வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வைக்க இந்த குறிப்பை செய்து பாருங்கள். இதற்கு தேவையான பொருட்கள்

ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

கருஞ்சீரக எண்ணெய் 2 ஸ்பூன்

ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் ஆலிவ் எண்ணெய்யை கருஞ்சீரக எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் வேகமாக முடி வளரும்.

முடி வளர்ச்சிக்கு
முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியாக வளர இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை…

தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

கருஞ்ஜீரக எண்ணெய் 2 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் 1 1/2 ஸ்பூன்

ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

14 இரவுகள் இந்த எடை குறைப்பு உணவு சாப்பிட்டு 5 கிலோ குறைங்க!
தூங்கும் போது எடையை குறைக்கும் #1 ஃபார்முலா
தூங்கும் போது எடையை குறைக்கும் #1 ஃபார்முலா

தயாரிப்பு முறை
முதலில் மேற்சொன்ன எல்லா எண்ணெய்களையும் ஒன்றன் பின் ஒன்றான நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை இறுதியில் கலந்து முடியின் வேர்களில் தடவவும்.

20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி சட்டென வளரும்.

பருக்களுக்கு
முகம் முழுக்க பருக்களினால் மூடப்பட்டிருந்தால் அதை சரி செய்ய எளிய வழி உள்ளது. பருக்கள் மற்றும் எரிச்சல் கொண்ட இடங்களில் இந்த கருஞ்சீரக எண்ணெயை தடவி வந்தால் மிக சீக்கிரத்திலே பருக்கள் மறைந்து போகும்.

இளமையை பெற
நீண்ட காலம் இளமையாக இருக்க சிறந்த வழிகளில் ஒன்று கருஞ்சீரக எண்ணெய் தான். இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று உங்களை நீண்ட காலம் இளமையாக வைத்து கொள்ளும். மேலும், சருமத்தில் எந்த பிரச்சினைகளும் உண்டாகாது.

Sri Shiragiri Velavan, profile picture

ராகி உருளைக்கிழங்கு மஞ்சூரியன் கிரேவி.: தேவையான பொருட்கள்.: கேழ்வரகு மாவு – அரை…

ராகி உருளைக்கிழங்கு மஞ்சூரியன் கிரேவி.:

தேவையான பொருட்கள்.: கேழ்வரகு மாவு – அரை கப், உருளைக்கிழங்கு – 3,
கேரட் – ஒன்று,
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு, குடமிளகாய் – பாதியளவு (பொடியாக நறுக்கவும்),
பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்,
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை – அரை டீஸ்பூன்,
தூள் உப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை.:
கேழ்வரகு மாவில் அரை டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும்.
கேரட்டைத் துருவிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். ஆவியில் வேகவைத்த மாவுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, அரை டீஸ்பூன் தூள் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

இந்த மாவை உருண்டைகளாகச் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி சாஸ், சோயா சாஸ், அரை டீஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். கார்ன் ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பொரித்த உருண்டைகளைச் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவவும்.

ராகி உருளைக்கிழங்கு மஞ்சூரியன் கிரேவி தயார்

குழந்தை வரம் கொடுக்கும் அற்புத நாட்டு மருந்து இதுதான் தெரியுமா? இளம் வயதில் எதை…

குழந்தை வரம் கொடுக்கும் அற்புத நாட்டு மருந்து இதுதான் தெரியுமா?

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது?

எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.

தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்…

ஆண்மைக்கு ரோஜா குல்கந்து காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

தாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

இனிமையான உறவுக்கு இலுப்பை பூ இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

குழந்தை வரத்திற்கு ஆலம்பழம் சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்து கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

Sri Shiragiri Velavan, profile picture

Fwd சைடு டிஷ் சில உணவுகள் சில உணவுகளுடன் perfect ஆக ஒத்துப் போவது ஏன் என்று நி…

Fwd

சைடு டிஷ்

சில உணவுகள் சில உணவுகளுடன் perfect ஆக ஒத்துப் போவது ஏன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

இட்லி -சட்னி, பூரி-மசால்,

சப்பாத்தி-குருமா, பிரியாணி -பச்சடி ??

contrast என்று சிலர் பதில் சொல்வார்கள்.

அதாவது இட்லியின் சுவையற்ற மென்மை நாக்கில் ஏற்படுத்தும் வெறுமையையை உறைப்பாக இருக்கும் தேங்காய் சட்னி நிரப்புகிறது.

அதே போல வெல்லத்தை அப்படியே சாப்பிட்டால் திகட்டும். நல்ல உறைப்பான அடையுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் இனிப்பு சுவை மட்டுப்படுகிறது.

தயிர்சாதம் -ஊறுகாய்,

பக்கோடா-டீ ,

மிக்ஸர்-காபி

இப்படி இதுக்கு இதுதான் என்று இந்த கல்யாணத்தை செய்து வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.

பலாச்சுளையும் தேனும் , தினைமாவும் தேனும் ஆகச் சிறந்த சங்ககால combinations .

சில சமயம் இந்த combination கள் மீறப்படும்.

சிலதுக்கு அந்நியோன்னியமான pair கிடையாது. உதாரணம் தோசை.

நான் சில சமயம் தோசைக்கு தயிர் தொட்டுக்கொண்டு கூட சாப்பிடுவேன்.

மேல் நாடுகளில் ஒயினும் சீஸும் போல் வாழ்க என்று வாழ்த்தாத குறை தான். இவை இரண்டும் மிகச் சிறந்த pair ஆம்.

ஒயினுக்கும் ஆப்பிளுக்கு ஆகாது

பப்ஸ், சமோசா வகையறாக்களுக்கு நாம் தக்காளி சாஸை நிரந்தர பார்ட்னர் -ஆக வைத்து விட்டோம்.

சிலருக்கு அப்படியே பிளைன் ஆக சாப்பிடுவது தான் பிடித்திருக்கிறது.

அதே போல சில combination கள் விவாதத்துக்கு உரியவை.

பிட்ஸா மற்றும் பைன் ஆப்பிள்.

சிலர் இதை தெய்வீக combination என்றும் சிலர் இதை அய்யே பீட்சாவும் பைன் ஆப்பிளுமா?toxic relationship என்றும் சிலாகிக்கிறார்கள்.

கர்நாடகாவில் பூரிக்கு சாகு (sAgu) என்று அழைக்கப்படும் ஒன்று தான். மசால் கிடையாது.

பல்யா வேண்டும் என்று கேட்டால் வேக வைத்த உருளைக்கிழங்கு தான் தருவார்கள்.

அதே போல ராகி உருண்டைக்கு கீரை குழம்பு சாசுவத சிநேகிதம்.

கேரளாவின் அப்பத்துக்கும் புட்டுக்கும் கடலை கறி ஒத்துப் போகிறது.

அடைக்கு அவியல்

எனக்கு உப்புமாவுக்கு ஊறுகாய் பிடிக்கும்.

தயிர் சாதத்துக்கு உருளைக்கிழங்கு பொரியல்.

தக்காளி ரசத்துடன் கத்திரிக்காய் பொரியல்.

இதே போல உங்களுக்குப் பிடித்த combinations ?

சிலர் வேறெங்கும் traditional ஆக காணக் கிடைக்காத combination களை வீட்டில் உபயோகிப்பார்கள்.

சிலர் சப்பாத்திக்கு சர்க்கரையும் பாலும் விட்டு சாப்பிடுவார்கள்.

இட்லியில் மிளகாய்ப் பொடியில் எண்ணெய்க்கு பதில் தயிர்.

இப்படி உங்களுக்கு தெரிந்த
odd combinations ?? Please share.

One of my relative lady at Putta Parthi
Eat along with Curd Rice Plantain fruits.

தயிர் சாதத்துடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள்.

Rama Dasar, profile picture

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எ…

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

இயற்கை முறைக்கு மாறுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Sri Shiragiri Velavan, profile picture