#SPB இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் ஆன புகைப்படம் . எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் த…

#SPB இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் ஆன புகைப்படம் . எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் குடும்பத்தினரோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் .

இது பலரின் பார்வைக்கு வந்திருக்காது . இந்த படத்திற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.

நடிகர் மயில்சாமி மிகச்சிறந்த அண்ணாமலையார் பக்தர் . எப்போதெல்லாம் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தோன்றுகிறதோ அப்போதெல்லாம் திருவண்ணாமலைக்கு ஓடி வந்துவிடுபவர் .

கார்த்திகை தீபத்திருவிழா என்றால் திருவண்ணாமலையை விட்டு எங்கும் நகர மாட்டார் . பத்தாம் நாள் திருவிழாவில் மனிதர் கோயிலுக்குள் தான் இருப்பார் .

அவருக்கு ஒரு ஆசை . பத்தாம் நாள் திருவிழாவில் மகாதீபம் ஏற்றும் சமயத்தில் ஆலயம் உள்ளே பல நூறு பக்தர்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் SPB அவர்களை எப்படியாவது அழைத்து வந்து பக்தி பாடல்களை பாடச்செய்வது என்பதுதான் .

அதற்காகவே SPB அவர்களிடத்தில் அடிக்கடி வேண்டிக் கொண்டிருப்பார் . பாலு சாருக்கும் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும் , முக்கியமான அந்த தீபத்திருவிழாவில் அவர் குரல் அண்ணாமலையார் ஆலயத்தில் ஒலிக்க வேண்டும் என்பது விருப்பம் தான் . ஆனால் சுமார் இருபது லட்சம் பேர் கலந்து கொள்ளும் விழாவில் , கூட்டத்தில் எப்படி போவது வருவது என்ற தயக்கம் .

"அண்ணே … நீங்க வாங்க , உங்களை எப்படியாவது கோயிலுக்குள் அழைத்து செல்வது என் பொறுப்பு " இப்படி மயில்சாமி அவர்கள் சொல்ல , பாலு சாரும் ஓகே நான் திருவண்ணாமலைக்கு வரேன் பாடுறேன் என்று ஒப்புக் கொண்டார் .

பத்தாம் நாள் திருவிழா , மயில்சாமி அவர்கள் கோயிலுக்குள் இருக்கும் நேரத்தில் , பாலு சார் திருவண்ணாமலைக்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் நான் இருக்கிறேன் என்று தகவல் தந்ததும் மயில்சாமி பாலு சார் கார் இருக்கும் இடத்திற்கு சென்று அவரை நகருக்கு அழைத்து வருகிறார் . அவருக்காக தனியே ஒரு தங்கும் விடுதியில் அறை தயாராக இருக்கிறது .

விடுதியை நோக்கி கார் செல்ல முயலும் போது ஒரு காவலர் தடுக்கிறார் . இந்த வழியாக காரை அனுமதிக்க முடியாது என்று . மயில்சாமி பதறிப்போய் விடுகிறார் . உள்ளே பாலு சார் இருக்கிறார் . அவர் கோயிலுக்கு உள்ளே பாட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று எடுத்துச் சொல்லியும் காவலர் மறுத்து விட , நல்லவேளை மயில்சாமி அவர்களுக்கு தெரிந்த மற்றொரு காவலர் சூழ்நிலைகளை புரிந்து விடுதிக்கு காரை கொண்டு செல்ல வழி செய்கிறார் .

விடுதிக்கு பாலு சார் வந்து சேர்ந்தாலும் மயில்சாமி அவர்களுக்கு இந்த நிகழ்வு மிகப்பெரிய வருத்தத்தை தந்தது . நாம் அவரை வற்புறுத்தி அழைத்து வந்து கோயிலுக்குள் அழைத்து செல்வதில் சிக்கல் உண்டானால் என்ன செய்வது என்ற கவலை ஒரு புறம் , அந்த காவலர் நடந்து கொண்டது மறுபுறம் . நேராக கலெக்டர் சாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு சூழ்நிலையை சொன்னார் .

அவ்வளவுதான் … பாலு சார் தற்போது எங்கே இருக்கிறார் ? அவரை நம்ம வீட்டிற்கு அழைத்து வந்துவிடுங்கள் மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் கலெக்டர் கந்தசாமி சார் .

அங்கிருந்து பாலு சாரை அழைத்துக்கொண்டு மயில்சாமி அவர்கள் கலெக்டரின் வீட்டிற்கு சென்று விடுகிறார் . அங்கு பாலு சாருக்கு மிகப்பெரிய மரியாதையும் , உற்சாகமான வரவேற்பு கிடைத்தது .

"சொல்லுங்கள் மயில்சாமி நான் என்ன செய்ய வேண்டும் " என்று கலெக்டர் கேட்க, பாலு அண்ணாவை பத்திரமாக கோயிலுக்குள் அவர் பாடல் பாடும் இடம் வரை அழைத்து போக உதவி செய்தால் நன்றாக இருக்கும் சார் என்கிறார் மயில்சாமி .

உடனே கலெக்டர் அவர்கள் தன்னுடைய காரில் பாலு சாரை ஏற்றிக்கொள்கிறார் . கலெக்டரின் கார் கோயிலை நோக்கி பறக்கிறது சைரைன் சத்தத்தோடு . அந்த காட்சியை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் . ஏகே 47 துப்பாக்கி கொண்ட காவலர்கள் இருவர் உடன் இருக்க , பாலு சாரை பத்திரமாக கோயிலுக்குள் அழைத்து சென்றார் கலெக்டர் கந்தசாமி அவர்கள் .

அன்றைய நாளில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்த பின்னர் பக்தி பாடல்களை பாடி பாடி கார்த்திகை தீபத்திருவிழா பத்தாம் நாளை பக்தர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாற்றி விடுகிறார் பாலு சார் .

அந்த விழா முடிந்ததும் மயில்சாமி அவர்களுக்கு மனதார நன்றி சொல்கிறார் பாலு சார் . பல இலட்சம் பக்தர்கள் கூடியிருந்த திருவிழாவில் இப்படி ஒரு தரிசனம் , இப்படி ஒரு பாடல் பாடும் வாய்ப்பு அமைந்தது உன்னால் தான் என்று நெகிழ்ந்து போகிறார் SPB அவர்கள் .

இது உங்களுக்கு இன்று தெரியப்படுத்த தோன்றியதால் விரிவாக எழுதினேன் .

அந்த நாளின் நிகழ்வு தான் இந்த புகைப்படம் .

Vasudevan Mvasudevan
பதிவிலிருந்து…

#SPB this picture is a little special photo. S. S P. P The photo taken by Balasubramaniam along with the family of Tiruvannamalai District Collector.

This may not be seen by many. There is a story behind this picture.

Actor Mayilsamy is the best devotee of Annamalai. Whenever I see Annamalai, he runs to Thiruvannamalai.

If Karthigai Deepath festival means he will not move anywhere from Thiruvannamalai. Man will be inside the temple on the tenth day festival.

He has a wish. While lighting the Mahadeepam on the tenth day festival, while there are hundreds of devotees inside the temple, SPB will somehow bring them to sing devotional songs.

That's why SPB would be praying to them often. Balu sir should also have darshan of Annamalaiyar. It is a wish that his voice should be heard in Annamalaiyar temple during the important festival of Deepath. But in the function of about twenty lakh people attending, the hesitation of how to go to the crowd.

′′ Brother… You come, it is my responsibility to take you into the temple somehow… As Mayilsamy said, Balu sir is ok, I am coming to Tiruvannamalai and I am singing.

Tenth day festival, when Mayilsamy was inside the temple, Balu sir informed that he is ten kilometers away from Thiruvannamalai, Mayilsamy Balu sir went to the place where the car is and brought him to the city. A room ready for him in a single hotel.

A policeman stops while car tries to move towards the hotel. That can't allow the car through this. Mayilsamy is getting nervous. Balu sir is inside. Even though the police refused to say that the time for him to sing inside the temple is nearing, it is good that another policeman who knows mayilsamy understands the circumstances and makes a way to take the car to the hotel.

Even though Balu sir arrived at the hostel, this event gave a great grief to Mayilsamy. On the other hand, the police walked in the other hand, if we have a problem in bringing him into the temple and taking him into the temple. He directly contacted collector sir on mobile and told the situation.

That's all… Where is Balu sir now? Bring him to our home, I will take care of everything else, says Collector Kandasamy Sir.

Mayilsamy takes Balu sir from there and goes to the collector's house. There Balu sir got huge respect and enthusiastic welcome.

When the collector asks ′′ Tell me Mayilsamy what should I do it would be nice if he helps Balu Anna safely to the place where he is singing, says Mayilsamy.

Immediately the collector is carrying Balu sir in his car. Collector's car flying towards temple with siren sound. Imagine that scene for you. Collector Kandasamy took Balu Sir safely to the temple to stay with two AK 47 guns.

On that day, after having darshan of Annamalaiyar Annamalai Amman, singing devotional songs and making the tenth day of Karthigai Deepath festival an unforgettable day for devotees.

Balu sir heartily thanks to Mayilsamy after that festival is over. Such a darshan in the festival where millions of devotees were together, SPB is going to be touching that it is because of you that we had the opportunity to sing such a song.

Wrote in detail because it appeared to let you know today.

This photo was the event of that day.

Vasudevan Mvasudevan
From the post…

One thought on “#SPB இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் ஆன புகைப்படம் . எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் த…”

Comments are closed.