பிரதோஷம் ஸ்பெஷல் ! பிரதோஷம் நாளை…. பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை,…

பிரதோஷம் ஸ்பெஷல் !

பிரதோஷம் நாளை….

பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படுவது.

சிவன் நந்தியின் கொம்புகளில் நின்று ஆடும் அழகிய தாண்டவத்தின் வேளையது.

தேவரும், கடவுளரும், முனிவர்களும் கூடி நின்று சிவனாரின் தாண்டவத்தை கண்டு பக்தி பரவசப்படும் நேரமது.

பிரதோஷ வேளையின் மஹிமையை அறிந்தவர்கள் சிவனின் அளவில்லா கருணைக்கு பாத்திரமாக இந்த வேளையில் விரதமிருந்து, சிவனுக்கு பூஜை செய்கிறார்கள்.

தோஷம் என்றால் குற்றம்.
'ப்ர' என்றால் பொறுத்துக்கொள்வது.

இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள் தரும் காலமே பிரதோஷம்.

இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம்!

“ஓம் நம சிவாய”

இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

1. நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும்.
2. உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.
3 குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.
4. எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர்.
5. இறுதியில் மோக்ஷம் கிடைக்கும்.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

பிரதோஷத்தின் சிறப்பையும் பயனையும் உரைக்கும் பாடல் ..!

" பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம் ஏகித் தொழுத பேறு பெற ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே.’’

பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோகத்தை 18 முறை சொல்லவேண்டும்.

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச
விபனோம்ருது ரவ்யய:

இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்க வேண்டும் !

"நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே."

— (என்ற பாடல் பிரதோஷம் மற்றும் நந்தியம் பெருமான் மகிமையை வலியுறுத்தும்)

பிரதோஷத் திருநாளான நாளை எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எம்பெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவோமாக !!

திருச்சிற்றம்பலம் !

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam புடலங்காயில் உள்ள சத்துக்களும்…

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
புடலங்காயில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

புடலங்காயில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.

புடலங்காயில் நன்கு முற்றிய புடலங்காய் சாப்பிடுவதை தவிர்த்து, பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி அடைந்த புடலங்காயை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

புடலங்காய் குளிர்ச்சி தன்மை நிறைந்த ஒரு காய் வகையாகும். தினமும் இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.

அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

தலைமுடி தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.

தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
#bairavar #bhairavar #vijayswamiji #bairavapeedam
#கார்த்திகைவிரதம்

Allala Kanda… Tamil Movie Songs – Sangamam [HD]Like ✔ Comment✔ Tag ✔ Share ✔
▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•
Subscribe Now●–~√V”^—●▐ ►.::http://goo.gl/aQ5q9Q
Coming Soon 2015 Movies
Tamil Movies 2015 Full Movie New Releases – Kaya Pazhama
Tamil Movies 2015 Full Movie New Releases – Devathai Sonna Kavithai
▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬•
Sangamam (Tamil: சங்கமம்) is a 1999 Tamil musical romance film directed by Suresh Krishna and produced by V. Natarajan of Pyramid Films. The film featured Rahman and newcomer Vindhya in the lead roles with Manivannan, Vijayakumar and Radharavi essaying other important roles. The film’s music was composed by A. R. Rahman, while Saravanan handled the cinematography. The film opened in 1999 and though the soundtrack won awards and rave reviews, the film became a financial failure.
Tamil Songs,Tamil Movies Subscribe:http://www.youtube.com/ TamilmoviesMW
Click Here & Subscribe Now
http://www.youtube.com/subscription_center?add_user=TamilMoviesMW
Click Here Full Movies
https://www.youtube.com/playlist?list=PLRNGQPcJVJvoYd61r_fL5hmLCUgy7f2Yb
This Tamil YouTube movie channel Movie World Tamil contains copyright/Classic/Evergreen/Exclusive/Of­ficial/Tamil new movies contents from Tamil movies

"#ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் ஊனத்திரளை நீக்கும் அதுவும்…

🌺"#ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் #அண்ணாமலையாரே.🌺
——(#திருஞானசம்பந்தர் #தேவாரம் : 01.069.03)

#பொருளுரை : இராப்போதில் பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கி வரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகம நூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

திரு மயிலை சற்குருநாத ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/xQqdnhXGjdY

திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/vDoqZWufSSQ

சம்பந்தம் குருக்கள் ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/ZwF6_UOkG5I

திருஅறையணிநல்லூரை வழிபட்ட பிள்ளையாருக்கு, அன்பர்கள் அண்ணாமலையைக் காட்டினார்கள். அண்ணாமலை இறைவன் திருவுருவாகவே காட்சியளித்தது, அதனைக் கண்ணாற்பருகிக் கைதொழுது கலந்து போற்றுங்காதலினால் இப்பதிகத்தை அருளிக்கொண்டே தலத்தையடைகின்றார்கள்.

காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

01 010 திருஅண்ணாமலை || உண்ணாமுலை உமையாளொடும் || சம்பந்தர்
https://youtu.be/ePbILsKRQLU

01 069 திருஅண்ணாமலை || பூவார் மலர் கொண்டு || சம்பந்தர்
https://youtu.be/xQqdnhXGjdY

05 004 திருஅண்ணாமலை || வட்டனைம் மதிசூடியை || அப்பர்
https://youtu.be/en1Ictvs9gw

05 005 திருஅண்ணாமலை || பட்டி ஏறு உகந்து || அப்பர்
https://youtu.be/EvPpM0O7UPs

#குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவார திருப்பதிகங்கள்
https://www.youtube.com/playlist

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவார திருப்பதிகங்கள்
https://www.youtube.com/playlist

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவார திருப்பதிகங்கள்
https://www.youtube.com/playlist

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்
https://www.youtube.com/playlist

நலம் தரும் பதிகங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைய…👇👇
https://chat.whatsapp.com/L1XiFVcWHVs6QbX7xAVOUV

TelegramGroup : https://t.me/DeivaThamizh

நால்வர் பெருமக்கள் அருளிய நற்றமிழ் தேவார பதிகங்களின் பாடல் வரிகளை, பொருளுரை மற்றும் ஓலி இசையோடு(🎶🎵🎼) கேட்டு மகிழ கீழே 👇👇 கொடுக்கப்பட்டுள்ள YouTube Channel ஐ Subscriber செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/channel/UCEwdHs8LcSM1MToqMdxzEig

🌺"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌺

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் ! ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை…

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !

ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது. இது ஸ்ரீரங்கத்திற்கே
உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும்.

‘விஸ்வம்’ என்றால் ‘பெரிய’ என்றும் ஒரு பொருள் உண்டு.
‘ரூபம்’ என்றால் உருவம்.

இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்றுதான் திருநாமம். பெரியபெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே!

வேறு ஏதாவது காரணம் உண்டோ? உண்டு..!

108 திவ்யதேசங்களில் உள்ள அனைத்து பெருமாளும் முதல் நாள் இரவு இங்கு வந்து அரங்கனிடத்து ஒடுங்கி,
ஒன்றாகி அடுத்த நாள் காலை அவரவர் தம் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளிவிடுவார்கள்.

அனைத்து திவ்யதேச எம்பெருமான்களும் ஒன்றாகி சேவை சாதிக்கும் இந்த நேரம் மிகப்பெரிய மகத்துவம் பொருந்திய சேவைதானே?

அதனால்தான் இந்த தரிசனம் ‘விஸ்வரூப தரிசனம்’!

தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது
சிவன், நான்முகன், ஸநகர் ஆகியோர் அரங்கனது வாயிலில் இந்த விஸ்வரூப ரங்கனைக் காண்பதற்காக, தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டு,

உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும் பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.

இதனால்தானே என்னவோ? ஆகம ரீதியாகவும், காவேரியினின்று யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன்,

அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது. இதற்கு ‘திருவடி விளக்குதல்” என்று பெயர்.

ஸ்வாமி தேசிகர் சொன்னது போல் அரங்கன் அதனைச் சாற்றிக் கொள்ளும் முன் முதலில் தன்னை கங்கையிற் புனிதமான காவிரி நன்னீரால் ஸ்நானம் பண்ணிக் கொள்கின்றது.

அரங்கன் கண் விழித்தலுக்கு முன் வீணை இசைக்கப்படுகின்றது. காவிரி நன்னீர் வந்தவுடன் பசுமாடு பின்பக்கமாய் திரும்பி நிற்க வைக்கபபடுகின்றது.

யானை அந்த பரந்தாமனை நோக்கிய வண்ணம் தயாராய் நிற்கின்றது. பசுமாட்டின் வால்பக்கம் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கின்றாள்.

யானையின் முகத்தில் வாஸம் செய்கின்றாள். பகவான் மஹாலக்ஷ்மியினை
கடாக்ஷித்தவாறு திருக்கண்ணை மெதுவே திறக்கின்றான்.

இந்த அழகினை ரசிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா
ப்ரத்யாஸந்தா தவ பரிஜநா ப்ராதரஸ்தாந யோக்ய
அர்த்த உந்மேஷாத் அதிக சுபகாம் அர்த்த நித்ராநுஷங்காம்
நாபீ பத்மே தவ நயநயோ நாத பஸ்யந்து ஸோபாம் ||

பொருள்:

ஸ்ரீரங்கநாதா! காலைவேளையில் உனக்கு தொண்டு புரியும் கைங்கர்யபரர்கள் வந்து விட்டனர்.

உனது தாமரைப் போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும், கலையாமலும் உள்ளதால், உனது இமை பாதி மூடியும், திறந்தும் உள்ளது.

இந்த அழகைக் கண்டு நாபி கமலத்தில் உள்ள தாமரை மலர் உனது கண்கள் போலவே மலர்ந்தும் மலராமலும் உள்ளது. இந்த அழகை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

உனது திருவடியினை வணங்கி வருடிய மஹாலக்ஷ்மியின் ஸேவையினை இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும். (ஆகவே துயில் எழுவாயாக!)

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் ம…

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான பெருமாள் தலம் கண்ணாகக் காக்கும் கண்ணிறைந்த பெருமாள்!
==================
புதுக்கோட்டை மாவட்டம்
மலையடிப்பட்டிக்குச் சென்றால் ஐந்து கோலங்களில் பெருமாளையும், எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் மலையடிப்பட்டியில் இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17-வது கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

அருள்தரும் எட்டு லட்சுமிகள்

நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும், கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சிதருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா, சுற்றிலும் அஸ்வினி, தேவர்கள், கின்னரர், கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ திவாகரமுனிக்குக் காட்சிகொடுத்தபடி இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார்.

அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும், புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி-பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும், லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும், தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும், தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீபலட்சுமியுமாக எட்டு லட்சுமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யலாம்!

சாட்சியாக நிற்கும் தூண்கள்

திருமால் கண்மூடித் தூங்கும் பாவனையை அறிதுயில் என்பார்கள். கண் மூடி இருந்தாலும் நடக்கும் எல்லாச் செயலும் அவன் அறிந்தவாறே நடைபெறுகிறது என்பது இதன் பொருள். அரங்கருக்கு முன்புறம் உள்ள இரண்டு தூண்கள் அரி நேத்ர தூண்கள் என்றும் திருநேத்ரத் தூண்கள் என்றும் சொல்லப்படுகின்றன. நடைபெறும் அனைத்தையும் அந்தத் தூண்களின் வழியே அறிந்தவாறு திருமால் கண் துயில்கிறார் என்று சொல்லப்படுகிறது. நம் வருகை முதல், பிரார்த்தனைவரை அனைத்தையும் அந்தத் தூண்கள் மவுன சாட்சியாக நின்று பெருமாளிடம் பரிந்துரைத்துக்கொண்டிருக்கின்றன என்பது ஐதீகம்.

திருமாலின் திருவிளையாடல்

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே, தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார்.

“பேர் தெரியாது சாமி. அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு, மாடுகளைக் காப்பாத்தறதனால ‘பட்டிசாமி’ன்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு” என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக்கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர், கிம்புருடர், வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார்.

ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து, “இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்?”. “இதுதான் நாங்க கும்படற சாமி” என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய், “அரங்கா இது என்ன சோதனை” என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் பூஞ்சையாய் சிரித்தான். அவன் யார் என உணர்ந்தார். மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார்.

பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி, கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார்.

நாமெல்லாம் ஆடு, மாடுகள்

பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில், கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள்கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன.

தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி, மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது.

திவாகர முனி வரலாற்றோடு தொடர்புடைய குகைக்கோவில் என்பதால் திருவனந்தபுரத்துக்கு முன்னாலேயே தோன்றிய குடைவறைத் திருக்கோயில் மலையடிப்பட்டி அருள்மிகு கண்ணிறைந்த பெருமாள் திருக்கோயில்.

திருமாலே மலை. அவர் அடியில் நம்மை சரணாகதி செய்து கொண்டு பட்டியில் அடைபட்ட ஆடு, மாடுகளாக இருப்பவர்கள் நாம். நமக்கு வேண்டுவனவற்றை அவ்வப்போது தந்து நம்மைக் காப்பவன் அவன் என்பதை உலகுக்கு உணர்த்துபவர் திருமலையடிப்பட்டி பெருமாள்.

அருகிலேயே சிவபெருமானுக்கு என ஒரு குடைவறைக் கோவில் குடையப்பட்டு சப்தமாதர்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். குடைவறையின் அமைப்பைக் கொண்டு கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் குடையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

திருமங்கை ஆழ்வார், உடையவர், நாதமுனிகள், விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி குபேர சம்பத்துக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தீபாவளி கார்த்திகை, ஆடி, தை வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.

தினமும் காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரையும், மாலை நான்கு முதல் 6.30 மணிவரையும் தரிசனத்திற்காகக் கோயில் திறந்திருக்கும்.🔵🔵

விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் ! நமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள …

விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் !

நமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள உதரவிதானம் என்ற தசைப்பகுதி தான் நாம் சுவாசிக்க உதவி செய்கிறது.

மூச்சை உள்ளிழுக்கும்போது, இந்த உதரவிதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை நிரப்பவும், மூச்சை வெளிவிடும்பொழுது மேலேறி நுரையீரலை அழுத்தி காற்று வெளியேறவும் உதவி செய்கின்றது.

விக்கல் இங்கிருந்துதான் துவங்குகின்றது. சில சமயங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ஹிக் ஹிக் என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல்.

ஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் போது விக்கல் நிற்பது ஏன்?

பயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன. இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.

விக்கல் வருவதற்கான காரணங்கள் :

உணவை வேகமாகச் சாப்பிடுதல்.

அளவுக்கு மீறிய உணவை உண்ணுதல்.

வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்துதல்.

அளவிற்கதிகமாக மது அருந்துதல்.

வயிற்றில் திடீரென ஏற்படும் வெப்பமாற்றம்.

தீர்வுகள் :

விக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10 – 20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம்.

ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

நன்றிகளும்
பிரியங்களும்.

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன ? ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வ…

😍 மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன ?

🐺 ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது..

🐺 அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது..

அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்..

வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே.. என்ன செய்யலாம்…..???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது..

அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது..

என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது..

உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது..

உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது..

🐺 உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது..

🐺 இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது..

”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி
உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது..

உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்..

ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது..

🐺 ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது..

இப்படித்தான் மதவாதிகள் பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கின்றார்கள்..

🐺 நம்பிப் போன மக்களும் திரும்பி வந்தால் அவமானப்பட்டு விடுவோம் என்று அவங்களால் முடிந்த அளவிற்குக் கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்..

🐺 அந்த வேலைதான் பல நாடுகளில், பல ஊர்களில் வெகு விமரிசையாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது……

😊 கு பண்பரசு

"#திருநீலகண்ட #பதிகம்" — "பிரதோஷ சிறப்பு பதிவு" — "#க…

🌺"#திருநீலகண்ட #பதிகம்" — "பிரதோஷ சிறப்பு பதிவு"🌺

🌺"#காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா #திருநீலகண்டம்."🌺
——(#திருஞானசம்பந்தர் #தேவாரம் : 01.116.02)

#பொருளுரை : நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு "கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே" என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

திரு மயிலை சற்குருநாத ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/6emPNB_V9Fk

திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/7GaQk7_hyf4

திரு சம்பந்தம் குருக்கள் குரலிசையில்
https://youtu.be/fXkfosJFGf4

திரு மகேஸ்வர ஓதுவார் குரலிசையில்
https://youtu.be/x2h1QbY5Xgw

கொடிமாடச் செங்குன்றூரில் திருஞானசம்பந்தர், அடியார்களுடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்பொழுது பனிக்காலம் வந்தது. பல அடியார்களை நளிர் சுரம் பீடித்தது. அதனால் அடியார்கள் வருந்தினர். சம்பந்தரிடம் விண்ணப்பித்தனர். இது கேட்ட சம்பந்தர், "இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பே என்றாலும், அடியார்களை இந்த நோய் எய்தக்கூடாது. "நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர் தீர்க்கும் அரிய துணை" என்று எண்ணி "அவ்வினைக்கு இவ்வினை" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் "வினை தீண்டா! திருநீலகண்டம்!" என்று ஆணையிட்டு அருளினார். உடனே அடியார்களுக்குச் சுரம் தீர்ந்தது மட்டுமல்லாமல் அந்நாட்டிலேயே அந்தச் சுரநோய் தொலைந்தது.

#குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

நலம் தரும் பதிகங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைய…👇👇
https://chat.whatsapp.com/L1XiFVcWHVs6QbX7xAVOUV

TelegramGroup : https://t.me/DeivaThamizh

நால்வர் பெருமக்கள் அருளிய நற்றமிழ் தேவார பதிகங்களின் பாடல் வரிகளை, பொருளுரை மற்றும் ஓலி இசையோடு(🎶🎵🎼) கேட்டு மகிழ கீழே 👇👇 கொடுக்கப்பட்டுள்ள YouTube Channel ஐ Subscriber செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/channel/UCEwdHs8LcSM1MToqMdxzEig

🌺"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌺

கைசிக ஏகாதசி ஸ்பெஷல் ! கைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க பட்டருக்…

கைசிக ஏகாதசி ஸ்பெஷல் !

கைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க
பட்டருக்கு 52 வயது நிரம்புகின்றது. சில நாட்கள் கழித்து அன்று ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசி.
கைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க வேண்டும். அன்றைய தினம் கைசிக ஏகாதசியன்று பட்டர் வெகு விசேஷமாக, அளவற்ற ஞானத்துடனும், ஒவ்வொரு பதத்திற்கும் இதுவரைக் கேளாத அதிவிசேஷார்த்தங்களை பிரவாகமாக உபதேசித்தருளுகின்றார்.
கூடியிருந்தோரெல்லாம் இவரது வாக்பிரவாகத்தில் கட்டுண்டு கிடந்தனர். அரங்கனின் அந்த அர்ச்சை சொரூபத்தில் கூட மார்பும் தோளும் விரிந்து பூரித்தது. தாம் சாத்தியிருந்த மாலையை கழட்டி சாதிக்கச் சொல்கின்றார். திருப்தியடையாது தம் சாத்தியிருந்த பொன்னாடையைப் போர்த்துகின்றார். அப்பவும் திருப்தியடையவில்லை. தம்முடைய திவ்ய திருவாபரணத்தினையெல்லாம் கழட்டி பட்டரை அணியச் செய்விக்கின்றார். இவ்வளவு செய்தும் அரங்கன் திருவுள்ளம் அப்போதும் திருப்தியடையவில்லை! தாம் எழுந்தருளிய ஒரு சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்கின்றார். வேறு பல அரிய பரிசில்களை கொடுக்கின்றார். உஹூம்! அரங்கன் இதனால் எல்லாம் திருப்தியடையவேயில்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை! ‘இவர்க்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ யோசிக்கின்றார். பளீரென்று சொல்கின்றார், ”பட்டரே! உமக்கு மேலே வீடு தந்தோம்” என்று இதுநாள் வரை யாரிடமும் சொல்லாத ஒரு சொல்லைச் சொல்கின்றார். இப்போது பட்டரின் மார்பும் தோளும் சந்தோஷத்தினால் பூரிக்கின்றது.
‘மஹாப்ரஸாதம்’ என்று அங்கீகரித்து அந்த சந்தோஷத்துடனே தண்டன் சமர்ப்பிக்கின்றார். க்ருதக்ஞையோடு நமஸ்கரிக்கின்றார். அரங்கனிடத்துச் சொல்கின்றார். ‘நாயன்தே! தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிசெய்தருளினீர். ஆனால் தேவரீர் தாமே உம்முடைய திருவாயினால் என்னைத் தவிர வேறு யாருக்குமே திருவாய் மலர்ந்து அருளப்பெற்றிராத இந்த பேற்றுக்கு, உடையவர் எமக்கு தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், எம் தந்தையான ஆழ்வானும், எம்பாருமே’ என்று விண்ணப்பம் செய்கின்றார். கூடியிருந்த வைணவர்களனைவரும் கடல் போன்று கலங்கினார்கள். ‘அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க வேணும்? உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாமென்றிருந்தோமே’ என்று கதறுகின்றார். அதற்கு பட்டர், இன்னம் சிறிது நாள் இங்கே அரங்கன் என்னை அடிமைக் கொண்டிருந்தால் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் ஒரு பாலமே அமைத்திருப்பேன்’ என்கின்றார். திடீரென்று ஒரு கவலைப் பிறந்தது பட்டருக்கு! அரங்கனிடத்து நிவர்த்தி செய்ய கேட்கின்றார் ” ப்ரபோ! அங்கு பரமபதத்திலே அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், புறுவல் பூத்த சிவந்த திருமுகமும், நெற்றியில் கஸ்தூரி திலகமுமாக தேவரீரை பரமபதத்திலே தரிசனம் செய்ய முடியும்தானே? நாம் காணவிட்டால் அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கே மீண்டு வருவேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன் எப்போதுதான் முடியாது என்று பட்டருக்குச் சொல்லியிருக்கின்றான்! ஒப்புக் கொள்ள பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவிக்கின்றார். கண்ணாரக் கண்டு ஆனந்திக்கின்றார்!.
பெருமாள் தம் பரிசகர்களனைவரையும் பட்டர் கூட அனுப்புகின்றார். ப்ரம்மரதமொன்று தயார் செய்கின்றார். கோயிலுள்ள அர்ச்சகர் உள்பட அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களும், அகில ஸ்ரீவைஷ்ணவர்களும், எல்லா ஆச்சார்யர்களும், மற்றுமுள்ள ஸேவார்த்திகளும், மற்றையோரும் பட்டரை சூழ்ந்து அவரை பிரிய சகியாது கூடவே வருகின்றனர். அரங்கன் முற்றம் அங்கே வெறிச்சோடியது. பட்டர் தம் திருமாளிகையினுள் புகுந்து தம் திருத்தாய் ஆண்டாளை ஸேவிக்கின்றார். ஆண்டாள்,
‘நலமந்தமில்லதோர் (என்றும் நலமேயுடைய) நாடு புகுவீர்!’ என்று ஆசீர்வதிக்கின்றார். பட்டரும், ‘அம்மா! அடியேன் வேண்டுவதும் இதே!’ என்று உகந்தருளுகின்றார். (எப்படிப்பட்ட தாயும் மகனும்! நம் வைணவம் பெற்ற பேறு!)
பட்டரின் திருமாளிகையில் கூட வந்தவர்கள் அனைவரையும் வயிறார அமுது பண்ணச் செய்தனர்.
அனைவரும் அமுதுண்ட பின், பட்டர் திருமாளிகையின் நடுவில் அமர்கின்றார். திருநெடுந்தாண்டகத்தினை விசேஷமாக விரிவாக வியாக்யானம் செய்கின்றார். அதில் ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்” என்கிறவிடத்திலே, ”பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைகொண்டபின், பிறவி எனும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்” என்று இதனை இரண்டு முறை மெய்சிலிர்த்து வியாக்யானம் செய்கின்றார். மேற்கொண்டு பேச முடியவில்லை! திருமேனி பூரித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றது! புன்முறுவல் பூத்தவண்ணம் திருமுடியின் மேல் அவர்தம் இரு கைகளும் குவிந்து நமஸ்கரிக்கின்றது. எழுவதற்கு முயற்சிசெய்து பாதி எழுந்த நிலையில் பின்னாலிருந்த அணையினில் சாய்கின்றார். பட்டரின் சிரக் கபாலம் படீரென வெடிக்கின்றது. அரங்கனையே ஆட்கொண்ட அந்த பறவை சுதந்திரம் பெற்று திருநாட்டுக்கு பறக்கின்றது
பட்டர் பரமபதிக்கும் போது அவரது தாயாரான ஆண்டாள் அருகிலுள்ள ஒரு அறையில் அரங்கனைத் தியானித்த வண்ணம் இருந்தாள். பட்டரின் சீடர்கள் ஆண்டாளிடத்து, ”பட்டர் இளைத்து எழுந்தருளியிருக்கிறார்’ என்று பட்டர் பரமபதித்ததை அறிவிக்கின்றார். அந்த பரம ஸ்ரீவைஷ்ணவிக்கு திருவுள்ளம் கலங்கவில்லை! திருமுகம் கன்றவில்லை! கண்ணீர் மல்கவில்லை! வண்டு எப்படி பூவானது நோகாமல் அதன் மேல் அமருமோ, அதுபோன்று பட்டரது திருமேனியினை அவரது ஹ்ருதயகமலத்தினை அலர்த்தி தன் மேல் சார்த்திக் கொண்டாள். ‘பரமபத நிலையனுக்கும் அங்குள்ள நாச்சிமாருக்கும் பெருவாழ்வும் பெருங்களிப்பும் அடையும்படி இந்த ஆத்மா செல்லுகிறதே! உடையவன் உடைமையைக் கைக்கொண்டால், நாம் வெறுக்கலாமோ?” என்று கூறி தம் மகனை நெஞ்சோடு அணைத்தப்படி அமைதியாயிருந்தாள்! கோயிலார்கள் அனைவரும் அனைத்துமே பறிபோனது போன்று கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். நஞ்சீயர் வேரற்ற மரம் போல சோகமே உருவாய் வீழ்ந்து கிடக்கின்றார். கூடியிருந்தோர் கண்ணீர் மழை சொரிகின்றனர்! நம்பெருமாளின் முகம் கன்றி காட்சியளிக்கின்றது. நம்பெருமாளும், தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி, திருவெண்சாமரம், திருவாலவட்டம், திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின் கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில் அனுப்பிவைத்து, ‘நம்முடைய அவப்ருதோத்ஸவம்(திருமஞ்சன உத்ஸவம்) கொண்டாடுமாப்போல் பட்டருக்கும் அவப்ருதோத்ஸவங் கொண்டாடுங்கோள்” என்று திருவுள்ளமாய், பெருமாளும் நாச்சிமாருமாய் திருமஞ்சனம் கண்டருளி, ‘நம் புத்ரனை இழந்தோமே!’ என்று வருந்தி வெற்றிலைப் பாக்குக் கூட அமுது செய்யாமல் வருத்தமுடனே தம்மிடத்திற்கு எழுந்தருளினார்.
நஞ்சீயர் உள்ளிட்ட கோயிலார்கள் பட்டருடன் கூடப் பிறந்த வேதவியாசப்பட்டரைக் கொண்டு பட்டருக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்து பள்ளிப்படுத்துகின்றனர். அவப்ருதோத்ஸவமும் நம்பெருமாள் திருவுள்ளப்படிச் செய்து மீண்டு வருகின்றனர். வேதவியாசப்பட்டர் பட்டரது பிரிவினால் வெறிச்சோடிப் போன திருமாளிகையினைக் கண்டு மனம் வெதும்பி சோகித்து அழுகின்றார். ஆண்டாள் பட்டர் பெற்றப் பேற்றினைக் கூறி தம் இன்னொரு மகனை சமாதானப்படுத்துகின்றாள். பட்டருக்கு தீர்த்த திருவத்யயநம் ஆனவுடன் வேதவியாச பட்டர் பெருமாளைத் திருவடித் தொழச் செல்கிறார்.
அரங்கன் சீராமப்பிள்ளையை (வேதவியாசப்பட்டரினை) அருளப்பாடிட்டு அருளுகின்றார், ” பட்டரையிழந்தோம் நாம்! உமக்கு நாம் இருக்கின்றோம்! முசியாதே கொள்ளும்!(வருத்தப்படாதே!)” என்று தேற்றி வேதவியாசப்பட்டருக்கு ப்ரஹ்மரதம் பண்ணுவித்துத் திருமாளிகையில் கொண்டு சேர்க்கின்றார். பட்டருக்குப் பிறகு வேதவியாசப்பட்டர் பரம சிரத்தையுடனே ஸ்ரீரங்கஸ்ரீயின் தர்ஸநம் நிர்வஹித்து வருகின்றார்.
பட்டர் அதிக திவ்யதேசங்களுக்குச் சென்றதாய் ஏதும் குறிப்புகளில்லை. பட்டரை அதிவிசேஷமாய் ஈர்த்து தம்மிடத்தேயே வைத்துக் கொண்டது அரங்கன்தான்!. நம்பெருமாள் யாரிடமுமே அதிகம் பேச மாட்டார். பெரும்பாலும் கனவில்தான் தோன்றி பேசுவார். பேசினாலும் சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மறைந்து விடுவார். அந்த அரங்கனே பட்டரிடத்தில் அதீதப்ரீயனாய், அந்தரங்கனாய், அதிகம் ஈர்க்கப்பட்டவனாய், அற்புத தந்தையாய், அளவற்ற நேசமுடையவனாய், பரிவுடனிருந்தார். அரங்கன் அதிகம் அளவளாவியது பட்டருடன் மட்டுமே!. பட்டரிடத்து அளவிலாத சந்தோஷத்துடன் மேலே வீடு அளித்தேன் என்று அனுப்பி வைத்தாலும் அர்ச்சையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பாய் அவனும் அவதிப்பட்டிருப்பான்!.
பட்டரும் மேல்கோட்டை திருநாராயணபுரம், திருக்கோஷ்டியூர் முதலிய திவ்யதேசங்களில் எல்லாம் தங்கியிருந்தபோதும், எப்போது ஸ்ரீரங்கம் திரும்புவோம் என்றேதானிருந்தார்.
‘நம்பெருமாள் அஞ்சலென்ற கை மறுத்தாலும், அவ்வாசலெழிய வேறெரு போக்கு உண்டோ?’ என்று கூறியபடி திருவரங்கத் திவ்ய தம்பதிகளைத் தவிர மற்றொரு கதியின்றியிருந்தார். அரங்கனிடத்து கைங்கர்யம் செய்பவர்கள் யாருமே இப்படியிருப்பதுதான் நற்கதி! பிறவிப்பயன்! அரங்கன் கற்பக விருட்சம்! நாம் எதை மனதார வேண்டுகின்றோமோ அதை கைவல்யமாக அளிப்பதில் வல்லவன்!. நாமும் பட்டர் எப்படி நம்பெருமாளையும் தாயாரையும் ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்திருந்தாரோ, அதேப் போன்று
நம்முடைய தாயாகவும் தந்தையாகவும் போற்றி வணங்க வேண்டும். அந்த மனப்பக்குவத்தினை நன்கு வளர்த்து நம்பெருமாளும் தாயாருமே கதியென்று கிடக்க வேண்டும். நீயே கதியென்று கிடந்தால் நம் விதியை அவன் பார்த்துக் கொள்வான்.
‘எனது நான் எனச் செருக்கி மமதையுற்று அலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே!
எனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடும்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ!”
பட்டரிடத்து அரங்கன் மேலே வீடு தந்தோம் என்றவுடனேயே ‘மஹாபிரஸாதம்’ என்று ஏற்றுக்கொண்ட பிறகு பட்டருக்கு ஒரு சந்தேகம். இதேப் போன்று நம்பெருமாள் அங்கு ஸேவை சாதித்தால்தான் போவேன் என்று அடம் பிடிக்கின்றார் அரங்கனிடம்!. நெகிழ்ந்து போனான் அரங்கன்!.
பக்தி என்பது எப்படியிருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்கள்.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !