ரொம்ப நாளா தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், சளி இருக்குதா? இந்த 3 பிரச்சனையும் டக…

ரொம்ப நாளா தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், சளி இருக்குதா? இந்த 3 பிரச்சனையும் டக்குனு சரியாயிடும். இத மட்டும் 1 ஸ்பூன் குடிச்சி பாருங்களே…

நிறைய பேருக்கு கிளைமேட் மாறிய உடனேயே தொண்டையில் பிரச்சனை வந்துவிடும். தொண்டை கரகரப்பாக மாறும். தொண்டையில் சளி இருப்பது போல உணர்வு ஏற்படும். பேசினாலே வரட்டு இருமல் வந்து தொல்லை கொடுக்கும்.
இப்படியாக சளி சம்பந்தப்பட்ட, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக நீங்கள் அவதிப்பட்டு வந்திருந்தால், இந்த கை வைத்தியத்தை ஒரே ஒருநாள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

இயற்கையான 2 பொருட்களை வைத்து தான் இந்த வைத்தியம் சொல்லப்பட்டுள்ளது. அந்த இரண்டு பொருட்கள் என்னென்ன? அதை எப்படி மருந்தாக நாம் பயன்படுத்த போகின்றோம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சுத்தமான தேன், ஏலக்காய் இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் இந்த வைத்தியம் சொல்லப்பட்டுள்ளது. சர்க்கரை தண்ணீர் கலக்காத சுத்தமான தேன், இந்த வைத்தியத்திற்கு மிக மிக அவசியம். முதலில் ஏலக்காய்களை நன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால், அந்த ஏலக்காய் பொடியை சல்லடையில் போட்டு சலித்து விட்டு, நைஸாக ஏலக்காய்தூளை எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்தபடியாக 1 ஸ்பூன் சுத்தமான தேனை, ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்பாக இந்த தேனை நேரடியாக ஒரு ஸ்பூன் அளவு நாம் சாப்பிட வேண்டியது தான்.

இவ்வளவு சுலபமான குறிப்பில், நீண்ட நாட்களாக கஷ்டப்படுத்தி வரும் இருமல் குணமாகிவிடுமா? என்று சந்தேகப்படாதீர்கள். இது ஒரு சுலபமான குறிப்பு தான். இதை சாப்பிட்ட 15 நிமிடத்திற்கு தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கலாம்.
கண்ணுக்குத் தெரியாத நச்சுக் கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தி தேனுக்கு உள்ளது. இருமலை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி ஏலக்காய்க்கு உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக சேரும் போது, நமக்கு நல்ல பலனைத் தரும் என்பதில் சந்தேகமே கிடையாது.

பெரியவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு நான்கு முறை கூட ஒரு ஸ்பூன் அளவு தேன், ஏலக்காய்தூள் கலந்த கலவையை சாப்பிடலாம். சிறிய குழந்தைகளாக இருந்தால் அதாவது 3 வயதிற்கு மேல், உள்ள குழந்தைகளாக இருந்தால், 1/2 ஸ்பூன் அளவு தாராளமாக கொடுக்கலாம். 8மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் இந்த மருந்தை நாம் கொடுக்கலாம்.

ஏலக்காயை ரொம்ப நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் நன்றாக அரைபடா விட்டால், குழந்தைக்கு தொண்டையில் போய் சிக்கிக்கொள்ளும். நைஸ் ஏலக்காய் தூளுடன், தேன் கலந்து, உங்கள் விரல்களால் தொட்டு சிறிய குழந்தைகளது நாவில் கூட மூன்று சொட்டு தடவலாம். தவறொன்றும் கிடையாது.

சில பேருக்கு இரவு நேரத்தில் தூங்கவே முடியாது. படித்த பின்புதான் இருமல் அதிகமாக வரும். இப்படிப்பட்ட சமயங்களில் ஒரு ஏலக்காயை எடுத்து உங்களது கடவா பல்லில் கடித்து கொள்ளலாம். அதிலிருந்து வரக்கூடிய உமிழ் நீரை விழுங்கினால் இருமல் சட்டென்று ஒரே நிமிடத்தில் நின்றுவிடும்.

இயற்கையான முறையில் இப்படிப்பட்ட விஷயங்களை திரும்பத் திரும்ப செய்யும்போது, நம் தொண்டையில் இருக்கும் கிருமிகள் தானாக அழிந்து, இருமல் சளி தொண்டை கரகரப்பு கொஞ்சமாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டாயம் குறையும்.

மாத்திரைகளின்றி குடலை எப்படி சுத்தம் செய்யலாம்ன்னு தெரியுமா? குடல் மனித உள்ளுரு…

மாத்திரைகளின்றி குடலை எப்படி சுத்தம் செய்யலாம்ன்னு தெரியுமா?

குடல் மனித உள்ளுருப்புகளில் முக்கியமானதாக உள்ளது. குடல் இருவகைகள் உண்டு அவை சிறுகுடல் மற்றும் பெருங்குடல் என்று இருவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குடலானது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உப்பு மற்றும் நீரை கழிவுகளில் வெளியேற்றுவதற்கு முன்பு பிரித்தெடுத்து pH அளவைப் பராமரிக்கின்றன. மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும் தொழிலை செய்கிறது.

ஒருவரது குடலில் கழிவுகள் அதிகம் தேங்கினால், அது பல நோய்களுக்கு வழிவகுக்கிறது.

ஒருவரது குடல் சரியாக செயல்படாமல் இருந்தால் சரும அழற்சி, பித்தப்பை கற்கள், இதய நோய்கள் போன்ற கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதிலிருந்து விடுபடவும் குடலை சுத்தம் செய்யவும் சில இயற்கை உணவு முறைகள் பெரிதும் உதவி புரியும்.

தற்போது அவை என்னென்ன என்பதை விரிவாக இங்கு பார்ப்போம் :

• பசலைக்கீரை, கேல், அஸ்பாரகஸ், கொலார்டு கீரைகள், பட்டாணி போன்றவற்றில் குளோரோஃபில் அதிகம் இருக்கிறது.

• இந்த காய்கறிகள் கல்லீரலையும் சுத்தம் செய்கிறது. அதனால் காய்கறிகளை வேக வைத்தோ, சூப்பில் சேர்த்தோ அல்லது வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் சேர்த்து வதக்கியோ சாப்பிட்டு வரலாம்.

• ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் இஞ்சி ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து, இந்த கலவையை தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

• இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் ,ஆப்பிள் -1,பசலைக்கீரை – 1 கப் ,கேரட் -1 பொருட்களை அனைத்தையும் பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1 கப் நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இப்போது இஞ்சி ஸ்மூத்தி தயார். இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்தால், குடல் பாதையின் செயல்பாடு சரியான முறையில் நடக்கும்.

• 1/2 கப் ஆப்பிள் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி ஜூஸ் சேர்த்துக் கொள்ளணும். பின் 1/2 கப் வெதுவெதுப்பான நீரை, அந்த ஜூஸ்களுடன் சேர்த்து கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், குடல் சுத்தமாவதுடன், செரிமானமும் சிறப்பாக நடைபெறுகிறது.

• டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் நீர் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்கலாம். இந்த பானம் டாக்ஸின்களை நீங்குவதோடு மட்டுமின்றி, சர்க்கரையை நோயைத் தடுப்பது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்கிறது.

• பீன்ஸ், பருப்பு வகைகள், திணை, ஒட்ஸ அல்லது காய்கறிகளான பீன்ஸ், புருஸல்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், குடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்வதற்கும், நார்ச்சத்து பெரிதும் உதவி செய்ய வேண்டும்.

• குடல் ஆரோக்கியத்திற்காக ஒருவர் ஒரு நாளைக்கு 2 முதல் 25 மிலி வரை நீர் பருக வேண்டியது முக்கியம். அதுவும் 1/2 விட்டர் நீரில் 1 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இச்செயலால் குடல் முழுமையாக சுத்தம் செய்யும்.

• ஆளி விதைகளை நீரில் சேர்த்து ஊற வைத்து, சாலட்டுகள், மில்க் ஷேக் போன்றவற்றின் மேலே தூவி சாப்பிடலாம்.

• ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் நீரில் 5-10 நிமிடம் வரை ஊற வைத்து பின் அந்த விதைகளை ஒரு கப் தயிருடன் சேர்த்து கலந்து கொண்டு, இந்த கலவையை ஒரு நாளைக்கு 4 முறை என தொடர்ந்து 4 வாரங்கள் உட்கொள்ளலாம். அப்படி செய்தால் குடல் பாதை சுத்தமாக இருக்கும்.

ஆண்மை விரைப்புதன்மைக்கு மருந்து : நீர்முள்ளி : மணலை கயிறாக திரிப்பேன் என்று சி…

ஆண்மை விரைப்புதன்மைக்கு மருந்து :
நீர்முள்ளி :

மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம் . ஆனால் அது பொய்யல்ல.இந்த நீர்முள்ளி உதவியுடன் மணலை கயிறாக திரிக்க முடியும்.அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை,உஸ்ணத்தை குறைத்து விந்துவை கெட்டிப்படுத்தும்

தேவையானவை:

கசகசா,பால்,நீர்முள்ளி,பாதாம்பருப்பு.

செய்முறை :

நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
………………………………………………………………….

நீர்முள்ளி வித்து ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்தில் சேர்க்கப் படுகிறது..

இந்த மருந்து அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர் (விரைப்புதன்மைக்கு)
ஓரிதல்தாமரை " (ஆண்மை அதிகரிக்க)
பூனைகாலி " (விந்து ,உயிர்அணுக்கல் அதிகரிக்கும்)
ஜாதிக்காய் " (ஆண்குறி பருக்க,விரைக்க)
நீர்முள்ளி விதை " (விந்து கெட்டிபடும்)
தண்ணீர்விட்டான் கிழங்கு " (ஆண்மை பெருகும்)

மேலே உள்ள பவுடர் அனைத்தையும் தேனில் கலந்து (கட்டி பதம் வரும்வரை)தினமும் காலை மாலை கோலிகுண்டு அளவு சாப்பிடவும்

மருந்தை சாப்பிட்ட உடனே பயன் தெரியும்…

Sri Shiragiri Velavan, profile picture

சர்க்கரை நோய் புண் அவஸ்தையா? கவலை வேண்டாம் இது ஒன்றே உடனடி தீர்வு.! சர்க்கரை நோ…

சர்க்கரை நோய் புண் அவஸ்தையா? கவலை வேண்டாம் இது ஒன்றே உடனடி தீர்வு.!

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் ஆறாத நாள்பட்ட புண் வெட்டுக்காயத்தையும் உடனே ஆற்றும் அற்புத மூலிகையாகும்.

சில பேருக்கு காலில் புண் வந்தால் சீக்கிரம் ஆறாமல் இருக்கும். எந்த மருந்து தடவினாலும் ஆறவே ஆறாது. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களில் புண் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரம் ஆறாமல் போகும்.

சிலபேருக்கு புண் ஆழமாக ஏற்பட்டு ஆறாமல் இருந்தால் காலையே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது தற்போது வழக்கமாக மாறிவிட்டது.

இந்த மாதிரியான புண் உள்ளவர்கள், வெட்டுக்காயம் ஆறாமல் உள்ளவர்கள் தற்போது கூறும் மூலிகையை சொல்லும் முறையில் பயன்படுத்தினால் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆறாமல் இருக்கும் புண்களும் வெட்டுக்காயங்களும் ஆறி உங்கள் கால் பழைய நிலைமைக்கு வந்துவிடும்.

மூலிகையின் பெயர் :

• வெட்டுக்காய பூண்டு இதை கிணற்று பாசான் என்றும் சொல்வார்கள்.

• இது அனைத்து இடங்களிலும் வளரக்கூடியதாகும்.

• இதன் இலை சொரசொரப்பாக இருக்கும்.

• இதன் பூ மூக்குத்தி போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும். கொப்புளம், தீக்காயம் போன்றவற்றையும் ஆற்றுவதோடு, புற்றுநோயால் ஏற்படும் புண்ணையும் ஆற்றிவிடும்.

பயன்படுத்தும் முறை:

• இதன் இலைகளை பறித்து நன்றாக கழுவி இரண்டு கைகளுக்கு இடையில் வைத்து கசக்கினால் இதிலிருந்து பச்சை நிற சாறு வெளிவரும்.இந்த சாறை நேரடியாக புண்ணின் மேல் படும்படி பிழிந்து விட வேண்டும்.

• அதன்பின் கசக்கிய இலையை சாறு மேலேயே வைத்து வெள்ளை துணி கொண்டு கட்டிவிடுங்கள்.

• கட்டில் ஈரம் குறையும் போதெல்லாம் கட்டின் மேல் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.

• இதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முறை கட்ட வேண்டும். ஒரு மாதத்திற்கு இதே போல் தொடர்ந்து செய்து வந்தால் நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு புண் முழுமையாக ஆறிவிடும்.

• இவ்வாறு உள்ள அரிய மூலிகைகளை நாம் உதாசினப்படுத்தாமல் அதன் பலன் அறிந்து பயன்படுத்தி அதை அழியாமல் பயன்படுத்தி உடலை பாதுகாப்போம்.

மாத்திரையின்றி #ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்…!!! குளிர் காலம் ஆரம்பிச்சாச…

மாத்திரையின்றி #ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்…!!!

🎷குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.

🎷குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

🎷சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

🎷இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

குறிப்பு 1 :

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

குறிப்பு 2

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு 3 ;

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

குறிப்பு-4 :

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

குறிப்பு- 5 :

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு- 6 :

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

குறிப்பு- 7 :

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம்..!இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்!!– அனைவருக்கும…

ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம்..!இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்!!– அனைவருக்கும் பகிருங்கள்

வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம்.

இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.

அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது.

அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும்.

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.

Heart attack, artwork

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.

அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால்,

வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள்.

இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.

வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

வெந்தயம் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால்,

டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க உதவும்.

ஆண்களின் (அந்தரங்க) பிரச்சனைகளைப் போக்கும்

ஆண்கள் சிலருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருக்கும்.

இத்தகையவர்களால் உறவில் சிறப்பாக செயல்பட முடியாது.

ஆகவே ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, பிரச்சனைகள் நீங்கும். ஆண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உதவும்.

செக்ஸ் பிரச்னைகள், இயற்கை மருத்துவம், ஆண்மை குறைவு, உடலுறவு பிரச்னைகள்

Sri Shiragiri Velavan, profile picture

#இன்று_உலகம்_முழுவதும்_பரவலாகப் #பெருகி_வரும்_நோய்…… #சோரியாஸிஸ்_எனப்படும் #செ…

#இன்று_உலகம்_முழுவதும்_பரவலாகப் #பெருகி_வரும்_நோய்……

#சோரியாஸிஸ்_எனப்படும்
#செதில்படை_நோயாகும்

🉐👉இதில் 9 வகையான சோரியாசிஸ் உள்ளது

👉சோரியாஸிஸ் நோய் பழங்காலத்திலேயே இருக்கிறது.
சோரியாஸிஸ் உயிர் கொல்லி நோய் அல்ல.

👉சோரியாஸிஸ் அடுத்தவர்களுக்கு தொற்றும் தொற்று நோய்யல்ல.

🔯#தமிழில்_சோரியாஸிஸ்ஸை……

👉காளாஞ்சக படை,

👉மீன் செதில் படை,

👉‘செதில் படை’

என்று அழைப்பர் சோரியாஸிஸ் நோய் பொதுவாக மக்கள் தொகையில் 2-4% பாதிக்கிறது.

சோரியாஸிஸ் நோய் ஆண்கள் பெண்கள் மற்றும் எல்லா வயதினரையும் பாதிக்கும்.
இருப்பினும் சோரியாஸிஸ் நோய்
15 முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் மத்தியிலும், 60 முதல் 75 வயது வரையுள்ள முதியவர்களைப் பொதுவாக பாதிக்கிறது .ஆனால் ஆண்கள் அதிகமாக சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

இயல்பாக நமது உடல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை சருமத்தை மாற்றிக்
கொண்டிருக்கும். ஆனால் இந்நோய் பீடிக்கப்படும் பொழுது மூன்று நாட்களுக்கு ஒரு முறை சருமம் மாற்றப்படும்.

அதாவது நமது உடம்பில் இறந்துபோன செல்கள் சருமம் வழியாக வெளியேறி புது சருமம் உண்டாகிறது. ஒருவர் சோரியாஸிஸ் நோயினால் பீடிக்கப்படுகையில், அவருடைய உயிர் செல்கள் அதிகளவில் மடிந்து, அவருக்கு பல்வேறு உபாதைகளைக் கொண்டு வருகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

உடலில் சிறு தடிப்புகள் ஏற்படும்.

மென்மையான, வெண்மையான, பளபளப்பான மீன் செதில்கள் போன்று மூடப்பட்டு இருக்கும்.

செதில்களைப் பிய்த்தால், குண்டூசி முனையளவு ஒத்த ரத்தக்கசிவு ஏற்படும்.

படை உருவாகும் இடங்களும், வடிவமும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.

உடலெங்கும் படை காணப்பட்டு செதில் உதிரலாம்.

தலை, காதின் பின்புறம் சிறுசிறு கட்டிகள் உருவாகி செதில் உதிரலாம்.

நாணயம் போன்ற வடிவமுடைய படைகளும்,

கிருமித் தொற்று இல்லாத கீழ் கொப்புளங்களும் ஏற்படலாம்.

அக்குள், தொடைமடிப்பு, தொப்புள் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நீர்க்கசிவு ஏற்படலாம்.

உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடிப்பான வெடிப்புகளை உடைய படைகள் ஏற்படலாம்.

நாட்பட்ட நிலையில், முழங்கால்களைப் பாதித்து, வாதம் போன்று நகரவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நகங்களைப் பாதித்து, நகத்தின் குறுக்கே பள்ளம் விழலாம். நகத்தின் நிறம் மாறலாம்.

அரிப்பு இல்லாமலும், சிலருக்கு மிகுதியான அரிப்பும் காணப்படலாம்.

#நோய்வரக்_காரணம்

தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சில மருந்துகளினாலும், நோய் எதிர்ப்புத் திறனின் மாறுபாட்டாலும், பரம்பரை காரணமாகவும், மன அழுத்தத்தினாலும் இந்நோய் வரலாம் என நவீன அறிவியல் விளக்கமளிக்கிறது.

இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களின் அவஸ்தை சொல்லி மாளாது. மனதளவில் இந்நோய் இவர்களைக் குற்றுயிராய் ஆக்கிவிடும். கால் மூட்டுகளில் வலி, வீக்கம், தூக்கமின்மை, நரம்பு நோய்கள் போன்றவையும் சோரியாஸிஸ் நோயின் சார்பு நோய்களால் வந்து பீடிக்கும்.

🉐 #9_வகைகள்_சோரியாசிஸ்
#உள்ளது

👉 உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரியது தோல்.

உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் காக்கும் கேடயமே தோல். இதன் பரப்பளவு 2 சதுரமீட்டர்.

உடல் எடையில் 16 முதல் 20 சதவிகிதம் வரை தோலின் எடை உள்ளது.

தோலின் மீது சுமார் 2 மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் அமைந்துள்ளன.

சராசரியாக ஒரு நாளைக்கு 500 மி.லி. 600 மில்லி வரை வியர்வை சுரக்கிறது. இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள தோல் நோய்கள் 600க்கும் மேல் உள்ளன.

🔴 #இந்நோயின்_அறிகுறிகள்

1. உங்கள் சருமம் சுத்தமாகவும் அரிப்பில்லாமலும் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு…

👉பாதவலியோ,

👉குதிகால் வலியோ

இருக்கும் பட்சத்தில் அது……
சோரியாஸிஸ் வாதமாக இருக்கலாம்.

‘கை கால் விரல்களில் ஏற்படும் வீக்கம் சோரியாஸிஸ் வாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.’

2 . திடீரெனத் தோன்றும் தோல் தடிப்பு. இதிலும் குறிப்பாக தலை, கை,
கால்களின் வெளிப்பகுதிகள்,முழங்கை, முழங்கால் போன்ற இடங்களில் வட்ட வட்டமாக தோல் தடிப்பு உண்டாகும்.

3. தடித்த இடத்தில் மிதமான அரிப்பு.

4. தடித்த தோல் சொரசொரப்பாக மாறுதல்.

5. அதைச் சொரிந்தால் வெள்ளை நிறத்தில் பக்குகள் உதிர்தல்.

6. கிருமித் தொற்று சேர்ந்துகொண்டால் சீழ் கட்டுதல்

🔴 #சோரியாசிஸ்_நோயின்_9_வகைகள்.

பிளேக் சோரியாஸிஸ்

இந்த வகை சோரியாஸிஸ் பொதுவான வகையாகும். இது பொதுவாக, வெள்ளி செதில்கள் மூடப் பட்டிருக்கும், சிவப்பு உலர் தோல் புண்கள் (பிளேக்) ஏற்படுகிறது. இந்த வகை சோரியாஸிஸ் வந்தவர்களில் 10ல்8 பேர் பாதிக்கப் படுகின்றனர். இது உங்கள் உடலில் தோன்றும், ஆனாலும் பெரும்பாலும் முழங்கைகள், முழங்கால்கள் உச்சந் தலையில் உங்கள் பிறப்பு உறுப்புகளில் வாயின் உட்புறத்தில் தோன்றும்

கட்டேட்தடிப்பு சோரியாஸிஸ்

பொதுவாக கழுத்து கைகள், கால்கள் மற்றும் கையின் மேல் பகுதிகளில் உச்சந் தலையில் தடிப்பு , சிறு புண்கள். புண்கள் மீது நீர் துளி உறுவாகும். இந்த வகை பெரும்பாலும் குழந்தைகள் அல்லது இளைஞர்களைப் பாதிக்கிறது இந்த வகை சோரியாஸிஸ் வந்தவர்களில் 10ல்2 பேருக்கு பாதிக்கப் படுகின்றனர்.

உச்சந்தலையில் சோரியாஸிஸ்

தோலில் வெள்ளி செதில்கள் மற்றும் வெள்ளி செதில் நீக்கப்பட்ட போது இரத்தம் கசிந்து சிவப்பு திட்டுகள் ஏற்படுகிறது. தோலில் தடிமன் செதில் மூடப்பட்டிருக்கும். குறிப்பாக உச்சந் தலையில் அரிப்பு ஏற்பட்டு பிறகு, உங்கள் முடி அல்லது உங்கள் தோல்களில் இறந்த தோல் செதில்களைக் கானலாம்.

இன்வேர்ஸ் சோரியாஸிஸ்

வீக்கமான தோல் திட்டுகள்,
மென்மையான தோல் திட்டுகள்.
ஏற்படுகிறது. இந்த வகை தோல் அலற்சியுடன் கூடிய சோரியாஸிஸ் மக்களைப் பதிக்கிறது. முக்கியமாக இடுப்பு பகுதி, மார்பின் கீழ் மற்றும் பிறப்புறுப்புகள், அக்குள்களில் உள்ள தோலில் பாதிக்கும், தோலில் உராய்வு மற்றும் தோலில் வியர்த்தல் போன்ற காரணங்களால் தோல் சோரியாஸிஸ் மோசமடையும்.

பஸ்டுலர் சோரியாஸிஸ்

பொதுவாக சில நேரங்களில் சீழ் நிறைந்த கொப்புளங்கள் தோன்றும் உங்கள் தோல் சிவந்து மென்மையாக மாறும் , விரைவாக பரவலாக திட்டுகள் உருவாகிறது. கைகள், கால்கள், அல்லது விரல் சிறிய பகுதிகளில் இந்த திட்டுகள் உருவாகிறது.

ஏரித்ரோ டேர்மிக் சோரியாஸிஸ்

பொதுவான வகையைச் சார்ந்ததாகும், குறைவான தடிப்பு, சிவந்த தடிப்பு நமைச்சல் மற்றும் அதிக எரிச்சல் கொண்டதாய் இருக்கும் . உடல் முழுவதும் பரவிக் கிடக்கும்.

நக தடிப்பு சோரியாஸிஸ்

சோரியாஸிஸ் நகங்களில் பள்ளம், நிறமாற்றம், நக உடைவு மற்றும் அசாதாரண நக வளர்ச்சி உண்டாகும். கைகள், கால்கள், விரல் நகங்களைப் பாதிக்கும் .

பிறப்புஉறுப்பு சோரியாஸிஸ்

ஆண் பெண் பிறப்பு உறுப்பில் சில சமயங்களில் சோரியாஸிஸ் வருவதுண்டு. ஆண் குறியின் ஒரு பகுதியாகிய சின்ன மொட்டு பகுதியில் பிறப்பு உறுப்பு சொரியாஸிஸ் பாதிக்கிறது. அதே போல் பெண்களின் , தொடையில், பிறப்புறுப்பு, இடுப்பு, பிறப்புறுப்புகள் மேலே மற்றும் பிறப்புறுப்பு, மற்றும் ஆசன வாய் பகுதிகளில் பாதிக்கும்.

ஆர்த்தரைடீஸ் (மூட்டு வாத)
சோரியாசிஸ்

இந்தவகைய் சருமத்தில் நமைச்சலுடன் கூடிய சிகப்பு திட்டுகளாக தோன்றும்.

நகங்கள் சொத்தையினால் பாதிக்கப்படும்.

அழற்சி, வீக்கம் – இவை விரல் மூட்டுக்கள், கால் கட்டை விரல் மூட்டுக்கள் – இவற்றை பாதிக்கும்.

பாதிப்படைந்த விரல் நகங்களின் அருகாமையில் உள்ள மூட்டுக்கள் பாதிக்கப்படலாம். சர்ம பாதிப்புகளும், ஆர்த்தரைடீஸீம் (மூட்டு வாதமும்) சேர்ந்தே தோன்றலாம்.

சோரியாசிஸ் குறையும் மறையும் போது ஆர்த்தரைடீஸீம் மறைந்து விடும்.

சோரியாசிஸ் ஆர்த்தரைடீஸீம் உடனே கவனிக்கப்பட வேண்டும். இதனாலும் நிரந்தரமாக மூட்டுக்கள் பாதிக்கப்படலாம்.

🔴 #தவிர்க்க_வேண்டிய_உணவுகள்

அசைவ உணவை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

டீ காபி, வெள்ளை சர்க்கரை, புளி மற்றும் புளி சார்ந்த புளியோதரை போன்ற உணவுகள்.

கடுகு கத்தரிக்காய், அகத்திக்கீரை, கடலை மற்றும் கடலை எண்ணெய், பூசணிக்காய் மற்றும் பாகற்காய் இவற்றை தவிர்ப்பது நல்லது.

பால்

மது

புகைபிடித்தல்

காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது. சொரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).

உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.

🔴 சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை

தோலைச் சொரியாதீர்கள். ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.

சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.

மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.

தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும்.

சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.

மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும்

👉இதனை மட்டும் கடைபிடித்தால் போதுமானது.

மருந்தின் விலை : – ₹₹ . 1,100
ஒரு மாததுக்கு செலவு

நோய் குணமாககும் வரை சாப்பிடவேண்டும்.

#மருந்து_தேவைக்கு……

999 437 9988
81 4849 6869

#மேலப்பாளையம்.
#திருநெல்வேலி.

உங்கள் எலும்புகளை வலிமையாக்க இதை ட்ரை பண்ணுங்க : பசலைக்கீரை எண்ணற்ற சுகாதார நன்…

உங்கள் எலும்புகளை வலிமையாக்க இதை ட்ரை பண்ணுங்க :

பசலைக்கீரை எண்ணற்ற சுகாதார நன்மைகள் அடங்கியுள்ள கீரைகளுள் ஒன்று.

இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான கரோட்டின்கள், அமினோ அமிலங்கள், இரும்பு, அயோடின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றைக் கொண்டு இருக்கின்றன.

அதிலும் பசலைக்கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது.

அந்தவகையில் பசலைக்கீரை கொண்டு ஜூஸ் எப்படி தயாரிப்பது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

• 2 கப் பசலைக்கீரை
• ஒரு ஆப்பிள்
• செலரி சிறிதளவு
• எலுமிச்சை சாறு சிறிதளவு
• நட்ஸ்
• தண்ணீர் தேவையான அளவு
• தேவையான அளவு சர்க்கரை

செய்முறை :

• கீரை சாறு தயாரிக்க, 2 கப் கீரையை கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். செலரி மற்றும் ஆப்பிளை பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.

• பின்னர், ஒரு பிளெண்டர் ஜாடியில், 3/4 கப் தண்ணீரில் ஆப்பிள் மற்றும் செலரியை சேர்க்கவும். இதில், எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்க வேண்டும்.

• ஜாடி மூடியை மூடி, மென்மையான வரை மிக்ஸி ஜாரில் அரைக்கவும். பழங்களின் துண்டுகள் எஞ்சியிருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

• இதில், சிறிதளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது, புதிய கீரை சாறு தயாராக இருக்கின்றன.

ஆரோக்கிய நன்மை :

• கீரையில் உள்ள வைட்டமின் கே எலும்புகளில் கால்சியத்தை உறுதிப்படுத்த காரணமாக இருக்கும் ஆஸ்டியோகால்க் என்ற புரதத்தின் உற்பத்தியை மேம்படுத்த உதவி செய்யும்.

• சன் பிளாக் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நீல ஒளியை உறிஞ்சி கண்களுக்கு நன்மை விளைவிக்கும், மேலும் கண்களுக்கு மாறுபாட்டை சிறப்பாக கண்டறிய உதவுகிறது. கீரை சாறு உங்கள் உடலில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவி செய்யும். தலைமுடியை ஈரப்பதமாக வைத்திருக்கும் சரும உற்பத்திக்கும் இது அவசியம். அனைத்து உடல் திசுக்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ முக்கியமானதாக உள்ளது.

• மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் கொழுப்பு படிவுடன் தொடர்புடைய இதய நோய்களை குணப்படுத்தும்.

• கீரையில் காணப்படும் தாதுக்கள் காரத்தன்மை வாய்ந்தவை மற்றும் நாள் முழுவதும் உங்களை உற்சாகப்படுத்த உதவி செய்யும்.

#சாமந்திப்பூ_நன்மைகள்:- மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, ஊதா என பல நிறங்களில் மின்னும் ச…

#சாமந்திப்பூ_நன்மைகள்:-
மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, ஊதா என பல நிறங்களில் மின்னும் சாமந்திப் பூ, சருமத்தை பாதுகாத்து, கூந்தல் பிரச்னையையும் தவிடு பொடியாக்கிவிடும். இதை #துலுக்கச்சாமந்தி என்றும் கூறுவர்.
உலர்ந்த சாமந்தி, உலர்ந்த ஆவாரம் பூ இரண்டையும் தலா அரை கப் எடுத்து பவுடராக்கி பாலில் கலந்து முகத்தில் பூசிவர, மாசு மரு இல்லாமல் முகம்பிரகாசமாகஜொலிக்கும்.
ஒரு கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, அதில் 25 மஞ்சள் சாமந்திப் பூவைப் போட்டு உடனே, அடுப்பை அணைத்துவிடுங்கள். இதை அவ்வப்போது வெயிலில் வைத்து எடுங்கள். #குழந்தையை_குளிப்பாட்டும்போதெல்லாம் இந்த எண்ணெயைத் தடவிக் குளிப்பாட்டுங்கள். நன்றாகத் தூங்குவதுடன், தோலும் நல்ல கலராக மாறும்.அருகம்புல் பவுடர், மஞ்சள் சாமந்தி பவுடர், பால் பவுடர் ஆகியவற்றை தலா அரை கப் எடுத்து தண்ணீர் விட்டுக் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவினால் 'ப்ளீச்' செய்தது போல் முகம் 'பளிச்'சென பிரகாசிக்கும்.
செம்பருத்தி இலை – 10, புங்கங்காய் தோல் – 4, மஞ்சள் சாமந்தி, துலுக்க சாமந்தி தலா – 5… இவற்றைச் சேர்த்து அரைத்து, வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்து வர, கூந்தல் சூப்பர் சுத்தமாகவும், தோல் மிருதுவாக மாறும்.சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து தண்ணீரில் ஊற வையுங்கள். 5 முறை தண்ணீரை மாற்றிக் கொண்டே இருங்கள். பிறகு வடித்து, பூக்களை மட்டும் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளியுங்கள். தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற பிரச்னைக்கு தன்னிகரில்லா தீர்வு கிடைக்கும்.
"சாமந்திப் பூ முறையற்ற உடல் உஷ்ணத்தைப் போக்கி பலத்தைத் தருகிறது.சாமந்திப் பூக்கள்
20 எண்ணிக்கை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி,15 நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர, மலச்சிக்கல் குணமாகும். முறையற்ற மாதவிடாய் கோளாறும் சரியாகும். வயிறு உப்புசம் நீங்கும்.பூவை கடாயில் போட்டு சூடாக்கி, துணியில் கட்டி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடியாக வீக்கம் குறையும்.மூலிகைக் கடைகளில் சாமந்திப் பூவில் தயாரித்த 'மதர் டிஞ்சர்' விற்கப்படுகிறது. இதை, அடிபட்ட புண்ணில் தடவினால் சீக்கிரம் ஆறி விடும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 2 துளி உள்ளுக்கு சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.
ஒரு சில வகை கேன்சர் நோய்க்கும் இது மருந்தாக பயன்படுகிறது. காதடைப்பு இருந்தால், காதில் ஒரு துளி விட்டுக்கொண்டால் போதும். உடனடியாக சரியாகிவிடும்.

நன்றி சொல்ல வேண்டும் உங்கள் கண்களுக்கு….ஹெல்த் ஸ்பெஷல் : அதிகமாக வேலை செய்த பின…

நன்றி சொல்ல வேண்டும் உங்கள் கண்களுக்கு….ஹெல்த் ஸ்பெஷல் :

அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.

கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

அதற்கு சில ஆலோசனைகள்:

* காலையில், சூரிய உதயத்துக்கு முன், எழுந்து கொள்ளுங்கள். வாய் நிறைய தண்ணீரை நிரப்பி, கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்கு, கைகளால் தண்ணீரை, கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர், சூடாகவும் இருக்கக் கூடாது; குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.

* வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகு, உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே, கண்ணையும், முகத்தையும், தண்ணீரால் கழுவலாம்.

* தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொருட்டு, அதிக நேரம் அதை உற்றுப் பார்க்காதீர்கள். கண்களுக்குத் தேவை யான அளவு, கண் சிமிட்டுவது அவசியம்.

* கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.

* அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும்.

* இரவு அதிக நேரம் கண் விழித்திருத்தல், சூரிய உதயத்துக்குப் பின்னும் தூங்கிக் கிடத்தல் ஆகியவை, கண்ணுக்கு ஊறு விளைவிக்கும்.

* தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம்.

* கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில், நாளொன்றுக்கு 10 முறை அசைத்து, பயிற்சி செய்தால், கண் தெளிவாக இருக்கும். 10 முறை, கண்ணைச் சுழற்றவும் வேண்டும்.

* கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

* ஒரு ஸ்பூன் திரிபலா சூர்ணத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். காலையில், தண்ணீரை வடிகட்டி எடுத்து, அந்தத் தண்ணீர் மூலம் கண்ணைக் கழுவினால், கண் பிரகாசமாக இருக்கும்.

* குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகி யவை, கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், கண் பார்வை, தெளிவாக இருக்கும்.
கண்ணுக்கு மையழகு!

* பன்னீரில், விளக்கெண்ணெயை கலந்து, பஞ்சில் தோய்த்து, கண் மீது வைத்து, 15 நிமிடம் ஊற வேண்டும். கண் எரிச்சல் மறையும்.

* வடிகட்டிய டீ தண்ணீரில், பஞ்சைத் தோய்த்து கண்ணில் வைத்தாலும், கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

* கரிசலாங்கண்ணிக் கீரையில் தயாரித்த மை, கண்ணுக்கு, அழகும், குளிர்ச்சியும் சேர்க்கும்.

* கண்ணை மூடியபடி, வெள்ளரிச் சாறால், கண்ணைக் கழுவலாம்; பஞ்சில் தோய்த்தும், 10 நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

* தக்காளிச் சதை, மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு, கடலை மாவு ஆகியவற்றை, பசை போல கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது பரப்பி, இரண்டு மணி நேரம் ஊறலாம். தூங்கும் நேரத்தில் செய்தால், உங்களுக்கு வசதி. வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வர, கரு வளையம் மறையும்.