இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் ம…

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்

#வனமுலை_நாயகி_உடனாய_கேடிலியப்பர்_திருக்கோவில்:

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கீழ்வேளூர். இதனை பேச்சுவழக்கில் கீவளூர் என்று அழைக்கிறார்கள். இங்கு வனமுலை நாயகி உடனாய கேடிலியப்பர் திருக்கோவில் உள்ளது. இத்தல இறைவனை அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். இத்தலத்தில்தான் அகத்தியருக்கு, நடராஜப்பெருமான் தமது வலதுபாத தரிசனம் தந்தருளினார். குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

திருச்செந்தூரில் சூரபத்மனை அழித்து, அவனை ஆட்கொண்டு தேவர்களை காத்து அபயம் அளித்து அருளினார், முருகப்பெருமான். சூரபத்மனை அழித்ததால் முருகப்பெருமானை கொலை பாவம் சூழ்ந்தது. இதனால் முருகப்பெருமானின் மனம், ஒரு நிலையில் இல்லாமல் இருந்துவந்தது. இதனை விலக்க முருகப்பெருமான் சிவாலயங்களில் சிவபூஜை செய்து வழிபட்டு வந்தார். ஆனால் எந்த இடத்திலும் அவரது சிவபூஜை நிறைவுபெறாதபடி, முருகப்பெருமானின் மனதை அந்த பாவமானது வாட்டி வதைத்து வந்தது. அதுமட்டுமின்றி, முருகப்பெருமான் சிவபூஜை செய்யும் இடங்களில் எல்லாம், கெட்ட சக்திகள் சிவபூஜையை நிறைவேற விடாமல் தடுத்தன. முருகப்பெருமானைச் சுற்றிப் பல பயங்கர முகங்கள் தாண்டவ மாடின. எல்லாம் பார்க்க முடியாதபடி கோர உருவங்கள்.

இதையடுத்து முருகப்பெருமான், சிவபெருமானிடம் “ஐயனே.. சிவபூஜையை நிறைவேற்றிட துணை புரிய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். உடனே சிவபெருமான் தோன்றி, “முருகா.. சிக்கல் திருத்தலம் அருகில் உள்ள இலந்தை வனத்திற்கு சென்று சிவ பூஜை செய். உன் தாயின் அருளால் உன்னை சூழ்ந்த கெட்ட சக்திகள் விலகும்” என்று அருளினார்.

சிவபெருமான் சொன்னபடியே இலந்தை வனம் வந்து, அங்கு சுயம்புவாக இருந்த சிவலிங்கத்திற்கு சிவபூஜை செய்தார், முருகப்பெருமான். அபிஷேகத்துக்கு தீர்த்தம் வேண்டி அருகில் பூமியில் தன் வேலை ஊன்ற, அதிலிருந்து தீர்த்த நீர் வெளிப்பட்டது. அந்த தீர்த்தமே இத்தல சரவண பொய்கையாக திகழ்கிறது. இப்போதும் முருகப்பெருமானைச் சுற்றி, கெட்ட சக்திகள் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தன. இதனைக் கண்ட பார்வதிதேவி, தன்னில் இருந்து காளியை தோற்றுவித்தாள். காளி தேவி, முருகப்பெருமான் பூஜை செய்த இடத்தைச் சுற்றி நான்கு புறமும் கவசம் உண்டாக்கி, கெட்ட சக்திகளை தடுத்து நிறுத்தினாள். இதையடுத்து முருகப்பெருமானின் சிவ பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.

இதையடுத்து முருகப்பெருமான், தம்மை சுற்றி நான்கு திசை மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் கவசம் ஏற்படுத்தி அருளிய தமது அன்னையை ‘அஞ்சுவட்டத்தம்மா’ எனப்போற்றித் துதித்தார். முருகப்பெருமானை காத்த காளி அன்னை இத்தலத்தில் ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்னும் திருநாமத்திலேயே அருள்பாலிக்கிறாள். அஞ்சு வட்டத்தம்மன் இங்கு சுதை வடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி இருக்கிறாள். இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி, கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து, 9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து, குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வந்தால், நம்மை பிடித்த தீராத நோய்கள், வறுமை, பில்லி சூனியம் போன்ற தீவினைகள் அனைத்தும் விலகிவிடும்.

இந்த ஆலயத்தின் மூலவர் கேடிலியப்பர், சுயம்பு மூர்த்தி ஆவார். இவருக்கு புனுகுசட்டம், சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. இவர் தம்மை அண்டியவர்களின் தீவினைகள், கெடுதல்கள், கிரக தோஷங்கள், கர்மவினைகள் போன்றவற்றை அகற்றி இன்பம் அருள்வதால் ‘கேடிலியப்பர்’ என்று பெயர் பெற்றார். திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில், இத்தல அம்மையப்பனை வழிபட்டால் துன்பங்களும், வினைகளும், பிணிகளும் அகன்றோடும் என்கிறார்.

சந்தனத்தின் 14 இயற்கை நன்மைகள் 1. படர்தாமரை சந்தனக் கட்டையை எலுமிச்சை பழச்சாறில…

சந்தனத்தின் 14 இயற்கை நன்மைகள்

1. படர்தாமரை சந்தனக் கட்டையை எலுமிச்சை பழச்சாறில் ஊறவைத்து தடவ முகப்பரு, படர்தாமரை நீங்கும்.

2. முகத்தில் வரும் சிறு கட்டிகள் சந்தனத்தை அடிக்கடி முகத்தில் பூசி காயவிட்டு முகம் கழுவி வர சூட்டினால் முகத்தில் வரும் சிறுகட்டிகள் வராது.

3. பொலிவற்ற முகம் சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து முகத்தில் பூசி வர வசீகரம் உண்டாகும்.

4. முகப்பரு அள்ளி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பரு ஒழியும்.

5. இருதய வலி அதிக மார்புத் துடிப்பு சந்தனத்தூள் கஷாயம் செய்து குடித்து வர மார்புத் துடிப்பு,இருதய வலி குணமாகும்.

6. அலர்ஜி குறைய அலர்ஜி குறைய சந்தனத்தை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து கூழ் போல செய்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மீது தடவி வந்தால் அலர்ஜி குறையும்.

7. முகம் வசீகரம் பெற சந்தன கட்டையை எலுமிச்சை சாற்றில் உரைத்து முகத்தில் பூசி வர முகம் வசீகரம் பெறும்.

8. வியர்க்குரு குறைய வியர்க்குரு குறைய சந்தனத்தை பன்னீருடன் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி வர வியர்க்குரு குறையும்.

9. முகப்பரு,படர்தாமரை சரியாக சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் உரைத்து முகத்திற்கு பூசி வர முகப்பரு,படர்தாமரை சரியாகும்.

10. மார்பு வலி குறைய மார்பு வலி குறைய சந்தனத் தூளை எடுத்து தண்ணீரில் காய்ச்சி வடிக்கட்டி குடித்து வந்தால் மார்பு வலி குறையும்.

11. உடல் உஷ்ணம் குறைய தாமரை இலைகளை எடுத்து நன்கு அரைத்து,இதோடு சந்தனதைக் குழைத்து உடலில் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.

12. நீர்க்கடுப்பு குறைய சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து அரைக்கால்படி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

13. தலைவலி குறைய தலைவலி குறைய எட்டிமர விதையை சந்தனக் கட்டையில் உரசி நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

14. வெண்குஷ்டம் தீர வெண்குஷ்டம் தீர சந்தனத்தை எலுமிச்சை சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.

நிவா் புயல் தாக்கத்தில் இருந்து எல்லா மக்களும் விடுபட திருஞானசம்பந்தப் பெருமான் …

நிவா் புயல் தாக்கத்தில் இருந்து எல்லா மக்களும் விடுபட திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கோளறு பதிகத்தை அனைவரும் பாராயணம் செய்யுங்கள்.

பண் பியந்தைக்காந்தாரம்.

இரண்டாம் திருமுறை.

வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியாா் அவா்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு ப‌தினெட்டொடு ஆறும்
உடன் ஆய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியாா் அவா்க்கு மிகவே.

உருவளா் பவளமேனி ஒளிநீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகுஅலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைஅதுஊா்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாா் அவா்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதா்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாா்அவா்க்கு மிகவே.

நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உரும்இடியும் மின்னும்
மிகையான பூதம‌் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாா்அவா்க்கு மிகவே.

வாள்வாி அதள் அது ஆடை வாி கோவணத்தா்
மடவாள் தனோடும்
உடன்ஆய்
நாள்மலா் வன்னி கொன்றை நதிசூடி
வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோள‌் அாி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌் அாி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாா் அவா்க்கு மிகவே.

செப்பு இளமுலை
நல் மங்கை ஒருபாகம் ஆக
விடைஏறு செல்வன் அடைவு ஆா்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகைஆன‌ பித்தும்
வினை ஆன வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாா் அவா்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலா்சூடி வந்துஎன்
உளமே புகுந்த அத‌னால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாா் அவா்க்கு மிகவே.

பலபல வேடம் ஆகும் பரன் நாாி பாகன்
பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
மலா்மிசையோனும் மாலும் மறையோடு தேவா்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியாா் அவா்க்கு மிகவே.

கொத்து அல‌ா் குழலியோடு விசையற்கு நல்கு
குணம் ஆய வேட விகிா்தன்
மத்தமும் மதியும்நாகம் முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாா்
அவா்க்கு மிகவே.

தேன் அமா் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளா் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதிஆய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியாா்கள் வானில்
அரசாள்வா் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம்…

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் கு…

🙏அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்

🙏 சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.

முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர்.

இறைவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேசம். கோயிலின் முன்பு பிறவாப்புளி என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது.

இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் இறவாப்பனை எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.

நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம்.

இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

சிறப்பம்சங்கள் :
★ சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு 'பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.

எனக்கு எங்களுக்கு எங்கள் யாவருக்கும் அஷ்ட லட்சுமி கடாட்சம் அருளி என்னைக் காப்பாய…

எனக்கு எங்களுக்கு எங்கள் யாவருக்கும் அஷ்ட லட்சுமி கடாட்சம் அருளி என்னைக் காப்பாய் தாயே!
சகல உலகுக்கும் தாயான த்ரிபுரசுந்தரிதேவியை சேவித்து சரணமடைந்து வணங்குகின்றேன்.
அம்பாள் நவமணிமாலை”-நன்மைகள் அடைய, தடைகள் அகல– நேரம் கிடைக்கும் போது.துதிக்க இன்று 26/11/2020 வியாழக்கிழமை பணிந்து தொழுது மகிழ்வோம்

oவேதவடிவினளும், தன் இனிய சொற்களினால் கிளியின் பேச்சை வென்றவளும், கருவண்டுக் கூட்டம் போன்ற கூந்தலை உடையவளும், சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தோணி போன்றவளும், வீணை, கிளிக்குஞ்சு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவளும், சரஸ்வதியினால் நமஸ்கரிக்கப் பட்டவளும், பரமசிவனுடைய பத்தினியுமான அன்னையை வணங்குகின்றேன்.
oநீலோத்பவ மலரின் வண்ணம்போன்ற சரீரத்தை உடையவளும், பூமண்டலத்தைக் காப்பதையே தனது லட்சியமாகக் கொண்டவளும், கண்களினால் பெண்மான்களை வென்றவளும், மதங்க மகரிஷியின் மகளும், சங்கரனின் மனம் கவர்ந்தவளுமான அம்பாளை வணங்குகிறேன்.
oலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் ஏந்தியிருக்கும் தாமரை போன்ற மென்மையான கைகளை உடையவளும், இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவலும், தூய்மையானவளும், சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யைகளின் உருவமாக இருப்பவளுமான பராசக்தியை வணங்குகிறேன்.
oஅழகிய சந்திரன் போன்ற முகத்தை உடையவளும், முல்லைமலர் போன்ற பற்களை உடையவளும், நவநிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளும், மன்மதனை கருணையினால் உயிர்த்தவளும், தேவர்களின் நலனுக்காக அசுரர்களை அழித்தவளுமான பராசக்தியை துதிக்கிறேன்.
oஉன்னதமான ஸ்தனங்களினால் குடத்தை வென்றவளும், பரமசிவனால் அணைத்துக் கொள்ளப்பட்டவளும், ஸ்கந்தமாதாவும், சும்பன் நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளும், தன் முன்னால் ரம்பை என்ற ஓசர மங்கையை நடனம் செய்கின்ற பெருமையை உடையவளும், அகங்காரமில்லாத மற்றவளுமான அன்னையை வணங்குகிறேன்.
oகோவைப்பழத்தை வென்ற சிவந்த கீழுதடை உடையவளும், லோகமாதாவும், நடையினால், அன்னத்தை வென்றவளும், பக்தர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுபவளும், கணபதியுடன் காட்சி தருபவளுமான அம்பிகையை ஆராதிக்கிறேன்.
oசரணடையும் பக்தர்களை ரஷிப்பவளும், பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை துன்பத்திலிருந்து விடுவிப்பவளுமான தேவி தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியவில்லை. உனக்கு எனது வணக்கங்கள்.
oநமஸ்கரிக்கும் அடியவரை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவளும், சாமர்த்தியமுள்ளவளும், சூரியன் முதலான தேவதைகளுக்கும் அதிபதியான தேவியாக இருப்பவளும், சிம்மவாஹினியும், சத்ருக்களை அழிப்பவளும், தேவர்களை காத்தருளும் தேவியுமான தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியேன். உனக்கு எனது வணக்கங்கள்.
oபாக்கியமுள்ளவளும், தேவர்களால் வணங்கத்தக்கவளும், இமயகுமாரியும், மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், மந்தாரம் முதலிய தேவ விருட்சங்கள் அடங்கிய தோட்டத்தில் விளளையாடுபவளான தங்களைத் தவிர வேறு தெய்வத்தை நான் அறியவில்லை. உனக்கு எனது வணக்கங்கள்.
oபராசக்தியின் மேலான இந்த நவமணி மாலையை பக்தியுடன் படித்த என் வாக்கில் சரஸ்வதியும், வீட்டில் மகாலட்சுமியும் பூரிப்புடன் நடமாடட்டும். உனக்கு எனது வணக்கங்கள்.
oபராசக்தியே, தாங்கள் என்னை அதல பாதாலத்தில் தள்ளினாலும் சரி, பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதியாக்கினாலும் சரி, தங்களின் இரண்டு பாதங்களையும் பற்றுகிறேன். எனக்கு அஷ்ட லட்சுமி கடாட்சம் அருளி என்னைக் காப்பாய் தாயே!

#பெண்களின் #மாதவிடாய்_சிக்கலை_போக்க…… தடைபட்ட மாதவிலக்கு சரியாக கருஞ்சீரகத்த…

#பெண்களின்
#மாதவிடாய்_சிக்கலை_போக்க……

🈵 தடைபட்ட மாதவிலக்கு சரியாக

கருஞ்சீரகத்தை தூளாக்கி சிறிதளவு எடுத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.

🈺மாதவிடாய் சீர் செய்யும்
கருஞ்சீரகம் பொடி

கருஞ்சீரகம் – 100 கிராம்,

சுக்கு – 100 கிராம்,

அதிமதுரம் – 50 கிராம்,

ஆடாதொடா – 50 கிராம்,

கண்டங்கத்தரி – 50 கிராம்,

கடுக்காய் – 50 கிராம்.

இவை அனைத்தும் ஒன்று கலந்து அரைத்து தூள் செய்யவும். இதை காலை, இரவு உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமையினால் ஏற்படும் சளி கட்டுப்படும். வயிற்று நோய், குடல் பலவீனம் தீரும். மாதவிடாய் சீர் ஆகும்.

🈶 அசோகா கசாயம்

அசோகமரப்பட்டை – 20 கிராம்

மருதம்பட்டை – 10 கிராம்

ஆவாரம் பூ – 10 கிராம்

திரிகடுகு பொடி – 10 கிராம்

திரிபலா பொடி – 10 கிராம்

இவையனைத்தையும் தூள் செய்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்ட வைத்து காலை, மாலை இரவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகவும், சரியான அளவிலும் இருக்கும்.

மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்

வெற்றிலை – 2

சாம்பார் வெங்காயம் – 2

சீரகம் – 1 ஸ்பூன்…

பூண்டுபல் – 2

இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில்
5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.

🔯 மாதவிடாயின்போது தீராத வயிற்று
வலி நீங்கும்.

வெள்ளைப் பூசணி – 100 கிராம்

வெள்ளரி விதை – 10 கிராம்

சாம்பார் வெங்காயம் – 2

வெள்ளை மிளகு – 5 கிராம்

பூண்டு – 2 பல்

பனங்கற்கண்டு – 100 கிராம்

இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.

மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.

#உணவில்……

முருங்கைக்கீரை,

அகத்திக் கீரை,

மணத்தக்காளிக் கீரை,

பசலைக் கீரை,

பிரண்டை,

பாகற்காய்,

சுண்டைக்காய்,

முருங்கைக்காய்,

பப்பாளிப்பழம்,

அன்னாசிப்பழம்,

பேரீச்சம்பழம்,

அத்திப்பழம்

போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக உதிரப் போக்குக்கு சில எளிய மருத்துவக் குறிப்புகள்

👉மாதவிடாய் ஐந்து நாட்களுக்கும் மேலாக நீடித்தால் கண்டிப்பாக இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும்.

கருவேலம் பட்டை,

அசோகம் பட்டை,

மாதுளை ஓடு,

வில்வ ஓடு,

ஆவாரம்பிசின்

ஆகியவற்றை வகைக்கு
50 கிராம் அளவு,

திரிபலா சூரணம் 150 கிராம்.

இவை அனைத்தையும்
நாட்டு மருந்து கடையில் வாங்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும்.

காலை – மாலை ஒரு தேக்கரண்டி அளவு பொடியை மோருடன் கலந்து சாப்பிட்டால், அதிக உதிரப்போக்கு எனப்படும் #பெரும்பாடு நோய் குணமாகும்.

√√ முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.

√√ மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.

√√ பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.

ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம்.

மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் (Fibroid) அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.

இந்த கோளாறு உள்ளவர்கள் தக்க மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நிவாரணம் பெறலாம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனாலும் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் உண்டு.

இது சாதாரணமாக உதிரப்போக்கு நிற்கும் காலத்திற்கு ஓரிரு வருடங்கள் முன்பாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் உணவுமுறை மாற்றங்கள் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்.

மனதை அமைதியான மனநிலைக்கு கொண்டுவர இவ்விரண்டும் உதவும். மேலும் எளிய, சீரணமாகின்ற உணவுகளை சரியான கால அளவில் எடுத்துக்கொள்ளுதல், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பலகாரங்களைத் தவிர்த்தல், நேரம் தவறி உண்பதைத் தவிர்த்தல் இவற்றைக் கடைபிடித்தால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குறைய வழி உண்டு.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்.

#இதற்கு……

கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும்.

🈳 மாதவிலக்கு வலி குறைய

முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்

சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

🈁 வெள்ளைப்படுதல் சரியாக

ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா… வெள்ளைப்படுதல் வராது.

வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா… நல்ல குணம் கிடைக்கும்.

தாமதமான மாதவிடாய்க்கு

👉சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க…

பெருந்துத்தி இலை – 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க… ஒழுங்கா மாதவிடாய் வரும்.

👉மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

👉சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.

👉கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா… மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா… பெரும்பாடு தீரும்.

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா…. மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.

கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.

தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.

முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.

முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.

முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும்.

உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.

கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.

மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.

சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.

ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.

எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.

ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.

வைத்தியர் யாஸீன் வைத்தியர் யாஸீன், profile picture

உங்கள் உதடுகளை அழகுப்படுத்த சில குறிப்புகள்.; உதடுகளை கவர்ச்சியாக அழகுபடுத்த வி…

உங்கள் உதடுகளை அழகுப்படுத்த சில குறிப்புகள்.;

உதடுகளை கவர்ச்சியாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகுச்சாதனப் பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியும் அழகுப் பெற செய்யலாம்.

💋 ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து அடிக்கடி உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுகள் அழகு பெறும்.

💋 தினமும் ஆலிவ் ஆயிலுடன் இலவங்க பட்டை பவுடர், சிறிதளவு உப்பு ஆகியவற்றைக் கலந்து உதட்டில் பூசி, சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால் உதடுகள் பொலிவு பெறும்.

💋 ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை அடிக்கடி பயன்படுத்தலாம். தேனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும், பளபளப்புடனும் இருக்கும்.

💋 ஏனெனில் தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

💋 உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவும் உதவுகிறது. புதினாவை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து தினமும் உதட்டில் பூசி வர வேண்டும். அவை உலர்ந்தவுடன் கழுவினால் உதடுகள் அழகு பெறும்.

💋 குங்குமப்பூ உதட்டில் உள்ள கருமை நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

💋 இஞ்சியும் உதடுக்கு பொலிவு தரும். தேங்காய் எண்ணெய், சர்க்கரை, இஞ்சி தூள், ஜாதிக்காய் பொடி, இலவங்க பட்டைத்தூள் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் போல் குழப்பி உதடுகளில் பூசி வரலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் மிருதுவாக காட்சியளிக்கும்.

💋 அடிக்கடி கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.

💋 பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிக எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு அடிக்கடி தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

💋 வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.

நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே இளம் வயது பெண் ஒருத்தி ஒரு …

🔎நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே🔍

இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.

அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும், பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.

அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.

அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:………..
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.

○ அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!….

*அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ, வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.

🙏ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

🙏எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா? அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

🙏ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

🙏இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

🙏உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.

நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் உங்களை மன்னித்துவிடுகிறேன்.

ஏனெனில்,….

நாம் பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

🔍படித்ததில் பிடித்தது

ஐயப்பனின் வரலாறு மகிஷி என்பவர் அரக்கர்களின் அரசனான மகிஷாசுரனின் தங்கையாவார். …

🐅🌹🐅ஐயப்பனின் வரலாறு🐅🌹🐅

🍁மகிஷி என்பவர் அரக்கர்களின் அரசனான மகிஷாசுரனின் தங்கையாவார். 🍁மகிஷாசுரனின் வதத்திற்கு பிறகு,அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிஷி முடிவு செய்தாள்.பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார்.அதனால் மகிழந்த பிரம்மா,சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.
🍁பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது.பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன்.
🍁ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு.ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள். 🍁பாண்டிய வம்சத்தின் பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பா தீர்தத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார்.
🍁குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார்.
🍁அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார்.அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது.ஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார்.இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து,அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனிடம் சொல்ல சொன்னார்.
🍁அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார்.அங்கு மகிஷியை வதைத்தார்.

🐯ஐயப்பனின் வேறு பெயர்கள்
⚘மணிகண்டன்,
⚘பூதநாதன்,
⚘பூலோகநாதன்,
⚘தர்மசாஸ்தா,
⚘எருமேலி வாசன்,
⚘ஹரிஹர சுதன்,
⚘ஹரிஹரன்,
⚘கலியுக வரதன்,
⚘கருணாசாகர்,
⚘லக்ஷ்மணன், பிராணதத்தா,
⚘பந்தள ராஜன்,
⚘பந்தள வாசன்,
⚘பம்பா வாசன்,
⚘சபரி வாசன்,
⚘சபரீசன்,
⚘சபரீஷ்வரன்,
⚘சபரி கிரீசன்,
⚘சாஸ்தா,
⚘வீர மணிகண்டன்,
⚘அரிஹரச் செல்வன்,
என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

🙏🐅🙏சரணம் ஐயப்பா🙏🐅🙏

Rajakan A M, profile picture