#வீட்டில்_ஒற்றுமை_இல்லையா? #மன_அமைதியில்லையா? ******************************…

#வீட்டில்_ஒற்றுமை_இல்லையா?
#மன_அமைதியில்லையா?
********************************
வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தூபம் போடுங்கள்.
வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை.

ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .
வெண்கடுகு எனும் வெண் கணங்களின் மத்தியில் பைரவர் இருப்பார்ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன? அதைக் குறித்து சாயி உபாசகர் ஒருவர் கூறிய நிவாரணம் இது.

''மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும், வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது.

வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள்.

வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல அதிகமாவதைக் காணலாம்.

வெண் கடுகிற்கு அத்தனை சக்தியா? அது எதனால்? அதன் காரணத்தைக் கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.

வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார்.

ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும். குடும்பத்தில் குலதெய்வ பலம் கூடும் குறைகள் அணைத்தும் தீரும் இனி குடும்பத்தில் குதூகலம்தான்,,,

30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்! அதிகம் பகிருங…

30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்!
அதிகம் பகிருங்கள்
30 வயதில் சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு.

வயது ஏறிக் கொண்டே வரும்போது கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும். அதுவரை தோலிற்கு பிடிமானமாக இருந்த கொழுப்பு குறையும்போது, சருமம் தளர்வாக ஆரம்பிக்கும். இதனால்தான் வயதான தோற்றம் தருகிறது. இதனை தடுக்க சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் நல்ல புரத உணவுகளும், சருமத்தை இறுகும் பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ செய்முறைகளை செய்தால் சருமம் இளமையாகவே காப்பாற்றப்படும்.

முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவை கலந்து முகத்தில் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிரிந்த நீரில் கழுவுங்கள். இந்த குறிப்பு சருமத்தில் புதிய செல்கள் உருவாவதற்கு தூண்டும். இது தளர்வடைந்த சருமத்தை இறுக்கி சுருக்கம் கருமை ஆகியவற்றை மறையச் செய்யும்.

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் மசித்த அவகாடோவின் சதைப் பகுதி மற்றும் 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால் முகம் சுருக்கமின்றி அழகாய் இருக்கும்.

முட்டையில் வெள்ளைக் கருவுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும்.

முட்டையில் வெள்ளைக் கருவுடன் 2 ஸ்பூன் கடலை மாவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். காய்ந்ததும் கழுவுங்கள்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் முல்தானி மட்டியை கலந்து பேக்காக முகத்தில் போடவும். சருமம் நன்றாக இறுகியவுடன் கழுவுங்கள்.

கேரட்டை துருவி சாறெடுத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் போடவும்.

*அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி, திருப்பூர்* எங்கேனும் போகினும…

*அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி, திருப்பூர்*

எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பர் இலை பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.

– *சுந்தரர்*

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.

*திருவிழா* சித்திரையில் பிரமோற்ஸவம், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா. இத்திருவிழாவில் 5ம் நாள் மிகவும் முக்கியமானதாகும்.

அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கும் இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பு.

*தல சிறப்பு*

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 205 வது தேவாரத்தலம் ஆகும்.

*பொது தகவல்*

மைசூர் மகாராஜா வம்சத்திற்கும் இத்தலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் பதவியேற்றபின் காசிக்கு சென்று லிங்கம் எடுத்துவந்து இங்கு பூஜை செய்த பின்பே ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்களாம்.

இத்தலத்திற்கு அருகிலேயே மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமான திருமுருகன்பூண்டி இருக்கிறது.

கோயில் நுழைவு வாசலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார். அவர் எதிரே வானரம் ஒன்று தலைகீழாக இறங்குவது போன்ற புடைப்புச்சிற்பம் உள்ளது. 63நாயன்மார் சன்னதியில் விநாயகர் இருப்பார். இங்கு, பிரம்மா, விசுவநாதர், விசாலாட்சி உள்ளனர்.

*பிரார்த்தனை* இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.

*நேர்த்திக்கடன்*

இத்தலத்தில் உள்ள பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது விசேஷம். எதிரி பயம், வழக்கு விவகாரம் நீங்க பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதிகளில் இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்பட, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காயில் குங்குமம் தடவி விளக்கேற்றி, செவ்வரளியில் அர்ச்சனை செய்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.

*தலபெருமை*

*காசியில் வாசி அவிநாசி* : காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. அமாவாசையன்று இங்குள்ள காசிக்கிணற்றில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் மதியம் இடைவேளையில்லாமல் திறந்தே இருக்கும்.

*அவிநாசி என்றால்…*
"விநாசம்' என்றால் அழியக்கூடியது என்று பொருள். இத்துடன் "அ' சேர்த்தால் "அவிநாசி' எனப்படும். இது அழியாத்தன்மை கொண்டது எனப்படும்.

*"நல்ல” சனீஸ்வரன்* : வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக தலபுராணம் சொல்கிறது. அவர் சனிபகவானை தனிசன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்குள்ள சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார்.

இடதுகாலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலதுகையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபயமுத்திரையுடனும் அருளுகிறார்.

இங்கு தவக்கோலத்தில் ஒரு அம்மனும், சிவன் அருகில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மனும் அருளுகின்றனர். இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள்.

சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார்.

மாணிக்கவாசகர் மதுரையிலிருந்தபடியே அவிநாசியை பாடியுள்ளார். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் அறுங்கோண அமைப்பிலான சன்னதியில் முருகன் அருளுவதால் இத்தலம் சோமாஸ்கந்த வடிவிலானது.

தியானம், பூஜை முறை தெரியாதவர்கள் மனமுருகி சிவனையும் அம்மனையும் வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்கிறார்கள். இத்தல இறைவன் திருடனுக்கும் முக்தி கொடுத்துள்ளார். பைரவருக்கு அருகே வியாதவேடர் என்ற திருடனுக்கு சன்னதி உள்ளது சிறப்பு.

இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். சிவனுக்கு எதிரில் உள்ள ராஜகோபுரத்தின் தென்திசையில் தெட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். சிவசூரியன் தனி சன்னதியில் அருளுகிறார். நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனத்திற்கு பதில் சிம்ம வாகனம் உள்ளது.

*விருச்சிக ராசியினருக்கு* : கருணாம்பிகை சன்னதியின் பின்புறம் உள்ள விருச்சிகத்தை விருச்சிக ராசிக்காரர்கள் வழிபடுகிறார்கள். தேள்கடி, மற்றும் விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த சன்னதியில் வழிபட்டு பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர். விருச்சிகத்தை வணங்கும் முன், நுழைவு வாயிலில் குபேர திசையான வடக்கு நோக்கியுள்ள செல்வ கணபதியை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.

*காசி பைரவருக்கும் முற்பட்டவர்* : 64 பைரவ முகூர்த்தத்தில் இத்தல பைரவர் "ஆகாச காசிகா புரததனாத பைரவர்' எனப்படுகிறார். இவர் காசியில் உள்ள பைரவருக்கும் முற்பட்டவர் என தலபுராணம் கூறுகிறது. இவர் உள்பிரகாரத்தில் இருப்பது சிறப்பு. சிவனுக்கும் அம்மனுக்கும் அடுத்தபடியான சிறப்பு பெற்றவர் என இவரை கூறுகிறார்கள்.

*குருவின் குரு* : சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார். இவர் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய கலைகளைப்பயின்று, குருவை மிஞ்சிய சீடரானார். இவர் குருவிற்கும் குருவாக மதிக்கப்படுவதால் தெட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

*தல வரலாறு*

சுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார்.

இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான்.

இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் "முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்' நடக்கிறது.

*சிறப்பம்சம்* அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது.

*சிவன் இராஜ யோகம்* சதாசிவனின் கட்டளைப்படி உருவாக்கப்பட்டதால் இவ்வியக்கம் இப்பெ…

*சிவன் இராஜ யோகம்*

சதாசிவனின் கட்டளைப்படி உருவாக்கப்பட்டதால் இவ்வியக்கம் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
நான்மறை உண்மையும், நால்வகை யோகமும், தவமும், தாந்த்ரீகமும் இங்கு அவரவர் தன்மைக்கு ஏற்ப தரப்படுகிறது.

*குரு பாரம்பரியம்* :

சாட்சாத் சதாசிவனே இங்கு குருவாக இருக்கின்றார். அவரை நாங்கள் 'ஓம்காரநாதர்' என்றழைக்கிறோம்.

ஈசனின் வெளிப்பாடு தவப்பயன், புண்ணியப்பயனால் கிடைப்பது என்பதால் அதற்கு ஆயத்தப்படுத்த குருபிரதிநிதியாக ரிஷியோகி நியமிக்கப்பட்டுள்ளார்.

தவ, தாந்த்ரீகங்கள் அனைத்தையும் (அதாவது தசமகாவித்யா, விஷ்ணுகிரந்தா போன்ற உயரிய, உச்சகட்ட மிகவும் ஆபத்தான பல சாதனைகளை)கற்ற, பல சித்திகளையும் கைவரப் பெற்ற அவர் 'பிரஜாபதி' என்ற நிலையைப் பெற்றவராவார்.

'பிரஜாபதி' ரிஷியோகிக்கு உலகமாற்றத்திற்கு உதவுவதற்காக பகவான் ஓம்காரநாதர் 'சித்தர்' ஒருவரை இப்பூமியில் இறக்கியுள்ளார். அவரே உபகுருவாக உள்ளார். அவரை ' *சித்தர்ஜெய்* ' என்ற திருப்பெயரால் அழைக்கிறோம்.

*யோக வழிமுறை* ;

இங்கு யோகிகளின் யோகசக்தியும், பக்தர்கள் கடைபிடித்த இதயக்கமல தியானமும், தாந்திரீக யோகிகள் புரிந்த உபாசனைகளும், சித்தர்களின் தவமும் படிப்படியாக வழங்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிய வகையில் கடைபிடிக்க 'ஓம்காரநாதர் திருமந்திரம்' உபதேசிக்கப்படுகிறது.

இறைவனை அறிய, உணர நினைப்பவர்கள், அதற்கான தாகம் உள்ளவர்கள் இப்பாதைக்கு வரவேற்கப்படுகிறார்கள்.

*தன்வந்திரி உபாசனை* :
இலட்சக்கணக்கான மக்கள் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில் மனித குலத்தை காக்கும் நோக்கில் காக்கும் கடவுள் நாராயணரின் இரு சொரூபங்களான தன்வந்திரி மற்றும் சூரிய பகவானின் உபாசனைகள் இப்போது வழங்கப்படுகிறது.

தன்வந்திரி உபாசனை மூலமாக நீண்ட ஆயுளுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை வரதானமாக
கிடைக்கும்.

அழைக்க:
கிருஷ்ணதாசர்
9361062620


ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் ! த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேந்நரஹரிபூஜாம் குரு ஸ…

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் !

த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேந்நரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருத த்ருதி குசலோ பிம்பாலங்க்ருதி மாதநுதே ந
சேதோ ப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந

மனமாகிய வண்டே, உனது எஜமானனாகிய ஜீவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினால், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மபூஜையை விடாது செய். பிரதிபிம்பத்துக்கு அலங்காரம் செய்வதில் ஈடுபடும் திறமைசாலி, முதலில் நிஜ உருவத் தையே அலங்கரிப்பான். சாரமற்ற சம்சாரமெனும் பாலைவனத்தில் ஏன் வீணாக அலைகிறாய்? சாரமுள்ள செயலைச் செய்; அதாவது, நீ லக்ஷ்மீநரசிம்மரின் மாசற்ற பாதாரவிந்தத் தேனை அடைவதையே என்றும் மேற்கொள்.

சுக்தௌ ரஜதப்ரதிபா ஜாதா கடகாத்யர்த்த ஸமர்த்தாசேத்
து:கமயீ தே ஸம்ஸ்ருதிரேஷா நிர்வ்ருதிதாநே நிபுணாஸ்யாத்ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ-மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந

மன வண்டே! முத்துச்சிப்பியைக் கண்டு ஒருவன் வெள்ளி என்கிறான்; அந்த வெள்ளியால் ஆபரணங்கள் செய்ய முடியுமா? அவ்வாறு பயன்பட்டால் இந்த உனது துக்கமயமான சம்சாரமும் பேரானந்தத்தைத் தருவது சாத்தியமாகலாம். ஆகையால் சாரமற்ற சம்சாரப் பாலைவனத்தில் வீணே அலையாமல் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் குறைவற்ற திருவடித் தாமரைகளின் மகரந்தத்தையே பற்று.

ஆக்ருதி ஸாம்யாச்சால்மலிகுஸுமே ஸ்தலநளிநத்வ ப்ரமமகரோ:
கந்தரஸாவிஹ கிமு வித்யேதே விபலம் ப்ராம்யஸி ப்ருசவிரஸே(அ)ஸ்மின் ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந

மனமான வண்டே! உருவத்தின் ஒப்புமையால், இலவம்பஞ்சு மரத்தின் பூவைப் பார்த்து, தரையிலும் தாமரை மலர்கிறதே என்ற கலங்குகிறாயே! இந்தப் பூவில் வாசனையோ, சிறிதாவது தேனோ உள்ளதா? பயனற்ற, சிறிதும் சாரமற்ற இல்லறத்தில் அலைகிறாயே! ஏன் சம்சாரப் பாலைவனத்தில் உழல்கிறாய்? ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் சரணாரவிந்தங்களின் தேன்துளிகளையே பெறுவதில் ஆசை கொள்.

ஸ்ரக்சந்தந வநிதாதீந் விஷயாந் ஸுகதாந் மத்வா தத்ர விஹரஸே
கந்தபலீஸத்ருசா நநு தே(அ)மீ போகாநந்தர து:க க்ருதஸ் ஸ்யு: ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந

மனம் எனும் வண்டே! பூமாலை, சந்தனக் குழம்பு, வனிதையர் முதலானவற்றை இன்பம் தருவனவாகக் கருதி அவற்றில் ஈடுபடுகிறாயே, அவை தாழம்பூவிற்குச் சமம்; முதலில் இவை இன்பம் தருவதுபோல் தோன்றினாலும், பிறகு முழுவதும் துன்பம் விளைவிக்கும். கையால் மனமே! விரசமான சம்சார பாலையில் வீணே உழலாதே; ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் திருவடித்தாமரைகளின் மகரந்தத்தையே முக்கியமாகப் பற்று.

தவ ஹிதமேகம் வசநம் வக்ஷ்யே ச்ருணு ஸுககாமோ யதி ஸததம்
ஸ்வப்நே த்ருஷ்டம் ஸகலம் ஹி ம்ருஷா ஜாக்ரதி ச ஸ்மர தத்வதிதி! ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம்நந

மனமாகிய வண்டே! உனக்கு இதமான ஒன்றைக் கூறுகிறேன். நீ எப்போதும் இன்பம் அடைய விரும்பி னால், நீ விழிப்பு நிலையில் பார்க்கும் எல்லாப் பொருளுமே, கனவில் காணும் பொருளைப் போலவே முழுவதும் பொய் என்பதை நன்கு ணர். மனமே, வீணாக விரசமான சம்சாரப் பாலைவனத்தில் அலைந்து திரியாதே; ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மருடைய மாசற்ற சரணாரவிந்தத் தேனிலேயே பற்று வை.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !

#பஜ்ஜி_வகைகள்_30 #மிளகாய்_பஜ்ஜி தேவையானவை: பஜ்ஜி மிளகாய் – 6, கடலை மாவு – ஒரு …

#பஜ்ஜி_வகைகள்_30

#மிளகாய்_பஜ்ஜி

தேவையானவை: பஜ்ஜி மிளகாய் – 6, கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – முக்கால் கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பஜ்ஜி மிளகாயை நீளவாக்கில் இரண்டு பாதியாக நறுக்கி, உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும். கடலை மாவுடன் அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். கரைத்த மாவில் ஒவ்வொரு மிளகாயாக தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

கமகம சமையல்
——————————————
காப்ஸிகம் பஜ்ஜி

தேவையானவை: பெரிய குடமிளகாய் – 1, கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சோள மாவு – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கி, விதை நீக்கி, பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

வெங்காய சட்னி, புதினா சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல் ——————————————
காலிஃப்ளவர் பஜ்ஜி

தேவையானவை: சிறிய காலிஃப்ளவர் – 1, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு கலவை – 3 கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை காம்புடன் ஆய்ந்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதை சூடான வெந்நீரில் 2 நிமிடம் போட்டு வைத்து, நீரை வடிகட்டவும். அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு கலவையுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், ஒவ்வொரு காலிஃப்ளவர் துண்டையும் மாவில் தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
——————————————————————–கம கம சமையல் —————————————-
நேந்திரம்பழ பஜ்ஜி

தேவையானவை: நேந்திரம்பழம் – 2, கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். நேந்திரம்பழத்தை தோல் உரித்து விடாமல், அப்படியே தோலுடன் வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இனிப்பும் காரமும் இணைந்து ருசிக்கும் இந்த கேரளா ஸ்பெஷல். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.
——————————————————————–கம கம சமையல் —————————————-
வாழைக்காய் மசாலா பஜ்ஜி

தேவையானவை: வாழைக்காய் – 2, அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா 2 டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன், கடலை மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் எரிய விடவும். வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

வாழைக்காயை மசாலா சேர்த்துச் செய்வதால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதற்கு சாம்பார் சூப்பர் சைட் டிஷ்.
——————————————————————–கம கம சமையல்
————————————–
பேபிகார்ன் பஜ்ஜி

தேவையானவை: பேபிகார்ன் – 6, கடலை மாவு, அரிசி மாவு – தலா 4 டேபிள்ஸ்பூன், சோள மாவு – இரண்டு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பேபிகார்னின் மேல் உள்ள தழைகளை உரித்து நீளவாக்கில் சரிபாதியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். நறுக்கிய பேபிகார்னை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

குழந்தைகளுக்கு மிளகாய்த்தூள் போடாமல் தயாரித்துக் கொடுக்கலாம்.
——————————————————————–கம கம சமையல் ——————————————
கத்திரிக்காய் மசாலா பஜ்ஜி

தேவையானவை: கத்திரிக்காய் – 1, கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றும் சேர்த்த கலவை – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மூன்று மாவுக் கலவையுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

கத்திரிக்காய் மசாலா பஜ்ஜிக்கு வத்தக்குழம்பு சூப்பர் காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல் —————————————–
பீர்க்கங்காய் பஜ்ஜி

தேவையானவை: பீர்க்கங்காய் – 1, கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பீர்க்கங்காயை தோல் சீவி வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இந்த பஜ்ஜி மிகவும் வாசனையாக இருக்கும். தேங்காய் சட்னி இதற்கு அற்புதமான சைட் டிஷ்!
——————————————————————–கம கம சமையல்
—————————————
கேரட் பஜ்ஜி

தேவையானவை: பெரிய கேரட் – 2, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், நன்றாகப் பொடித்த மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பொட்டுக்கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகுத்தூள், இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மாவை கெட்டியாகக் கரைக்கவும். கேரட்டை வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இதற்கு சாஸ் தொட்டுச் சாப்பிட்டால்… அருமையாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————-
மல்டி கீரை போண்டா

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1, அரிசி மாவு – ஒரு கப், சோயா மாவு – 2 டீஸ்பூன், கடலை மாவு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, முளைக்கீரை – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா, முள்ளங்கி இலை – தலா ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்… நறுக்கிய வெந்தயக்கீரை, முளைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, முள்ளங்கி இலை, பச்சை மிளகாய், பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்துப் பிசைந்து, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, சோயா மாவு, கடலை மாவு சேர்த்து, சிறிது உப்பு போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதில் உருண்டைகளைத் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சூடான கீரை போண்டாவுடன் தேங்காய் சட்னி சேர்த்துச் சாப்பிட… நொடியில் தட்டு காலிதான்.
——————————————————————–கம கம சமையல்
——————————————
ஹெர்பல் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு கப், மிளகு, துளசி இலை – தலா 10, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன், வெற்றிலை – 1, புதினா – சிறிதளவு, நறுக்கிய ஓமவல்லி இலை (அ) ஓமம், பூண்டு பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, ஓமவல்லி (அ) ஓமம், பூண்டு பேஸ்ட், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, மிளகை உடைத்துப் போடவும். இஞ்சி, புதினா, துளசி, வெற்றிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதில் தண்ணீர் விட்டு, மாவை கெட்டியாகப் பிசைந்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப் போடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

இந்த பக்கோடாவில் மூலிகை வாசம் மூக்கைத் துளைக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.
——————————————————————–கம கம சமையல் —————————————-
பனீர் பக்கோடா

தேவையானவை: பனீர் – 10 துண்டுகள் (பொடித்துக் கொள்ளவும்), நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், ரஸ்க் தூள் – ஒரு கப், ரவை – 2 டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரஸ்க் தூள், சோள மாவு, ரவை, நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, பொடித்த பனீரைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல்
——————————————-
ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு – ஒன்றரை கப், கடலை மாவு – முக்கால் கப், வெங்காயத்தாள் – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, நறுக்கிய வெங்காயத்தாள், உப்பு, வெண்ணெய், இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு எடுக்கவும்.

வெங்காயத்துக்குப் பதிலாக வெங்காயத்தாள் போட்டு செய்வதால், டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————–
கார்ன்-காப்ஸிகம் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், பேபிகார்ன் – 4, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – ஒரு துண்டு, குடமிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பேபிகார்ன், குடமிளகாய், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். அரிசி மாவு, கடலை மாவுடன் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு உப்பு, வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.

சோள வாசனையுடன், குடமிளகாய் ருசியில் அற்புதமாக இருக்கும் இந்த பக்கோடா.
——————————————————————–கம கம சமையல்
———————————————
ஜவ்வரிசி பக்கோடா

தேவையானவை: ஜவ்வரிசி – 200 கிராம், அரிசி மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். ஜவ்வரிசியை தண்ணீர் தெளித்துப் பிசிறி வைக்கவும். நன்றாக ஊறி, மிருதுவாகும் வரை தண்ணீர் தெளித்து தெளித்து கிளறி வைக்கவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு நன்றாகப் பிசையவும். இந்த மாவை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இதை புதினா போட்டு செய்யலாம். பூண்டு விழுது சேர்த்தும் செய்யலாம். முத்து முத்தாக பார்க்கவே அழகாக இருக்கும் இந்த பக்கோடா.
——————————————————————–கம கம சமையல் —————————————-
வேர்க்கடலை-முந்திரி பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு – 20, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவுடன், வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பொட்டுக்கடலை, வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை மூன்றையும் ஊற வைத்து, அரைத்துச் செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————
கீரை பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு இரண்டும் சேர்த்து – ஒன்றரை கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முளைக்கீரை, புதினா – தலா ஒரு கைப்பிடி, வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூளுடன், இஞ்சி, புதினா, பூண்டு பேஸ்ட், கீரை, வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, இருபுறமும் கிளறி விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

முளைக்கீரைக்கு பதிலாக, முருங்கைக் கீரையிலும் பக்கோடா செய்யலாம்.
——————————————————————–கம கம சமையல் ——————————————–
நட்ஸ் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு – ஒரு கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு, பிஸ்தா – தலா 10, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு, பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, புதினா, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதிலிருந்து சிறிது எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட… அட்டகாசமாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————-
மஷ்ரூம் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு – ஒன்றரை கப், கடலை மாவு – ஒரு கப், நறுக்கிய மஷ்ரூம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெண்ணெய் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

இந்த பக்கோடாவுக்கு வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ———————————————-
சேமியா பக்கோடா

தேவையானவை: வறுத்த சேமியா – ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 1, நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கப், இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சேமியாவில் இளம் சூடான தண்ணீரைத் தெளித்துக் கிளறி ஊற விடவும். ஊறியதும் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியைப் போட்டு… வெண்ணெய், உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்.
——————————————————————–கம கம சமையல் —————————————-
மசாலா போண்டா

தேவையானவை: அரிசி மாவு – 4 டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, புதினா – சிறிதளவு, மிளகாய்த்தூள், பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

இதன் சுவையும், மணமும் அபாரம்!
——————————————————————–கம கம சமையல் —————————————–
பிரெட் பஜ்ஜி

தேவையானவை: பிரெட் – 10 துண்டுகள், கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பேஸ்ட், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பிரெட்டை நான்கு சிறிய துண்டுகளாக்கி மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவை இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
——————————————————————–கம கம சமையல் —————————————–
வெஜிடபிள் போண்டா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கோஸ், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், உருளைக்கிழங்கு – 1, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கத்திரிக்காய் – தலா ஒரு கப், கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும்… கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், கோஸ், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாவற்றையும் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து, நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இரண்டையும் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதில் உருண்டைகளைத் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இதற்கு சில்லி சாஸ் சிறந்த காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல்
————————————–
காலிஃப்ளவர் போண்டா

தேவையானவை: பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், வெங்காயம், கடலை மாவு – தலா ஒரு கப், சோள மாவு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன், மிளகாய் பேஸ்ட், இஞ்சி பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன், வாழைக்காய் – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவர், வெங்காயம், இஞ்சி பேஸ்ட், மிளகாய் பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, பொடியாக நறுக்கி… வதக்கிய காலிஃப்ளவர், வெங்காயத்துடன் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு மூன்றையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

காலிஃப்ளவர், வாழைக்காய் காம்பினேஷன் அபாரமாக ருசிக்கும். தக்காளி சாஸ் இதற்கு நல்ல சைட் டிஷ்!
——————————————————————–கம கம சமையல் —————————————–
ரஸ்க் மிக்ஸ் போண்டா

தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பச்சை பயறு சேர்த்து – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், ரஸ்க் தூள் – ஒரு கப், சோயா மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பச்சை பயறு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். தண்ணீர் விட வேண்டாம். இதில் ரஸ்க் தூள், உப்பு போட்டு பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சோயா மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து எடுத்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதற்கு வெங்காய சாம்பார் இருந்தால் வெளுத்துக் கட்டலாம்.
——————————————————————–கம கம சமையல் —————————————–
வாழைப்பூ போண்டா

தேவையானவை: ரவை, மைதா, அரிசி மாவு – தலா ஒரு கப், கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கைப்பிடி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், வேக வைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கு – 2, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை நன்றாக வேக விட்டு, தண்ணீர் வடித்து பிழிந்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, வாழைப்பூ, உப்பு சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா, ரவை, அரிசி மாவு, கடலை மாவு நான்கையும் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல் ——————————————–
மல்டி மிளகாய் போண்டா

தேவையானவை: வேக வைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கு – 2, கடலை மாவு – ஒரு கப், சோள மாவு – ஒரு டீஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், குடமிளகாய், பஜ்ஜி மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துண்டு – தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு குடமிளகாய், பஜ்ஜி மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்துக் கிளறி… உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை போட்டு பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு இவற்றை ஒன்றாகக் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை மாவுக் கரைசலில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————
மிக்ஸ்டு பருப்பு போண்டா

தேவையானவை: முளைகட்டிய பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு துண்டு, மிளகு – 10, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றும் சேர்த்து – ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து முளைக்கட்டிய பயறு, இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். இதில் உப்பு, கறிவேப்பிலை போட்டு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை மாவுக் கரைசலில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கொத்தமல்லி சட்னி இந்த போண்டாவுக்கு ஜோரான காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல் ——————————————-
பிரெட் போண்டா

தேவையானவை: சால்ட் பிரெட் – 10 துண்டுகள், உருளைக்கிழங்கு – 3, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி – சிறிதளவு, இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, இஞ்சி பேஸ்ட் போட்டு பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிரெட்டின் ஓரத்தை 'கட்' செய்து லேசாக தண்ணீர் தெளித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இந்த பிரெட் துண்டில் உருண்டையை வைத்து மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

உருளைக்கிழங்குக்கு பதிலாக கேரட், வெங்காயம், குடமிளகாய் சேர்த்தும் தயாரிக்கலாம். சாஸ் தொட்டு சாப்பிட… சூப்பர்!
——————————————————————–கம கம சமையல் —————————————–
சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 2, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு இரண்டும் சேர்த்து – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா – தலா ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, கொத்தமல்லியை லேசாக வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இனிப்பும், காரமும் சேர்ந்து புது சுவையுடன் அட்டகாசமாக இருக்கும் இந்த போண்டா

கம கம சமையல்

மருகு – மருவு! காடுகளில் இருந்து தற்போது வீட்டில் இருக்கும் தாவரங்கள் குறித்து …

மருகு – மருவு!

காடுகளில் இருந்து தற்போது வீட்டில் இருக்கும் தாவரங்கள் குறித்து தினமும் ஓர் சிறிய அறிமுகம் தரலாம் என தோன்றியது. அதன் முன்னெடுப்பாக இன்று வீட்டின் முன்புறம் இருக்கும் இனிமையான நறுமணம் தரும் "மருகு" தாவரத்தில் இருந்து தொடங்குகிறேன்.

மருகு-மருவு, மருக்கொழுந்து போன்ற இச்செடிகளில் முன்னே வரும் "மரு" என்பது தமிழில் "வாசனை" எனப்பொருள். இயல்பாக வாசனைத் தரக்கூடிய தாவரங்கள் இவை. காலப்போக்கில் மரிக்கொழுந்து என மருவி விட்டது! அதை தவிர்த்து "மருக்கொழுந்து" என இனி நாம் பயன்படுத்துவோம்.

இன்று இதில் "மருகு" என்ற தாவரத்தை பற்றி பார்ப்போம் 🌿

மருகு – மருவு:-

சிறந்த இனிமையான நறுமணம் உள்ள தாவரம். பல ஆண்டுகள் வளரும் இயல்புடையது. என் வீட்டில் குறைந்த கவனிப்பில் பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கிறது.

தூங்கும் போது நம் அறையில் வைத்தால் நல்ல தூக்கம் வரும்; வீட்டை விட்டுச் செல்லும் பயணத்தின் போது ஒரு கொழுந்தை கிள்ளி என்னுடன் எடுத்தச் செல்லும் வழக்கம் எப்போதும் எனக்கு உண்டு. கிள்ளிய கொழுந்து காய்ந்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நறுமணம் இருக்கும். இந்த நறுமணம் நம் மனதை மற்றும் எண்ணங்களை இனிமையாக்கும். மனநலம் பாதித்தோருக்கு நல்ல உறக்கம் வர உதவுகிறது. கிருமி நாசினி யாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வலி நிவாரணியாகவும் வாசனை ஊட்டி ஆகவும் பயன்படுகிறது! தலையில் வைப்பதால் தலையில் இருக்கும் பேன் ஈர்கள் நீக்கவும் உதவுகின்றது.
நான் கவனித்த வரை பல்லுயிர்கள் பெரிதும் இத்தாவரத்தை விரும்புவதில்லை; இதன் நறு மணத்தால் இருக்கலாம். சிறு பட்டான்கள் பூவில் தேன் எடுப்பதை கண்டுள்ளேன்.

இந்த அருமையான தாவரத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தங்கள் வீட்டு முன்புற மண்ணில் அல்லது தொட்டியில் வைத்து வளர்க்க முயற்சி செய்யவும் 🌿
வாசனை திரவியம் பயன்படுத்துவோர் அதற்கு மாற்றாக இச்செடியை நேராக பயன்படுத்தலாம் 🌿

இந்த செடிப் பற்றி மேலும் தகவல்கள் அறிந்தோர் பகிருங்கள்; மேலே கூறிய தகவல்களில் மாற்று இருப்பின் பகிரவும்.
நன்றி

#தாவரங்கள்சூழ்உலகு
#மகிழ்வித்துமகிழ்#தேங்காப்பூகிரை #சிறுகண்என்கிறபூளைப்பூ இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்ன…

#தேங்காப்பூகிரை
#சிறுகண்என்கிறபூளைப்பூ
இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்… அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில்
#பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை.
#பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப்

#பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன்.
சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை

#பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தா னென்றும்,பாட்டி வைத்தியத்திலும் பலன்களிருக்குதென்றும்!

இந்த வைத்தியம் சிறுநீரகக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்லது ஆனால்…
#சிறுகண்பீளை
என்கிற இந்த மூலிகையை சமூலமாக(மூலிகையை முழுவதுமாக,வேறுடன்)காய்ச்சு அருந்த வேண்டும்!

கிட்னியில் கல் இருப்பது தெரிந்தால் உடனே நாட்டு நெருஞ்சிமுல் செடியை வேரோடு புடிங்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரை லிட்டர் தண்ணீரில்
போட்டு கொதிக்கவைத்து 100.மிலி அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாள் தொடர்ந்து குடித்து வந்தால் குணமாகும்.

சிலாசத்து பஸ்பம், நண்டுக்கல் பஸ்பம், குங்கிலிய பஸ்பம் இவைகளையும் உடன் பயன்படுத்திப் பாருங்கள். மிகச்சிறப்பாக இருக்கும்