தமிழ் அறிஞர் பயிற்சி வகுப்பு நம்மில் பலருக்கு தமிழ் இலக்கியங்களையும் ஆன்மீக நூல…

📖தமிழ் அறிஞர் பயிற்சி வகுப்பு💎

நம்மில் பலருக்கு தமிழ் இலக்கியங்களையும் ஆன்மீக நூல்களையும் படித்து பாெருளறிந்து கொள்ள ஆசை இருக்கும்.
ஆனால், எவ்விதம் பிரிக்க வேண்டும் என்று தெரியாது.
அப்படியே பிரித்தாலும் பல பழைய தமிழ் சொற்களுக்கு அர்த்தம் தெரியாது.
இனி கவலை வேண்டாம்.
தமிழ் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான பிரத்யேக வகுப்பு தமிழ் அறிஞர் பயிற்சி வகுப்பு.
🌼ஆம் இந்த குழுவில் இணைந்து பயிலுவதன் மூலம் நீங்கள் ஒரு சிறந்த தமிழ் வல்லுனர் ஆக முடியும்.
🌼உங்களால் எந்த ஒரு தமிழ் இலக்கியத்தையும் ஆன்மீகப்பாடல்களையும் பிரித்து பொருளறிந்து கொள்ளமுடியும்.
ஆன்மீகவாதிகளுக்கு மிகவும் பயன்படும்.
🌼 மேலும் இந்த பயிற்சி வகுப்பில்
இணைவோருக்கு பழைய தமிழ் சொற்களுக்கான அர்த்தம் தரக்கூடிய தமிழ் – தமிழ் அகராதியும் பிடிஎஃப் வடிவில் இலவசமாக அனுப்பப்படும்.
🌼 இந்த வகுப்பில் சொற்களை பிரிக்கும் விதம் மற்றும்அதற்கான பொருளறிய பல விதிமுறைகள் எளிமையாக சொல்லிக்கொடுக்கப்படும்.
🌼 இந்த வகுப்பில் பின்வரும் நூல்களின் பல பாடல்களில் இருந்து பொருள்பதம் விளக்கப்படும்.

💎திருக்குறள்
💎திருமுறைகள்
💎திருவருட்பா
💎நாலாயிரத்திவ்யபிரபந்தம்
💎திருமந்திரம்
💎சித்தர் பாடல்கள்
💎 திருப்புகழ்
இன்னும் பல

🌼 அது தவிர உங்களின் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் நீங்கள் பொருள் தெரிந்து கொள்ள விரும்பும் பாடல்களையும் கேள்வி நேரத்தில்
கூறி அதற்கான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் அமுதத்தை தினந்தோறும் பருக தயாராகுங்கள்.
இந்த ONLINE MOBILE CLASS ROOM குழுவிற்கான அடுத்த பேட்ச் விரைவில் தொடங்க இருக்கிறது.
விரும்புவோர் இணைந்து இன்புறலாம்.
மேலும் இந்த பயிற்சி வகுப்பில் நுழைவுக்கட்டணமாக ரூபாய்.299 செலுத்தி இணைந்து கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்
📱 8667514060
நன்றி
💐💐💐

பாட்டி வைத்தியம் 1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறித…

பாட்டி வைத்தியம்

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.
சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.
குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லையா?
சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.

9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்
11. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.
13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.
14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.
15. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

16. மெலிந்த உடல் பெருக்க கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

17.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
18. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
19. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
20. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.
21. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
22. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.
23. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
24. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.
25. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.
26. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.
27. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.
28. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
29. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
30. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
31. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.-

32. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

33. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது.

34. முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.

35. வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.

36. தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.

37. மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.

38. சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.

39. தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.
40. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் சமப்படும்.

41. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

42. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

43. வயிற்று எரிச்சல் சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

44. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

45. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

46. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.
47. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

48. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

49. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

50. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

51. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலானவற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

52. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

53. சோம்பு (பெருஞ்சீரகம்)பை லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

54. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

55. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.
பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.
வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

56. பெருங்காயம் கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.

57. 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்.

58. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

தகவல்,நன்றி :- திரு.அச்சி முகம்மது இஸ்மாயில்

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam புடலங்காயில் உள்ள சத்துக்களும்…

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
புடலங்காயில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

புடலங்காயில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.

புடலங்காயில் நன்கு முற்றிய புடலங்காய் சாப்பிடுவதை தவிர்த்து, பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி அடைந்த புடலங்காயை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

புடலங்காய் குளிர்ச்சி தன்மை நிறைந்த ஒரு காய் வகையாகும். தினமும் இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.

அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

தலைமுடி தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.

தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
#bairavar #bhairavar #vijayswamiji #bairavapeedam
#கார்த்திகைவிரதம்

#பெண்களின் #மாதவிடாய்_சிக்கலை_போக்க…… தடைபட்ட மாதவிலக்கு சரியாக கருஞ்சீரகத்த…

#பெண்களின்
#மாதவிடாய்_சிக்கலை_போக்க……

🈵 தடைபட்ட மாதவிலக்கு சரியாக

கருஞ்சீரகத்தை தூளாக்கி சிறிதளவு எடுத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.

🈺மாதவிடாய் சீர் செய்யும்
கருஞ்சீரகம் பொடி

கருஞ்சீரகம் – 100 கிராம்,

சுக்கு – 100 கிராம்,

அதிமதுரம் – 50 கிராம்,

ஆடாதொடா – 50 கிராம்,

கண்டங்கத்தரி – 50 கிராம்,

கடுக்காய் – 50 கிராம்.

இவை அனைத்தும் ஒன்று கலந்து அரைத்து தூள் செய்யவும். இதை காலை, இரவு உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமையினால் ஏற்படும் சளி கட்டுப்படும். வயிற்று நோய், குடல் பலவீனம் தீரும். மாதவிடாய் சீர் ஆகும்.

🈶 அசோகா கசாயம்

அசோகமரப்பட்டை – 20 கிராம்

மருதம்பட்டை – 10 கிராம்

ஆவாரம் பூ – 10 கிராம்

திரிகடுகு பொடி – 10 கிராம்

திரிபலா பொடி – 10 கிராம்

இவையனைத்தையும் தூள் செய்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்ட வைத்து காலை, மாலை இரவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகவும், சரியான அளவிலும் இருக்கும்.

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்

வெற்றிலை – 2

சாம்பார் வெங்காயம் – 2

சீரகம் – 1 ஸ்பூன்…

பூண்டுபல் – 2

இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில்
5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.

🔯 மாதவிடாயின்போது தீராத வயிற்று
வலி நீங்கும்.

வெள்ளைப் பூசணி – 100 கிராம்

வெள்ளரி விதை – 10 கிராம்

சாம்பார் வெங்காயம் – 2

வெள்ளை மிளகு – 5 கிராம்

பூண்டு – 2 பல்

பனங்கற்கண்டு – 100 கிராம்

இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.

மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.

#உணவில்……

முருங்கைக்கீரை,

அகத்திக் கீரை,

மணத்தக்காளிக் கீரை,

பசலைக் கீரை,

பிரண்டை,

பாகற்காய்,

சுண்டைக்காய்,

முருங்கைக்காய்,

பப்பாளிப்பழம்,

அன்னாசிப்பழம்,

பேரீச்சம்பழம்,

அத்திப்பழம்

போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக உதிரப் போக்குக்கு சில எளிய மருத்துவக் குறிப்புகள்

👉மாதவிடாய் ஐந்து நாட்களுக்கும் மேலாக நீடித்தால் கண்டிப்பாக இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும்.

கருவேலம் பட்டை,

அசோகம் பட்டை,

மாதுளை ஓடு,

வில்வ ஓடு,

ஆவாரம்பிசின்

ஆகியவற்றை வகைக்கு
50 கிராம் அளவு,

திரிபலா சூரணம் 150 கிராம்.

இவை அனைத்தையும்
நாட்டு மருந்து கடையில் வாங்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும்.

காலை – மாலை ஒரு தேக்கரண்டி அளவு பொடியை மோருடன் கலந்து சாப்பிட்டால், அதிக உதிரப்போக்கு எனப்படும் #பெரும்பாடு நோய் குணமாகும்.

√√ முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.

√√ மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.

√√ பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.

ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம்.

மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் (Fibroid) அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.

இந்த கோளாறு உள்ளவர்கள் தக்க மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நிவாரணம் பெறலாம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனாலும் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் உண்டு.

இது சாதாரணமாக உதிரப்போக்கு நிற்கும் காலத்திற்கு ஓரிரு வருடங்கள் முன்பாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் உணவுமுறை மாற்றங்கள் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்.

மனதை அமைதியான மனநிலைக்கு கொண்டுவர இவ்விரண்டும் உதவும். மேலும் எளிய, சீரணமாகின்ற உணவுகளை சரியான கால அளவில் எடுத்துக்கொள்ளுதல், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பலகாரங்களைத் தவிர்த்தல், நேரம் தவறி உண்பதைத் தவிர்த்தல் இவற்றைக் கடைபிடித்தால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குறைய வழி உண்டு.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்.

#இதற்கு……

கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும்.

🈳 மாதவிலக்கு வலி குறைய

முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்

சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

🈁 வெள்ளைப்படுதல் சரியாக

ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா… வெள்ளைப்படுதல் வராது.

வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா… நல்ல குணம் கிடைக்கும்.

தாமதமான மாதவிடாய்க்கு

👉சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க…

பெருந்துத்தி இலை – 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க… ஒழுங்கா மாதவிடாய் வரும்.

👉மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

👉சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.

👉கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா… மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா… பெரும்பாடு தீரும்.

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா…. மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.

கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.

தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.

முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.

முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.

முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும்.

உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.

கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.

மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.

சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.

ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.

எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.

ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.

வைத்தியர் யாஸீன் வைத்தியர் யாஸீன், profile picture

வெள்ளைத்தேன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பண்டைய காலத்தில் இருமல், சளியில் இருந்த…

வெள்ளைத்தேன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பண்டைய காலத்தில் இருமல், சளியில் இருந்து விடுபட பயன்படுத்திய பொருள் இதுதானாம்!

ஒவ்வொரு வகையான தேனின் சுவையும், நிறமும் மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களும் அவற்றின் பூக்களின் பண்புகளைப் பொறுத்ததாகவே அமைகிறது.

அதில் ஒன்று தான் வெள்ளை தேன். இதனை இதனை மூல தேன் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நேரடியாக தேனீக்களின் கூடுகளில் இருந்து வருபவை ஆகும்.

வெப்பமாக்கல் செயல்முறையின் மூலமாக சில நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன. அதனால்தான் வெள்ளை தேன், சாதாரண தேனை விட மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும், மதிப்புமிக்கதாகவும் கருதப்படுகிறது.

அதில் கலோரிகள் அதிகம் நிறைந்துள்ளன, வைட்டமின் பி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மறைந்துள்ளன.

மருத்துவ நன்மைகள் இந்த தேனில் உள்ளதால் பண்டைய காலங்களில் சளி, இருமல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தொண்டை புண் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவு புரிந்துள்ளது.

அந்தவகையில் தற்போது இந்த வெள்ளைத்தேனில் வேறு என்ன நன்மைகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கிய நன்மைகள் :

• வெள்ளை தேனில் உள்ள ஃப்ரீரேடிக்கல்கள் வயதான செயல்முறைக்கு பங்களிப்பதோடு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

• வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று புண்கள் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க வெள்ளை தேன் பெரிதும் உதவுகிறது.

• காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1 முதல் 2 டீஸ்பூன் வெள்ளை தேனை எடுத்துக் கொள்ளுங்கள். இது வயிற்று வலிக்கு நிவாரணம் அளித்து, அந்த வலியை குணப்படுத்தும் செயல்முறைக்கும் உதவிடும்.

• வெள்ளை தேனில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன. இந்த தேன் சருமத்தை அழகுபடுத்தவும், தோல் காயங்களை குணப்படுத்தவும் பெரிய பங்களிப்பினை வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனங்களிலும் கூட இதை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.

• வெள்ளை தேன் தொண்டை புண்ணை உடனடியாக சரி செய்திட உதவும். அதற்காக, சூடான தேநீரில் எலுமிச்சையுடன் தேனை கலந்து குடிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து உட்கொள்ளலாம்.

வெள்ளை தேனை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் :

• இது பக்கவாதத்திற்கு வழிவகுக்கக்கூடிய, கடுமையான போட்யூலிசத்தை ஏற்படுத்தக்கூடும்.

• குழந்தைகளுக்கு, குறிப்பாக 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, வெள்ளை அல்லது வேறு எந்த வகை தேனையும் கொடுக்கவே கூடாது.

• பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் வெள்ளை தேனை உட்கொண்டால் நோய்வாய்ப்படுவதற்கான ஆபத்து அதிகம்.

• பெரியவர்களில், ஃபுட் பாய்சன், காய்ச்சல் மற்றும் வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளையும் இது ஏற்படுத்தக்கூடும்.

கண் பார்வை திறன் அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்..!!! ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது…

கண் பார்வை திறன் அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்..!!!

ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

நல்ல உணவு முறையும், சீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்…..
கண் பார்வை குறைபாடு – கண் பார்வை சரியாக தெரியவில்லை என்ன செய்யலாம், கண் பிரகாசமாக தெரிய பயிற்சி, கண் பார்வை மங்கல் சரி செய்யலாம், கண் பார்வை திறன் அதிகரிக்க பயிற்சி, கண் பார்வை தெளிவு பெற மேம்படுத்தும் வழிகள்

பயிற்சி 1
—————-

இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். வெளிச்சம் குறைவான இடங்களில் இவ்வாறு பயிற்சி செய்தல் நல்லது.

பயிற்சி 2
—————-

கண்களை இமைத்தல், கணினி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. கண்களை சீரான முறையில் இமைத்து வந்தாலே நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.

பயிற்சி 3
—————–

உற்று நோக்கும் பயிற்சி, கணினியில் வேலை செய்பவர் பலர் இரண்டடி தூர இடைவேளையை மட்டுமே உற்று நோக்கி நாள் முழுதும் வேலை செய்வதால், தொலை தூர பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எனவே, 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது, ஏதேனும் தொலைதூர பொருள்களை உற்று நோக்கி பயிற்சி செய்வது அவசியம்.

பயிற்சி 4
—————-

கண்களில் அதிக அழுத்தமோ, எரிச்சலோ உணர்ந்தால், உடனே நன்கு தண்ணீர் ஊற்றி கண்களை கழுவுங்கள். பின் 5 நிமிடம் கண்களுக்கு ஓய்வளியுங்கள். இது, கண்களுக்கு ஏற்ப அழுத்தத்தை குறைக்க உதவும்.

பயிற்சி 5
—————-

லைசன்ஸ் வாங்க உங்கள் வாகனத்தில் பெரிய "8" போட்டதைப் போல, நீங்களே உங்கள் கண் முன்னே பெரிய எட்டு உள்ளதை போன்று பாவித்து, கண்களாலே எட்டு போட்டு பயிற்சி செய்யுங்கள்.

பயிற்சி 6
—————-

ஜூமிங் (zooming) பயிற்சி, உங்கள் விழிகளுக்கு அருகாமையில் இருந்து தூரம் வரை ஏதேனும் நகரும் பொருளை உற்று நோக்கும் பயிற்சி. உதாரணமாக, கைக் கட்டை விரலை, முகத்திற்கு அருகாமையில் இருந்து தூரம் வரை நகர்த்தி உற்று நோக்குதல்.

பயிற்சி 7
—————-

அதிகாலை நடைப்பயிற்சி, அதிகாலை சூரிய ஒளி மிகவும் நல்லது, புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இது கண்களை அழுத்தமின்றி, இலகுவாக உணர உதவும்.

பயிற்சி 8
—————–

கண்ணாடிகளை சார்ந்து இருக்க வேண்டாம், இது உங்கள் கண் பார்வையை அதிகரிக்க ஒரு போதும் உதவாது, நல்ல உணவும், பயிற்சிகளையும் சீரான முறையில் மேற்கொள்ளுங்கள்.

நன்றி
வாழ்க வளமுடன் நலமுடன்

#மாத்திரையின்றி_மழைகாலம்_மற்றும் #குளிர்கால_நோய்களை_எப்படி #குணப்படுத்தலாம்… …

#மாத்திரையின்றி_மழைகாலம்_மற்றும் #குளிர்கால_நோய்களை_எப்படி #குணப்படுத்தலாம்

காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில நம்ம வீட்டு வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.

குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும் போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

நம்ம வீட்டு வைத்தியங்களின் மூலம் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போது, அது பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்தும். மேலும் நம்ம வீட்டு வைத்தியங்கள் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் அச்சமின்றி எவர் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

🔴 சைனஸ் முதல ஆஸ்துமா வரை ,
ஜலதோஷம், இருமல் தொண்டை கரகரப்பு, சளி, டான்சில்,
மூக்கு அடைப்பு, குணமாக………

💊 இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில், 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கலந்து, அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால், மூக்கடைப்பு நொடியில் குணமாகும்.

💊 சளி பிடித்திருக்கும் நேரத்தில் மூக்கு அடைத்துக் கொண்டால் வெங்காயத்தை சாறு பிழிந்து ஒவ்வொரு சொட்டு விட்டால் மூக்கடைப்பு சரியாகிவிடும்.

💊 மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும் பிறகு கலக்கி
வடி கட்டி எடுத்து இரண்டு சொட்டுகள்
படுத்த வாறு மூக்கில் விட்டுக் கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்…..

💊 திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர சளி,இருமல்,இளைப்பு நோய் குணமாகும்.

💊 திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

💊 திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.

💊 திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாயு குணமாகும்.

💊 மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்.

💊 சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.

💊 நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.

💊 நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

💊 தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

💊 கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டுச் சுவைத்தால் தொண்டைப்புண் ஆறும்.

💊 மிளகு, சுக்கு, திப்பிலி – தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், உள்ளிட்ட கப நோய்கள் அனைத்தும் தீரும்.

💊 கிராம்பை நீர் சேர்த்து மை போல் அரைத்து நெற்றியிலும் , மூக்கிலும் பற்றுப்போட்டால் தலைபாரம் , மூக்கு அடைப்பு போன்றவை குணமாகும்.

💊 அரை கிராம் மிளகுத் தூளுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர தலைவலி, மூக்கடைப்பு தீரும்.

💊 கிராம்புப் பொடியை ( அரை ஸ்பூன் ), இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி , ஆறிய பிறகு ஒரு மணிக்கு ஒருமுறை 30 மில்லி அளவுக்குக் குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும் வயிற்றுப் போக்கும் குணமாகும்.

💊 மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் உடனே நிற்கும்.

💊 10 மிளகை தூளாக்கி அரை லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கஷாயமாக செய்து குடித்து வந்தால் கோழை மற்றும் இருமல் தீரும்.

💊 பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

💊 பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

💊 வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

💊 கிராம்பு , மஞ்சள் , சாம்பிராணி- மூன்றையும் சம அளவு பொடி சேய்து , நெருப்பில் போட்டு புகையை முகர்ந்தால் தலைவலி , தலைபாரம் தீரும்.

💊 கிராம்பு ( 5 ) , சீரகம் ( 2 ஸ்பூன் )- இரண்டையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் பித்தத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும்.

💊கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

💊ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

💊ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

💊வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

💊மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

💊கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

💊வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

💊 அடிக்கடி சளியால் அவதிபடுபவர்களுக்கு மஞ்சள், பால் மற்றும் மிளகு அருமருந்தாக அமைகின்றது.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும்.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் ஒன்றுசேரும்போது, இருமல், சளி பறந்தோடி விடும்.

💊 சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு – கருப்பட்டி காபி குடித்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

1. தண்ணீர் – 1 கப்

2. சுக்கு பொடி – 1 டீஸ்பூன்

3. கருப்பட்டி – 2 டேபிள் ஸ்பூன்

★சுக்கு பொடிக்கு

√ தேவையான பொருட்கள்:

1. உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப்

2. மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

3. சீரகம் – 1 டீஸ்பூன்

4. மிளகு – 1 டீஸ்பூன்

5. பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

1. சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

3. பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான சுவையான கருப்பட்டி காபி ரெடி!!!

💊 சளி, தொண்டை வலிக்கு இதமான மிளகு – சீரக சாதம்

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மிளகு, சீரக சாதம் இதமாக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி – 2 கப்

மிளகு – 3 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 1

நெய் – 3 முதல் 4 டீஸ்பூன் வரை

முந்திரிப்பருப்பு – சிறிது

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – 1 டீஸ்பூன் அல்லது
தேவைக்கேற்றவாறு

செய்முறை

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.

* வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.

* சத்தான மிளகு, சீரக சாதம் ரெடி.

கவனிக்க

அதிக காரம் விரும்பாதவர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும். அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்.

🔴 சளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து

ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், #திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த மருந்தாகும்.

உடலின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக விளங்கும், இதன் பலன்கள் ஏராளம். இதனை தேநீர் தயாரித்து ஜலதோஷத்தை எவ்வாறு போக்குவது என்பதை பார்ப்போம்.

தேநீர் செய்ய

இப்படி அரும்பெரும் ஆற்றல் கொண்ட, திரிகடுக சூரணத்தை இரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்து மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை, சுண்டக் காய்ச்ச வேண்டும். அதன்பின் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சற்று சூடு தணிந்த பிறகு, சிறுகச் சிறுக பருகி வரவேண்டும். இதுவே திரிகடுக தேநீர் ஆகும்.

★நன்மைகள்

திரிகடுக தேநீர் மூக்கு அடைப்பு,சளி,
ஜலதோசத்தை போக்கும், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே,உடல் நிலை சரியாகிவிடும்.

💊ஆடாதோடைக் குடிநீர்💊

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

💊 துளசி குடிநீர் 💊

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

🔯 சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும்.

10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும்.

600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

🔯 சுவையான ஆரோக்கியமான
துளசி டீ 💊

தேவையான பொருட்கள்

துளசி – 1 கப்

தண்ணீர் – 2 கப்

டீத்தூள் – 2 ஸ்பூன்

தேன் அல்லது கருப்பட்டி – சுவைக்கு

பால் – தேவைக்கு

செய்முறை

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் துளசி இலையை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

* அடுத்து டீத்தூள், கருப்பட்டியை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டவும்.

* தேவையான அளவு பாலை ஊற்றி பருகவும்.

* சுவையான ஆரோக்கியமான துளசி டீ ரெடி.

* தேன் பயன்படுத்துவதாக இருந்தால் குடிக்கும் போது தேன் சேர்த்தால் போதுமானது. பால் சேர்க்காமலும் இந்த டீயை அருந்தலாம்.

**பலன்கள்:

துளசியில் ஆக்சிஜன் அதிக அளவு இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. அதிகமான வியர்வையைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகப்பொலிவுக் கூடும்.

🔯 சளி இருமல் தொல்லையா? இந்த மருந்து உடனே பலன் தரும்!

தேவையான பொருட்கள்

400 மில்லி வெந்நீர்.

கருப்பு புள்ளி உள்ள பழுத்த வாழைப்பழம் இரண்டு.

இரண்டு டேபிள்ஸ்பூன் தேன்.

செய்முறை 1

கரும்புள்ளி விழுந்த பழுத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி, மசிக்க வேண்டும். மசிக்கும் போது மரத்தாலான கரண்டியை பயன்படுத்துங்கள். இரும்பு வகையிலான கரண்டியை பயன்படுத்தும் போது பழம் சீக்கிரமாக கருமையாகிவிடும்.

செய்முறை 2

மசித்த வாழைப்பழத்தை ஒரு மண் பானையில் போடு வையிங்கள். அதில் வெந்நீரை சேர்க்கவும். இதை 30 நிமிடங்கள் விட்டுவிடவும்.

செய்முறை 3

வெந்நீரில் கலந்த மசித்த வாழைப்பழம் குளுமை அடைந்தவுடன், தேன் சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும். தேனை முன்கூட்டி சேர்த்துவிட வேண்டாம். மசித்த வாழைப்பழம் வெந்நீர் சூடாக இருக்கும் போது தேன் கலந்தால், தேனின் நற்குணங்கள் இழந்துவிடும்.

உட்கொள்ளும் முறை 1

நூறு மில்லி அளவில் ஒரு நாளுக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும். (ஒரு நாளுக்கு நானூறு மில்லி)

உட்கொள்ளும் முறை 2

ஒரு நாளுக்கு நானூறு மில்லி போதுமானது. தினமும் புதியதாக ஃப்ரெஷாக தயாரித்து உட்கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை #3

இதன் பலன் ஐந்து நாட்களில் தெரியவரும். இது முழுக்க முழுக்க இயற்கை மருந்து என்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் உண்டாகாது.

💊 சுக்கு மிளகு திப்பிலி குழம்பு

மழைக்காலத்தில் வரும் சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த சுக்கு மிளகு திப்பிலி குழம்பு நிவாரணம் தரும். இதன் செய்முறையை பார்க்கலாம்.

√ தேவையான பொருட்கள் :

தோல் சீவிய சுக்கு – சிறிய துண்டு,

மிளகு – ஒரு டீஸ்பூன்,

அரிசி திப்பிலி – 4,

புளி – நெல்லியளவு,

சின்ன வெங்காயம் – 10,

பூண்டு – 10 பல்,

வத்த குழம்பு பொடி – ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

கடுகு – கால் டீஸ்பூன்,

கடலைப் பருப்பு – கால் டீஸ்பூன்,

வெந்தயம் – கால் டீஸ்பூன்,

★தாளிக்க :

மஞ்சள் தூள் – சிட்டிகை,
நல்லெண்ணெய் – தேவைக்கு,
உப்பு – தேவைக்கு,

★செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, அரிசி திப்பிலி சேர்த்து வறுத்து கொள்ளவும்.

ஆறிய பின் அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

புளி பச்சை வாசனை போன பிறகு அரைத்த விழுது, வத்த குழம்பு பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கெட்டியான பிறகு இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

💊 சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்……

சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

தேவையான பொருட்கள்

மிளகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

மல்லி (தனியா) – 3 டீஸ்பூன்

பூண்டு – 4 பல்

சின்னவெங்காயம் – 2

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) ஆகியவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். கடைசியாக இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் ரசப்பொடி ரெடி.

தேவையான பொருட்கள்

நண்டு – ஒரு கிலோ

தக்காளி – 3

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

சோம்பு – கால் டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

புளிக்கரைசல் – கால் கப்

தண்ணீர் – 4 கப்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

* தக்காளியை அரைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து, சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* அடிகனமான மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

* அடுத்து அதில் தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

* பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

* உப்பு, காரம், புளிப்பு சரி பார்த்து தீயை மிதமாக்கவும். ரசம் நுரைகூடி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

* சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.

* சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும். ரசத்தை சாப்பிடும்போது அதில் ஊறிய நண்டைச் சுவைக்க அருமையாக இருக்கும்.

💊 திப்பிலி ரசம் – இயற்கை மருத்துவம்……

புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரில் ரசப்பொடி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பிறகு அதில் பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் சிறிதாக அரிந்த திப்பிலி இலை அல்லது திப்பிலி பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து மூடி போட்டு, மூடிவிடவும். கடைசியாக நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து, ரசத்தில் சேர்த்தால், திப்பிலி ரசம் தயார்.

வைத்தியமுறை

இந்த ரசத்தை இளஞ்சூடாக பருகலாம். அல்லது, சாதத்தில் கலந்து உண்ணலாம். சளித் தொல்லை, இருமல், குழந்தை மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படும் ஆஸ்துமா போன்ற நோய் நிலைகளில் இந்த ரசம் உண்பதால் நல்ல பலன் தெரியும். திப்பிலி, சுவாசப் பாதையை விரிவடையச் செய்யும், சளியை வெளியேற்றும்: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், அலர்ஜியை குறைக்கும்.

💊🔯மிளகு ரசம் செய்முறை 🔯

சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

தேவையான பொருட்கள்

புளி – 1 எலுமிச்சை அளவு

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு… மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பூண்டு – 1

வரமிளகாய் – 1

துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

நெய் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

வரமிளகாய் – 2

√செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் ரெடி!!!

🔯 💊 நுரையீரல் வியாதிகள் தீர துளசி மல்லி கஷாயம்

தேவையான பொருள்கள்

பச்சைத் துளசி – 100 கிராம்

சுக்கு – 20 கிராம்

ஏலக்காய் – 5

தனியா (மல்லி) – 20 கிராம்

பனை வெல்லம் – தேவையான அளவு

செய்முறை

துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அதிகாலையில் பருகவும்.

சளி, இருமல், ஆஸ்துமா, தும்மல், மூக்கடைப்பு, சருவ வியாதிகள், நுரையீரல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

💊🔯 கம கம இஞ்சி ரசம் 🔯

தேவையான பொருட்கள்

புளி – ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி – ஒன்று

அரைக்க

இஞ்சி – இரண்டு அங்குல துண்டு
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
முழு தனியா – ஒரு மேசை கரண்டி
காய்ந்த மிளகாய் – இரண்டு
கொத்துமல்லி தழை – கால் கைபிடி அளவு
கறிவேப்பிலை – கால் கைபிடி அளவு

தாளிக்க

நெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிக்கை அளவுசெய்முறை

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போடு அரைத்து கொள்ளவும்.

தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

👉 சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி

குறிப்பு

1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.

2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.

3. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாதத்தில் பிசைந்து கொடுக்கலாம்.


#ஆண்மையை_அதிகரிக்கும்_வெந்தயம்..!இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்!!– அனைவருக்கு…

#ஆண்மையை_அதிகரிக்கும்_வெந்தயம்..!இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்!!– அனைவருக்கும் பகிருங்கள்

வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம்.

இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.

அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது.

அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும்.

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.

Heart attack, artwork

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.

அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால்,

வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள்.

இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.

வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

வெந்தயம் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால்,

டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க உதவும்.

ஆண்களின் (அந்தரங்க) பிரச்சனைகளைப் போக்கும்

ஆண்கள் சிலருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருக்கும்.

இத்தகையவர்களால் உறவில் சிறப்பாக செயல்பட முடியாது.

ஆகவே ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, பிரச்சனைகள் நீங்கும். ஆண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உதவும்.

செக்ஸ் பிரச்னைகள், இயற்கை மருத்துவம், ஆண்மை குறைவு, உடலுறவு பிரச்னைகள்

#Fenugreek _ that _ increases _ manhood..! If used like this, it will definitely benefit!!- Share with everyone

The body gets hot in the summer, so when you urinate, you can face irritation, stomach pain.

In this kind of moment let's think how to quench body heat.

Many will search for the simple way in that too. There is a way too simple for that.

That is when you wake up in the morning, put some fenugreek on an empty stomach and drink water.

If this is done daily, body heat will reduce and maintain.

Studies have found that fenugreek reduces bad cholesterol in the body.

If you mix fenugreek powder with water in an empty stomach every morning, you will know more good results.

Heart attack, artwork

As fenugreek is high in potassium, the chances of heart disease can be reduced.

And fenugreek lowering cholesterol levels doesn't cause heart problems.

Amino acid in fenugreek stimulates insulin production. So it is better for diabetes patients to eat fenugreek on empty stomach every morning.

As there is fiber melting in fenugreek, if you eat it on empty stomach in the morning, constipation problem will be cured.

Those who have digestive problems, eat fenugreek will get good relief.

Because it contains fiber, calcium, iron, carbs, protein and minerals.

Soak it in water at night and drink that water the next morning or drink water with fenugreek in the mouth in the morning, digestive problems, ulcer etc will be cured.

Fenugreek has the ability to lose weight. And eating this will help fill the stomach with the fiber in it, prevent hunger for a long time and reduce weight.

Many women want to enlarge their breast size. If such women are you,

Eat fenugreek daily. This can naturally increase the breast size.

If you have kidney stones and are facing severe pain, eat fenugreek.

This will completely eliminate toxins in the kidney.

Fenugreek improves blood circulation in the body. It also cleanses the blood of the liver and helps to bleed through out the body.

Fenugreek has the ability to stimulate sex. If men bring it up too,

Increasing testosterone levels can help you enjoy long-term relationship pleasure.

Cures men's (personal) problems

Some men will have erectile problems and sooner sperm exit problems.

These people can't perform well in relationship.

So if men eat fenugreek, blood flow in the genitals will increase and problems will be solved. Help men have long sex with their partner.

Sex problems, natural medicine, lack of masculinity, sex problems

Translated

இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!! வீட்டில் இருக்கும் அனை…

இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம். இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது. இத சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.

தேவையான பொருட்கள்:

சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா – சிறிதளவு
கிராம்பு – 7
தண்ணீர் – 750 ml
உப்பு – தேவையான அளவு

சூப் செய்முறை : ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.

10 நிமிடங்கள் : ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)

சூப் ரெடி : பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.

இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்:
மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்
மொத்த கொழுப்பு: 0.5 கிராம்
சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்
சோடியம்: 603 mg
மொத்த கார்போ ஹைடிரேட்: 3%

சளித் தொல்லை : இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்

Sri Shiragiri Velavan, profile picture

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள் திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவ…

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்
திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.

பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்கும். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறது. சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது.

சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவைகளை குறைக்கிறது.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.

பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.

பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.

காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..

பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.

இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு அகலும்..

மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.

கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.

Sri Shiragiri Velavan, profile picture