தேதி: 28-04-2020 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.. என் உடன் ப…

தேதி: 28-04-2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..

என் உடன் பிறவா சகோதரி Nurin காக உங்களிடம் உதவி வேண்டி இந்த பதிவு..

ஒரு 25 வயது பெண் தன்னோட வாழ்க்கைல மனசாலையும் பொருளாதாரத்தாலயும் என்னவெல்லாம் கஷ்டபடக் கூடாதோ அந்த கஷ்டமெல்லாம் இப்போ இவ அனுபவிச்சுட்டு இருக்கா.. ஒரு காலத்தில் திருப்பூரில் மீன் கடை வச்சு வசதியாக வாழ்ந்த குடும்பம் இப்ப ஒரு வேலை உணவுக்கு கூட ரேஷன் கடை சாப்பாடை சாப்பிட வேண்டியதாக இருக்கு..

அத்தாவோட தொழில் நஷ்டம்.. தொடர்ந்து கடன் வாங்கி கட்டிட்டு இருந்த வீடும் பாதியில நின்னு போச்சு..வாடகை வீட்டுக்கு போறாங்க…வீட்டுக்காரன் வீடு மாற சொல்லி காலி பண்ணி விட்டுட்டான்!

அம்மாவும் ஏற்கனவே உடம்பு முடியாதவுங்க.. தங்கச்சி இப்ப தான் டெங்கு காய்ச்சல் வந்து மரண விளிம்பு வரை போய்ட்டு மீண்டு வந்தாங்க.. தம்பிக்கும் ஸ்கின் டிசீஸ்.. இப்படியே ஒன்னு மாத்தி ஒன்னு அடுத்தடுத்து.. எவ்ளோ தான் தாங்க முடியும் அந்த குடும்பம்!

இறுதியாக அவங்க குடும்பத்தோட அஸ்திவாரமே ஆட்டம் காண ஆரம்பிச்சுடுச்சு.. ஆமா அவங்க அப்பாவுக்கு நுரையீரல் புற்று நோய்!! அந்த குடும்பத்தின் வாழ்வாதாரமே அவர் தான்.. ஒரு 25 வயது பெண்னால எவ்ளோ பாரம் சுமக்க முடியும்? தன்னால முடிஞ்சவரை போராடிக்கிட்டே தான் இருந்தா.. ஆனா இப்ப அவங்க அப்பாவுக்கு treatment பண்ண கூட கையில் காசு இல்ல… ஒரு காலத்தில் வசதியா இருந்த குடும்பம் இப்ப குடும்ப தலைவருக்காக வேற வழி இல்லாம இறைவனுக்கு அடுத்த படியாக நம்மோட உதவியை நாடி வந்துருக்காங்க!! இது சாதாரண விஷயம் இல்ல.. அதும் அந்த பொண்ணு ஆரம்பத்தில் என்கிட்ட ஒன்னும் கேட்கலை… அத்தாவுக்கு உடம்பு முடியல துஆ செய்ங்கனு மட்டும் தான் சொன்னா.. பாவம் வேற இடங்களில் பணம் பிரட்ட முடியல… சொந்தங்களும் கை விரிச்சுட்டாங்க!! இந்த லாக் டவுன்னால அவுங்களுக்கு உதவி கிடைக்குறதில் ரொம்ப சிரமமா இருக்கு… அதனால இந்த நோன்பு மாதத்தில் உங்களால முடிஞ்ச உதவியை அந்த குடும்பத்துக்காக செய்ங்க.. உங்களுக்கு இறைவன் பரக்கத் செய்வான்.. சின்ன அளவில் ஒவ்வொருத்தரும் செஞ்சால் கூட போதும்..

திருப்பூர்ல இருந்து சென்னை கொண்டு போக கூட காசு இல்லை.. சித்தா மருத்துவம்ல ஐயா Ka Thiruthanikasalamகிட்ட தான் மருத்துவம் பார்க்கணும்ன்னு இருக்காங்க..

அவங்க போன் நம்பர் பொது இடத்தில் கொடுக்க பயப்படுறாங்க.. அதனால Thanveer Nizad தம்பியின் நம்பரை பதியுறேன்..

இயன்றதை கொடுத்து உதவி பண்ணுனீங்கன்னா அந்த குடும்பமே உங்களுக்கு துஆ செய்யும்.. அதற்குண்டான நன்மையும் உங்களுக்கு இறைவன் தந்திடுவான்..

உதவ நினைக்கிறவங்க,

Name : Ms. Rahima N
Acc. Number : 1235170000013087
IFSC code: KVBL0001235
Branch : Tirupur P.N Road
Gpay,phone pe : +917339596978

பணம் அனுப்ப முடியலேனா கூட அந்த குடும்பம் இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர அதிகமதிகமாக துஆ செய்ங்க..❤️

போஸ்ட்ட கொஞ்சம் அதிகமா #share பண்ணுங்க இன் ஷா அல்லாஹ்❣️❣️



எளிய மருத்துவக் குறிப்புகள் ********************************** 1. தலைவலி குணமா…

எளிய மருத்துவக் குறிப்புகள்
**********************************
1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

2. இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

3. ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

6. சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

7. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினம் ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.

8. தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

9. காசம் இறைப்பு நீங்க: கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

10. தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

11. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

12. தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

13. கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

14. சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

15. கபம் நீங்கி உடல் தேற: கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.
16. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

17. இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.

18. தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

19. சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

20. காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் – 1 உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயா…

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் – 1

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான்.

ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!

#ப்ராக்கோலி:

ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

#பூண்டு:

ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

#கேரட்:

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

#காளான்:

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்! – 2

#நட்ஸ்:

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

#பப்பாளி:

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

#அவகேடோ:

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

#திராட்சை:

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

#தக்காளி:

உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

#ரெட்ஒயின்:

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.

ரத்த சோகைக்கு #வெல்லம் ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கி…

ரத்த சோகைக்கு #வெல்லம்

ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

#பலன்கள்:

・ எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும்.

・ பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும்.

・ சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

・ பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.

・ ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

・ பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை அனுபானமாகச் செய்து தரலாம்.

・ இந்த வெல்லத்தில் சமையலில் பயன்படுத்தும் போது சுவை அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

・ வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.

・ ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுவதால் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படும். மலம் சரிவர கழியாது. ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் (50 கிராம்) எடுத்து பொடி செய்து காலை மற்றும் இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் சூட்டினால் வரக் கூடிய வயிற்று வலி குறையும்.

・ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும்.
அனீமியாவுக்கு இரும்புச் சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சத்துணவை தனித்தனியாக சாப்பிடுவதால் பெரியதாக பலன் எதுவும் இருக்காது. தேவைக்கேற்றபடி கலந்து சாப்பிட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

வெல்லத்தை வெல்கம் செய்து அனிமியாவுக்கு குட் பை சொல்வோம்!

திரிபலா சூரணம் சாப்பிடுவதால் உடனே தீரும் நோய்கள் என்ன தெரியுமா? நமது நாட்டில் த…

திரிபலா சூரணம் சாப்பிடுவதால் உடனே தீரும் நோய்கள் என்ன தெரியுமா?

நமது நாட்டில் தோன்றிய மிகப்பழமையான பாரம்பரிய மருத்துவ முறை தான் “ஆயுர்வேத மருத்துவம்”. இதில் மனிதர்கள் பயன்படுத்த தக்க மருத்துவ முறைகள் பல கூறுபட்டுள்ளன. அதில் ஒன்று தான் திரிபலா சூரணம் மருந்து. “திரி” என்றால் வடமொழியில் 3 என்று பொருள். அதாவது மருத்துவ குணங்கள் மிகுந்த “நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்” ஆகிய மூன்று கைகளையும் முறையாக பக்குவம் செய்து சூரணம் எனப்படும் பொடியாக தயாரிக்கப்படுவது தான் “திரிபலா சூரணம்” எனப்படும். அற்புதமான இந்த திரிபலா சூரணம் பயன்படுத்தி நாம் பெறும் மருத்துவ பலன்கள் என்ன என்பதை இங்குதெரிந்து கொள்ளலாம்.

திரிபலா சூரணம் பயன்கள் :

நோய் எதிர்ப்பு சக்தி :

நாம் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இந்த சக்தி நமது உடலில் எப்போதும் இருப்பது அவசியம். திரிபலா சூரணம் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் “ஆன்டிபாடி” எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.

செரிமானமின்மை :

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திரிபலா சிறப்பாக செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும்.

வயிற்று பூச்சிகள் :

சாக்லேட் மற்றும் இனிப்புகள் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி, புழு தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்புகள் அதிகரிக்கிறது. இவர்களுக்கு திரிபலா சூரணத்தை அவ்வப்போது கொடுத்து வருவதால் வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் வயிறு மற்றும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை :

நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திரிபலா சூரணம் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

சர்க்கரை நோய் :

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகிறது. உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது “இன்சுலின்” ஆகும். திரிபலா நமது கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. மேலும்கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான “ஹைப்பர்கிளைசீமியா” எனப்படும் அதீத சர்க்கரை நிலை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும்.

உடல்பருமன் :

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். திரிபலாவில் கொழுப்புகளை கரைக்கும் அதீத மருத்துவக் குணம் நிறைந்துள்ளதால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் வெகு சீக்கிரத்தில் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து திரிபலா செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைந்து, உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள் :

திரிபலா சூரணம் இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் சிறப்பான பங்காற்றுகிறது. மேலும்உடலின் சருமத்தில் ஏற்பட கூடிய தொற்று நோய்கள், சொறி, சிரங்கு போன்றவற்றை சீக்கிரம் குணப்படுத்துவதில் திரிபலா சூரணம் சிறந்த பங்காற்றுகிறது.

சுவாச நோய்கள் :

நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றை நீக்கும் ஒரு அற்புத மருந்தாக திரிபலா சூரணம் இருக்கிறது. இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி,சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.

தலைவலி :

சிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திரிபலா சூரணம் பயன்படுகிறது. குறிப்பாக நமது உடலில் வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய் :

நமது நாட்டில் நிகழ்த்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க திரிபலா பேருதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் எனப்படும் பெருமளவு புற்று செல்கள் வளரும் அபாயத்தையும் குறைத்து, உடல்நலனை காக்கிறது.

தினமும் 4 சூரியகாந்தி விதை சாப்பிட்டா என்னல்லாம் நம்ம உடம்புல மாற்றம் வரும் தெரி…

தினமும் 4 சூரியகாந்தி விதை சாப்பிட்டா என்னல்லாம் நம்ம உடம்புல மாற்றம் வரும் தெரியுமா?

இதுவரை சூரியகாந்தி எண்ணெய்யால் மட்டுமே பயன் என்று நினைத்து இருந்தோம். ஆனால் சூரியகாந்தி விதைகளால் கூட ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கின்றன. சூரியகாந்தி விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது. இந்த பாஸ்பரஸ் சத்து இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய்யில் உள்ள விட்டமின் ஈ இதயம், வாஸ்குலார், மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. சூரிய காந்தி விதைகள் நமது சருமம் வயதாகுவதை தாமதப்படுத்துகிறது. இப்படி ஏராளமான நன்மைகள் தரும் சூரியகாந்தி விதைகளை பற்றி இப்பகுதியில் காணலாம்.

​ஊட்டச்சத்து அளவுகள் :

1 அவுன்ஸ் (30 கிராம் அல்லது 1/4 கப்) வறுத்த சூரியகாந்தி விதைகளில்

கலோரிகள் :163

மொத்த கொழும்பு : 14 கிராம்

நிறைவுற்ற கொழுப்பு 1.5 கிராம் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு 9.2 கிராம் என்ற அளவில் காணப்படுகிறது.

சிற்றுண்டி வகைக்கு ஏற்றது :

உங்க உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதில் நட்ஸ் வகைகள் மற்றும் விதைகள் முக்கிய பங்க வகிக்கின்றன.

இதுவரை நீங்கள் ஏராளமான விதைகளை பயன்படுத்தி இருக்கலாம்.

ஆனால் சூரியகாந்தி விதைகள் மற்ற எல்லா விதைகளை காட்டிலும் உங்களுக்கு ஒரு நல்ல ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.

உடற்பயிற்சி செய்வதற்கு நமக்கு ஏராளமான ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் நமக்கு உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கும்.

அந்த வகையில் சூரிய காந்தி விதைகள் உங்க உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுத்து உடற்பயிற்சி செய்ய ஏற்ற வகையை தருகிறது.

சூரியகாந்தி விதைகளில் உள்ள தயாமின் (வைட்டமின் பி 1) எனப்படும் சக்திவாய்ந்த சாறு உள்ளது, இது உடலில் ஆற்றல் உற்பத்தியை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தசைகளை உருவாக்குதல், இரத்த பரவுதல் மற்றும் உடலில் முக்கிய சமநிலையை மீட்டெடுப்பது ஆகிய உடற்பயிற்சியுடன் கூடிய நன்மைகளை தருகிறது.

இதிலுள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை உங்களுக்கு ஆற்றலைத் தரக்கூடியது,

ஹார்மோன்கள் சமநிலை செயல்பாடு :

சூரியகாந்தி விதைகளில் உடலின் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்தும் 100 வகையான என்சைம்கள் நிறைந்துள்ளன.

குறிப்பாக பெண்களுக்கு, சூரிய காந்தி விதைகளில் உள்ள நொதிகள் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை சமநிலைப்படுத்துகிறது.

இதனால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் முன் நோய்க்குறி, தைராய்டு அறிகுறிகளை நிர்வகிக்க உதவியாக இருக்கிறது.

மேலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் அடிக்கடி நிகழும் காலை நோயான வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

சூரியகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின் பி 6 புரதம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது, உடல் சமநிலையை மேம்படுத்துகிறது.

உடல் கொழுப்புகளை கரைக்கிறது :

சூரியகாந்தி விதைகளில் காணப்படும் ஏராளமான மக்னீசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

செல்லுலார் மட்டத்திலிருந்து செயல்படுவதன் மூலமும், கெட்ட கிருமிகளை வேரறுப்பதன் மூலமும் உடம்பில் இருந்து நச்சுத்தன்மையையும் கொலஸ்ட்ராலையும் களைகிறது.

கொலஸ்ட்ரால் தேக்கத்தால் தான் நம் வளர்ச்சிதை மாற்றம் சரியாக வேலை செய்வதில்லை.

எனவே சூரிய காந்தி விதைகள் கொழுப்புகளை கரைத்து மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் நமக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

​பசி திருப்தியை கொடுக்கிறது :

சூரியகாந்தி விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்தால் கூட இதில் அதிகளவு கலோரிகள் காணப்படுகின்றன.

இதனால் சூரிய காந்தி விதைகள் நமக்கு வயிறு நிரம்பிய திருப்தியை தருகிறது.

இதனால் உங்க பசி வேதனை குறைந்து உடலில் ஒரு மனநிறைவை தருகிறது.

இதனால் நிறைய உணவு எடுத்துக் கொள்வதை இதன் மூலம் தவிர்க்கலாம்.

டயாபெட்டீஸை கட்டுபடுத்துகிறது :

சூரிய காந்தி விதைகளில் உள்ள பல மூலக்கூறுகள் டயாபெட்டீஸ் நோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளன.

மக்கள் 30 கிராம் சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொண்டு வந்தாலே போதும் அவர்களின் இரத்த சர்க்கரையை 10 % வரை குறைக்கலாம்.

இதிலுள்ள குளோரோஜெனிக் அமிலம் காரணமாக இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.

சீரண சக்திக்கு நல்லது :

சூரியகாந்தி விதைகள் மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியை குறைக்கிறது.

இந்த விதைகளின் உள்ள நொதிகள் செரிமான சாறுகளின் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது.

உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் வயிறு மற்றும் குடலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி நமக்கு கொடுக்கிறது.

புற்றுநோயை எதிர்த்து போரிடுகிறது :

இதிலுள்ள விட்டமின் ஈ, செலினியம் மற்றும் தாமிரம் போன்ற ஆக்ஸினேற்றிகள் உள்ளன.

இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது.

புற்றுநோய் செல்களின் வீரியத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சூரியகாந்தி விதைகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

இந்த விதைகளை நீங்கள் பொரியலில் சேர்த்து வரலாம்

சிக்கன் சாலட்டுகளில் சேர்த்து கிளறி பயன்படுத்தலாம்

வதக்கிய காய்கறிகளில் சேர்த்து இதை பயன்படுத்தலாம்

பர்கர் போன்றவற்றில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

சூரியகாந்தி எண்ணெய்களாக பயன்படுத்தலாம்

ரொட்டி மற்றும் மஃபின்கள் போன்ற வேகவைத்த பொருட்களில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் – 1 உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயா…

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் – 1

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான்.

ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!

#ப்ராக்கோலி:

ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

#பூண்டு:

ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

#கேரட்:

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

#காளான்:

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்! – 2

#நட்ஸ்:

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

#பப்பாளி:

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

#அவகேடோ:

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

#திராட்சை:

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

#தக்காளி:

உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

#ரெட்ஒயின்:

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.

30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்! அதிகம் பகிருங…

30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்!
அதிகம் பகிருங்கள்
30 வயதில் சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு.

வயது ஏறிக் கொண்டே வரும்போது கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும். அதுவரை தோலிற்கு பிடிமானமாக இருந்த கொழுப்பு குறையும்போது, சருமம் தளர்வாக ஆரம்பிக்கும். இதனால்தான் வயதான தோற்றம் தருகிறது. இதனை தடுக்க சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் நல்ல புரத உணவுகளும், சருமத்தை இறுகும் பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ செய்முறைகளை செய்தால் சருமம் இளமையாகவே காப்பாற்றப்படும்.

முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவை கலந்து முகத்தில் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிரிந்த நீரில் கழுவுங்கள். இந்த குறிப்பு சருமத்தில் புதிய செல்கள் உருவாவதற்கு தூண்டும். இது தளர்வடைந்த சருமத்தை இறுக்கி சுருக்கம் கருமை ஆகியவற்றை மறையச் செய்யும்.

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் மசித்த அவகாடோவின் சதைப் பகுதி மற்றும் 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால் முகம் சுருக்கமின்றி அழகாய் இருக்கும்.

முட்டையில் வெள்ளைக் கருவுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும்.

முட்டையில் வெள்ளைக் கருவுடன் 2 ஸ்பூன் கடலை மாவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். காய்ந்ததும் கழுவுங்கள்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் முல்தானி மட்டியை கலந்து பேக்காக முகத்தில் போடவும். சருமம் நன்றாக இறுகியவுடன் கழுவுங்கள்.

கேரட்டை துருவி சாறெடுத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் போடவும்.

#தேங்காப்பூகிரை #சிறுகண்என்கிறபூளைப்பூ இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்ன…

#தேங்காப்பூகிரை
#சிறுகண்என்கிறபூளைப்பூ
இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்… அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில்
#பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை.
#பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப்

#பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன்.
சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை

#பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தா னென்றும்,பாட்டி வைத்தியத்திலும் பலன்களிருக்குதென்றும்!

இந்த வைத்தியம் சிறுநீரகக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்லது ஆனால்…
#சிறுகண்பீளை
என்கிற இந்த மூலிகையை சமூலமாக(மூலிகையை முழுவதுமாக,வேறுடன்)காய்ச்சு அருந்த வேண்டும்!

கிட்னியில் கல் இருப்பது தெரிந்தால் உடனே நாட்டு நெருஞ்சிமுல் செடியை வேரோடு புடிங்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரை லிட்டர் தண்ணீரில்
போட்டு கொதிக்கவைத்து 100.மிலி அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாள் தொடர்ந்து குடித்து வந்தால் குணமாகும்.

சிலாசத்து பஸ்பம், நண்டுக்கல் பஸ்பம், குங்கிலிய பஸ்பம் இவைகளையும் உடன் பயன்படுத்திப் பாருங்கள். மிகச்சிறப்பாக இருக்கும்